கடவுள்களின் அரசன்?
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஜூன் 2ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ரூ.3,100 கோடியில் 1 லட்சம் வீடுகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
ஒன்றிய உணவுத்துறையில் பொறுப்பு தருவதாக சேலம் டாக்டரிடம் பா.ஜ.க ரூ.2.48 கோடி மோசடி.சேலம் நீதிமன்றத்தில் ஒருவர் சரண்.2 பேருக்கு வலை.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் திருவிழாவில் மோதல்.விவசாயியை அடித்துக் கொன்றவர் தனது காதலி பெண் இன்ஸ்பெக்டருடன் பெங்களூரில் கைது.பெண் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி துரை உத்தரவு.
சென்னையில் குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் பகுதிகளில் நள்ளிரவில் ஒரே நாளில் 4 பேர் வெட்டிக்கொலை.
ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் நாளை மறுநாள் விசாரணைக்கு வர உத்தரவு.
கத்திரிவெயில்முடிந்ததுவடமாவட்டங்களில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும்.
கடவுள்களின(?)அரசன்.
சாதியையும், சனாதனத்தையும், மதத்தையும் மட்டுமே வைத்து அரசியல் செய்து வந்த பா.ஜ.க.வினர், தற்போது ஒருபடி மேல் சென்று கடவுளை வைத்து அரசியல் செய்ய துணிந்திருக்கின்றனர்.
கடவுளின் ஆசி பெற்றவர்கள் பா.ஜ.க.வினர் என்ற பிரச்சாரம், காலப்போக்கில் கடவுளால் அனுப்பப்பட்டவர் மோடி என்று மாறி, தற்போது, கடவுள்களுக்கெல்லாம் அரசரே மோடி தான் என்கிற அளவிற்கு திரிந்துள்ளது.
இது போன்ற பொய்களும், புரட்டல்களும், நாளுக்கு நாள் அதிகரிக்க, அதற்கு முட்டுக்கட்டை போட வேண்டிய பா.ஜ.க தலைவர்களே, பொய், புரட்டல்களை முன்வைப்பதில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு, பொது மேடையில், பா.ஜ.க தலைவர் நட்டா பேசியது தான், ‘நரேந்திர மோடி மக்களுடைய அரசர் மட்டுமல்ல. கடவுள்களுக்கெல்லாம் அவர் தான் அரசர்’ என்ற பேச்சு.
கடந்த மாதம் தான், ‘கடவுள் புரி ஜகன்னாதரே, மோடியின் சீடர் தான்’ என பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்தற்கே கண்டனங்கள் குறையாத நிலையில், மேன்மேலும் மோடியை கடவுளாக சித்தரிப்பது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அது மட்டுமல்லாமல், இது போன்ற முன்மொழிவுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக இருக்கும் நிலையிலும், அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இதனையடுத்து, மக்கள் மதத்தின் மீதும், கடவுளின் மீதும் அபரிவிதமான நம்பிக்கையை கொண்டுள்ளதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் பா.ஜ.க.வின் நடவடிக்கை எவ்விதத்திலும் சரி அல்ல என எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
அதானி-மோடி
நாடகம்?
குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானியும், மோடியும் தனி விமானத்தில் செல்லும் அளவிற்கு நண்பர்கள். சர்வாதிகாரத்தையும், முதலாளித்துவத்தையும் இந்திய நாட்டில் நிறுவ கடுமையாக பாடுபடுகிறவர்கள்.
அவ்வகையில், கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் அதானி என கேள்வி எழுப்பினாலே பதவி பறிக்கப்படும் என்ற சூழலும், உலக ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் - அதானி குழுமத்தை விமர்சித்தாலும் ஒன்றிய பா.ஜ.க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்ற சூழலும் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசால் முன்னெடுக்கப்பட்ட சர்வாதிகாரத்தாலும், அதானி குழுமத்தின் முதலாளித்துவ நடவடிக்கைகளாலும், பா.ஜ.க.வும் சரி, அதானி குழுமமும் சரி, மக்களிடமும், முதலீட்டாளர்களிடமும் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளனர்.
அதன் வெளிப்பாடாக, மோடி மோகம் குறைந்து, பா.ஜ.க.வின் பொதுக்கூட்டங்கள் ஈ ஓட்டி வருகின்றன. ஈ ஓட்டும் பொதுக்கூட்டங்களில், மூச்சு முட்ட பொய்களையும், வெறுப்புகளையும் அள்ளித்தெளிக்கும் இடத்தில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர் இருந்து வருகின்றனர்.
அவ்வாறு ஈ ஓட்டும் கூட்டத்தில் பேசினால், வெகு மக்களின் பார்வையை எட்ட முடியாது என உணர்ந்த மோடி, தோல்வி பயத்தில் அதானி - அம்பானி போன்ற முதலாளிகள் டெம்போக்களில் கருப்பு பணங்களை அனுப்புகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனால், கடும் சினத்திற்குள்ளான அதானி குழுமம், அதுவரை பா.ஜ.க.விற்கு விசுவாசமாக செயல்பட்டு கொண்டிருந்ததை நிறுத்திக்கொண்டு, மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலி விவகாரத்தில் பா.ஜ.க நிகழ்த்திய நாடகத்தை மக்களிடையே போட்டு உடைத்தது.
அதனையடுத்தும், அதானி குழுமம் பெற்று வந்த முதலீடுகளில் சரிவு ஏற்பட்டமையாலும், பா.ஜ.க.வின் அதிகாரம் சரிவை சந்திப்பதாலும், நேரடியாக மோடியின் மீதே டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது அதானி குழுமம்.
அதற்கு அதானி குழுமம் கூறிய காரணம் என்பது, ‘எவ்வித தகுந்த ஆதாரமும் இல்லாமல் பேசியுள்ளார் மோடி. இதற்கான நீதியை அதானி குழுமம் பெறவேண்டும்’ என்பது தான்.
இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், ‘அதானி ஊழல் குறித்து மோடியே ஒப்புக்கொண்டிவிட்டார். எனவே, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணைக்குழுக்கள், இது குறித்து தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார்.
இதனால், உலக முதலீட்டாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், மக்களிடையே, ஒன்றிய பா.ஜ.க அரசு நிகழ்த்திய பொருளாதார சீர்கேடுகள் பல, அம்பலப்பட்டுள்ளது.
அதானி ஒன்(லி)
மோடி தலைமையில் ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு, குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானி தொழில்துறையில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளார்.
இவரது நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம், மின் துறை என பல துறைகளிலும் பரந்து விரிந்து, ஆசியாவின் 2வது பணக்காரராக அதானி உயர்ந்துள்ளார். இந்நிலையில் அடுத்தகட்டமாக சாமானியர்களின் சந்தையையும் ஆக்கிரமிக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் யுபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, இ-காமர்ஸ் மூலம் ஆன்லைன் வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதனால் கூகுள் பே, போன் பே, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மணிக்கு போட்டியாக யுபிஐ ஒன்றை புதிதாக தொடங்க லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகளை அதானி குழுமம் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதோடு, வங்கிகளுடன் இணைந்து கிரெடிட் கார்டு தொழிலும் அதானி குழுமம் கால் பதிக்க உள்ளது. இந்த சேவைகள் அனைத்தையும், 2022ல் தொடங்கப்பட்ட அதானி ஒன் ஆப் மூலமாக ஒரே இடத்தில் வழங்கவும் தொழில்நுட்ப ரீதியாக தயாராகி வருகிறது.
ஏற்கனவே அதானி குழுமம் விமான நிலையம், சுற்றுலா, ஓட்டல் புக்கிங், எரிவாயு, மின்சாரம் என பல துறைகளில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் அனைவரையும் குறிவைத்து, தனது சொந்த யுபிஐ ஆப் மூலம் பணம் செலுத்தினால் அதற்கு கிப்ட் கூப்பன், பாயிண்ட்ஸ் கொடுத்து அதை வைத்து ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம் என்கிற வசதிகளை வழங்க உள்ளது.
இதன் மூலம் வெகுஜன மக்களின் சந்தையிலும் அதானி குழுமம் ஆழமாக நுழைய முடியும். இது அதானி குழுமத்தின் ஆதிக்கத்தை மிகப்பெரிய அளவில் பரவச் செய்யும்.
இதற்கான பணிகளை அதானி குழுமம் வேகமாக செய்து வருகிறது.