பொய்ப் பிரமாணம் எடுத்துள்ள
கேரள மாநிலம் களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
ஆந்திராவில் சிக்னலுக்காக நின்றிருந்தபோது பயங்கரம் 2 #ரயில்கள் மோதி 19 பேர் பலி: 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் .
நெல்லையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம். முதல்வர் மு.க.ஸ்டாலின்அறிவிப்பு.
கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு.
கொட்டித்தீர்க்கும் மழை. தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழை வானிலை மையம் எச்சரிக்கை.
------------------
பொய்ப் பிரமாணம் எடுத்துள்ள ஆளுநர் - 1
வாயைத் திறந்தாலே பொய்யும் புளுகும்தான் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வருகிறது. ஒரு சம்பவத்தை வைத்து அவர் நூற்றுக்கணக்கான பொய்களைச் சொல்லத் தொடங்கி விட்டார்.
ஆளுநர் மாளிகை இருக்கும் சாலையில் கடந்த 25 ஆம் தேதி என்ன நடந்தது?
25.10.2023 அன்று மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (42 வயது – - E-–3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் வழக்கமான குற்றவாளி) என்பவர் ஆளுநர் மாளிகை அருகே தனியாக சாதாரணமாக நடந்து வந்தார். பெட்ரோல் நிரப்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டு வந்து, அவற்றை ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சர்தார் படேல் சாலையில் எதிர்ப்புறத்தில் இருந்து எறிய முயன்றார்.
ஆளுநர் மாளிகையின் வெளிப்புறத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழ்நாடு காவல்துறை போலீசாரால் தடுக்கப்பட்டார். அப்போது சம்பவ இடத்திற்கு எதிரே சற்று தூரத்தில் இருந்து இரண்டு பாட்டில்களை வீசினார்.
அவை ஆளுநர் மாளிகையின் அருகே சர்தார் படேல் சாலையில் வைக்கப் பட்டிருந்த தடுப்பரண்களுக்கு அருகே விழுந்தது. பாதுகாப்பு போலீசாரால் உடனடியாக கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார்.
இச்சம்பவத்தால், பொருட்களுக்கோ அல்லது எந்த நபருக்கோ எவ்வித சேதமோ, காயமோ ஏற்படவில்லை.
-– இவ்வளவுதான் நடந்தது.
ஆனால் ஆளுநர் மாளிகை சொல்லும் பொய், பெட்ரோல் பாட்டில்களை விடப் பெரிய பொய் பாட்டில்களாக இருக்கின்றன.
•பொய் 1:ராஜ்பவன் மெயின் கேட் எண் 1 வழியாக பெட்ரோல் குண்டுகளை ஏந்திய மர்ம நபர்கள் சிலர் உள்ளே நுழைய முயன்றனர்.
உண்மை:குண்டுகளை ஏந்திய மர்ம நபர்கள் ஏராளமானவர்கள் என அப்படி யாரும் வரவில்லை. வினோத் என்ற ஒரே ஒரு நபர் மட்டும்தான் வந்தார்.
அவரும் சாலையின் அந்தப் பக்கம் இருந்து வாசலை நோக்கித்தான் வீசினாரே தவிர, உள்ளே நுழைய முயற்சிக்கவில்லை.
நந்தனம் சிக்னலில் இருந்து நடந்தே வருகிறார் வினோத். நந்தனம் கலைக் கல்லூரி, சைதாப்பேட்டை பாலம், சின்னமலை வரை நடந்தே வருகிறார். அவர் தனி ஆளாகத் தான் நடந்து வருகிறார்.
அங்கிருந்து சைதை நீதிமன்றம் வழியாக நடந்து சென்றுள்ளார். இது ஆளுநர் மாளிகைக்கு எதிர்புறம் உள்ள சாலையாகும். இந்த சாலையைக் கடந்தால்தான் ஆளுநர் மாளிகை வாசலுக்கு செல்ல முடியும். சாலையை வினோத் கடக்கவில்லை. ஆளுநர் மாளிகைக்கு எதிரே நின்று ஆளுநர் மாளிகை முன்பு வீச முயற்சித்துள்ளார்.
அங்கு பணியில் இருந்த ஐந்து காவலர்கள் உடனே அவரை தடுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவை அனைத்தும் வீடியோ காட்சிகளாக உள்ளன.
•பொய் 2:பாதுகாப்புப் பணியாளர்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்த முயன்ற போதும், மற்றொரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் பிரதான நுழைவாயிலுக்கு பலத்த சேதம் ஏற்படுத்தப்பட்டது.
உண்மை:பிரதான நுழைவாயிலில் பலத்த சேதமும் ஏற்படவில்லை.
சிறு சேதமும் ஏற்படவில்லை. பாட்டில் வீசப்பட்டது பிரதான வாசலில் இருந்து 30 மீட்டர் தூரத்தில் -– பேரிகாட் தாண்டி சாலையில்தான் விழுந்துள்ளது. எனவே நுழைவாயிலில் எந்த சிறு சேதமும் கிடையாது.
•பொய் 3 :வினோத்துடன் நிறையப் பேர் வந்துள்ளார்கள்.
உண்மை:கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், மேற்படி நபர் நந்தனத்தில் இருந்து சம்பவ இடம் வரை தனியாகவே வந்துள்ளார்.
•பொய் 4: அந்த நபரை தப்பிக்க விட்டு விட்டார்கள்.
உண்மை:உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். சரியாகச் சொல்வதாக இருந்தால் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
•பொய் 5: அவர் மீது வழக்கு பதியவே இல்லை.
உண்மை:அன்றைய தினமே J--–3 கிண்டி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக அவர் IV-–வது பெருநகர குற்றவியல் நடுவர் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, 09.11.2023 வரை சிறையில் வைக்கப்பட்டார்.
•பொய் 6: ஆளுநர் அவர்களுக்கு எதிராக பகிரங்க மிரட்டல், அவதூறுப் பேச்சு மற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் இந்த பாட்டில் வீச்சு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நியாயமான முறையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை.
உண்மை:குற்றவாளி கைது செய்யப்படுகிறார். நீதிமன்றத்தில் நிறுத்தப்படு கிறார். சிறையில் அடைக்கப்பட்டுகிறார்.
ஆளுநர் மாளிகைக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. இதற்கு பின்னால் சதி ஏதாவது இருக்குமா என காவல் துறை விசாரிக்கிறது. இதற்கு மேல், மேல் நடவடிக்கை என்ன எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
•பொய் 7: உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
உண்மை:உடனடியாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
•பொய் 8: ஏப்ரல் 19, 2022 அன்று மயிலாடுதுறை சென்ற போது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது. இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.
உண்மை:ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் அப்பகுதியை கடந்து சென்ற பின்னர் அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் கருப்புக்கொடிகளை சாலையில் வீசினர்.
அக்கொடிகள் ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் முழுமையாக சென்றபின் பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது.
ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
இதுவரை இல்லாத மோசமான நிலை பாட்டை, பாலஸ்தீன விவகாரத்தில் மேற் கொண்டிருக்கிறது மோடி அரசு.
அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை துவக்கியவுடனே, இந்தியாவின் நீண்ட கால வெளியுறவு கொள்கையை ஒரு நொடியில் தகர்த்தெறிந்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரி வித்து டுவீட் வெளியிட்டார்.
சர்வதேச அரங்கில் பாலஸ்தீனத்திற்கு எதிரான நிலைபாட்டை எடுத்ததன் மூலம் விமர்சன கணைகள் எழுந்த பின்னணியில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் சால்ஜாப்பு அறிக்கை மூலமாகவும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் முகமது அப்பாசுடன் பிரதமர் மோடியின் தொலைபேசி உரையாடலின் மூலமாகவும் சமாளிப்பு முயற்சி களை மேற்கொண்டது மோடி அரசு.
ஆனால் இவையனைத்தும் வெறும் நாடகம் என்பதை, அக்.28 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேல் உடனடியாக போர் நிறுத்தம் அறி விக்க வேண்டும் என வலியுறுத்துகிற தீர்மானம் வந்தபோது, அதற்கு எதிராக, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்த நிலைபாட்டின் மூலமாக நிரூபித்துவிட்டது மோடி அரசு.
அகண்ட இஸ்ரேலை உருவாக்குவோம் எனக் கொக்கரிக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு. அகண்ட பாரதத்தை உருவாக்குவோம் என்ற ஆர்எஸ்எஸ்-பாஜக வின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுடன் ஆட்சி நடத்துகிறார் இந்திய பிரதமர் மோடி. இரண்டு அதிதீவிர வலதுசாரி பிற்போக்கு மதவாத மற்றும் இனவெறி பிடித்த ஆட்சியாளர்களும் ஒரே சிந்தனை போக்குடையவர்கள்; எதிரி களை, மாற்றுக் கருத்து கொண்டவர்களை அழித்தொழித்தல் எனும் கொடிய, பாசிச தன்மை கொண்ட சித்தாந்தத்தை தங்களது ஆட்சியின் கொள்கையாகவே அமல்படுத்துகிறார்கள்.
பாலஸ்தீனத்திற்கு எதிரான, இஸ்ரேலுக்கு ஆதரவான மோடி அரசின் நிலைபாடு இதை அப்பட்டமாக உணர்த்துகிறது. மோடி அரசு இந்த நிலைபாட்டை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பாலஸ்தீன மக்களின் நீண்டகால போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.
இஸ்ரேல், காசா மீதும் பாலஸ்தீனம் மக்கள் மீதும் ஒரு கொடூரமான இனப் படுகொலையை அரங்கேற்றி வருகிறது. 22 லட்சம் மக்கள் வாழ்கிற காசா நகரத்தையே கிட்டத்தட்ட நிர்மூலமாக்கி விட்டது. உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகள் இன்னும் வலுவாக குரல் கொடுக்க வேண்டும். இஸ்ரேலையும் அதை இயக்கும் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தையும் வலுவாக நிர்ப்பந்திக்க வேண்டும்.