கேட்பாரற்ற ஏலம்

2008ஆம் ஆண்டு ஏலம் நடத்தப்படாமல் வழங்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்  ஊழல் நடந்து உரிமங்கள் வழங்கப்பட்டன என்று இந்தியா முழுக்க பரபரப்பாகியது.ஆ.ராசா அமைச்சர் பதவியை இழந்தார்.கனி மொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.ஆனால் இந்த ஊழலுக்கு துணை போன காங்கிரசார் யாரும் விசாரிக்கப்படவே இல்லை.சுப்பிரமணியம் சுவாமி நீதிமன்றம் வரை போயும் சிபிஐ கண்டு கொள்ளவில்லை. மாறாக இந்த ஊழல் முழுக்க திமுக தான் செய்ததாக சொனிய-மன்மோகன் நிலையை உருவாக்கினர்.
சுரன்
இந்திய உச்சநீதிமன்றம் அச்சமயம் வழங்கப்பட்டிருந்த 122 உரிமங்களையும் ரத்து செய்துவிட்டு, புதிதாக ஏலம் நடத்தி உரிமங்கள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
திங்களன்று ஆரம்பித்த ஏலத்தில் ஜி எஸ் எம் என்ற தொழில்நுட்பத்தில் செயல்படும் செல்லிட தொலைபேசி சேவைகளில் பார்தி ஏர்டெல், வோடஃபோன், ஐடியா செல்லுலர், டெலெநார், வீடியோகான் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏலம் கேட்டிருந்தன என்றாலும், சி டி எம் ஏ என்ற தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை எந்த நிறுவனமும் ஏலம் கேட்கவில்லை.
சி டி எம் ஏ தொழில்நுட்பத்தில் சேவை வழங்கிவந்த டாடா டெலிசர்வீசஸ் மற்றும் வீடியோகான் நிறுவனங்கள்கூட இம்முறை ஏலம் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் ஏலத்தின் முடிவில் ரூ.9,200 கோடி அளவுக்கு ஏலங்கள் கேட்கப்பட்டிருந்தன.
அரசாங்கம் நிர்ணயித்த குறைந்தபட்ச விலைகள் மிக அதிகமாக இருப்பதாக தொலைபேசி சேவை நிறுவனங்கள் கருதுவதால் அவை அதற்குமேல் விலைகொடுத்து அலைக்கற்றை வாங்கத் தயங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா முழுமைக்குமாக அலைக்கற்றை ஒதுக்கீடு பெற ஒரு நிறுவனம் கூட ஏலம் கேட்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ரூ.14,000 கோடியை இந்த அலைக்கற்றைக்கான குறைந்தபட்ச உரிம மதிப்பாக அரசாங்கம் நிர்ணயித்திருந்தது.
இந்தியா மொத்தத்துக்குமாக 22 வட்டங்களுக்கு இந்த ஏலம் நடந்திருந்தது. அவற்றில் 18 வட்டங்களில் மட்டுமே நிறுவனங்கள் ஏலம் கேட்டிருந்தன. ஏலம் கேட்கப்பட்ட வட்டகைகளில் தில்லி, மும்பை, ராஜஸ்தான் கர்நாடகா ஆகியவற்றின் ஆரம்ப ஏலத்தொகை மிகவும் அதிகமாக இருந்தபடியால் அவற்றில் யாரும் ஏலம் கேட்கவில்லை என்று தெரிகிறது.


------------------------------------------------------------------------------------------------------------

சுரன்
                                         இவர்கள்   இதுவரையிலான ஜேம்ஸ்பாண்ட் 007 -கள்.
_________________________________________________________________________________
சுரன்
                                                                           நான் ஈ

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

விடுதலைப்போர்.முதல் பலி தூத்துக்குடியில்.