2.ஜி--3ஜி வித்தியாசம் தெரியுமா?
எரிக்சன் ஆய்வு அமைப்பு, மொபைல் வழி இணையத்தைப் பயன்படுத்துபவர்களிடையே ஆய்வு ஒன்றை நடத்தியது.
இவற்றில் பல புதிய தகவல்கள் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வு 33 நகரங்களில், 15 ஆயிரம் பயனாளர்களிடையே நடத்தப்பட்டது. இவர்களில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவர்கள் இருந்தனர். ஸ்மார்ட்போன்களுக்கு மாறிய நிலை, மொபைல் பிராட்பேண்ட் பயன்படுத்துவதில் ஆர்வம் ஆகியவை இந்த ஆய்வில் தெரிய வந்தன.
இதில் பதிலளித்தவர்களில், 48 சதவீதம் பேர், 2ஜி மற்றும் 3ஜி சேவைகளுக்கிடையே எந்த வேறுபாடும் தெரியவில்லை என்று கூறினர்.
68% பேர், தங்களுக்குக் கிடைக்கும் இணைய இணைப்பு குறித்து குறை தெரிவித்தனர்.
68% பேர், தங்களுக்குக் கிடைக்கும் இணைய இணைப்பு குறித்து குறை தெரிவித்தனர்.
இணைய தளங்கள் இறங்க வெகு நேரம் ஆகின்றது என்றும், பல நேரங்களில், இணைப்பு அறுந்துவிடுகிறது என்றும் தெரிவித்தனர்.
வீடுகளில் இருக்கும்போது இணைப்பு சரியாக உள்ளது என்றும், வெளியே செல்லும்போது தொடர் இணைப்பு என்பது உறுதிப்படுத்த முடியாத ஒன்றாக உள்ளது. 2013 ஆம் ஆண்டில், 20% பெண்களே, மொபைல் வழியாக இணையத்தினைப் பயன்படுத்தினார்கள்.
ஆனால், 2015ல் இது 34% ஆக உயர்ந்துள்ளது. நகரங்களில் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துபவர்களில், மூன்றில் ஒருவர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
மொபைல் வழி இணையம் பயன்படுத்துவது அதிகமான செலவினை இழுத்து வைக்கிறது என 88% பேர் தெரிவித்தனர்.
மொபைல் வழி இணையம் பயன்படுத்துவது அதிகமான செலவினை இழுத்து வைக்கிறது என 88% பேர் தெரிவித்தனர்.
இவர்களில், 48% பேர், 2ஜி பயன்பாட்டிற்கும், 3ஜி பயன்பாட்டிற்கும் இடையே வேறுபாடு எதுவும் தெரியவில்லை என்று கருத்துரைத்துள்ளனர். கட்டுப்படியாகக் கூடிய அளவில், மொபைல் பிராட்பேண்ட் டேட்டா திட்டங்கள் எதுவும் இல்லாததால், தாங்கள் மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துவது இல்லை என்று 36% பேர் கருத்து தெரிவித்தனர்.
இருக்கின்ற திட்டங்களும் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை.
10% பேர் மட்டுமே, மொபைல் பிராட்பேண்ட் டேட்டா திட்டங்கள் குறித்து அறிந்து வைத்துள்ளனர்.
மொபைல் பிராட்பேண்ட் பயன்படுத்துபவர்களில், பெரும்பாலானவர்கள், சமூக இணைய தளப் பயன்பாடு, விடீயோ தரவிறக்கத்திற்கு அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மொபைல் பிராட்பேண்ட் பயன்படுத்துபவர்களில், பெரும்பாலானவர்கள், சமூக இணைய தளப் பயன்பாடு, விடீயோ தரவிறக்கத்திற்கு அதிகம் பயன்படுத்துகின்றனர்.
36% மட்டுமே, நிதி சார்ந்த பணிகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
உங்கள் செல்பேசியை எப்படி பயன் படுத்துகிறீர்கள்?
* திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது.
எனவே சட்டைப் பையில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள், மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும்.
போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.
* போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும்.
இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும்.
எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.
* மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று.
* புதிதாக மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06#என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (IMEI -~ International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும்.
உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.
* இணையத்தை அதிகம் பயன் படுத்துபவரா?உங்கள் இணைய இணைப்
பை தாண்டி விட்டீர்களா?
மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லை என்றால் wifi வசதியை துண்டியுங்கள்., பேட்டரி சக்தி வீணாகும்.
========================================================================
இன்று,
மே -14.
- பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது(1811)
- பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்(1796)
- குவைத் ஐநா.,வில் இணைந்தது(1963)
- அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ஸ்கைலேப் உருவாக்கப்பட்டது(1973)
========================================================================
ஜெயா வழக்கும் 2G வழக்கும் -- By Natarajan Kandasamy
ஜெயா வழக்கு:
==============
குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் ஒரே இல்லத்தில் தங்கி அந்த முகவரியில் தொடங்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட நிறுவங்களுக்கு அவர்கள் நால்வர் மட்டுமே உரிமையாளர்களாக இருந்தும், அதில் ஜெயலலிதா வின் அங்கீகரிக்கப்பட்ட முதல்வராக சசிகலா இருந்த போதும் மற்ற மூவருக்கும் இந்த நிறுவனங்களின் மூலம் வந்த வருவாயை தவிர வேறு ஏதும் இல்லாத போதும் அவர்கள் ரத்த சம்பந்தம் இல்லாததால் கூட்டு சதி என்ற குற்றசாட்டை ஏற்கமுடியாது.

2G வழக்கு:
=========
ராசா வோ கனிமொழியோ எந்த ஒரு நிறுவனத்திலும் கூட்டு பங்குதாரர்கள் இல்லை, ரத்த சம்பந்த உறவும் இல்லை வேறு வேறு முகவரியில் வசிப்பவர்கள். ஆனால் அவர்கள் மீது சொல்லப்பட்டது கூட்டு சதி. அந்த குற்ற சாட்டின் அடிப்படையில் சுமார் 1 வருடம் விசாரணை கைதி.

இப்பொழுது சொல்லுங்கள் "இந்தியாவில் சட்டம் அனைவருக்கும் சமமானது." இன்னும் ஒரு முறை சொல்லுங்கள் "இந்தியாவில் சட்டம் அனைவருக்கும் சமமானது."
========================================================================
தீர்ப்புகள் திருத்தப்படலாமா?
னீதியரசர் குமாரசாமி தான் எழுதிய தீர்ப்பை மாற்றி திருத்த முடியுமா?
சட்டம் என்ன சொல்கிறது?
நீதிபதி குமாரசாமி தன்னுடைய தீர்ப்பில் உள்ள கூட்டல் மற்றும் எழுத்து பிழை தொடர்பான பிழைகளை திருத்த அவருக்கு CPC 362 இல் உரிமைகள் வழங்ப்பட்டுள்ளது. எனவே அவர் தீர்ப்பின் தவறுகளை திருத்துவதை தடுக்க முடியாது.
அவ்வாறு திருத்தும் போது செல்வி ஜெயாவின் சொத்து குவிப்பு 76% வந்தாலும் அவருக்கு தண்டனை வழங்க இயலாது. விடுதலை செய்து உத்தரவிட்டதை மாற்ற வழியில்லை.
சட்டப்படி தீர்ப்பில் கையொப்பமிட்ட பின் தீர்ப்பை அந்த நீதிபதியால் தீர்ப்பை மாற்றமுடியாது.
ஆனால் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இந்த விபரங்களை தெரிவித்து நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்கு தடை விதிக்க மனு செய்யலாம்.
உச்ச நீதிமன்றம்தான் இனி முடிவெடுக்க இயலும் .
Section 362 of the Criminal Procedural Code states: Court not to after judgement. Save as otherwise provided by this Code or by any other law for the time being in force, no Court, when it has signed its judgment or final order disposing of a case, shall alter or review the same except to correct a clerical or arithmetical error.
===============================================================================