ஓராண்டு பேசும் ஆமை வேக சாதனை.

ஓராண்டுக்கு முன் பதவிக்கு வந்ததில் இருந்து பிரதமர் மோடி இந்தியாவில் இருந்தது என்னவோ 40 நாட்கள்தான் இருக்கும்.
ஒவ்வொரு வெளிநாடாக சுற்றுப்பயணம் போய் இந்தியாவுக்கும்,அதானிக்கும் கடன் கேட்பதிலும்,முந்தைய ஆட்சியால் இந்தியா கீழ்மை நிலைக்கு சென்று விட்டதாகவும் இந்தியாவை பிற நாட்டவர்கள் அசிங்கமாக நினைக்கும் அளவுக்கு பேசுவதுமே வாடிக்கையாகி விட்டது.இதுதான் இந்த ஓராண்டு பேசும் நூறாண்டு சாதனை.
 மோடியின் ,பாஜக ஆட்சியின் சாதனையை இங்குள்ள ஊடகங்கள் மோடி மஸ்தான் அளவுக்கு மிகைபடுத்தி பேசினாலும் வெளிநாடுகள் எப்படி இந்த ஓராண்டைப் பார்க்கிறது.
இதோ இங்கிலாந்து பத்திரிகை கட்டுரை.
 ‘மோடியின்  எந்த வேகத்தில் ஆட்சி அமைய அவசரம் காட்டினாரோ அந்த வேகத்தில் இல்லாமல் ஆமைவேகமாக மாறி விட்டது. 
மேலும் அவரது இந்த ஆமை வேக நடவ டிக்கைகளால் மக்களின் நலன்கள் கைவிடப்பட்டு வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு திடமாக ஆட்சியை மக்கள் மோடி தலைமை யில் ஆன பாஜக விற்கு அளித்தனர் ஆனால் மோடி மக்கள் நலத்திட் டங்களில் கவனம் செலுத் தாமல் அனைத்து அமைச் சகங்களின் பணியிலும் தலையிடும் ஒரு மனித இசைக்குழுவைப்போல் உள்ளார் என்றும் குறிப் பிட்டுள்ளது. 
 மோடி ஆட்சிக்கு வந்த ஓராண்டு சாதனை கள் குறித்து எல்லா அமைச்சர்களும் தங்கள் ஆதரவு ஊடகங்களில் 24 மணிநேரமும் பேசிக் கொண்டே இருக்கின்ற னர். ஆனால், உண்மை நிலவரத்தை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். 
 இந்த மக்களின் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத் திய இந்த ஆட்சியில் மக்களுக்கான நலத்திட் டங்கள் எதுவும் நடக்க வில்லை என்பது அனை வருக்கும் தெரிந்த ஒன்றே, இந்த நிலையில் மோடி யின் ஓராண்டு குறித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடத்திய ஆய்வின் படி அது எழுதி யுள்ளதாவது, மோடி நல்ல நாள் வரப்போ கிறது என்று கூறி ஆட் சிக்கு வந்தார்.
மோடி [அவ]சுரம் குறைந்தது.
ஆனால் அவர் வந்த வேகம் தற் போது ஆமை ஓட்டமாகி விட்டது.  
 எந்த ஒரு திட்டமென் றாலும் தன்னுடைய பெயரே அதில் இடம் பெற வேண்டும் என்பதில் மோடி மிகவும் உறுதியாக உள்ளார். ஓர் ஆண்டாக பல்வேறு அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் மோடி அமைச்சர்களின் பணியிலும் தலையிடுவது அதிகமாக உள்ளது. எந்த ஒரு அமைச்சரும் அவர் களுக்கான அதிகாரத் துடன் சுதந்திரமாக பணி யாற்ற முடிவதில்லை. 
மோடி இன்றுவரை குஜ ராத்தின் முதலமைச்சர் போலவும், தேர்தல் காலத் தில் மேடைப் பேச்சு களைப் பேசுவது போன்றே இன்றளவும் பேசிக் கொண்டு இருக் கிறார். இவரது அறிவிப் புகள் அனைத்தும் ஆரம்ப கட்டத்தில் பரபரப்பாக இருக்கின்றன. பிறகு அந்த பேச்சே மறந்து போய் விடுகிறது.
 மேலும் அடுத்த திட்டம் பரபரப்பாக வெளியிடும் போது முத லில் ஆரம்பித்த திட்டங் கள் குறித்த அனைத்து அக்கறையும் திசை திருப் பப்பட்டு விடுகின்றன. இரண்டு பெரிய தவறுகள் மோடி தனது ஒராண்டு ஆட்சிக்காலத்தில் பல் வேறு தவறுகளைப் புரிந் திருந்தாலும், இரண்டு மிகப் பெரிய தவறுகள் என்று பத்திரிகை சுட்டிக் காட்டியதாவது, இந்தியா உலகின் மிகப் பெரிய மக் களாட்சி நாடு, இந்த நாட்டின் நாடாளுமன்ற நடைமுறைகளை பல் வேறு உலக நாடுகள் மிக வும் ஆவலாக பார்த்துக் கொண்டு இருக்கின்றன.
 இந்த நிலையில் ஒரு அவையில் மட்டுமே மோடிக்குப் பெரும் பான்மை உள்ளது. மாநி லங்களவையில் பெரும் பான்மை இல்லாத கார ணத்தால் அவரால் திட் டங்களை நடைமுறைப் படுத்த இயலவில்லை அதே நேரத்தில் திட்டங் களை எதிர்கட்சிகளின் பார்வைக்கு வைத்து அவர்களுடன் பேசி நடை முறைப்படுத்தாமல் மக்களாட்சி நடை முறைக்கு விரோதமாக அவசரச் சட்டங்களைப் பிறப்பித்தல் மோடி இழைக்கும் தவறாகும்.
இது மக்களின் ஆதரவில் ஆட்சிக்கு வந்த ஓர் அரசு செய்யும் ஜனநாயக விரோதப் போக்காகும். இந்த விரோதப் போக்கை மோடி 
 மீண்டும் மீண்டும் செய்கிறார்; இதுபோன்ற விவகாரத்தில் மோடி அரசியல் வல்லுநர்களைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெ டுக்கிறார். மேலும் இது போன்ற விவகா ரத்தை தனிப்பட்ட வெற்றி தோல்வி போல் பாவிப் பது மோடி தொடர்ந்து செய்துவரும் தவறாகும். 
 இரண்டாவது தவறு எதிர்க்கட்சிகளை அர வணைத்துச் செல்லாதது, ஜனநாயக நாட்டில் இது போன்ற செயல்கள் மிக வும் பாதிப்பை ஏற்படுத் தும். ஆனால், மோடி இது குறித்து கவலைப்பட வில்லை, எதிர்க்கட்சி களை அரவணைத்துச் செல்லாத செயல்பாடு என்பதும் மிகவும் தவ றான ஒரு எடுத்துக்காட் டாகும்.என்று குறிப் பிட்டுள்ளது.  மேலும், பெரு நிறுவ னங்களின் நன்மைக்காக தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது, மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளதாகவும், நிலம் கையகப்படுத்தும் சட்டம் போன்ற விவகாரங்களில் மக்களின் வெறுப்பை எளிதில் சம்பாதித்து விட் டதாகவும், காந்தியடிகள் போன்ற எளிமையான தலைவர்கள் பிறந்த நாட் டில் ரூ10 லட்சம் மதிப்பில் ஆன ஆடை அணிந்து விருந்தினர்களைச் சந்தித்தது, மற்றும் அயல் நாடுகளுக்குச் செல்லும் போது காட்டும் ஆடம் பரம், அங்கும் எதிர்க் கட்சிகளை வசைபாடுவது போன்றவை மோடியின் பெயருக்கு இழுக்கை சம்பாதித்துத் தரும் என்று எழுதியுள்ளது.   
 அந்நிய நாட்டு தொழில் முதலீட்டிற்காக அவர் கொடுத்துவரும் சலுகைகள் மற்றும் புதிய தொழிலாளர் சட்டங்கள் மிகவும் பாதிப்பை ஏற் படுத்தும், உள்நாட்டில் பெரிய அளவு எதிர்ப்பை எதிர்வரும் ஆண்டுகளில் சந்திக்கவேண்டி இருக்கும் என்றும் குறிப்பிட்டுள் ளது.
 சிறுபான்மையினர் விவகாரத்தில் ஆரம்பத் தில் என்ன நடக்கும் என்று எதிர்பார்த்திருந் தோமோ அதுதான் தற் போது நடந்து வருகிறது,
 மதவாதப் பேச்சுக்களை மோடி கண்டிக்கத் தவறி விட்டார்.
சிறுபான்மை யினர் ஒருவித அச்சத்தில் வாழ்ந்துவருவது குறித் தும், அந்த அச்சத்தைப் போக்க திடமான நட வடிக்கை எதுவும் எடுக்க தயங்கும் ஒரு அரசாக உள்ளது.
                                                                                                         தி எக்னாமிஸ்ட் ,[லண்டன்.]
=============================================================================================
கர்ப்பகாலத்தில் தாய்மார் அதிகமான பரசிட்டமோலை உட்கொண்டால், அது அவர்களது பிறக்கப்போகும் மகனின் இனப்பெருக்க சக்தியை பாதித்துவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
வலி நிவாரணியாக பலராலும் பயன்படுத்தப்படும் பரசிட்டமோல் எலிகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராயும் விஞ்ஞானிகளே இதனை தெரிவித்துள்ளனர்.
எலிகளில் மனிதக் கருவின் திசுக்களை செலுத்தி, ஒரு கர்ப்பம் போன்று பாவனை செய்து பரிசோதித்தபோது, பரசிட்டமோல் 7 நாட்களுக்கு கொடுக்கப்பட்டவற்றுக்கு, அதில் டெஸ்ட்துரோனின் அளவு மிகவும் குறைவாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
ஆண்களுக்கான இனப்பெருக்க உறுப்புக்களை உருவாக்குவதில் இந்த ஹார்மோன் முக்கிய பங்காற்றுகிறது.
கர்ப்பிணிகள் இந்த வலி நிவாரணியை மிகவும் அவசியமாக தேவைப்பட்டால் மாத்திரம், மட்டுப்படுத்தப்பட்ட காலத்துக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும்.
======================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?