ஞாயிறு, 4 நவம்பர், 2012

‘ரிலையன்ஸ் கம்பெனிக்கு ஆதரவாக கணக்கைத் திருத்து!’

சிஏஜியை மிரட்டும்  மன் மோகன்அரசு

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதர வாக கணக்கைத் திருத்தி எழுதுமாறு மத்திய தணிக்கைத் துறையை மன் மோகன் அரசு மிரட்டியுள்ளது.
இதை ஏற்க மறுத்து, தணிக்கைத் துறை பதிலடி கொடுத்துள்ளது. 
சுரன்
ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகை யில் ரிலையன்ஸ் நிறுவனம் இயற்கை எரிவாயுவை தோண்டி எடுத்து விற்று கொள்ளை லாபம் அடித்து வருகிறது. தனது உற்பத்திச் செலவு கூடிவிட்டது என பொய்யுரைத்து, இயற்கை எரி வாயுவின் விலையை உயர்த்த அனு மதிக்க வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனம், பெட்ரோலிய அமைச்ச ராக இருந்த ஜெய்பால்ரெட்டியிடம் கோரிக்கை விடுத்தது. ஆனால் ஜெய் பால்ரெட்டி அதற்கு அனுமதி மறுத்து விட்டார். 
இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் ஜெய்பால்ரெட்டி மீது ஆத்திரம் அடைந்தது.இதன் பின்னணியில், சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத் தில் ஜெய்பால்ரெட்டி யின் இலாகா மாற்றப்பட்டது. இதற்கிடையில் தலைமை கணக்கு மற்றும் மத்திய தணிக்கைக் குழு (சிஏஜி), ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு விற்பனை தொடர் பான கணக்குகளை தணிக்கை செய்து வருகிறது.
சுரன்

 மத்திய அமைச்சரவை மாற் றத்துக்கு முன்பு எரிவாயு விலையை உயர்த்தும் முடிவை மத்திய தணிக்கைக் குழு ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண் டும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் இயற்கை எரிவாயு அமைச்சகத்தை கேட்டுக் கொண்டது. இதை ஏற்றுக் கொண்ட இயற்கை எரிவாயு அமைச் சகம், இது பற்றி மத்திய தணிக்கைக் குழுவுக்கு கடிதம் எழுதியது.
 அதில் ரிலை யன்ஸ் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு இயற்கை எரிவாயு அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தது. ஆனால் இதற்கு மத்திய தணிக்கைக் குழு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
 தணிக்கைக் குழுவின் விதிகளின்படி மத்திய தணிக் கை குழு ரிலையன்ஸ் நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்யும். 
ரிலையன்ஸ் நிறுவனத்தின் கணக்கு புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் தணிக்கை நடை பெறும். ரிலையன்ஸ் நிறுவனம் கொடுக்கும் புள்ளி விவரப்படி தணிக் கை நடத்த முடியாது என்று மத்திய தணிக்கைக் குழு பதிலடி கொடுத்தது.
மத்திய தணிக்கைக் குழுவை மறை முகமாக மிரட்டிப் பணிய வைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு தணிக் கைக் குழு சரியான பதிலடி கொடுத் துள்ளது.
 இச்செய்தியை சிஎன்பிசி டிவி-18 வெளியிட்டுள்ளது.
_________________________________________________________________________________

110 வயதின் ரகசியம் இந்திய மருத்துவம்

பிடிட்டனில் கிருத்துவ ஆலயம் ஒன்றில் பணியாற்றி வந்த ரெக் டீன், என்பவர்தனது எண்பதாவது வயதில்தான் வேலையிலிருந்தே ஓய்வுபெற்றாராம்.

பிரிட்டனின் மிகவும் வயதுகூடிய நபரான ரெக் டீன் இன்று[ ஞாயிறன்று] தனது நூற்று பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
சுரன்
இவர்தான் தற்போது பிரிட்டனில் மிக வயதானவர் என்று அறியப்பட்டுள்ளார்,
இவர் இளைஞராக இருந்தபோது இந்தியாவில் மருத்துவ சிகிச்சையின்போது ஆயுர் வேத மருத்துவர் இவருக்கு கொடுத்த  அமுத பானம் போன்ற மருந்துதான், அவரின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்று தாங்கள் நினைப்பதாக ரெக் டீனின் மகன் கிறிஸ்டோஃபர் கூறிவருகிறார்.
சேறு நிறத்தில் இருந்த ஒரு மருந்தை தனது தந்தைக்குக் கொடுத்த இந்திய மருத்துவர் ஒருவர், "இதனைப் பருகினால் நூறு வயதைத் தாண்டி அவர் வாழ்வார்"
என்று கூறியதாக கிறிஸ்டோஃபர் கூறியுள்ளார்.
_________________________________________________________________________________
சுரன்