விற்பனைக்கல்ல!

 தாய்ப்பாலை பதப்படுத்தவோ அல்லது விற்கவோ அங்கீகாரம் கிடையாது.

எனவே, அதற்கான உரிமங்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரையில், “உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 விதிகளின் கீழ் தாய்ப்பாலை பதப்படுத்துதல் அல்லது விற்பனை செய்ய அனுமதியில்லை. எனவே, தாய்ப்பால் மற்றும் அதுதொடர்புடைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.


விதிகளை மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தாய்ப்பாலை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள உணவு வணிகங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிமம் வழங்கக்கூடாது.


இதனை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.


பொதுச் சுகாதார பாலூட்டும் மையங்கள் (LMC) வழிகாட்டுதல்களின்படி, தாய்ப்பாலை எந்தவொரு வணிக நோக்கத்துக்கும் பயன்படுத்த முடியாது.

சிசுக்களுக்கு மட்டுமே இது வழங்கப்பட வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்ஸ்டாகிராம் உட்பட ஆன்லைன் மூலம் தாய்ப்பால் விற்பனை தற்போது அமோகமாக நடைபெற்று வருவதாக சமீபகாலமாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.


இந்த நிலையில் தான் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இப்படியான உத்தரவை பிறப்பித்துள்ளது.


நோட்டுகள் தயாரிப்பு பணி தீவிரம் நோட்டு புத்தகம் விலை 25% உயர்வு.


தமிழ்நாட்டில் போலி பல்கலைகழகங்களேகள் கிடையாது: யுஜிசி தகவல்.


"இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாகஉயரும்"சென்னை வானிலை ஆய்வு மையம்.

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஓட்டு வங்கிக்காக முஜ்ரா நடனம் கூட ஆடுவார்கள் என்று மோடி பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.(முஜ்ரா நடனம்: முகலாய மன்னர் சபையில் பெண்கள் ஆடிய கவர்ச்சி நடனம் )


ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பதவி காலம் ஜூன் வரை நீட்டிப்பு.



"அண்ணாமலை வெத்துவேட்டு காலி பெருங்காய டப்பா" முன்னாள் அமைச்சர் உதயகுமார் .


"பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மூலம் அதானிக்கு உதவியதால்தான் வேலையில்லா திண்டாட்டம்"-ராகுல்.


யார் செலவு?

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் சார்பில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடி மைசூரில் உள்ள நட்சத்திர தனியார் விடுதியில் தங்கினார்.

பின்னர் பந்திப்பூர் புலிகள் காப்பதற்கு சென்று 20 கிலோ மீட்டர் பிரதமர் மோடி ஜீப் சவாரி செய்தார்.இந்த நட்சத்திர விடுதியில் பிரதமர் மோடி 3 நாட்கள் தங்கினார். இதற்கான கட்டணம் ரூ.80 லட்சம் என்று கூறப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடி மூன்று நாட்கள் தங்கியதற்கான விடுதி கட்டணம் ரூ.80 லட்சம் செலுத்தப்படவில்லை என ஹோட்டல் நிர்வாகம் கூறியது.

மேலும் ஜூன் 1-ம் தேதிக்குள் வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. இது இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மாநில அரசை ஏமாற்றியுள்ளது அம்பலமாகியுள்ளது.

பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கான செலவை மாநில அரசே ஏற்கவேண்டும் : கர்நாடக அரசை ஏமாற்றிய ஒன்றிய அரசு !

பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கான தொகையை ஏற்பதாக ஒன்றிய அரசு மாநில வனத்துறைக்கு உறுதியளித்துள்ளது. 3 கோடி ரூபாய்க்குள் இந்த செலவை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், நிகழ்ச்சிக்கு 6 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளது.

ஆனால், 3 கோடி ரூபாய் மட்டுமே தருவோம் என்றும், மீதம் உள்ள தொகையை மாநில அரசே செலுத்தவேண்டும் என்றும் பின்னர் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 

நிலுவை தொகை குறித்து மாநில அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு ரேடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலில் மோடி வந்து சென்றதற்கான செலவை மாநில அரசுதான் செலுத்த வேண்டும் என ஒன்றிய அரசு பதில் கடிதம் எழுதியுள்ளது.

ஆனால், அதன் பின்னர் மாநில அரசு அனுப்பிய கடிதத்துக்கு தற்போதுவரை ஒன்றிய அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக ரேடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலுக்கு செலுத்தவேண்டிய தொகை நிலுவையில் வைக்கப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

2025ல் தங்கம் விலை

முடிவுக்கு வருகிறதா?