மின்மிகை மாநிலம்

“மின்மிகை மாநிலம்” “மின்வெட்டே இல்லை” , ‘மின்சார வெட்டு உள்ளதா என்பதை தொட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்’ என்கிற வாயளப்புகள் தமிழக சட்டமன்றத்திற்குள் காதை செவிடாக்கும் வகையில் தெறித்து விழுகின்றன. 
எப்படி மின்மிகை மாநிலமானது? 
மின்வெட்டு எப்படி அம்மாவின் ஆட்சி வந்ததும் “அடுத்த மாநிலத்திற்கு ஓடிப்போனது” என்று தேடினோம். அம்மாவின் அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வந்து விட்டதோ என்ற ஆச்சரியமும் எழுந்தது.
அறிவிப்புகள்
110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த மின்திட்டங்களைப் பட்டியலிட்டோம். 29-3-2012-ல் 5 திட்டங்களை அறிவித்துள்ளார். 3-4-2013ல் ஒரு திட்டத்தையும், 25-4-2013ல் 2 திட்டங்களையும் மொத்தமாக 8 திட்டங்களை அறிவித்துள்ளார். 
இவற்றின் மொத்த நிறுவுதிறன் 8,500 மெகாவாட்.இந்த நிறுவு திறனில் 1 மெகா வாட் உற்பத்தி கூட இதுவரையிலும் நடக்கவில்லை என்பதும் ஒருவேளை அசுரகதியில் இனிமேல் பணிகள் நடைபெற்றால் கூட 2017-க்கு முன்னர் இந்த திட்டங்களின் மூலம் “ஒரு யூனிட் மின்சாரம் கூட கிடைக்கப்போவதில்லை” என்பதும் ஒருமுறை சொன்னாலும் 110 சதவிகித உண்மை.

29-3-2012-ல் அறிவித்த5 திட்டங்கள்
1திரவ எரிவாயுவைப் பயன்படுத்தி 500 மெகாவாட் தயாரிக்கும் திட்டம்; 
எரிவாயு குழாயே பதிக்கப்படவில்லை.
2. எண்ணூர் அனல் மின்நிலையம் விரிவாக்கம் : 600 மெகாவாட்டிற்கு 3-6-2009ல் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதை 660 என்று மாற்றியதால் 24-1-2013ல்தான் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று ஆரம்பக்கட்ட நிலையில் உள்ளது.
3. உடன்குடி விரிவாக்கத் திட்டம் : எண்ணூரில் நிறுவு திறனைஅதிகரித்ததால் மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதி, இங்கு நிறுவு திறனை (2ஒ800 மெகாவாட் என்பதை 2ஒ660 மெகாவாட் என) குறைத்ததால் 14-10-2013ல் கிடைத்த சுற்றுச்சூழல் அனுமதி செல்லாது என்பதால் மீண்டும் அனுமதி கோரப்பட்டிருக்கிறது. ஏன் ஒரிடத்தில் குறைக்கிறார்கள், இன்னொரு இடத்தில் கூட்டுகிறார்கள், அம்மாவிற்கே வெளிச்சம்.
4. எண்ணூர் பழைய மின்நிலையத்தை மாற்றும் திட்டம்:சுற்றுச்சூழல் அனுமதி பெற முயற்சிகள் நடைபெறுகின்றன.
5. 1600 மெகாவாட் உப்பூர் திட்டம் : நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. தூத்துக்குடியில் இருந்துதான் ரயில் மூலம் நிலக்கரி கொண்டு வர வேண்டும், யார் கூறினாலும் 2015-16ல் வரும் வாய்ப்பே இல்லை.இதர திட்டங்களுக்கும் இதே கதிதான். பேனைப் பெருமாளாக்கினார் என்பார்கள். இல்லாத ஒன்றை இமயமலை என்று சொல்ல அதிமுக அரசால் முடிகிறது.

சூரிய ஒளி மூலம் சக்தியா? இருளா?

சூரிய ஒளி மூலம் 3000 மெகாவாட் வந்து பாயுமென்றார்கள். அதில் 10 சதம் என்றால் கூட 300 மெகாவாட் 5 சதவிகிதம் என்றால் கூட 150 மெகாவாட். இதுவரை 107.2 மெகாவாட் உற்பத்தி நடைபெற்றுள்ளது. 5 சதவிகித அரசு என்றால், கோபம் வரும், வேறு. விஷயங்களில் சதவிகிதம் 2 இலக்கத்திற்கு மேல் என்கிறார்கள்.

2023 தொலைநோக்கு திட்டத்தை பின்னோக்கிப் பார்த்தால்

தொலைநோக்கு திட்டம் 2023ல் மார்ச் 2012ல்  ஜெயலலிதா அறிவித்தார். 
2023ல் 15 லட்சம் கோடி வரும். இதில் 4.5 லட்சம் கோடி மின்சாரத் திட்டங்கள் மூலமே வரும் என்றார். 2023க்குள் உற்பத்தியாக வேண்டிய 20,000 மெகாவாட் மின்சாரத்தில் 5000 மெகாவாட் 2017க்குள் வந்துவிடும் என்றார்கள். 
ஒருவேளை கூரையைப் பொத்துக் கொண்டு வந்தால் மட்டுமே சாத்தியம் எதுவுமே இல்லாமல் இருப்பதற்கு ஏதாவது சொல்லி வைத்தாரே மகராசி என்று வேண்டுமானால் பாராட்டலாம்.

ரூ.331.54 கோடி வந்துச்சா? வரலயா?

பிள்ளைப் பெருமாள் நல்லூரில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும்விநியோகக் கழகம்  மின் கொள்முதல் ஒப்பந்தம் ஒன்றை 1997ல் செய்து கொண்டது. 
இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 2001 முதல் 30 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் இந்த நிறுவனம் இயற்கை எரிவாயுவை எரிபொருளாக பயன்படுத்துகிறது. 
வாயுகிடைக்காதபோது நாஃப்தாவை பயன்படுத்தும். நாஃப்தாவிற்கு ஆகும் செலவை நிறுவனம் ஓராண்டிற்குள்  கேட்டுப் பெற வேண்டும். 
இது ஒப்பந்த ஷரத்து. இனி என்ன நடந்தது என்பதை சிஏஜி வார்த்தைகளில் கேட்கலாம்.
நிறுவனம் 2001-02 முதல் 2009-10 வரையிலான கணக்கை2011 வரையிலும், 2010-11 வரையிலான கணக்கை 2011 செப்டம்பரிலும் சமர்ப்பித்தது.
”இதன் தொடர்பாக எங்கள் கருத்து நிறுவனம் ஓராண்டிற்குள் கணக்கு சமர்ப்பித்து கூடுதல் பணம் எவ்வளவு என்று கோரவில்லை.
2006-07 முதல் 2010-11 வரையிலான காலத்தில் உண்மையில் பயன்படுத்தப்பட்ட நாஃப்தா 11,20,634 மெட்ரிக் டன்கள். 
ஆனால்  கோரியபடி 12,01,569 மெட்ரிக் டன்கள் நாஃப்தாவிற்கு  பணம் கொடுத்துள்ளது.
 இப்படி பயன்படுத்தாத 80,935 மெட்ரிக் டன் நாஃப்தாவுக்கு கூடுதலாக கொடுத்த தொகை ரூ.331.54 கோடி.
இதுதான் வழக்கம் என்று  நிறுவனம் கூறுகிறது. 
ஆனால், ஒப்பந்தப்படி இது கூடுதல் தொகை. இதுகுறித்து 2012 ஆகஸ்டில் அரசிடம் கேட்டிருந்தோம். 2012 டிசம்பர் வரை பதிலில்லை.(15.5.2013 அன்று சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட சிஏஜி அறிக்கை பக்-88-89)அதன் பிறகேனும் ஏதாவது நடந்ததா?

ரூ.254 கோடி இழப்பு முடிந்ததா? தொடர்கிறதா?

2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேண்டுகோளின்படி தமிழக அரசு ஓர் ஆணை வெளியிட்டது. 
தமிழகத்தில் தனியார்உற்பத்தி செய்யும் மின்சாரம் முழுவதும்-விற்கு அல்லது தமிழகத்தில் உயர்அழுத்த மின்சாரம் உபயோகிக்கும் நிறுவனங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் உள்ளது. இதனடிப்படையில் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.836-க்கு என்று கொள்முதல் செய்து வந்தது.
திடீரென ஆகஸ்ட் 2010ல் ரிலையன்ஸ் எனர்ஜி ட்ரேடிங் லிமிடெட், பவர் டிரேடிங் கதரப்பரேஷன்,இந்தியா லிமிடெட் மற்றும் டாடா பவர் டிரேடிங் கம்பெனி லிமிடெட் ஆகியோருடன் மின்சார கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொண்டது. 
அதேநேரம் தமிழக தனியார் உற்பத்தியாளர்களிடம் செய்து கொண்ட மின்கொள்முதல் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தது. 
இந்த நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்த மின்சாரத்தை பவர் டிரேடிங் மற்றும் டாடா நிறுவனத்திற்கு விற்றனர். இந்த இரண்டு நிறுவனங்களிடமிருந்தும் தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கிய மொத்த மின்சார அளவான 189.4 கோடி யூனிட்டில் 158.7 கோடி யூனிட் தமிழக தனியார் நிறுவனங்கள் உற்பத்திசெய்தது. 
நேரடி கொள்முதலில் ஒரு யூனிட்டை ரூ.3.836க்கு வாங்கிய மின்சாரத்தை மேற்கண்ட இரண்டு கம்பெனிகளிடமிருந்து ரூ.4.74 முதல் ரூ.6.75 வரை வாங்கினார்கள். இதனால் வாரியத்திற்கு இழப்பு ரூ.254.05 கோடி (12-8-2014ல் சட்டமன்றத்தில் வைக்கப் பட்ட  அறிக்கை பக். 52-53)

விவசாயிகளுக்கு மின் இணைப்பு: சொல்லுவோம் ஆனா..?

தமிழகம் முழுவதும்  விவசாய மின் இணைப்பு கோரி 4,23,596 விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். 
31.3.2014 வரைதயார் நிலையில் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 47,728 ஆகும். விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிட அரசாங்கம் ஆண்டுதோறும் நிர்ணயிக்கும் இலக்கு என்பது 40,000 ஆகும். 
ஆனால், 1.4.2014 முதல் 31.12.2014 வரை வழங்கியுள்ள மின் இணைப்புகளோ 5,124 மட்டுமே.

எஸ்.எஸ்.சுப்ரமணியம், 
பொதுச் செயலாளர், 
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)
============================================================================================

இன்று ,
செப்டம்பர்-23.
  • சவுதி அரேபியா தேசிய தினம்(1932)
  • மொசிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது(2002)
  • நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது(1846)
  • ஹேர்மன் ஹொலரித், கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்(1884)
  • நின்டெண்டோ கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது(1889)
1973 - செப்டம்பர் 23
பாப்லோ நெருடா
'பூமியின் தோல் உலகெங்கும் ஒன்றே தான்' என்று பாடிய, 20ம் நுாற்றாண்டின் தலை சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவர், பாப்லோ நெருடா!கடந்த, 1904ல், அமெரிக்காவின் சிலி நாட்டில் பிறந்தவர், ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்டோ. செக்கோஸ்லோவாகியாவைச் சேர்ந்த, ஜோன் நெருடாவின் எழுத்தில் மயங்கியவர், பாப்லோ நெருடா என்ற புனைபெயரை, தனக்கு வைத்துக் கொண்டார். பாப்லோ நெருடாவின், 'வைகறைக் கதிர்கள், இருபது காதல் கவிதைகளும் ஒரு விரக்தி பாடலும்' ஆகிய கவிதை தொகுப்புகள், அவரது இலக்கிய கொடியை உயர்த்தி பிடித்தன.நீண்ட கவிதைகள் எழுதுவதில் அவர் அதீத ஆர்வம் காட்டினார். 1951ல், 'ஓப்ராஸ் கம்ப்ளீட்டஸ்' என்ற கவிதையை, 459 பக்கங்களில் எழுதினார்; 1962ல், அந்த கவிதையை, 1,925 பக்கங்களுக்கு உயர்த்தினார்; 1968ல், அதன் பக்கங்கள், 3,237ஆக உயர்ந்தது! கடந்த, 1970ல், சிலி நாட்டு அதிபர் தேர்தலில், போட்டியிடும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது; அதை மறுத்து, தன் நண்பரான, சால்வடார் அலெண்டேவுக்கு வாய்ப்பளித்து ஆதரவளித்தார்.கடந்த, 1971ல் பாப்லோ நெருடாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. தன் 69வது வயதில் மரணமடைந்தார்
============================================================================================
ஒரு [தற்]கொலை பற்றிய ஐயங்கள்?

டி.எஸ்.பி விஷ்ணு பிரியா ....

* அவர் மரணமடைவதற்கு முன் நாள் மாலை கோண்டூரில் தனது குடுமபத்துடன் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளார். நிச்சயம் ஐ.ஏ.எஸ் தேர்வில் விரைவில் வெற்றி பெருவேன் என தனது தந்தையிடம் கூறி உள்ளார்.
* இரவு கே.பி.என் டிராவல்ஸில் கடலூரிலிருந்து புறப்பட்டு திருச்சங்கோடு சென்றுள்ளார்.
* காலை தனது தந்தையிடம் தான் பத்திரமாக வந்து சேர்ந்ததை சொல்லியுள்ளார்
* காலை நடந்த போராட்டத்தை திறம்பட சமாளித்துள்ளார்.
* தன் எடையை கொஞ்சமும் தாங்காத துப்பட்டாவில் எப்படி தூக்கில் தொங்கினார்?
* கோகுல்தாஜ் கொலை வழக்கிற்கும் எனது மரணத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என ””குறிப்பு”” எழுதியது ஏன்?
* மேஜை நாற்காலிகள் கலையாமல் உயரம் சென்று துப்பட்டாவை மாட்டியது எப்படி?
* தூக்கில் தொங்கியவர் உடல் நிறம் மாறுமா?
* தூக்கில் தொங்கியவர் உடலிலிருந்து வெளியேறும் எந்த திரவங்களும் வெளியேறாமல் போனது எப்படி?
* தனது தோழியிடம் பேசும்போது இடையில் எ்ஸ்.பி யின் அழைப்பு வந்ததாக சொன்னவர் உடன் மரணமடைய காரணம் என்ன?
* CBCID விசாரனையில் அவரது தந்தை திருப்தி தெரிவித்தாக காவல் துறை சொல்வது சுத்த பொய்யல்லவா?
இன்னும் தொடர்கிறது விடை தெரியாத கேள்விகள்...
எனவேதான் அவரது மரணம் குறித்து C.B.I விசாரணை வேண்டுமென அனைவரும் கோருகின்றனர். அவரது தந்தையும் இதைதான் கேட்கிறார் . 

அவரது புகார் கடிதத்திலும் அதையே கோரியுள்ளார்.


============================================================================================




            இப்படி பிள்ளையாரை  அடித்து,கடித்து குதறத்தான் அந்த ஊர்வலம்,கலவரம் எல்லாமும்.

லேடியும் உண்மைதான்.... கூட பூ கூடையோடு நிக்குற ஆப்பீசர்ஸ் எல்லாம் உண்மைதான்.... ஆனா கொட நாட்டுல போய் சந்திச்சப்ப எடுத்ததயும்.... தோட்டத்தில் போய் சந்திச்சப்ப எடுத்ததையும்.... லேடிஜி கோட்டைக்கு வந்தப்ப எடுத்தது போல போடோஷாப்ல கட் காப்பி பேஸ்ட் பண்ணிருக்காங்க.....
லேடிஜி அடிக்கடி கோட்டைக்கு வாராங்க ஆப்பீசர்ஸ சந்திக்குறாங்க பூகூடை வாங்குரங்கன்னு மக்கள் காதுல பூ சுத்துறதுக்கு தான் இந்த போடோஷாப் ஒட்டு வேலைகள் பாத்திருக்காங்க.....
இந்த நவீன யுகத்துல வலைத்தளத்தில் படங்கள் வெளியாக அப்ரண்டிஸ்ங்க செஞ்ச ஒட்டு வேலைகளின் புட்டு வெளியாகி சிரிப்பா சிரிக்குது.....
பாவம் இந்த ஒட்டு வேலை செஞ்சவன் கதி இந்நேரம் அதோ கதிதான்.....Abu Rayyan

தமிழக முதல்வருக்கு பூங் கொத்து கொடுக்கும் இந்த படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள்..
இந்த போட்டால உள்ளார கமிஷனருடைய தொப்பைக்கு பக்கத்துல ஒரு கையும் வேற ஒரு நபருடைய துனியும் தெரியுது பாருங்க
யாரை ஏமாற்ற இந்த பொய்யான படம்...
========================================================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?