"நான் கடவுள்"
ஸ்பெயினில் உணவக மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் பலி.
அந்த கடைகள் சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்பட்டு வருகிறது.
மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட்டு வருகின்றன.
சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மீண்டும் திறப்பதற்கு 2.30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது.
அந்த சமயத்தில்தான், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை உயர் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், கிடங்குகளில் இருந்து பொருட்களை நகர்வு செய்து கடைகளுக்குக் கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகள் தொடர்பாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் கே.கோபால் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அனைத்து கூட்டுறவு சார்பதிவாளர்களும் தங்களது வட்டாரங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அவ்வப்போது தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும்.
ரேஷன் கடைகள் அனைத்தும் காலை 9 மணிக்கு திறந்து மாலை 6 மணியளவில் மூடப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும்.
பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டதில் ரூ.25,236 கோடி நஷ்டம்:- அமைச்சர் மனோ தங்கராஜ்
நோ பார்க்கிங்கில் நிறுத்தம் 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம்.
வங்கதேச எம்.பி
உடல் பாகங்கள்
பிரிட்ஜில்?
வங்கதேச எம்பி அன்வருல்அசீமை அவரது அமெரிக்க நண்பர் ரூ.5கோடி கொடுத்து கொன்றுள்ளதோடு, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு மருத்துவ சிகிச்சைக்கு வந்த வங்கதேசத்தை சேர்ந்த அவாமீ லீக் எம்பி அன்வருல் அசிம் அனார் கடந்த 13ம் தேதி மாயமானார்.
அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையை மாநில சிஐடி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அனார் கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும், ஆனால் அவரது உடல் இன்னும் மீட்கப்படவில்லை என்றும் சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரது நெருங்கிய நண்பரான அமெரிக்காவை சேர்ந்தவர் ரூ.5கோடி கொடுத்து எம்பியை கொலை செய்ய கூறியதாக சந்தேகிக்கப்படுகின்றது. கடைசியாக அன்வருல் சென்ற நண்பரின் குடியிருப்பில் ரத்த கறைகள் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஏராளமான பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எம்பி உடலை துண்டு துண்டாக வெட்டி அதனை வெவ்வேறு இடங்களில் வீசுவதற்கு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி இருக்கலாம்.
ப்ரிட்ஜில் வைக்கப்பட்டு இருந்த சில பிளாஸ்டிக் பைகளில் இருந்த உடல் பாகங்கள் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றனர்.
இயற்கை விளையாட்டு.
அவரது பெயர் எம்பிடோக்ளிஸ். அவர் இத்தாலி நாட்டில் வாழ்ந்த மிகப்பெரிய அறிஞர். சாக்ரடீசுக்கு முன்பு வாழ்ந்தவர்.!
எம்பிடோக்ளிஸ் அறிஞர் மட்டுமில்லை, கவிஞர், தத்துவ மேதை, மருத்துவர்.. இப்படியாக அவருக்குப் பல முகங்கள்.=
போகிற இடமெல்லாம் புகழ்மாலைகள், பார்க்கிறவர்களிடம் இருந்தெல்லாம் பாராட்டுகள். ஒருகட்டத்தில் எம்பிடோக்ளிசுக்கு, தான் ஒரு கடவுள் என்ற எண்ணம் வந்து விட்டது.!
‘இறக்கும்போது எல்லோரையும் போல நாம் இறக்கக்கூடாது. இறந்தபிறகு நமது உடல் கிடைக்கக் கூடாது. நாம் நேரடியாக விண்ணுலகத்துக்குப் போய்விட்டதாக மக்கள் நம்பணும்’ இந்தமாதிரியான ஒரு விபரீத முடிவுக்கு வந்தார் எம்பிடோக்ளிஸ்.!
கி.மு.430ஆம் ஆண்டு. தனது சீடகோடிகளுடன் சிசிலித் தீவில் உள்ள எட்னா எரிமலை அருகே தங்கியிருந்தார் எம்பிடோக்ளிஸ்.!
டின்னர் முடிந்து நடுஇரவில் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம், எம்பிடோக்ளிஸ் மட்டும் எழுந்து வெளியே வந்தார்.!
நேராக எட்னா எரிமலையின் உச்சிக்கு ஏறிப்போய் அதன் திறந்த வாய்க்குள் விழுந்துவிடுவது எம்பிடோக்ளிசின் திட்டம். அப்படி விழுந்தால் எம்பிடோக்ளிஸ் எங்கே போனார், என்ன ஆனார் என்பதே யாருக்கும் தெரியாது. எரிமலை பள்ளத்துக்குள் இறங்கி யாரும் வந்து தேட முடியாது. எம்பிடோக்ளிஸ் மலைமேல் ஏறி நேராக சொர்க்கம் போய்விட்டார் என்று எல்லோரும் நம்பி விடுவார்கள்.!
இந்த எண்ணத்துடன், எட்னா எரிமலையின் உச்சியில் ஏறி, அதன் வாய்க்குள் தொபுக்கடீர் என்று எம்பிடோக்ளிஸ் குதித்துவிட்டார். லாவா குழம்பு, சாம்பல் குவியலுக்குள் அப்படியே அவர் மூழ்கிப் போனார்.!
ஆனால், இயற்கை இருக்கிறது பாருங்கள். அதற்கு குறும்பு அதிகம். அது மருத்துவன் என்று தன்னை மெச்சிக் கொள்பவனை நோயாளியாக்கிக் காட்டும். அறிஞன் என்று தம்பட்டம் அடிப்பவனை முட்டாள் என்று தோலுரித்துக் காட்டிவிடும்.!
அதேப்போல, எம்பிடோக்ளிஸ் எரிமலைக்குள் விழுந்தபிறகு, எட்னா எரிமலை அவரது காலணிகளில் ஒன்றை மட்டும் ‘தூ’வென வெளியே துப்பிவிட்டது.!
அது வெண்கலக் காலணி. அதனால் எரிமலை நெருப்புக்குழம்பில் உருகாமல் அது தப்பி வெளியே வந்து விழுந்து விட்டது.!
மறுநாள் காலையில் எம்பிடோக்ளிசை தேடிய சீடகோடிகள், அவரது அந்த ஒற்றைக் காலணியைக் கண்டுபிடித்தார்கள். எம்பிடோக்ளிஸ் எரிமலைக்குள் விழுந்துவிட்டார் என்ற முடிவுக்கு வந்தார்கள்.
அந்த காலணி மட்டும் காட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால் எம்பிடோக்ளிஸ் இன்று கடவுள் வடிவமாக, தெய்வ அவதாரமாகக் கொண்டாடப்பட்டிருப்பார்.!
ம். இயற்கை செய்தி சதி.
(இதை எதுக்குச் சொல்கிறேன் என்றால்…அட! ஏங்க சிரிக்கிறீங்க?)
"நான் கடவுள்"
10 ஆண்டுகளாக பிரதமர் பதவி வகிக்கும் மோடி, கடவுளுடன் தொடர்புடையவர்களாக தெரிவிக்கும் மற்ற சாமியார்களை மிஞ்சும் மிகப்பெரிய சாமியாராக உருமாற தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறார்.
அதற்கு அவர் தரும் நேர்காணல்களே, உதாரணங்களாகவும் இருக்கின்றன. அவ்வாறு அவர் கொடுத்த நேர்காணல்கள் சிலவற்றில், “பா.ஜ.க.விற்கு வாக்களிப்பவர்கள், என்னுடைய நல்ல செயல்களால் புன்னியம் பெறுவர்” என்றும், “என் அம்மா உயிரோடு இருக்கும் வரை, நானும் மற்றவர்களை போல தான் என எண்ணிக்கொண்டிருந்தேன்,
ஆனால், அவர்கள் மறைவுக்கு பின் தான், நான் பெற்ற ஆற்றல்களும், என் செயல்களும், உயிரியல் ரீதியானது அல்ல. கடவுளிடமிருந்து நேரடியாக பெற்றது என்பதை உணர்ந்து வருகிறேன். நான் செய்த செயல்கள் அனைத்தும், கடவுளின் நேரடி உந்துதலினால் தான் செய்து வருகிறேன், செய்யவும் இருக்கிறேன்” என்றும் சற்றும் தயக்கமின்றி பேசியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட இரண்டாவது விடைக்கு கேள்வி, “உங்களுக்கு சோர்வே கிடையாதா?” என்பது தான். சோர்வு கிடையாதா என கேட்கப்பட்டதற்கு கடவுளின் நேரடி படைப்பு தான் நான் என்கிற விடையை பார்வையாளர்கள் கண்டு சிரித்தாலும், நேர்காணல் செய்பவர்கள் சிரிப்பை அடக்கிக்கொண்டு தான் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், கடவுள் புரி ஜெகன்நாதரே, மோடியின் பக்தர் தான் என ஒரு படி மேல் சென்று, கூவியிருக்கிறார், மோடி கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா.
அதன் பின், புரி ஜெகன்நாதர் பின்பற்றாளர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும், இதற்கு கடும் கண்டனம் தர, வாய் தவறி சொல்லி விட்டதாக மன்னிப்பும் கேட்டுள்ளார் சம்பித் பத்ரா.
இதனிடையே, சர்ச்சையில் கட்டப்பட்ட ராமர் கோவிலை திறக்கும் இடத்திலும், மோடியே முன்னிறுத்தப்பட்டார். இதற்கு சில இந்துத்துவவாதிகளே மறுப்பு தெரிவித்த போதிலும், அதனை புறந்தள்ளி, அனைத்திற்கும் தலைவன் நான் தான் என்ற மனப்பான்மையை உலக அரங்கில் நிறுவினார் மோடி.
இத்தகைய செயல்களால், அதுவரை ஹிட்லருடன் ஒப்பிடப்பட்டு வந்த மோடி, தற்போது ஹிட்லரையே மிஞ்சிவிட்டாரோ என்று எண்ணும் அளவிற்கு, நிலைமை அளவு கடந்து செல்லத்தொடங்கியுள்ளது.
இது போன்ற பொய் முன்மொழிவுகளுக்கு, மோடி உறுதியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்தாலும், அதனை ஒரு பொருட்டாக கூட எண்ணாமல், கடவுள் அவதாரம் என சுற்றித்திரிந்து வருகிறார் மோடி.