காங்கிரசு ஊழலை ஒழிக்கிறது?


நேருவால் ஆரம்பிக்கப்பட்ட, நேஷனல் ஹெரால்டுபத்திரிகையை நடத்தி வந்த அசோஸியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடனாகக் கொடுத்ததன் மூலம், அக்கட்சி வருமான வரிச் சட்டத்தை மீறியிருப்பதாகவும் அதனால் அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
'யெங் இந்தியன்’ என்ற நிறுவனத்தைத் துவக்கி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் அதில் பங்குதாரர்களாக உள்ளனர்.,
சுரன்
 அந்த நிறுவனம் தான் அசோஸியேடட் ஜர்னல்ஸைவாங்கியுள்ளது,, அதற்காக காங்கிரஸ் கட்சி 90 கோடி கட்சிப்பணத்தை கொடுத்துள்ளது என  குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் கட்சிகள்  வர்த்தக நோக்கத்துக்காக கடன் கொடுக்க இந்திய அரசியல் சட்டப்படி முடியாது . அது சட்டவிரோதமானது .
சுப்பிரமணிய சுவாமி இக்குற்றசாட்டு மூலம் காங்கிரசின் அங்கிகாரத்தையே அசைத்துப்பார்க்கிறார்.ஆனால் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கும்.
வழக்கம் போல் ஆண்டுக்கணக்கில் விசாரணை அனைவரும் அடுத்த விவகாரத்தில் மூழ்கியிருக்கும் போது குற்ற சாட்டு தள்ளுபடி என்றுதான் அதன் நடவடிக்கை இருக்கும்.தேர்தல் ஆணையமும் இப்போது நடுநிலையுடன் எங்கே நடக்கிறது.?சிபிஐ காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேசன் ஆகி எவ்வலவோ நாட்களாகி விட்டது.
கெஜ்ரிவால் சோனியா மருமகன் வெதெரா மீதும் பாஜாக கட்டாரி மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்டாரி மீது உடனே விசாரிக்கத்துவங்கிய அரசு,வதெராவா பக்கம் திரும்பிகூட பார்க்கவில்லையே?என்ன காரணம்?
ஊழலை ஒழிக்க காங்கிரசு பாடுபடுகிறது என்று சோனியா சமீபத்தில் மேடையில் பேசியுள்ளார்.ஊழல் என்கிற பெயரைத்தான் காங்கிரசு ஒழிக்கும்.அதை அரசியல் பூர்வ அங்கிகாரம் கொடுத்து. இனி காங்கிரசு அரசின் ஊழல்கள் எல்லாமே இந்தியாவை முன்னேற்றும் மன்மோகன் சிங்கின் பொருளாதார நடவடிக்கைகளில் ஒன்றாக அறிவிக்கப்படும். 
____________________________________________________________________________________________________________
செய்தியாளர்களுக்கு வணக்கம்'
------------------------------------------------------
மற்ற பதிவுகளை விட இந்த பதிவுக்கு அதிக கருத்துக்கள்.99%ஆதரித்துதான்.சிலர் மட்டுமே கண்டித்துள்ளனர்.
ஒருவர் விஜய்காந்தின் அடிவருடி என்று இனம் கண்டுள்ளார்.அவர் சுரனின் முந்தைய பதிவுகளை படித்ததில்லை போலும்.இன்றுவரை விஜய்காந்த் கட்சி உரிமையாளர்தான்.அவர் அர்சியல் தலைவராக இருக்க தகுதியில்லை என்பதுதான் சுரனின் கருத்து.பதிவுகளில் இதுவரை தாக்கப்பட்டுத்தான் வந்துள்ளார்.
சுரன்
தாங்களும் செய்ததியாளர்கள்தான் என்ற உணர்வுள்ள சிலர்தான் பொங்கி எழுந்துள்ளனர்.
செய்தியாலர்கள் செய்வது சரிதானா என்பதுதான் இப்போதைய கேள்வி.தனக்கு பேட்டிதர மறுப்பவரை விடாமல் தொந்தரவுச் செய்வது சரியான செய்தியாளரின் பணியா?
அப்படி தராதவரை கண்டபடி பேசுவதும் விரட்டி கோபமூட்டும் கேள்விகளை கேட்பதும் இந்துநேசன் பத்திரிகை இலக்கணம்.
அவர்கள் தன்னை பக்கமே அண்டவிடாத முதல்வர் ஜெயலலிதாவை இப்படி விரட்டி யது உண்டா?
முதல்வராகும் முன் கூட போயஸ்தோட்டம் சென்று முற்றுகை இட்டது உண்டா?
அதிமுகவினர் முன்பு போயஸ் தோட்டம் சென்று கட்சித்தலைவர்களுக்கு எதிராக மனு கொடுக்க முற்றுகையிட்ட போது செய்தி எடுக்க சென்ற செய்தியாளர்கள் தோட்டத்து ஆதரவாளர்களால் ரத்தக் காயங்கள் பெற்று ஓடி வந்தார்களே அப்போது அவர்களுக்கு எதிராக வழக்குதொடுத்தார்களா?கட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தார்களா?
அப்போது இப்போதுள்ள முதுகெழும்பு செய்தியாளர் உடலில் உருவாக வில்லையா?
சென்னை கடற்கரையில் சென்ற அம்மா ஆட்சியில் அதிமுக,வீரமணி ஆதரவாளர்களால் வெட்டு பட்டார்களே -ரத்தம் வழிய அழுது கொண்டே தொலைகாட்சிகளில் பேட்டி தந்தார்களே அப்போது அவர்கள் யாருக்காவது எதிராக வழக்கு-கண்டனக்கணை தொடுத்தார்களா?அப்போது செய்தியாளர்கள்  யாருடைய அடிவருடிகள் ?
சுரன்
இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம்.சமீபத்தில் ஜெயலலிதாவின் பழைய பேட்டியை போட்டு விட்டு நக்கீரன் பட்டப்பாட்டை இன்னமும் நான் மறக்கக்கவில்லை.தெருவுக்கே மின்,குடிநீர் வழங்கள் நிறுத்தப்பட்டதே அப்போது இந்த சுயமரியாதை செய்தியாளர் வீரார்கள் எங்கு உல்லாசப்பயணம் போனார்கள்.செய்தியாளர் சங்கத்தில் இருந்து சிறு முணு முணுப்பு கூட இல்லையே?
இப்போதும் கருணாநிதியையும் அவர் குடும்பத்தலைவர்களை[?]ப்பற்றியும் பக்கம் பக்கமாக செய்திகள் ,கருத்துப்படங்கள் வெளியிடும் அதே பத்திரிகைகள் ஜெ பற்றி சின்ன செய்தியாவது வெளியிடுகிறதா?வெளியிடத்தான் முடியுமா?
அவதூறு வழக்கு பாய்ந்து விடாதா?இன்றைக்கு விகடன்,முரசொலி மீது எத்தனை வழக்குகள்.
டெங்கு காய்ச்சலை இந்த அரசு சரியாக கையாளவில்லை என்று செய்தி வெளியிட்டால்கூட அவதூறு,கொடநாட்டில் முதல்வர் இப்போது ஒய்வெடுக்கிறார் என்று கருத்து தெரிவித்தால் கூட அவதூறுதான்.செய்தியாளர்கள் என்ன செய்தார்கள்.உண்மை நிலையை சொல்லக்கூட முடியாத நிலை.அதற்கு இதற்குள் எத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்க வேண்டும்.எத்தனை முறை போயஸ் தோட்டத்தை முற்றுகை யிட்டிருக்க வேண்டும்.
ஒரு கண்ணில் வெண்ணை-மறு கண்ணில் சுண்ணாம்பு இதுதான் இன்றைய தமிழக செய்தியாளர்கள் கொள்கை.
இதற்கு அவர்களின் பத்திரிகை உரிமையாளர்கள் கூட காரணமாக இருக்கலாம்.அதற்கு அரசின் விளம்பரங்கள் காரணமாயிருக்கலாம்.
எப்படியோ ஒன்று.
இன்று செய்தியாளர்கள் இளைத்தவனை பார்த்து குரைக்கும் கடமையாளர்களாக மாறிவிட்டது மட்டும் தெரிகிறது.
"கவர்"[த]ந்தவர்களை கண்டுகொள்வதில்லை.மாறாக அவர்களின் கொள்கைபரப்பு செயலாளர்களாகவும் மாறிவிட்டார்கள்.ஸ்டெர்லைட்டில் இருந்து கோட்டை வரை அப்படியே ஆகி விட்டதுதான் வருத்தம் தருகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அம்பானி சொல்றார், மன்மோகன் செய்யிறார்!


ன்னாட்டு நிறுவனங்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் காங்கிரசு கூட்டணி அரசின் நிர்வாகத்தை உறுதிப் படுத்த அமைச்சரவை மாற்றங்களை செய்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது பெட்ரோலிய அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டியை ‘முக்கியத்துவம் இல்லை’ என்று சொல்லப்படும் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு மாற்றியிருப்பது.
‘ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியாக’ பெட்ரோலிய அமைச்சர் பொறுப்பு வகித்த கார்ப்பரேட் தரகர் முரளி தியோராவிடமிருந்து 2011 ஜனவரியில் பெட்ரோலிய அமைச்சகத்தின் பொறுப்பைப் பெற்றார் ஜெய்பால் ரெட்டி. அதற்கு முன்பு பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த மணி சங்கர் அய்யர் ‘ஈரானிலிருந்து குழாய் அமைத்து வாயு கொண்டு வரும் திட்டத்தை முடுக்கி விட்டதால்’ 2006ம் ஆண்டு முரளி தியோரா அமைச்சராக்கப்பட்டார்.
கிருஷ்ணா கோதாவரி படுகையில் இருக்கும் நாட்டின் இயற்கை வளமான எரிவாயுவை வெளியில் எடுப்பதற்கான குத்தகை ரிலையன்சுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.  ஆகும் செலவின் அடிப்படையில் விலை நிர்ணயித்து அரசுத் துறை நிறுவனங்கள் எடுக்கப்படும் வாயுவை வாங்கிக் கொள்கின்றன.
முரளி தியோரா அமைச்சராக இருந்த போது ரிலையன்ஸ் விருப்பப்படி இயற்கை வாயுவின் விலையை ஒரு mmBtuக்கு $4.2 என்று அமைச்சர்கள் குழு நிர்ணயித்திருந்தது. இந்த விலை உற்பத்திச் செலவை விட இரண்டு மடங்கு அதிகம். இந்தியாவில் எடுக்கப்படும் இயற்கை வாயுக்கு பன்னாட்டு விலையுடன் ஒப்பிட்டு விலை நிர்ணயிக்கும் அயோக்கியத் தனத்தைத்தான் அமைச்சர்கள் குழு செய்திருந்தது.
ஜெய்பால் ரெட்டி அமைச்சரான பிறகு,  பன்னாட்டுச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்துக்கு ஈடாக உள்நாட்டில் தான் குத்தகைக்கு வைத்திருக்கும் இயற்கை வாயு உற்பத்திக்கும் விலை நிர்ணயிக்கும்படி ரிலையன்ஸ் வலியுறுத்தியது.  விலையை அலகுக்கு $4.2லிருந்து $14.2 ஆக $10 உயர்த்தும்படி கேட்டிருந்தது.  அதன் மூலம் ரிலையன்ஸின் லாபம் 2 ஆண்டுகளில் ரூ 22,000 கோடி அதிகரித்திருக்கும். முகேஷ் அம்பானி இன்னும் பல ஆன்ட்லியா மாளிகைகளை கட்ட முடிந்திருக்கலாம்.  கூடவே பெட்ரோலிய பொருட்களுக்கு நேரடி விலையேற்றம் அல்லது மான்யத் தொகை மூலம் வரிச்சுமை அதிகரிப்பு அல்லது இரண்டும் நடந்திருக்கும்.
’2014 வரை விலை மாற்றம் கிடையாது’ என்ற அமைச்சர்கள் குழுவின் முந்தைய முடிவின் படி விலை ஏற்றத்துக்கு அனுமதி மறுத்தது ஜெய்பால் ரெட்டியின் தலைமையிலான பெட்ரோலிய அமைச்சகம். மேலும், கிருஷ்ணா கோதாவரி டி6 பகுதியில் ரிலையன்ஸ் செய்ததாக சொன்ன  $1.46 பில்லியன் செலவையும் அமைச்சர் நிராகரித்திருக்கிறார்.
‘கேட்ட விலை கிடைப்பது வரை பொருளை பதுக்கி வைத்திருப்பேன்’ என்று சொல்லும் கிரிமினல்களைப் போல இயற்கை வாயு உற்பத்தியை குறைத்திருக்கிறது ரிலையன்ஸ்.  மார்ச் 2010ல் ஒரு நாளைக்கு 53-54 மில்லியன் கனமீட்டராக இருந்த இயற்கை வாயு உற்பத்தியை ஒரு நாளைக்கு 27.5 மில்லியன் கனமீட்டராக குறைத்தது ரிலையன்ஸ். 2011-12ல் 72 மில்லியன் கனமீட்டராக இருந்திருக்க வேண்டிய சராசரி உற்பத்தி நாளைக்கு 42 மில்லியன் கனமீட்டராக குறைந்திருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ 20,000 கோடி நேரடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 2012-13ல் 80 மில்லியன் கன மீட்டருக்கு பதிலாக 25 மில்லியன் கன மீட்டர்தான் உற்பத்தி செய்ய முடியும் என்றும் முரண்டு பிடிக்கிறது ரிலையன்ஸ். இதன் மூலம் அரசுக்கு ரூ 45,000 கோடி இழப்பு ஏற்படும்.
ஒவ்வொரு மில்லியன் கனமீட்டர் உற்பத்தி இழப்பும் 210 மெகாவாட் மின் உற்பத்தியை பாதிக்கிறது. 2011-12ல் சுமார் 6,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது, 2012-13ல் 11,500 மெகாவாட் மின்சார உற்பத்தி இழப்பு ஏற்படும். ரூ 30,000 கோடி வங்கிக் கடன்களுடன் கட்டப்பட்ட 20,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையங்கள் எரிபொருள் இல்லாமல் சும்மா இருக்கின்றன.
கிருஷ்ணா கோதாவரி உற்பத்திக் குறைவைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து அதிக விலையில் உரம் இறக்குமதி ஆகிக் கொண்டிருக்கிறது.
இயற்கை வாயு உற்பத்தி அளவு குறைந்திருப்பதை கண்டித்த ஜெய்பால் ரெட்டி ரிலையன்சின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கும்படி சிஏஜியிடம் கேட்டிருக்கிறார்.
அமைச்சர்கள் குழுவில் விலையை அதிகரிப்பதற்கு கடும் அழுத்தம்  தரப்பட்டிருக்கிறது. அது தொடர்பான கோரிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், ’2014 வரை விலை மாற்றக் கூடாது என்ற விதி செல்லுபடியாகும்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இருந்தும் விலையை உயர்த்தும்படி பிரதமர் அலுவலகம் பெட்ரோலிய அமைச்சகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.
விலை ஏற்ற மறுப்பது, உற்பத்திக் குறைவை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருப்பது இவற்றால் ரிலையன்சின் முகேஷ் அம்பானிக்கு கோபம் வந்து விட ஜெய்பால் ரெட்டி அமைச்சரவை பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டிருக்கிறார்.
ஜெய்பால் ரெட்டியை மாற்றிய விவகாரத்தை, மாலை நேர செய்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவாதத்துக்கு ஏற்ப, பாரதீய ஜனதா கட்சி செல்லமாகக் கண்டிக்கிறது. முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானிக்கு புரோக்கர் வேலை பார்க்கும் சமாஜ்வாதி கட்சியும் அதைப் பற்றிக் கேள்வி கேட்கிறது.  ‘பெட்ரோலியத் துறையில் விரைவாக முடிவுகள் எடுக்கப் போவதாக’ புதிய அமைச்சர் வீரப்ப மொய்லி தனது விசுவாசத்தை உடனடியாக உறுதி செய்திருக்கிறார்.
தான் ஒரு விசுவாசமான கட்சி உறுப்பினர் என்றும் உண்மையான அமைச்சர் என்றும் ஜெய்பால் ரெட்டி சொல்லியிருக்கிறார். காங்கிரசுக் கட்சி அம்பானி முதலான தரகு முதலாளிகளுக்கு விசுவாசமாய் இருக்கும் வரை ரெட்டியின் விசுவாசம் இறுதியில் என்னவாகும் என்பதற்கு இந்த மாற்றம் ஒரு சான்று.
ஜெய்பால் ரெட்டியின் வெளியேற்றம் ரிலையன்சின் லாபத்தை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் பங்குச் சந்தையில் அதன் பங்குகளின் விலை 2 சதவீதம் அதிகரித்திருக்கிறது.  இனிமேல், ரிலையன்சுக்கு கேட்ட விலை கிடைத்து விடும், இயற்கை வாயு உற்பத்தி மீண்டும் அதிகரிக்கலாம்.  இந்தச் சுமையை கூடுதல் கேஸ் விலையாகவும், பெட்ரோல் விலையாகவும் சுமப்பதற்கு நாட்டு மக்கள் தயாராகிக் கொள்ள வேண்டும்.

நன்றி:வினவு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

விடுதலைப்போர்.முதல் பலி தூத்துக்குடியில்.