புற்றுநோயை தடுக்க .....,
மனிதர்களுக்கு மரணம் ஏற்படக்கூடிய முக்கிய காரணங்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. இந்நோயானது உடலில் உள்ள அணுக்கள் பிரிந்து பின் கட்டுப்பாடின்றி வளர்ந்து ஒரு கட்டியை ஏற்படுத்துகிறது. பின் அந்த கட்டியானது கடுமையாக ஒரு இடத்தை அரித்து, உயிருக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணங்கள் பலதரப்பட்டதாக இருக்க முடியும். ஆனால் இந்தநோய் பெரும்பாலும் ஒரு ஆரோக்கியமற்ற வாழ்க்கை வாழ்வதால் ஏற்படுகிறது. புற்றுநோயை தடுக்க உதவும் பல்வேறு இயற்கை வழிகளை பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு கீழே படித்து தெரிந்து கொள்ளவும்.
புற்றுநோயை திறம்பட தடுக்க உதவும் மிகச்சிறந்த உணவுப் பொருட்களில் ப்ரோக்கோலி ஒன்றாகும். எனினும் ப்ரோக்கோலியை மைக்ரோவேவ் ஒவனில் சமைப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில் புற்றுநோயை எதிர்க்ககூடிய ப்ளேவோனாய்டுகள் மைக்ரோவேவினால் அழிக்கப்படுகிறது. ப்ரோக்கோலியை கொதிக்க வைத்தோ அல்லது அப்படியே சிற்றுண்டியாக சாப்பிடுவது சிறந்தது.
பூண்டு: பூண்டிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற பண்புகள் உண்டு. இது நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தி புற்றுநோயை தடுக்க உதவுகிறது. பல்வேறு ஆய்வுகள் பூண்டு சாப்பிட்டால், அதிவேகமாக வயிற்று புற்றுநோய் முரண்பாடுகளை குறைக்கலாம் என்று காட்டுகின்றன.
உடற்பயிற்சி நோய்எதிர்ப்பு மண்டலத்தை வலுப்பெற செய்து உடலில் இரசாயன, என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
மனித உடலின் செயல்பாடுகளை முறையாக கட்டுப்படுத்துவதற்கு குறைந்தபட்சம் 8 மணிநேர தூக்கம் அவசியமாகும். முறையான தூக்கம் ஆரோக்கியமான நாளமில்லா சுரப்பி மண்டலத்தை பராமரிப்பதற்கும் மற்றும் புற்றுநோயை எதிர்த்து போராடும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆரோக்கியமான நாளமில்லா சுரப்பியை ஊக்குவிக்க முழு இருட்டில் தூங்குவது அவசியம்.
புற்றுநோயை தடுக்க, கண்டிப்பாக புற்றுநோய் ஏற்படுத்தும் அனைத்து விஷயங்களையும் தவிர்க்க வேண்டும் என்று மிகவும் தெளிவாக தெரிகிறது. மது, சிகரெட் மற்றும் பிறபொழுது போக்கு போதை மருந்துகள் புற்றுநோய் வருவதற்கான அதி முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
பல ஆய்வு முடிவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை, புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்க முடியும் என்று காட்டியுள்ளன. அனைத்து ஊட்டச்சத்துகள் மற்றும் துணை உணவுகள் கொண்ட ஒரு ஆரோக்கியமான உணவு பழக்கமானது, புற்றுநோயை எதிர்த்து போராடுவதில் முதல் படியாக இருக்கிறது,
ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடைய ரெட்ஒயின், ரெஸ் வெரடால் மற்றும் பிறபைத்தோ கெமிக்கல்களை கொண்டிருக்கும் திராட்சை பழதோலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஒரு நாள் ஒரு கோப்பை ஒயின் குடிப்பது இரத்த புற்றுநோய், தோல் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற பரவலான புற்று நோய்களை தடுக்க உதவும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புற்றுநோய் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் காரணிகள் பல்வேறு உள்ளன. மொபைல் தொலைபேசிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு புற்றுநோய் வாய்ப்பை அதிகரிக்க முடியும். புற்றுநோயை தவிர்ப்பதற்கு இக்காரணிகளோடு இடை படுவதை குறைத்துக்கொள்ளவும்.
கொக்கோவில் உள்ள பெண்டாமெர் போன்ற ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புகளை பெற்றுள்ளன. டார்க் சாக்லேட்டில் கொக்கோ அதிகம் உள்ளது. ஆகவே நிச்சயமாக புற்றுநோயில் இருந்து விலகி இருக்க உதவும் மிக ருசியான வழிகளில் இது ஒன்றாகும்.
வைட்டமின் டி-யோடு கால்சியத்தையும் சேர்த்து கொள்ளவும். டார் மௌத் மருத்துவபள்ளி ஆய்வின் படி, இந்த ஊட்ட சத்துகள் வளரும் தலை முறையினருக்கு புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்காற்றுவதாக தெரியவந்துள்ளது. இத்தகைய சத்துக்கள் முட்டையில் அதிகம் உள்ளது.
தண்ணீர்:
கழிவறைக்கு செல்வதற்கு முன் ஒவ்வொரு முறையும், ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கவும்.
1996 ஆம் ஆண்டில், புதிய இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆய்வின் படி, ஒவ்வொரு நாளும் 8 அவுன்ஸ் கோப்பையில் ஆறு முறை தண்ணீர் குடித்து வரும் ஆண்களுக்கு, நீர்ப்பை பகுதி புற்று நோயின் ஆபத்து பாதியளவு குறைத்துள்ளன என்று கண்டறியப்பட்டது.
மற்றொரு ஆய்வானது பெருங்குடல் புற்றுநோயோடு தொடர்புடைய பெண்கள் தண்ணீர் அருந்துவதை பற்றியது. அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பெண்கள், தங்களுக்கான ஆபத்தில் இருந்து 45 சதவீதம் வரை குறைத்து கொண்டுள்ளனர்.
க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும்.
ஆயிரக்கணக்கான வருடங்களாக க்ரீன் டீ குடிப்பதினால் ஏற்படும் பலன்கள் ஆசியாவில் உணரப்பட்டு வந்துள்ளன. மேற்கத்திய நாடுகளில் நடைபெற்ற ஒரு ஆராய்ச்சி முடிவின் படி, க்ரீன் டீ பல புற்று நோய்களை சரி செய்வது மட்டுமல்ல, இதய நோயை கூட கட்டுபடுத்தும் என்று தெரியவந்துள்ளது.
====================================================================================================
அனைத்து பாம்புக் கடிகளும்
உயிரிழப்பை ஏற்படுத்தாது
பாம்பின் நஞ்சு மிகவும் கடுமையானதாக இருக்கும் நிலையில், விஷமுறிவு மருந்துகளின் தயாரிப்பும் குறைந்துவருவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஆண்டொன்று ஐம்பது லட்சம் பேர் பாம்புக் கடிக்கு இலக்காகின்றனர், அதில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பதோடு, நான்கு லட்சம் பேர் முடமாக்கப்பட்டோ அல்லது உருக்குலைந்தோ போகிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பாம்பு விஷத்தில் என்னவுள்ளது?
பாம்பு விஷமானது பல நூறு புரதங்களால் ஆனது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மனித உடலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரே வகையைச் சேர்ந்த பாம்புகளில்கூட ஒவ்வொரு பாம்பின் விஷத்தின் வீரியமும் மாறுபடும்.
விஷத்தை வெளியிடும் மற்ற எந்த விலங்கினத்தைக் காட்டிலும் பாம்புகளே மனிதர்களுக்கு மிகவும் அருகில் சென்று தாக்கி கூடுதலான உயிரிழப்புகளை ஏற்படுத்துவதும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.
உடலை எப்படி தாக்கும்?
பாம்பு மனிதர்களை கடித்து விஷத்தைச் செலுத்தியவுடன் அது இரண்டு வகைகளில் மனிதர்களின் உடலைத் தாக்கும்.
ஒன்று, ரத்த ஓட்டத்தை தாக்கி கடும் விளைவுகளை ஏற்படுத்தும் அல்லது நரம்பு மண்டலத்தை முடக்கும். இவை இரண்டு மரணம் வரை இட்டுச் செல்லக் கூடும்.
ரத்தத்தில் பாம்பின் விஷம் கலக்கும்போது அவை சிற்சிறு அளவில் ரத்தம் கட்டிப்போகச் செய்து, ரத்தக் குழாய்களில் துளைகளை ஏற்படுத்தி அதன் மூலம் ரத்தக்கசிவை ஏற்படுத்தி மரணம் ஏற்படலாம்.
சிலவகை நஞ்சுகள் நரம்பு மண்டலத்தை விரைவாகத் தாக்கி உடலில் மற்ற பகுதிகளுக்கு நரம்புகள் மூலம் கொண்டுசெல்லப்படும் சமிஞ்கைகளை பாதித்து உடலை முடங்கிப் போகச் செய்யலாம். மரணமும் ஏற்படக் கூடும்.
விஷமுறிவு மருந்து
பாம்பு கடித்தவுடன் எவ்வளவு விரைவாக விஷமுறிவு மருந்து கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
விஷ முறிவு மருந்து என்பது பாம்பின் நஞ்சிலிருந்தே தயாரிக்கப்படுகிறது.
பாம்பிலிருந்து எடுக்கப்பட்ட நஞ்சானது நீர்த்துப்போகச் செய்யப்பட்டு பின்னர் குதிரைகள் அல்லது செம்மறி ஆடுகளில் செலுத்தப்பட்டு, அதன் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பிரித்தெடுத்து, அதிலிருந்து விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது.
ஆனால் உலகளவில் மிகக் குறந்த அளவுக்கே விஷ முறிவு மருந்துகள் தயாரிக்கப்படுவதும் அவற்றில் விலை மிகவும் அதிகமாக உள்ளதும் பாம்புக் கடி பட்டவர்களை காப்பாற்றுவதில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
==================================================================================================
இன்று,செப்டம்பர்-16.
- மான்செஸ்டர் நகரில் உலகின் முதலாவது இலவச நூல் நிலையம் அமைக்கப்பட்டது(1852)
- மெக்சிகோ விடுதலை தினம்(1810)
- மலேசியா நாடு உருவாக்கப்பட்ட தினம்(1963)
- உலக ஓசோன் பாதுகாப்பு தினம்
==================================================================================================
இந்த சங்கத்தை எப்ப சார் கலைக்க போறீங்க சார்.
===================================================================================================
குமாரசாமி-தத்து போன்ற நீதிபதிகள் கவனத்துக்கு?
- கடந்த 1947-லிருந்து 2015-வரை சுமார் 67 வருடங்களாக எந்த ஒரு ஊழல் நீதிபதியாவது விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதுண்டா? இல்லை நீதிபதிகள் அனைவரும் உத்தமர்களா?
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அவர்கள் ”வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து பெங்களூரில் 50 கோடிக்கு வீடு கட்டியுள்ளார்” என உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் புகார் தெரிவித்து ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். யார் நடவடிக்கை எடுப்பது?
- உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், A.M.அகமதி, M.M.புன்சி, A.S.ஆனந்த், Y.K.சபர்வால் உள்ளிட்ட எட்டு பேர் ஊழல் பேர்வழிகள் என முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூசன், வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தனர். இன்றுவரை அம்மனு விசாரிக்கப்படாத மர்மம் என்ன?
- கிரானைட் கொள்ளை வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் ”சகாயம் விசாரணைக்கு உத்தரவிட்டு வழக்கு நடந்து வரும்போது நீதிபதிகள் சி.டி.செல்வம், ராஜா, கர்ணன், தனபாலன்-வேலுமணி (Junior Judge) ஆகியோர் கிரானைட், தாதுமணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது ஏன்?
- தமிழக மக்களின் வேர்வை சிந்திய வரிப்பணம் ரூ 22,000 கோடியைக் கொள்ளையடித்தது பன்னாட்டு நோக்கியா கம்பெனி. எட்டப்பன்போல் ஸ்டே கொடுத்து, ஓடிப்போக உதவி செய்கிறார் நீதிபதி பி.ராஜேந்திரன். இது தேசத் துரோக குற்றமல்லவா?
- உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் என்னாயிற்று?
- நீதிபதி கர்ணன் மீது கொடுத்த லஞ்சப் புகார்களை உண்மையென ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மர்மம்- கர்ணன் பல நீதிபதிகளின் ஊழலை அம்பலப்படுத்துவார் என்பதால்தானே?
- சல்மான்கான் போல சாமானிய மக்களுக்கு உடனடி நீதி கிடைக்குமா?
- அமித்சா வழக்கில் தீர்ப்புச் சொல்லி – முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் ஆளுநர் பதவி பெறுவது சரியா?
- சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்கள் தேர்வில் நீதிபதிகளின் உறவினர்கள், சாதிக்காரர்கள் நியமிக்கப்பட்டிருப்பது நீதியானதா?
- வழக்கறிஞர்களுக்கு அடிக்கடி நேர்மையை உபதேசிக்கும் நீதிபதி பி.என்.பிரகாசு அவர்கள் கொள்ளையர்கள் வைகுண்டராஜன், ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியத்திற்கு முன் ஜாமின் வழங்கியது மனுநீதிப்படியா?
- நீதிபதி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் ஊழியர்களிடம் அத்துமீறல் செய்த நீதிபதி டாக்டர் தமிழ்வாணன் மீதான நடவடிக்கை என்ன?
- கீழமை நீதிமன்ற நீதிபதிகளை அடிமைகளை விடக் கேவலமாக நடத்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதி வழங்கத் தகுதியானவர்களா?
- சட்டத்தை விட, நியாயத்தை அதிகம் பேசும் நீதிபதி இராமசுப்பிரமணியன் அவர்கள் நீதித்துறையை சீரழித்த புரோக்கர் வக்கீல் சங்கத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியதன் காரணம் என்ன?
- ஹெல்மெட்டை மக்கள் மீது திணிக்கும் நீதிமன்றம் டாஸ்மாக்கை மூட மறுப்பது சரியா?
- நீதித்துறை மாண்பைக் கெடுப்பது – நீதிபதிகளின் ஊழல்- பாலியல் குற்றங்கள்-அரசு ஆதரவு தீர்ப்புகளா? இல்லை வழக்கறிஞர் போராட்டங்களா?
- நீதித்துறை ஊழல் தொடர்பாக என்றாவது FULL COURT-ல் விவாதித்தது உண்டா?
- நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்தால் நீதிபதிகள் பயப்படுவதேன்?
- நன்றி:வினவு.
பால் விலையை குறைக்கச் சொன்னால் இப்படி பன்னுறீங்க்களேமா
==================================================================================================