முதல்வர் நாற்காலியில் ஒருக்கால்.?

 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் என்ற கிராமம் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பூர்விகமாகும். 

விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் கலப்பையை தூக்கிக் கொண்டு கழனிக்கு சென்ற இவர் கூடவே கவிதைகளையும் புனையத் தொடங்கினார்.

பிற்காலத்தில் பாமரர்களின் பாட்டுடைத் தலைவனாக மிளிர தொடங்கினார். மாடு மேய்த்தது, முறுக்கு விற்றது, உப்பளத்தில் வேலை செய்தது, என தனது 19 வயது வரை பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் பார்க்காத வேலைகளே இல்லை என்று சொல்லிவிடலாம்.

இதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் கஷ்ட நஷ்டங்களை கண்கூடாக பார்த்து வளர்ந்து அதனை பாடமாக பயின்ற பட்டுக்கோட்டையார், 19 வயதில் பாட்டெழுத தொடங்குகிறார்.

 பொதுவுடைமை சித்தாந்தத்தில் ஆழ்ந்த பற்றுமிக்கவராக திகழும் இவர், உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக் குரலாக பாடல் வரிகளில் புரட்சியை நிகழ்த்தினார்.

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமானார்.

திரைப்படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பை பெறுவதற்காக சென்னைக்கு வரும் இவர் வாய்ப்புக்காக ஆரம்பக்காலத்தில் அலையாய் அலைந்தார்.

பாசவலை திரைப்படத்தில் பாட்டெழுத இளைஞனான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு வாய்ப்பு தரப்படுகிறது. எம்.எஸ்.விஸ்வநாதன் மிகுந்த சந்தேகத்துடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை சந்தித்தோடு, இந்தப் பையனுக்கு சரியாக பாட்டெழுத வருமா, டியூன் கம்போஸ் ஆகுமா என்றெல்லாம் எம்.எஸ்.வி. தயங்கியிருக்கிறார்.

''குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்; குள்ளநரி மாட்டிக்கிட்ட குறவனுக்கு சொந்தம்'' என ஆன் தி ஸ்பாட்டில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிக் கொடுத்த பாடல் பல்லவியை கண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் வியந்துபோய் பட்டுக்கோட்டையார் கரங்களை பற்றி வாழ்த்தியிருக்கிறார்.

அவர் வாழ்த்து பொய்யாகவில்லை, அதன் பிறகு திரையுலகில் விறுவிறுவென உச்சம் தொடுகிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 

இவர் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது மனைவி அளித்த பேட்டி ஒன்றில், தானும் தனது கணவர் பட்டுக்கோட்டையாரும் சென்னை ராயப்பேட்டையில் வசித்தபோது, போட்டி போட்டுக் கொண்டு தனது கணவரை பாட்டெழுதுவதற்காக அழைத்துச் செல்ல வீடு தேடி கார்கள் வரும் என்கிறார்.

எந்த சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் வாகனம் முதலில் வருகிறதோ அதில் ஏறி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சென்றுவிடுவார் என்றும் தாமதமாக கார் அனுப்பும் நிறுவனங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் எனவும் தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டையார் மனைவி கவுரவாம்பாள்.

 மேலும் தனது கணவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்துக்கு ராயப்பேட்டை பொன்னுச்சாமி கடை சோறு என்றால் மிகவும் பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா, மனிதன் பிறக்கும் போது பிறந்த குணம் போக போக மாறுது, கையிலே வாங்கினேன் பையில போடலை காசு போன இடம் தெரியல, திருடாதே பாப்பா திருடாதே, என பட்டுக்கோட்டையார் கைவண்ணத்தில் உருவான பாடல்களை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். அந்தளவுக்கு ஆழமான சிந்தனையும், கருத்துச்செறிவும் மிக்கவையாக இருக்கும்.

சினிமாவில் இவர் பாட்டெழுதியது 10 ஆண்டுகள் மட்டுமே என்றாலும், இன்னும் நூறாண்டுகள் கடந்தாலும் இவர் எழுதிய பாடல்கள் அவர் புகழ் பாடும். 

நடிகர் எம்.ஜி.ஆர் க்கு இவர் எழுதிய பாடல்கள் மூலம் மக்கள் மனதில் தனி உயரம் கிடைத்தது.தமிழ்நாடு முதலமைச்சராக அவர் பதவியேற்றம போது இந்த முதல்வர் நாற்காலியில் பட்டுக்கோட்டையார் பாடல்கள் ஒரு கால் என்று கூறியதே கல்யானசந்தரத்தின் பாடல் வலிமை,எளிமை,மக்களிடம் அவை ஏற்படுத்திய தாக்கத்தையும் நன்கு தெளிவு படுத்தும்.

தனது 29வது வயதில்(08.10.1959) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் இன்றும் என்றும் தனது பாடல்களால் வாழ்வார்!,.....

வாழ்ந்து கொண்டிருக்கிறார்!!......

வாழ்ந்து கொண்டிருப்பார்.!!!

-----------------------------------------------------

நீலகிரி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 10 புலிகள் உயிரிழக்க புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பே காரணம்: தேசிய புலிகள் ஆணையம்.

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலை 3.20 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூடுகிறது.


பீகார் மாநிலத்தை போல் ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு- முதல்வர் கெலாட் அறிவிப்பு.

5000 ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் மீது  தாக்குதல். எல்லை நகர்களில் புகுந்தனர் ஹமாஸ் அமைப்பினர்.இஸ்ரேல் பதில் தாக்குதலில் பற்றி எரிகிறது காசா.300 பேர் பலி பலர் படுகாயம்.


கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘எழுத்தாளர்-கலைஞர்’ குழு சார்பில் கவிதை போட்டி: தமிழக அரசு அறிவிப்பு.
------------------------------------------------------

ஊட­கங்­க­ளுக்கு விடப்­பட்­டுள்ள 

மிரட்­டல்

சி.பி.ஐ. – வரு­மா­ன­வ­ரித் துறை – அம­லாக்­கத் துறை ஆகி­ய­வற்றை வைத்து எதிர்க்­கட்­சி­களை மிரட்­டும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு - அடுத்து ஊட­கங்­க­ளை­யும் மிரட்டி வரு­கி­றது. ‘நியூஸ் கிளிக்’ முதன்மை ஆசி­ரி­யர் பிர­பீர் புர்­கா­யஸ்­தா­வும், அதன் மனி­த­வ­ளப் பிரி­வின் தலை­வர் அமித் சக்­ர­வர்த்­தி­யும் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்­கள். 

இந்த கைது நட­வ­டிக்கை என்­பது ஒட்­டு­மொத்­த­மாக ஊட­கங்­க­ளுக்கு விடப்­பட்­டுள்ள மிரட்­டல் ஆகும்.

பிர­பீர் புர்­கா­யஸ்தா - அவ­சர நிலைக்­கா­லத்­தில் ( 1975) 18 மாதங்­கள் சிறை­யில் இருந்த போராளி ஆவார். இட­து­சா­ரிச் சிந்­தனை கொண்­ட­வர். அமித் சக்­ர­வர்த்தி – ஒரு மாற்­றுத்­தி­ற­னாளி. 

இவர்­கள் இரு­வ­ரும்­தான் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்­கள்.டெல்­லி­யில் உள்ள நியூஸ் கிளிக் இணை­ய­தள செய்தி நிறு­வன அலு­வ­ல­கத்­தில் தீவிர சோதனை நடத்தி பூட்டி சீல் வைத்த டெல்லி காவல்­து­றை­யி­னர், இந்த கைது நட­வ­டிக்­கை­யை­யும் தொடர்ந்­துள்­ள­னர்.

என்ன குற்­றச்­சாட்டு அடிப்­ப­டை­யில் இந்த நட­வ­டிக்­கை­யைச் செய்­துள்­ளார்­கள் தெரி­யுமா?

 அமெ­ரிக்க நாளி­த­ழான ‘நியூ­யார்க் டைம்ஸ்’ ஒரு செய்­தியை வெளி­யி­டு­கி­றது. அதில், ‘நியூஸ் கிளிக் நிறு­வ­னம், சீனா­வி­ட­ மி­ருந்து நிதி பெறு­கி­றது’ என்று குற்­றச்­சாட்டு சொல்லி இருந்­தார்­க­ளாம். இதை வைத்து இந்த கைது நட­வ­டிக்­கை­யாம்!

நியூஸ் கிளிக் ஊடக நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், “எங்­க­ளது இணை­ய­த­ளம் சுதந்­தி­ர­மா­னது. சீன நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து நிதி பெற்­றுக் கொண்டு செய்­தி­களை வெளி­யிட்­ட­தா­கக் கூறப்­ப­டும் புகார்­க­ளுக்கு எந்த அடிப்­ப­டை­யும் இல்லை. 

சீனா­வுக்­காக பிரச்­சா­ரம் செய்­யும் எந்த செய்­தி­யும் எங்­கள் இணை­ய­த­ளத்­தில் வெளி­யி­டப்­பட வில்லை.

 2021ஆம் ஆண்டு முதல் நியூஸ் க்ளிக் நிறு­வ­னத்­தின் வங்­கிக் கணக்­கு­கள், வரவு – செல­வு­கள், வெளி­நாட்­டுத் தொடர்­பு­கள் குறித்து ஒன்­றிய அர­சின் பல்­வேறு விசா­ரணை அமைப்­பு­கள் ஆய்வு நடத்தி உள்­ளன. 

இந்த ஆய்­வு­க­ளில் எந்த முறை­கே­டு­க­ளும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

நியூ­யார்க் டைம்ஸ் பத்­தி­ரி­கை­யில் உள்­நோக்­கத்­து­டன் வெளி­யான கட்­டு­ரையை மட்­டும் அடிப்­ப­டை­யா­கக் கொண்டு, எந்த ஆதா­ர­மும் இல்­லா­மல் ‘உபா’ போன்ற கடு­மை­யான சட்­டங்­க­ளின் கீழ் எப்­படி வழக்­குப் பதிவு செய்ய முடி­யும்?” என நியூஸ் கிளிக் கேள்வி எழுப்­பி­யுள்­ளது.

“சீன நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து பெரு­ம­ள­வில் நிதி பெற்ற ‘பி.எம்.கேர்ஸ்’ ஐ நிர்­வ­கிப்­ப­வர் மீது ஏன் ஒரு நட­வ­டிக்­கை­யும் இல்லை?” என உச்­ச­நீ­தி­மன்ற வழக்­க­றி­ஞர் பிர­சாந்த் பூஷன் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

 “சீனாக்­கா­ரர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து கொஞ்­சம் நிதி வந்த ஒரே கார­ணத்­துக்­காக, நியூஸ் க்ளிக் மீது தேசத் துரோக வழக்கு. அந்த நிறு­வ­னத்­தோடு தொடர்பு கொண்­ட­வர்­க­ளின் வீடு­க­ளில் ரெய்டு, அவர்­க­ளின் செல்­பே­சி­க­ளும் லேப்­டாப்­க­ளும் பறி­மு­தல். 

ஆனால் சீன நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து பெரு­ம­ள­வில் நிதி பெற்ற PM CARES-–ஐ நிர்­வ­கிப்­ப­வர் மீது ஏன் ஒரு நட­வ­டிக்­கை­யும் இல்லை?” என கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

2021 ஆம் ஆண்டு இந்த நிறு­வ­னத்­தில் அம­லாக்­கத்­துறை சோதனை நடத்­தி­யது. இதன் முதன்மை ஆசி­ரி­யர் பிர­பீ­ருக்­குச் சொந்­த­மான வீட்டை முடக்­கி­யது. அவ­ரது நிரந்­தர வைப்­புத் தொகையை முடக்­கி­யது. 

பெரி­தாக ஆதா­ரம் இல்­லா­த­தால், நியூஸ் கிளிக் மற்­றும் அதன் உரி­மை­யா­ளர் மீது எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யும் எடுக்­கக்­கூ­டாது என உச்­ச­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

இதன் தொடர்ச்­சி­யாக இந்த இணைய ஊட­கத்­தைக் குற்­றம் சாட்டி ஒன்­றிய அமைச்­சரே நாடாளு மன்­றத்­தில் பேசி­னார். 

இதைத் தொடர்ந்து கடந்த அக்­டோ­பர் 3 அன்று சோதனை நடத்தி கைதும் செய்து விட்­டார்­கள். ‘நியூஸ் கிளிக்’ ஊடக ஊழி­யர்­கள் அனை­வ­ரும் விசா­ர­ணைக்கு உள்­ளாக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். 

மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர் ஊர்­மி­ளேஷ், விசா­ர­ணைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டுள்­ளார். ராஜ்­ய­சபா டிவி­யின் முன்­னாள் ஆசி­ரி­யர் இவர்.

‘நியூஸ் கிளிக்’ என்­பது இட­து­சா­ரிச் சிந்­தனை கொண்ட ஊட­கம் ஆகும். பா.ஜ.க. அர­சின் போலி­யான முகத்தை தொடர்ந்து அம்­ப­லப்­ப­டுத்தி வந்­துள்­ளது. இது­வரை ஆங்­கி­லத்­தில் செய்­தி­களை வெளி­யிட்டு வந்­த­வர்­கள், சமீப கால­மாக இந்­தி­யில் செய்­தி­களை வெளி­யி­டத் தொடங்கி உள்­ளார்­கள். 

‘இந்தி’ பேசும் மாநி­லங்­கள் விழிப்­பு­ணர்வு பெற்­று­வி­டக் கூடாது என்­ப­தில் பா.ஜ.க. எப்­போ­தும் தெளி­வாக இருக்­கும். 

அந்த மாநில மக்­களை இருட்­டில் வைத்து, வாக்கு வேட்­டை­யா­டும் கட்சி அது. எனவே, ‘இந்­தி’­யில் செய்தி வெளி­யி­டு­வ­தைத் தடுக்க நினைத்­துள்­ளார்­கள்.

‘இந்­தியா’ கூட்­டணி சார்­பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள கூட்­ட­றிக்­கை­யில், “மோடி தலை­மை­யி­லான ஒன்­றிய பா.ஜ.க. அரசு, கடந்த ஒன்­பது ஆண்­டு­க­ளில், பிபிசி, நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பாஸ்­கர், பாரத் சமாச்­சார், காஷ்­மீர் வாலா, தி வயர் போன்ற ஊட­கங்­களை ஒடுக்க புல­னாய்வு அமைப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யது.

 தற்­போது நியூஸ் கிளிக் செய்தி நிறு­வ­னத்தை ஒன்­றிய அரசு குறி­வைத்­துள்­ளது. மோடி அரசு ஊடக நிறு­வ­னங்­க­ளைக் கைய­கப்­ப­டுத்­து­வ­தன் மூலம் தங்­கள் கட்­சி­யின் கருத்­தி­ய­லுக்கு ஊட­கங்­களை ஊது­கு­ழ­லாக மாற்ற முயற்­சிக்­கி­றது.” என்று பகி­ரங்­க­மா­கக் குற்­றம் சாட்டி உள்­ளார்­கள்.

‘அழுத்­தத்­து­டன் பணி­பு­ரி­கி­றோம்’ –- என்று உச்­ச­நீ­தி­மன்ற தலைமை நீதி­ப­திக்கு, டிஜி­பப் நியூஸ் இந்­தியா ஃப்வுண்­டே­ஷன் (Digipub News India Foundation), இந்­தி­யன் வுமன்ஸ் பிரஸ் கார்ப்ஸ் (Indian Women’s Press Corps), பிரஸ் கிளப் ஆஃப் இந்­தியா (Press Club of India) உள்­ளிட்ட பல்­வேறு அமைப்­பு­கள் இணைந்து கடி­தத்தை எழு­தி­யுள்­ளன. 

“சட்­ட­வி­ரோ­தச் செயல்­கள் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்ய, பத்­தி­ரி­கைப் பணி ஒன்­றும் தீவி­ர­வா­தப் பணி அல்ல. எனவே, பத்­தி­ரி­கைத்­து­றைக்கு ஏற்­பட்­டி­ருக்­கும் அச்­சு­றுத்­தல்­களை உச்­ச­நீ­தி­மன்­றம் தலை­யிட்டு தடுக்க வேண்­டும்” என அவை வலி­யு­றுத்தி உள்­ளன.

“மக்­க­ளுக்கு நன்­மை­கள் எது­வும் செய்ய மாட்­டோம், இதை யாரா­வது குறை சொன்­னால் அவர்­களை விட­வும் மாட்­டோம்” -– இது­தான் பா.ஜ.க. பாணி ஆட்சி முறை­யா­கும். 

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இயற்கை உண்டாக்கும்.இதற்கும் உண்டு.

இவை அனைத்­துக்­கு­மான தண்­ட­னையை மக்­கள் நிச்­ச­யம் தரு­வார்­கள்.

--------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?