அளவில்லா அளப்பு!

 ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீடிக்க மனு.கெஜ்ரிவாலுக்குபுற்றுநோய்அறிகுறி.அமைச்சர் அடிசி பரபரப்பு தகவல்.

மோடி மீண்டும் முதல்வராவார்’ நிதிஷ்குமார் சொல்வது சரிதான்: தேஜஸ்வியாதவ் . 
35 ஆண்டில் இல்லாத வாக்குப்பதிவு: காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல், தேர்தல் ஆணையம்.

ஆந்திரா கர்னூல் விவசாய நிலத்தில் வைரங்கள். வைரத்தை தேடும் பொதுமக்கள்: ரகசியமாக வாங்கிச் செல்லும் வைர வியாபாரிகள்.
கேரளாவில் பிரபல ரவுடியின் வீட்டில் மது விருந்து. சோதனைக்கு வந்த போலீசாரைப் பார்த்து கழிப்பறைக்குள் ஒளிந்த டிஎஸ்பி .

தாம்பரம் அருகே ஒரே இரவில் 3 பேர் வெட்டிக் கொலை.

டெல்லி – வாரணாசி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.

அளவில்லா அளப்பு

ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும், மாநில அந்தஸ்து விரைவில் வழங்கப்படும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். 

இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக உள்ள ஒரே மாநிலம் என்ற காரணத்திற்காகவே அந்த மாநிலத்தை துண்டு துண்டாக உடைத்த தோடு, சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவையும் ரத்து செய்தது மோடி அரசு.

 அந்த மாநில மக்கள் இன்னமும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. மாறாக, தொடர்ந்து பாதுகாப்புப்படையின் முற்றுகை க்கு மத்தியில்தான் வாழ வேண்டியுள்ளது.

ஐந்து மக்களவைத் தொகுதிகள் கொண்ட ஜம்மு - காஷ்மீரில் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. 

ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தல் துவங்கிய நிலையில் மே 20ஆம் தேதிதான் ஐந்தாவது கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 

ஆனால் தேர்தல் நடந் தது மோடியின் காஷ்மீர் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று பீற்றிக் கொள்கிறார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா. 

இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணியை விட காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜன நாயக கட்சி ஆகியவை கூடுதலான இடங்களைப் பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றிய போது விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் தொகுதி மறுவரையறை அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என்றும் மோடி அரசு கூறியது. 

 ஆனால் இன்று வரை சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படாததிலிருந்தே மோடி அரசின் நடவடிக்கைகள் முழுத் தோல்வி என்பது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. 

 இதை மூடி மறைப்ப தற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கப் போவதாக அமித்ஷா தம்பட்டம் அடித்து வருகிறார். 

மறுபுறத்தில் மணிப்பூர் விவகாரம் விரை வில் தீர்க்கப்படும் என்றும் அவர் ஆருடம் கூறுகிறார். 

அங்கு நடப்பது இரு இனங்களுக்கு இடையிலான மோதல்; அவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்று அமித்ஷா கூறுகிறார். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த ஒன்றிய அரசோ, மாநில அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

 பிரதமர் நரேந்திர மோடி. பிரச்சனை ஏற்பட்ட பிறகு அந்த மாநிலத்தை எட்டிப் பார்க்கவேயில்லை. 

இப்போது கூட தேர்தல் பிரச்சாரத்திற்கு அங்கு செல்லவில்லை. பெரும் பான்மை மக்களைத் தூண்டிவிட்டு சிறு பான்மை பழங்குடி மக்கள் மீதான தாக்குத லுக்கு காரணமாக இருப்பதே பாஜக தான். பிறகு எப்படி அமைதி திரும்பும்?

 ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர் உட்பட இந்தியா முழுவதும் அமைதி நிலவ வேண்டுமானால் ஒன்றிய பாஜக அரசு தொலைய வேண்டும்

இணைய முடக்க சாதனை?

KeepItOn அமைப்பு, கடந்த 2016ஆம் ஆண்டு முதல், எந்தெந்த நாடுகளில் அதிகப்படியான இணைய முடக்கங்கள் அரங்கேறி வருகின்றன என்பதனை பட்டியலிட்டு வெளியிட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக, 2023ஆம் ஆண்டிற்கான இணைய முடக்கம் குறித்த, தரவரிசை அறிக்கையையும் தற்போது வெளியிட்டுள்ளது #KeepItOn அமைப்பு.

அதன்படி, 2016ஆம் ஆண்டு 27 நாடுகளில் இணைய முடக்கம் அரங்கேறியது என்றும், நாடுகளின் எண்ணிக்கை ஆண்டுகள் நகர நகர கூடியும், குறைந்தும் வந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு 39 நாடுகளில் இணைய முடக்கம் அமல்படுத்தப்பட்டது என்ற தகவலை வெளியிட்டுள்ளதுது.

இதில் அதிர்ச்சடையும் வகையில் இடம்பெற்ற தகவல் என்னவென்றால், ஆண்டாண்டு, இணைய முடக்கம் செய்யும் நாடுகளின் எண்ணிக்கை கூடி குறைந்தாலும், இந்தியா மட்டும் பட்டியலில் தன்னை தக்கவைத்த வண்ணமே இருந்து வந்துள்ளது.

குறிப்பாக பட்டியலில், கடந்த 8 ஆண்டுகளாக முதல் இடத்தை விட்டுத்தராத நாடாகவும் இந்தியா திகழ்ந்து வருகிறது. 

அவ்வாறு கடந்த 2016ஆம் ஆண்டு 30 முறை இணைய முடக்கம் செய்த ஒன்றிய பா.ஜ.க அரசு, கடந்த 2023ஆம் ஆண்டு 116 முறை இணைய முடக்கம் செய்துள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் இணைய முடக்கம் : Access Now மற்றும் #KeepItOn வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

போர் நடந்து கொண்டிருக்கும், உக்ரைன், பாலஸ்தீனத்தில் கூட, 8 முதல் 16 முறை தான் இணைய முடக்கம் செய்யப்பட்டுள்ளன என்ற தகவலும் இவ்வறிக்கையின் வழி அம்பலமாகியுள்ளது.

இதனால், கடும் சினத்திற்குள்ளான பலரும், “இந்திய நிலங்களை அபகரிக்கும் சீன அரசை தட்டிக்கேட்க திராணியற்ற ஒன்றிய பா.ஜ.க அரசு, அப்பாவி மக்களின் அடிப்படை உரிமையை சூறையாடி வருகிறது” என தங்களது கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதிலும், இணைய முடக்கம் அமல்படுத்தப்பட காரணங்களாக, #KeepItOn அமைப்பு வகுத்திருக்கிற, ‘கலவரம், போராட்டம், தேர்வு, தேர்தல்’ என்கிற அனைத்து பிரிவுகளிலும் இந்தியா இடம்பெற்றுள்ளது மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதில், குறிப்பிட்டு கூறும் மாநிலங்களாக, மணிப்பூரிலும், பஞ்சாப்பிலும் அதிகளவில் இணைய முடக்கம் செய்யப்பட்டதும், தெளிவடைந்துள்ளது.

மணிப்பூரில், இணைய முடக்கம் மட்டுமல்லாமல், நீண்டகால மின்வெட்டுகளும் அமலில் இருக்கும் நிலையில்,‘போர் அச்சுறுத்தல் இல்லாத நாடாக இருக்கின்ற போதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற எண்ணத்தை மறந்து, ஒன்றிய பா.ஜ.க அரசு, தன் நாட்டு மக்களையே எதிரி போல கையாள்வது கடும் கண்டனத்திற்குள்ளானது’ என்ற பதிவுகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?