ஒரு ஆளில்லா கிராமம்..

 இருந்த ஒரேயொரு வரும் காலமானதால்.. காலமான ஊர்

தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம் ஊரில் வசித்து வந்த ஒரேயொரு முதியவர் கந்தசாமி (75) உயிரிழந்ததால் ஆளில்லா கிராமமானது செக்காரக்குடி அருகே உள்ள மீனாட்சிபுரம்.

இங்கே 75 வயது கந்தசாமி இத்தனை காலம் தனியாக வசித்து வந்தார். தண்ணீர் பஞ்சம் காரணமாக இந்த கிராமத்தை மக்கள் பலரும் காலி செய்த நிலையில் கடந்த 10 வருடங்களாக இவர் இந்த கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்.


தமிழ்நாட்டிற்கு உள்ளே வருது.. மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் வே! சென்னை- தூத்துக்குடி இடையே.. மெகா ப்ராஜெக்ட்

கந்தசாமியின் கதை மனதை நொறுக்க கூடிய ஒன்றாகும். அவரது முழு வாழ்க்கையும் இந்த மீனாட்சிபுர கிராமத்தின் தூசி நிறைந்த, தனிமையான வறண்ட வயல்களுடன் பிணைக்கப்பட்டது ஆகும். அவர் இங்குதான் பிறந்தார். இங்குதான் படித்தார்.

இதே ஊரை சேர்ந்த பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். இப்போது யாரும் இல்லா இதே மண்ணில் மரணமும் அடைந்துவிட்டார். 20 வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி வீரலட்சுமி இறந்த அதே அறையில் இவர் கடைசி நாட்களைக் கழித்து வந்த நிலையில், அதே அறையில் இன்று அவர் வயோதிகம் காரணமாக மரணம் அடைந்தார்.

 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 13 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தில் சுமார் 1,135 மக்கள் இருந்தனர்.


அடுத்த 3 ஆண்டுகளில் சாரை சாரையாக மக்கள் தண்ணீர் பஞ்சம் காரணமாக வெளியேறினார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு 50 குடும்பங்கள் கடைசியாக இருந்தன.


அதன்பின் சில ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் இல்லாத காரணத்தால் அந்த குடும்பங்களும் வெளியேறின. கந்தசாமி மட்டும் இதனால் அங்கே தனித்து விடப்பட்டார். குடும்பம் இல்லாத காரணத்தால் அவர் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லை.


அவரிடமும் வெளியேறுவதை பற்றி யாரும் சொல்லவில்லை. இவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருந்தது. இருந்த தண்ணீரை வைத்து பஞ்சகால பயிர்களை பயிரிட்டு வந்தார்.


பெரும்பாலும் அங்கு அவர் பருத்தி பயிர்களை பயிரிட்டு வந்தார். ஆரம்பத்தில் இது லாபகரமாக இருந்தபோதிலும், நீண்ட காலம்அதை பராமரிக்க முடியவில்லை என்பதால் அந்த வயல்களை விற்றுவிட்டார் .

அவரது நான்கு குழந்தைகள் - இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் - தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கின்றனர்.


அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவரது 2 மகன்கள் ஓட்டுனர்களாக வேலை செய்கிறார்கள்.


இதனால் மனைவி, குடும்பம் இன்றி இவர் மட்டும் ஊரை விட்டு வெளியேற மனமின்றி மீனாட்சிபுரம் கிராமத்தில் 75 வயது கந்தசாமி இத்தனை காலம் தனியாக வசித்து வந்தார்.


ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள், மகன் கொடுக்கும் மாதம் ரூ. 2000 ஆகியவற்றை வைத்து இவர் காலம் கழித்து வந்தார்.


மகன்கள் அழைத்தும் இவர் தூத்துக்குடிக்கு வர மாட்டேன் என்று கூறிய நிலையில் . 20 வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி வீரலட்சுமி இறந்த அதே அறையில் இவர் கடைசி நாட்களைக் கழித்து வந்த நிலையில், அதே அறையில் இன்று அவர் வயோதிகம் காரணமாக மரணம் அடைந்தார்.


தண்ணீர் தட்டுப்பாடு, வேலையின்மை காரணமாக மக்கள் ஊரை விட்டு சென்ற நிலையில், கந்தசாமி மட்டும் சாகும்வரை அங்கேயே இருப்பேன் என பிடிவாதமாக இருந்துள்ளார்.


இவரின் இறப்புக்கு மீனாட்சிபுரம் வந்த மக்கள் இனி அங்கே வாழ போவதாக தெரிவித்துள்ளனர் ஆனால் நடக்குமா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?