இரட்டை இலைக்கு மேல் தாமரை
இப்போது தமிழ் நாட்டில் அரசு என்றே ஒன்று இல்லாத நிலை.எல்லா துறைகளும் ,எல்லா நிலைகளிலும் முடங்கிப்போயுள்ளது.
நடக்கும் செயல்களும் அணைகளை தெர்மோகோல் அட்டை கொண்டு மூடும் நகை செயல்களே.
ஆனால் ஆட்ச்சியை பிடிக்கும் முயற்சிகளில்மட்டும் ஆளும் அதிமுக அடலேறுகள் முட்டிக்கொண்டும்,மோதிக்கொண்டும் திரிகின்றனர்.
அவர்களின் தினத்துக்கொரு பேச்சுக்கள் தான் நமது தொல்லைக்காட்ச்சிகளுக்கு அதிரடி செய்திகள்.பிரேக்கிங் நியூஸ்.
தொலைக்காட்ச்சிகளின் பிரேக்கிங்க்கில் தமிழக மக்களின் வாழ்க்கை தான் முறிந்து கொண்டிருக்கிறது.
அதிமுக எடப்பாடி,பன்னிர் அணிகளின் மோதல் முதல்வர் நாற்காலியை,பொதுசெயலாளர் பதவிகளை யார் பிடிப்பது என்னும் அதிகார போட்டி மட்டுமே.
இப்போதும் எடப்பாடி அணியை இயக்குவது சசிகலா குடும்பம்தான்.அவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட மறுத்து தான்தோன்றித்தனமாக செயல்பட்ட தினகரனை விளக்கி வைக்கத்தான் இதுவரை நடந்த நாடகங்கள்.
இப்பொது தினகரன் போய் திவாகரன் வந்து விட்டார்.ஆக சசிகலா குடும்பத்தின் கையில்தான் இன்னமும் அதிமுக ஆடசி இருக்கிறது.
என்ன ஒரு வித்தியாசம் என்றால் முன்பு பாஜகவை துளியூண்டு எதிர்த்த சசிகலா கடசி இப்போது மோடி,அமித் ஷா கால்களில் சரண்.
இன்றைய இரு அதிமுக அணிகளின் முக்கணாங்கயிறும் பாஜக வசம்தான்.
அவர்களின் நூலுக்கேற்ப இங்கு அதிமுக பொம்மைகள் ஆடுகின்றன.
சசிகலா குடுமபம் இரு அணிகளையும் இணைத்து வைக்கக் காரணமே.
கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை கைப்பாற்றத்தான்.
இரட்டை இலை இருந்தால்தான் மக்களிடம் கொஞ்சமாவது வாக்குகளை பெற முடியும்.
இன்னமும் எம்.ஜி.ஆர்.ஆடசியில் இருக்கிறார் என்றலைகிற கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
சசிகலா கும்பல் எண்ணம் இப்படி இருந்தால் இரட்டை இலையை ஒற்றுமையாக இருந்து கைப்பாற்றுங்கள் என்று சொல்லி புத்திமதி கூறுகிற மோடி கும்பல் என்னமோ "அதிமுக இரண்டு அணி களும் அடித்துக்கொள்கிற இடைவெளியில் திமுக ஆட்சிக்கட்டிலில் உட்கார்ந்து விடக்கூடாது என்பதுதான்.
தலை கீழாக நின்றாலும் இப்போதைக்கு ஆட்சி ஒருநாளும் பாஜகவுக்கு வரப்போவதில்லை.
ஆனால் ஜெயலலிதா கொத்தடிமைகள் கூட்டமான அதிமுக வை கையில் வைத்து ஆட்டம் காட்டலாம் அதற்கு இரட்டை இலை அவசியம்.
அதை வைத்து அதிமுக இரு அணிகளும் ஒன்றிணைந்து வென்றால் பாஜக ஆட்சியை தமிழத்தில் நடத்தலாம்.பெயர் மட்டுமே அ .இ.அ.தி.மு.க ,ஆடசி .
பன்னிர்செல்வம் ,சசிகலா மற்றும் அதிமுக அமைசர்கள் கொள்ளை,ஊழல்,முறைகேடுகள் எல்லாம் இப்போது மத்திய அரசு கையில் அதாவது பாஜக கையில்.
அதைவைத்தே பினாமி ஆடசி தமிழகத்தில் நடத்தலாம்.
அப்படியே திமுகவை தலை தூக்க விடாமல் மத்திய,மாநில அரசுகள் அதிகாரம் மூலம் செய்து விடலாம்.
இதுதான் இன்றைய அமிதா ஷா வின் (பகல்) கனவு.
ஆனால் ஜல்லிக்கட்டு ,மீத்தேன்,காவிரி ,விவசாயிகள்,எல்லை கற்களில் இந்தி,குடியரசுத்தலைவர்,அமைசர்கள் இந்தியில்தான் பேச வேண்டும் என்ற பிரசினை களில் பாஜக,மோடி நடந்து கொண்ட விதம் தமிழக மக்கள் ஒவ்வொருவர் மனதிலும் அது பாஜகவினராக இருந்தாலும் கூட வடுவை உண்டாக்கியிருக்கிறது.
அது அவ்வளவு சீக்கிரம் பாஜகவை தமிழத்தில் தலை எடுக்க விடாது.
கொல்லைப்புற வழி ஆடசி கனவு தமிழிசை கூறியது போல் பகல் கனவுதான்.
பாஜக கனவுக்கு தங்களின் கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்க அலையும் அதிமுக அணிகள் வேண்டுமானால் ஓதுதலாம்.
ஆனால் அவர்களே கூட தாமரைக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
இரட்டை இலைக்கு மேல் தாமரை மலர விடமாட்டார்கள்.
===========================================================================================
இன்று,
ஏப்ரல்-24.
ஜி.யு.போப் |
- அமெரிக்காவின் முதல் செய்தித்தாளான தி போஸ்டன் நாளிதழ் வெளியிடப்பட்டது(1704)
- தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கரான ஜி.யு.போப் பிறந்த தினம்(1820)
- காம்பியா குடியரசு தினம்(1970)
- இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம் அமைக்கப்பட்டது(1993)
ஜி.யு.போப்
ஜி.யு.போப் கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.
கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் (இளவரசர் எட்வர்ட் தீவு) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார்.
கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் (இளவரசர் எட்வர்ட் தீவு) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார்.
குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.
இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.
1886-ம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.
புறப்பொருள் வெண்பா மாலை,
புறநானூறு,
போன்ற நூல்களை பதிப்பித்தார்.
தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர்,
நாலடியார்,
திருவாசகம்
ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839-ல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.
தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை,இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.
1850-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போப் அங்கு என்ற பெண்ணை திருமணம் செய்தார். தம் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம்,நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.

தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் இலக்கியங்களையும் உலகத்திற்கு எடுத்துரைத்த ஜி.யு.போப் தனது கல்லறையில்.....
"தான் ஒரு தமிழ் மாணவர்" ("A Student of Tamil") என்று பொறிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இத்தகைய சிறப்புமிக்க ஜி.யு.போப் அவர்கள் தனது 88-ம் வயதில் இயற்கை எய்தினார்.
"தான் ஒரு தமிழ் மாணவர்" ("A Student of Tamil") என்று பொறிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இத்தகைய சிறப்புமிக்க ஜி.யு.போப் அவர்கள் தனது 88-ம் வயதில் இயற்கை எய்தினார்.