'Reader's Digest 'நிறுத்தப்பட்டது!
86 ஆண்டுகளாக உலகளவில் உடல்நலம், உணவு, வாழ்க்கை முறை, பயணம், கலாச்சாரம் மற்றும் தொழில்முனைவு பற்றிய செய்திகளை உள்ளடக்கிய பிரித்தானியாவின் Reader's Digest இதழ், அதன் பதிப்பை நிறுத்தியுள்ளது.
இது குறித்த தகவல்களை LinkedIn மூலம் பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் Eva Mackevic பகிர்ந்துள்ளார்.
"கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக இந்த புழப்பெற்ற இதழில் பங்களிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 6 ஆண்டுகளாக இதழ் குழுவை வழிநடத்தி வருகிறேன்.
86 அற்புதமான ஆண்டுகளுக்குப் பிறகு, ரீடர்ஸ் டைஜஸ்ட் UK முடிவுக்கு வந்துவிட்டது என்பதைச் சொல்வதில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.," என்று கூறினார்.
இன்றைய காலகட்டத்தில் நிறுவனத்தால் நிதி அழுத்தங்களை தாங்க முடியவில்லை என்றும் ஈவா மக்கேவிக் கூறியுள்ளார்.
எனது சக ஊழியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பிராண்டுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல வருடங்களாக உங்களுடன் இணைந்து பத்திரிகையை முன்னின்று நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்கள் உற்சாகமும் நிபுணத்துவமும் இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியது. எங்கள் பயணத்தில் சில அற்புதமான நண்பர்களைப் பெற்ற நான் அதிர்ஷ்டசாலி என்று கூறினார்.
யுனைடெட் கிங்டம் பதிப்பு முதன்முதலில் 1938-இல் வெளியிடப்பட்டது.
ரீடர்ஸ் டைஜஸ்ட் உலகளவில் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 21 மொழிகளில் 49 பதிப்புகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. மொத்தம் 40 மில்லியனுக்கும் அதிகமான வாசகர்கள் உள்ளனர். இந்த இதழ் உலகளவில் 10.5 மில்லியன் விற்பனை உள்ளது. இருப்பினும், இப்போது பிரித்தானிய பதிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.