ரத்த அணுக்கள் அதிகரிக்க,
உடலில் அதிகமான அசதி,
எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை, உற்சாகமின்மை,
எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்து போய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே என்று எண்ணுவது,
தூக்கமின்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், ரத்தசோகை இருப்பதை அறியலாம்.
உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது, அந்த அணுக்கள் குறைந்த ரத்தம், உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை.
தூக்கமின்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், ரத்தசோகை இருப்பதை அறியலாம்.
உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது, அந்த அணுக்கள் குறைந்த ரத்தம், உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை.
உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்க முடிவதில்லை. உடல் களைப்பு அடைகிறது. நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, உண்ணும் உணவில் இருந்து தான், எடுத்துக் கொள்ளுகிறது.
எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து, வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

ஆண்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின், 14-18 கிராம் அளவிலும், பெண்களுக்கு, 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராமுக்கு கீழே குறையும்போது, ரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு, சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.
ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவுக்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது, ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது, நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்சிஜனை, ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது.

பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை, கார்பன்டை ஆக்ஸைடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது.
பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி, உடலுக்கு சக்தியூட்டுகிறது.
நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை, ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவற்றை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது. ஹீமோகுளோபின் அதிகரிக்க மருத்துவம் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு, எளிய வழி இருக்கிறது.

நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும்.
அவற்றை வாங்கி, ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை, 6:00 மணிக்கு போட்டு, இரவு முழுவதும் ஊற விட வேண்டும்.
காலையில், 6:00 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
காலையில், 6:00 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
மதியம், 12:00 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
மாலை, 6:00 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்று விட்டு, மீதியுள்ள நீரை குடியுங்கள்.
இதே மாதிரி, தினசரி ஒரு திராட்சை வீதம், ஒரு வேளைக்கு அதிகப்படுத்தி, ஒன்பது நாட்கள் வரை சாப்பிட வேண்டும். பின், ரத்தத்தை பரிசோதித்தால் மாற்றம் இருப்பதை அறியலாம்.
======================================================================================
பூனை மூலம் பரவும் நோய்.காசநோய், மைகோ பாக்டீரியம் ட்யூபர்குலோசிஸ் என்ற கிருமியால் ஏற்படுகிறது.
இது ஒரு தொற்று நோய். மனிதனோடு நாய், பூனை, ஆடு, மாடு கோழி போன்ற விலங்குகளுக்கும் பரவும்.
இந்நோய் ஏற்பட்ட விலங்கின் பால், வெண்ணெய், இறைச்சியை உண்ணுவதாலும், நோயுற்ற விலங்கின் சுவாசம் நேரடியாக மனிதனுக்குச் செல்வதாலும் அதன் நீர்த்திவலை மற்றும் சளித்திவலை மனித சுவாசத்திற்குள் செல்வதாலும், இந்நோய் பரவுகிறது.
பூனையிலிருந்து மனிதனுக்கு காசநோய் பரவ நிறைய வாய்ப்பிருக்கிறது.
பூனையால் ஏற்படும் அறிகுறிகள் சுவாச மண்டல உறுப்புகள் மற்றும் உணவு மண்டல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
பூனையின் உடல் மெலிந்து கொண்டே இருக்கும்.
அடிக்கடி இருமும்; சளியைக் கக்கும்; காய்ச்சல் ஏற்படும்.
இந்நோய் மனிதனை தாக்கியிருந்தால், விடாமல் காய்ச்சல் இருக்கும்; சளியும் உண்டாகும். உடல் மெலியும், உணவு செரிக்காது, பசி இருக்காது.
எடை குறையும். நிணநீர் நாளங்களில் வீக்கம் ஏற்படும்.
எளிதில் நோயைக் கண்டுபிடித்து விரைவில் சிகிச்சை அளித்து சத்துள்ள உணவுகளை அளித்தால் இந்நோயை விரைவில் குணப்படுத்தலாம்.
======================================================================================
இன்று,
டிசம்பர்-07.
- இந்திய கொடி நாள்
- இஸ்ரேல் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டது(1988)
- சீனக் குடியரசின் அரசு, நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது(1949)
======================================================================================
மன அழுத்தம்!
வேகமாக சுற்றும் உலகத்துக்கு இணையாக, நாமும் ஓடிக் கொண்டிருக்கின்றோம்.
எதனால் என்று பார்த்தால், பணம் சம்பாதிப்பதற்குதான். பணம் இருந்தால் சொத்து வரும், வசதி வரும், செல்வாக்கு வரும், கூடவே இன்னொன்றும் வந்து சேர்கிறது.
அது... மன அழுத்தம்!
இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.
இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.
இன்றைய சுறுசுறுப்பான வேலை பளுமிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போய்விட்டது. நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த, மனதை அழுத்தத்தில் இருந்து வேறு ஏதாவது சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் செய்யும் செயல்கள் நமக்கு பிடித்த விஷயமாக மட்டுமில்லாமல், அது நம் கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும்,
அது சிறிது நேரத்துக்கு மட்டுமே உண்டான செயலானாலும் கூட, மன அழுத்தத்தை குறைக்க உதவும் பொழுதுபோக்குகளை பின்பற்றி, மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
புத்தகம் படிப்பது என்பது, மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு புகழ் பெற்ற வழி. பிடித்த நல்ல புத்தகங்களை வைத்திருந்தால், அவைகளை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதனால் அறிவை வளர்ப்பதோடு, மனமும் நல்ல புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

தினசரி யோகாசன பயிற்சி செய்வதால், உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஓய்வு பெறும். இதனால் மன அழுத்தம் கண்டிப்பாக குறையும்.
யோகாசனத்தால் உடம்பு விரிவடையும் போது, மனம் சாந்தமாகி, பின் அமைதி அடையும். கூடுதலான மன அழுத்தம் அடையும் நேரத்தில், முதலில் செய்ய வேண்டியது நல்ல இசையை கேட்டு ரசிப்பதே.
வேறு எதையும் விட, இசை நம் மனதுக்கு இதமானதாக இருக்கும்.
வேறு எதையும் விட, இசை நம் மனதுக்கு இதமானதாக இருக்கும்.
நமக்கிருக்கும் துன்பங்களை மறக்கச் செய்யும். எனவே துன்பம் தரும் விஷயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க, இசை பெரிதும் உதவி புரிகிறது. தோட்டக்கலையில் ஈடுபடலாம். அது இயற்கைக்கு மிக அருகில் அழைத்துச் செல்லும்.
திறந்த வெளிக்குச் சென்று, செடிகள் நட்டு, அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி, பூக்கள் மற்றும் கனிகளின் அழகை ரசித்தால், அன்றாடம் அனுபவிக்கும் மன அழுத்தம் குறையும். மனம் இயற்கையாகவே அமைதியடையும்.
சமைப்பது மன அழுத்தத்தை குறைக்க சிறந்த வழி. சமையல் செய்வதால் சிந்தனையானது, தயார் செய்து கொண்டிருக்கும் உணவின் மீதும், அதை எப்படி சுவையாக செய்யலாம் என்பதிலும் தான் இருக்கும்.
சமைப்பது மன அழுத்தத்தை குறைக்க சிறந்த வழி. சமையல் செய்வதால் சிந்தனையானது, தயார் செய்து கொண்டிருக்கும் உணவின் மீதும், அதை எப்படி சுவையாக செய்யலாம் என்பதிலும் தான் இருக்கும்.
அது ஆக்கத்திறனையும், கற்பனை வளத்தையும் தூண்டி
விடுவதால், கவலைகளை மறக்கச் செய்து, மன அழுத்தத்துக்கு மருந்தாக விளங்குகிறது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட மற்றொரு வழி, எழுதுவது.
அது ஒரு சொந்த நினைவேடாகவும் இருக்கலாம் அல்லது சிறு கதைகளாகவும் இருக்கலாம். எது எப்படியோ, அது மனதில் உள்ளவற்றை எப்படியும் கொட்டித் தீர்ப்பதாக இருக்க வேண்டும்.

இந்த எழுத்து அனுபவம், நம் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகளை சுலபமாக தீர்க்கவும், நம் கற்பனைகளை வளர்க்கவும் துணையாக நிற்கும்.
இது மட்டுமல்லாது,
உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவதொரு பொழுதுபோக்கில் ஈடுபடுவதாலும் மன பாரம் குறையும். ஆதலால் மனம் விரும்பும் பொழுதுபோக்கை தேர்ந்தெடுத்து,
மன அழுத்தத்தை குறைத்து, மன நிம்மதியுடன் உறசாகமாக வாழுங்கள்..
==========================================================================================
முகநூல் முத்திரைகள்.
=======================================================================================
இதுவரை 500 பேர் பலி !
இங்க ஒட்டுங்கடா ங்கொம்மா படத்த..
======================================================================================================
ஜெ ,வைப் பாராட்டிய பொது மக்கள் ?எங்கிருந்தாலும் வேளச்சேரி,கொட்டுர்புரம் வந்து அம்மா ஸ்டிக்கர் வாங்கி செல்லவும்.