அரிசி சோறு

இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு  சாப்பிடாதீர்கள் என்பதுதான். 

பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பதுபோல்  முடங்கி விடுகிறார்கள்.

உண்மையில் மற்ற தானியங்களைப்போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது. உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை.  உடலை வளர்த்தால்தான் உயிரை வளர்க்கமுடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள். 
எனவே உடலுக்கு எது தேவையோ அதை  மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள். இதில் தமிழர்களின் முக்கிய உணவான சோறு சமைப்பது என்பதே தனிக்கலையாக விளங்கியது எனலாம்.  இதில் தமிழர்கள் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள்.
இந்தியா, பர்மா, சீனா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் அரிசி உலகில் மூன்றில் இரண்டு பங்கு  மக்கள் உண்ணும் உணவாகவும் விளங்கிவருகிறது. 
அரிசியானது  சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது. இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள்  பயன்படுத்தி வருகின்றனர். 

சோறு வடிப்பது என்பது பழைய அரிசியைத் தவிடு, நொய் நீக்கி நன்றாக தீட்டி, முழு அரிசியாய் ஆய்ந்து எடுத்து இளவெந்நீரால் கழுவி சற்று ஆற  விட்டுவைத்து கொள்ள வேண்டும். அரிசிக்கு மூன்றுபங்கு நீர்விட்டு அடுப்பிலேற்றி அது நுரைவிட்டு கொதிக்கும் பொழுது அரிசியை அதில் போட்டு  முக்காற்பங்கு வெந்தவுடன், கரண்டியால் துழாவி வடித்து கொள்ள வேண்டும். கஞ்சி வடிந்தவுடன், அந்த அடுப்பு தணலில் சோற்று பானையை  வைத்து விட வேண்டும். அதன் பிறகு நீர் முற்றிலும் வற்றி பக்குவமாய் இருக்கும் சமயத்தில் எடுத்து கொள்வதே சோறு. இந்த சோறே உணவுக்கு  ஏற்றது. வாதம் பித்தம் கபம் ஆகிய முக்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஏற்றது. பத்தியத்திற்கும் உகந்தது. ஒவ்வொரு அரிசிக்கும்  ஒவ்வொரு பண்பு உள்ளது என்பதையும் சொல்லிவைத்தார்கள்.

முழு அரிசிசோற்றை மிதமான சூட்டுடன் சாப்பிட்டால் முப்பிணிகளையும் நீக்கி உடலுக்கு வன்மை தந்து நலத்துடன் வாழவைக்கும். நன்றாக  சமையாத சோற்றை உண்பதால் மலம் கட்டும். மறுநாளும் செரிக்காமல் இருக்கும். இதனால் உடலில் இதன் சத்துக்கள் ஊறாது. குழைந்த சோற்றை  உண்டால் இருமல், மந்தம், பீளை, மேகம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும். மிகுந்த சூட்டுடன் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் ரத்தம் சூடாகும்,  நீர்வேட்கை அதிகரிக்கும், பெருத்த வயிறு ஏற்படும். எனவே முழு அரிசிசோற்றை மிதசூட்டில் சாப்பிடுவதே நன்மை தரும்.
இதில் கார் அரிசியை கொண்டு வடிக்கப்படும் சோறு உடலில் உள்ள சிறு நஞ்சுகளை நீக்கி புண்களை ஆற்றும். ஈர்க்கச்சம்பா அரிசிசோறு கடவுளுக்கு  படைக்கும் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசியாகும். இது பார்த்தவுடன் விருப்பத்தையும் நாவிற்கு சுவையை தரும். புழுகுசம்பா அரிசி சற்று  அளவில் நீண்டு இருந்தாலும் இந்த அரிசியை சமைத்து உண்பதால் உடலில் வனப்பு ஏற்படும். நல்ல பசி எடுக்கும். தீராத தாகம் நீங்கும். 

கோரைச்சம்பா அரிசியை உண்பதால் வெப்பத்தால் ஏற்படும் வெறி, பெண்களுக்கான வெள்ளைபடுதல், உடலில் உண்டாகும் நமைச்சல் நீங்கி, உடல்  குளிர்ச்சி உண்டாகும். குறுஞ்சம்பா அரிசிசோறு ஆண்மையை பெருக்கி உடலில் குத்துகின்ற வலியை போக்கும். ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும். மிளகுசம்பா அரிசிசோறு பல நன்மைகளை வாரி வழங்கக் கூடியது. பசியை உண்டாக்கும். பெருவளி என்கின்ற கடுமையான வாத நோய்களை நீக்கும்.சீரகச்சம்பா அரிசி சோற்றை மன்னர்களும், செல்வந்தர்களும் மட்டுமே உண்ணும் பழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது.

இனிப்பு சுவையுள்ள இதை உண்பதால் உடலில் ஏற்படும் அனைத்து வளி நோய்களையும் நீக்கும். சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாக செரித்து மீண்டும்  பசியை ஏற்படுத்தும் அளவிற்கு எளிமையானது. கல்லுடைச்சம்பா என்ற அரிசி சோறு அதிகமான ஆற்றலை தரக்கூடியது. மிகுந்த பலசாலியை கூட  எதிர்க்கும் உடல் திறனையும் மனத்தெம்பும் ஏற்படுத்தும். நல்லசுவை கொண்ட இதை உண்டுவந்தால் பேசும் திறன் அதிகரிக்கும். குன்றிமணிச்சம்பா  சோறு உண்டுவந்தால் உடல் வலித்து ஆண்மை உண்டாகும். வளி நோய்கள் அனைத்தும் போகும்.

அழகும் சுவையும் நிரம்பிய அன்னமழகி என்ற அரிசியை சமைத்து உண்பதால் உடல் வெப்பமாறுபாட்டால் ஏற்படும் சுரங்களை நீக்கி உடலுக்கு நன்மை  தரும். மோர்ச்சோறு உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு இவைகளை போக்கும். இரவில் நீரூற்றிய  சோற்றை பழையது என்பார்கள். விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடு பழையதை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். உடலில் ஒளி  உண்டாகும். வெறிநோய் முற்றிலும் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.

பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும். இரவில் நன்றாக தூக்கம் வரும். மிகுதியாக  உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களை தழுவும். பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அளவாக தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதால்  கெடுதல் என்பதே உண்டாகாது. அதுவும் உணவே மருந்து. மருந்தே உணவு என்று வாழ்க்கை முறையை வகுத்து கொண்டு வாழும் தமிழர்களின்  உணவே, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால், பெரிதும் விரும்பும் உணவாகவும் மாறி வருகிறது. எனவே அரிசிசோறு உண்டு நலமுடன்  வாழ்வோம்.

சோறு கொதிக்கும் போது இருக்கும் நீரை கொதிநீர் என்பார்கள். வீட்டில் சமையல் செய்யும் பெண்கள், பசியுடன் இருக்கும் சிறுவர்களுக்கு இதை குடிக்க  கொடுப்பார்கள். தாங்களும் குடிப்பார்கள். இதுவும் மருத்துவ குணம் கொண்டதுதான். கொதிநீரை குடிப்பதால் நீர்சுருக்கு என்னும் சிறுநீர்நோய் போகும்.சோறு வடித்தவுடன் கிடைக்கும் கஞ்சியை சூட்டுடன் தண்ணீர் கலந்து உப்பிட்டு குடிப்பதால் உடல் பருக்கும். உடலில் ஒளி உண்டாகும். உடலில்  உண்டாகும் பித்தம், வெப்பம் நீங்கும். சோறு வடித்த கஞ்சியை எந்த வகையில் குடித்தாலும் சிறு மந்தத்தை உண்டாக்கும் என்றாலும், விழிகளுக்கு  குளிர்ச்சியும் கொடுக்கும். உடல் சூட்டால் தோன்றிய பல்வேறு நோய்களை குணமாக்கும் 



======================================================================================
நாகேஷ் பிறந்த தின  நினைவுகள்..

நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்..!
* பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!
* பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!
* பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!
* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!
* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
* கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!
* ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!
* இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!
* முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!
* 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!
* முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!
* எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!
* 'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!
* நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!
* 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!
* இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!
* டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!
* பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!
* 'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!
* 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!
* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'
* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'
* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!
* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!
* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது!
                                                                                                                               - மானா பாஸ்கரன்
                                                                                                                                                              (ஆனந்த விகடன் 07-07-2010)



========================================================================================
இன்று,
செப்டம்பர்-26.
  • உலக கடல்சார் தினம்
  • கர்நாடக இசை அறிஞர் பாபநாசம் சிவன் பிறந்த தினம்(1890)
  • கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நினைவு தினம்(1954)
  • ஏமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)




========================================================================================
முகனூல்......................................................................................................................,





Surya Born To Win
தமிழ்நாட்டில் மின்கட்டணம் கடுமையாக உயர்த்தினாங்கல்ல.. அதைதான் மின் "மிகை" மாநிலம்ன்னு சொல்றாய்ங்க.. நாமதான் தப்பா புரிஞ்சிகிட்டோம்!


Babu Vmk

சட்டசபை நடக்கும்போது ஸ்டாலின் மக்களை சந்திக்க செல்லலாமா? :- செ.கு.தமிழரசன்
சட்டசபை நடக்கும்போது ஜெயா (அரைமணி நேரம் அமர்ந்துவிட்டு) வீட்டுக்கு சொல்லலாமா..???
சொல்லுங்க செ.கு.... சொல்லுங்க....










நியூயார்க்கில் 40 அமெரிக்க சி.இ.ஓக்களுடன் இரவு விருந்து முடித்த பிறகு, அமெரிக்க ஜனாதிபதிக்கு பிரதமர் நரேந்திர மோடி இந்தியக்கொடி ஒன்றை பரிசாக அனுப்பினார். அந்தக் கொடியில் நரேந்திர மோடியின் ஆட்டோகிராப் இடம் பெற்றது. இந்தக் காட்சியை, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் படம் பிடித்து வெளியிட்டது. இதனால் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய தேசியக்கொடியை அவமதித்தார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இது பற்றி சட்டம் சொல்வது என்ன?
இந்தியக் கொடி விதிமுறைகள் 2002: பாகம்- 2,பிரிவு- 3,,விளக்கம்- 4 (f)
இந்திய தேசியக் கொடியின் மீது எந்த வகையான எழுத்துக்களையும் பதிப்பது, தேசியக்கொடிக்கு இழைக்கப்பட்ட அவமானமாக கொள்ளப்படும்.
சர்வதேச யோகா தினத்தன்று ஆசனங்கள் செய்து முடித்த பிறகு, தேசியக்கொடியைப் பயன்படுத்தி நரேந்திர மோடி முகம் துடைத்தது குறித்து ஏற்கனவே காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.அதற்கு இன்று வரை காவல்துறையினர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அந்த தைரியம்தானா மோடிக்கு?பிரதமர முதல் கடையன் வரை ஒரே சட்டம்,ஒரே தேசியக்கொடிதானே?



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?