தகுதியில்லாதவர்?
ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி பாஜ இளைஞரணி செயலாளர், ஊடக பொறுப்பாளர் கைது.
ஏன் மோடி வேண்டாம்?
1. *பெண்கள் பாதுகாப்பு*: பிரிஜ் பூஷன் மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா போன்ற பாலியல் சர்ச்சையில் சிக்கியவர்களிடம் இருந்து நமது வீட்டு பெண்களை பாதுகாக்கக்கூடிய அரசாங்கம் நமக்குத் தேவை.
2. *அரசியலமைப்பு*: நமது ஜனநாயகத்தை மதிக்கும், பாபா சாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை பராமரிக்கக்கூடிய ஒரு அரசாங்கம் நமக்குத் தேவை.
3. *பொருளாதாரம்*: அதானி, அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர வர்க்க இந்தியருக்கும் வேலை செய்யும் அரசு தேவை.
4. *வேலைவாய்ப்புகள்*: வெற்று வாக்குறுதிகள் மற்றும் பொய்யான உத்தரவாதங்களை அளிக்கும் அரசாங்கம் அல்ல, நமக்கு வேலைகளை வழங்கி பணவீக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும் அரசாங்கம் தேவை.
5. *எல்லைப் பாதுகாப்பு*: மணிப்பூரை எரிக்க அனுமதிக்கும் அரசாங்கம் நமக்குத் தேவையில்லை; சீனாவின் பிராந்திய அத்துமீறலில் இருந்து நமது எல்லைகளைப் பாதுகாக்கும் ஒரு அரசாங்கம் நமக்குத் தேவை.
6. *ஊழல்* : நமது உணவில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் போடும் நிறுவனங்கள் மீதும், போலி மருந்துகளை விற்கும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடிய அரசுதான் தேவை. நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்கும் அரசு அல்ல. இந்த நன்கொடை முறையை முடிவுக்கு கொண்டுவருவது முக்கியம்.
7. *விவசாயிகள்* : நமது விவசாயிகளை ஊக்குவிக்கும் அரசு வேண்டும், அவர்கள் போராட்டம் நடத்தினால் அடித்து ஒடுக்கும் அரசு வேண்டாம்.
8. *பொறுப்புத் தன்மை* : மக்களுக்குப் பொறுப்புக்கூறும், வழக்கமான செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் எழுத்துப்பூர்வமற்ற நேர்காணல்களை நடத்தும் பிரதமர் இருக்கும் அரசாங்கம் நமக்குத் தேவை.
9. *கல்வி* : படித்த, பணிவான பிரதமர் கொண்ட ஒரு அரசாங்கம் நமக்கு தேவை, திமிர்பிடித்த, படிக்காத சர்வாதிகாரி அல்ல.
10. *பிரதமர்* : 24x7 போட்டோஷூட்கள், பேரணிகள் என்று மும்முரமாக இருக்கும் பிரசார அமைச்சராக இல்லாமல், ரூ.1.5 லட்சம் மதிப்பிலான கண்ணாடிகளை அணிந்துகொண்டு, ஒரு நாளைக்கு நான்கு முறை உடை மாற்றிக்கொண்டு நடமாடும் பிரதமராக இல்லாமல், உண்மையான பிரதமராக இருக்கும் அரசு நமக்குத் தேவை.
நினைவில் கொள்ளுங்கள்: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், படித்த எம்.பி.க்களை கவனமாக ஆலோசித்து, இயற்கையால் நாட்டின் சர்வாதிகாரி என்று நம்பி நாசீசிசத்தில் வாழ்பவரை விட 10 மடங்கு சிறந்தவராக இருப்பார்.
கட்சிகள் உருவாகும், உடைக்கப்படும் ஆனால் இந்த நாடு நிலைத்திருக்க வேண்டும், இந்த நாட்டின் ஜனநாயகமும் அரசியலமைப்பும் நிலைத்திருக்க வேண்டும். சர்வாதிகாரத்தில் இருந்து நம் நாட்டை காப்பாற்றுவோம் என்றும், சிறந்த தேர்வை தேர்ந்தெடுப்போம் என்றும் உறுதிமொழி எடுப்போம்.”
-துருவ் ரதீ
முகமது முக்பர் |
ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார் முகமது முக்பர். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் முகமது முக்பர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
24 நாடாளுமன்றத் தேர்தல் நான்கு கட்டத்தைக் கடந்து ஐந்தாவது கட்டத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான பரப்புரையில் வட மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்களின் பேச்சுகள் கடும்விமர்சனத்துக்குள்ளாகியிருக்கின்றன.
அதில் சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி, “தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். தென் மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி வழங்கப்பட்டு இருப்பதால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து உ.பியில் பேசிய மோடி, ``இந்தியா கூட்டணியினர் இங்கு வாக்கு கேட்கிறார்கள், தென்னிந்தியாவில் அவர்கள் உத்தரபிரதேச மக்களை அவமானப்படுத்துகிறார்கள், உபி மக்களை அபத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவமதிக்கிறார்கள்.
அவர்களின் கூட்டணி கட்சிகளான திமுக, கேரளாவில் இடதுசாரிகள், கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் தெலங்கானாவில் உத்தரப்பிரதேச மக்களுக்கு எதிராக தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். உத்தரபிரதேச மக்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யும் இந்திய கூட்டணி மக்களை மன்னித்து வாக்களிப்பீர்களா?” என்றார்.
இந்திய அணி சனாதன தர்மத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம் பயணச் சுதந்திரத்தைத் தந்ததோடு, பெண்களுக்குப் பலவகைகளிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது.
பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை எனப் புதுப்புரளி கிளப்பி இருக்கிறார். பிரதமர் பேசுவதைக் கவனித்தால் “உண்மை கிலோ என்ன விலை?” என்று கேட்பார் என்று தோன்றுகிறது.
ஏனென்றால், 2019-இல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-ல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை.
சென்னை மெட்ரோ இரண்டாம்கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக்கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார்.
பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது” என விமர்சனம் செய்திருந்தார்.
“உலகில் எங்காவது பேருந்து சேவை இல்லாமல் மெட்ரோ ரெயில் சேவை மட்டும் இருப்பதைக் காட்ட முடியுமா? பேருந்து சேவையால் மெட்ரோ ரயில் சேவையின் பாதிப்பதை நிரூபிக்க முடியுமா? சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்குப் பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு நிதி தராமல் நிறுத்திவைத்திருப்பது ஏன்? பெண்களுக்கு இலவசப் பேருந்து திட்டத்தால் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதை நிரூபித்துக் காட்ட முடியுமா? என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.