செவ்வாய், 20 நவம்பர், 2012

சிகப்பா இருப்பவன்

"மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள்"
 என்று 6ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. 
இது சிகப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப் போல்தான்.
9ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி கூறப்பட்டுள்ள சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை. 
இன்னமும்  போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது   புதிதாக ஒரு கதை  கிளம்பியுள்ளது.
6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நியூ ஹெல்த்திவே' என்ற பெயரில் உள்ள பாடத்தில் ஹெல்த், ஹைஜீன், பிசியாலஜி, பாதுகாப்பு, பாலியல் கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
இதில்தான் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
இது அசைவம் உண்பவர்களை கேவலப்படுத்துவதுடன் -அதிர்ச்சியிலும்  ஆழ்த்தியுள்ளது. மாணவப் பருவத்தில் இதுபோன்று பயிலப் படும் தகவல்களால் அசைவ உணவு உண்பவர்கள் மீது தவறான கண்ணோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை நீக்கவேண்டும் என்று அசைவ உணவுப் பிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
இதை அசைவ உணவை விட சைவ உணவுதான் நல்லது .என்று அதன் பெருமையை விளக்கி எழுதி இருக்கலாமே.
 இது பற்றி  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ இது எதிர்பாராத நிகழ்வு என்று கூறியுள்ளார்.6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள தகவல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
மனிதன் பரிணாம வளர்ச்சியடையும் மிருகமாக இருக்கையில் மற்ற மிருகங்களை வேட்டையாடி உண்டுள்ளான் .
அறிவு வளர,வளரத்தான் சைவமாக மாறியுள்ளான்.ஆறறிவு படைத்த மனிதன் விலங்கு வகையில் ஒன்றுதான். 
அதுவரை ஆடையின்றி கொன்றதை தின்று விதிவந்தால் இறந்து போயிருக்கிறான்.
இதை கல்வியாளர்கள் மறந்தது ஏன் ?
______________________________________________________________________________________________
-