வாயால் சுடும் வடை!

 நாட்­டில் வறுமை ஒழி­யும் வரை ஓய­மாட்­டோம்” என்று வாயால் வடை சுட்­டுள்­ளார் பிர­த­மர் நரேந்­தி­ர­மோடி. மத்­தி­யப்­பி­ர­தேச மாநி­லத்­தில் அடுத்த மாதம் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடக்க இருக்­கி­றது. 

அத­னால் அந்த மாநி­லத்­தில் பள்ளி ஆண்டு ­விழா­வில் எல்­லாம் பிர­த­மர் கலந்து கொள்­கி­றார். 

குவா­லி­யர் நக­ரில் உள்ள ஒரு பள்­ளி­யில் இரண்­டு ­நாட்­க­ளுக்கு முன்­னால் பேசி இருக்­கி­றார் பிர­த­மர்.

‘‘பார­தத்­தில் இருந்து வறு­மையை ஒழிப்­பது இன்­றி­ய­மை­யா­தது. 

அந்த நேசத்­துக்­கு­ரிய இலக்கை அடை­யும் வரை நாங்­கள் ஓய மாட்­டோம்” என்று அந்­தப் பள்ளி விழா­வில் பேசி இருக்­கி­றார் பிர­த­மர்.

2014 ஆம் ஆண்டு பிர­த­மர் ஆன­தும் பேசி இருக்க வேண்­டி­யதை, 2023 இல் பிர­த­மர் நாற்­கா­லி­யில் இருந்து இறங்­கப் போகும் போது சொல்லி இருக்­கி­றார்.

இந்த ஒன்­பது ஆண்டு காலம் இந்­திய நாட்­டின் பிர­த­ம­ராக இருந்­த­வர் அவர் தான். பட்­டி­னியை ஒழிக்க என்ன செய்­தார்? 

இரண்­டா­வது முறை­யாக ஆட்­சிக்கு வந்து - அந்த இரண்­டா­வது முறை­யும் முடி­யப் போகும் போது, பட்­டி­னிக்கு எதி­ரா­கப் பேசி இருக்­கி­றார் பிர­த­மர்.

சில நாட்­க­ளுக்கு முன்பு தான் ஒரு புள்­ளி­வி­ப­ரம் வெளி­யா­னது. கடந்த ஒன்­பது ஆண்டு கால மோடி ஆட்­சி­யில் இந்­தி­யா­வில் பட்­டினி அதி­க­ரித்­துள்­ளது என்­பது அந்த புள்­ளி­வி­ப­ரம் ஆகும். உல­கப் பட்­டினி குறிப்­பீட்­டில்

(Global Hunger Index) இந்­தியா இது­வரை இல்­லாத அள­வுக்கு மிக மோச­மான இடத்தை அடைந்­துள்­ளது. 

ஆய்­வுக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்ட 125 நாடு­க­ளில் 111 ஆவது இடத்தை பெற்­றுள்­ளது மோடி­யின் இந்­தியா.

‘இந்­தியா’ என்று சொன்­னால் அவர்­க­ளுக்கு பிடிக்­காது. அத­னால்மாற்­றிச் சொல்­லு­வோம்... ஆய்­வுக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்ட 125 நாடு­ களில் 111 ஆவது இடத்­தைப் பெற்­றுள்­ளது மோடி­யின் பார­தம். 

125 நாடு ­களில் 28.7 என்ற புள்­ளி­களை மட்­டுமே மோடி­யின் பார­தம் பெற்­றுள்­ளது.

அர­சி­ய­லில் மிக மோச­மான நிலை­யில் உள்ள நாடு­க­ளான பாகிஸ்­தான், இலங்கை, நேபா­ளம், வங்­க­தே­சம் ஆகிய நாடு­கள் எல்­லாம் இந்­தி­யாவை விட நன்­றாக இருக்­கின்­றன. 

பாகிஸ்­தான் 102 ஆவது இடத்­தி­லும், வங்­க­தே­சம் 81 ஆவது இடத்­தி­லும், நேபா­ளம் 69 ஆவது இடத்­தி­லும், இலங்கை 60 ஆவது இடத்­தி­லும் இருக்­கி­றது. மோடி­யின் பார­தம், 111 ஆவது இடத்­தில் இருக்­கி­றது.

இவை ஏதோ காலம் கால­மாக இருக்­கும் நிலைமை அல்ல. 

மோடி­யின் ஆட்­சிக்­குப் பிற­கு­தான் நிலைமை மோசம் ஆகி இருக்­கி­றது.

2011 ஆம் ஆண்டு 122 நாடு­க­ளில் இந்­தியா 67 ஆவது இடம்

2012 ஆம் ஆண்டு 120 நாடு­க­ளில் 65 ஆவது இடம்

2013 ஆம் ஆண்டு 120 நாடு­க­ளில் 63 ஆவது இடம்

2014 ஆம் ஆண்டு 120 நாடு­க­ளில் 55 ஆவது இடம் - என இந்­தி­யா­வில் பட்­டி­னிக் குறி­யீடு இருந்­தது. 

2014 ஆம் ஆண்டு மோடி, இந்­தி­யா­வின்

பிர­த­ம­ரா­கி­றார். அதன்­பி­றகு என்ன ஆனது பாருங்­கள்...

2015 ஆம் ஆண்டு 117 நாடு­க­ளில் 80 ஆவது இடம்

2016 ஆம் ஆண்டு 118 நாடு­க­ளில் 97 ஆவது இடம்

2017 ஆம் ஆண்டு 119 நாடு­க­ளில் 100 ஆவது இடம்

2018 ஆம் ஆண்டு 132 நாடு­க­ளில் 103 ஆவது இடம்

2019 ஆம் ஆண்டு 117 நாடு­க­ளில் 102 ஆவது இடம்

2020 ஆம் ஆண்டு 107 நாடு­க­ளில் 94 ஆவது இடம்

2021 ஆம் ஆண்டு 116 நாடு­க­ளில் 101 ஆவது இடம்

2022 ஆம் ஆண்டு 121 நாடு­க­ளில் 107 ஆவது இடம்

2023 ஆம் ஆண்டு 125 நாடு­க­ளில் 111 ஆவது இடம் என இந்­தி­யா­வின் பட்­டி­னிக் குறிப்­பீட்­டில் மோடி­யின் பார­தம் சரிந்து கொண்டே வந்­து­விட்­டது.

குழந்­தை­க­ளின் ஊட்­டச்­சத்­துக் குறை­பாட்டை வைத்து இத­னைக்கணக்­கீடு செய்­கி­றார்­கள். 

இந்­தி­யா­வில் 22 கோடிப் பேர் வறுமை நிலை­யில் இருப்­ப­தாக ஐ.நா. அறிக்கை கடந்த ஆண்டு கூறி­யது.

 பீகார், ஜார்­கண்ட், மேகா­லயா, மத்­தி­யப்­பி­ர­தே­சம், உத்­த­ரப்­பி­ர­தே­சம், அசாம், ஒடிசா, சத்­தீஸ்­கர், அரு­ணா­ச­லப்­பி­ர­தே­சம் ஆகிய மாநி­லங்­க­ளில் வறு­மை­யும் ஏழ்­மை­யும் அதி­க­மாக உள்­ளது.

சமீ­பத்­திய அறிக்­கை­க­ளின்­படி, இந்­தி­யா­வின் கிரா­மப்­பு­றங்­க­ளில் வாழும் மக்­கள் தொகை­யில் கால் பகு­திக்­கும் அதி­க­மா­னோர் வறு­மைக் கோட்­டிற்­குக் கீழே உள்­ள­னர். 

இந்­தி­யா­வின் கிரா­மப்­பு­றங்­க­ளில் வாழும் மொத்த மக்­கள்­தொ­கை­யில், 25.7% பேர் வறு­மைக் கோட்­டிற்­குக் கீழே வாழ்­கின்­ற­னர், நகர்ப்­பு­றங்­க­ளில், 13.7% மக்­கள் வறு­மைக் கோட்­டுக்­குக் கீழே வாழ்­கின்­ற­னர்.

இவை அனைத்­தை­யும் மறைத்து கடந்த ஆண்டு ஒன்­றிய நிதி ஆயோக் ஒரு அறிக்­கையை கொடுத்­தது.

 ‘வறுமை இல்­லாத நாடாக 2022ஆம் ஆண்டு இந்­தியா உரு­வா­கும்” என நிதி ஆயோக் அறிக்கை நம்­பிக்கை தெரி­வித்­தது. அர­சுக்கு ஆலோ­சனை கூறும் உயர் அமைப்­பான நிதி ஆயோக், ‘2022-ஆம் ஆண்­டில் இந்­தியா’ என்ற தலைப்­பி­டப்­பட்ட அந்­தத் தொலை­நோக்கு அறிக்­கை­யில், ‘உல­கின் முன்­ன­ணிப் பொரு­ளா­தார நாடாக இந்­தியா வள­ரும்; இந்­தி­யா­வில் நில­வும் வறுமை 2022-ஆம்

ஆண்­டுக்­குள் முற்­றி­லும் ஒழி­யும்; அதே­போல, 2022-ஆம் ஆண்­டுக்­குள் ஊட்­டச்­சத்­துக் குறை­பாடு இல்­லாத இந்­தி­யா­வாக மாறும்’ என அதில் குறிப்­­­பி­டப்­பட்டு இருந்­தது. ‘சர்க்­கரை’ என்று எழு­தி­னால் அந்த தாள் இனிக்­குமா?

ஆனால் உண்­மை­யான நிலைமை என்ன என்­பது இப்­போது அம்­ப­ல­மாகிவிட்­டது.

அம்பானி,அதனை, கார்­ப­ரேட் கம்­பெ­னி­க­ளுக்கு 25லட்­சம் கோடி ரூபாய் தள்­ளு­படி செய்­வ­தும், கோடிக்­க­ணக்­கான மக்­க­ளுக்கு வறு­மை­யைப் பரி­ச­ளிப்­ப­தும் தான் மோடி­யின் பார­தம்.

பட்டிணியால் வாடுவது இந்தியா!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?