மோசடி

ஒரு கோடிக்கும் அதிகமான மக்களின், வங்கி கணக்கு விபரங்கள் தலா, 20 பைசாவுக்கு விற்கப்பட்டது, போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது
டில்லியில் கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்த, 80 வயது மூதாட்டி ஒருவர், தன் கிரெடிட் கார்டு மூலம், 1.46 லட்சம் ரூபாயை யாரோ எடுத்துள் ளதாக, போலீசில் புகார் செய்தார்.இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், டில்லியை சேர்ந்த புரன் குப்தா என்பவனை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவனிடம், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் வங்கி கணக்கு விபரங்கள் அடங்கிய, தனித்தனி 'டேட்டா'க்கள் இருந்தன
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மொபைல் எண் திருட்டுவங்கி, கால் சென்டர்கள், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை சார்ந்தவர்கள், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு எண், பெயர், மொபைல்போன் எண் ஆகியவற்றை திருடி, பூரன் குப்தாவிடம் தருகின்றனர். இதை, அவன், ஒவ்வொரு வாடிக்கையாளர் களுக்கும் தனி டேட்டா தயாரிக்கிறான். பின், இதை, மோசடி கும்ப லிடம் விற்கிறான். அதாவது, 50 ஆயிரம் டேட்டாக் களை, 10 ஆயிரம் ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை விற்றுள்ளான். இப்படி ஒரு கோடிக்கும் அதிகமானோரின் டேட்டாக்களை விற்றுள்ளான்.
இதற்காக குப்தா, 'பர்ஸ்ட் ஸ்டெப் சர்வீசஸ் அண்ட் சொல்யூஷன்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள் ளான். மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், குப்தாவுக்கு போன் செய்து, தங்களுக்கு தேவையானவர்களின் டேட்டாக்களை கேட்கின்றனர், இவனும், டேட்டா விபரங்களை,இ - மெயிலில் அனுப்பி, பணத்தை பெற்று வந்துஉள்ளான்.
இந்த டேட்டாக்களை வாங்கும் மோசடி கும்பல், வங்கி பிரதிநிதிகள் போல் நடித்து, வாடிக்கை யாளரை தொடர்பு கொண்டு, அவர்களின் ரகசிய எண்ணை கேட்கின்றனர்.தங்களை பற்றிய விபரங் களை அவர்கள் தெரிவிப்பதால், அதை நம்பி, ரகசிய எண்களை வாடிக்கையாளர்கள், தெரிவிக்கின்றனர்.
அதை பயன்படுத்தி, பணத்தை மோசடி கும்பல் எடுப்பது, விசாரணை யில் தெரிந்தது.
இது பற்றி போலீசார் கூறுகையில், '60 வயதுக்கு மேற்பட்டோர்தான், இந்த மோசடி கும்பலால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள னர். வங்கி கணக்கு தொடர்பான எந்த விபரத் தையும், யார் கேட்டாலும் தெரிவிக்க வேண்டாம் .
==========================================================================================
ன்று,
ஏப்ரல் -15.

  • உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியானர்டோ டா வின்சி பிறந்த தினம்(1452)
  • சாமுவேல் ஜான்சன், தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்(1755)
  • அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்த தினம்(1865)
  • கலைஞர்  வடிவமைத்த "வள்ளுவர் கோட்டம்" திறக்கப்பட்டது(1976)
==========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?