தீர்ப்பின் மீது தேவை விசாரணை?

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக சிறப்பு நீதிமன்றம் 27-9-2014 அன்று அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. ஜெயலலிதா சிறையிலே அடைக்கப்பட்டார். 
முதலமைச்சர் பதவியை இழந்தார்.
=============================================================================================

 சுப்பிரமணியன் சுவாமி

‘தீர்ப்பில் கணக்கு ரீதியான பிழை இருக்கிறது. 
வருமானத்துக்கு மேலே ஜெயலலிதா சொத்து சேர்த்திருக்காங்க என்பதை நீதிபதி குமாரசாமி ஒப்புக்கொள்கிறார். 
பழைய ஊழல் தடுப்புச் சட்டத்தை உதாரணம் காட்டி, ‘மொத்த வருமானத்தோட கம்பேர் பண்ணும்போது, அது 10 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் சொத்து சேர்த்திருக்கார். 
அது பெரிய விஷயமில்லை. 
இந்த ஒரு காரணத்துக்காகவே விடுதலை பண்ணினேன்’னு சொல்கிறார். 

அவர் எடுத்துக்காட்டிய அந்தச் சட்டம் 1977-ல் இருந்தது. 
1988-ல் அந்தச் சட்டத்தையே ராஜீவ் காந்தி மாற்றிவிட்டார். 
புதுசா கொண்டுவந்த சட்டத்துல, அந்த 10 சதவிகிதம் போன்ற எந்த ஷரத்தும் இல்லை. 

ஆக, நடைமுறையில் இல்லாத ஒரு சட்டத்தைத் தனது தீர்ப்பில் நீதிபதி ஏனோ குறிச்சிருக்கார். தீர்ப்பின் இந்தப் பகுதி உச்ச நீதிமன்றத்தில் நிச்சயமா எடுபடாது. நான் இதை முன்வைத்து வாதாடுவேன். தீர்ப்பில் இதுதான் பெரிய குறை’’ 



=============================================================================================

சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வர உச்ச நீதிமன்றம் வரை சென்றார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களே ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தீர்ப்பு பற்றி அப்போதே சில விமர்சனங்கள் வந்தன.
குற்றவாளியை சந்தித்த மத்திய அமைச்சர்.?
குறிப்பாக, “சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டு, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு சட்டத்தின் மரபுகளுக்கு முரணாகச் செயல்பட்டு, தலைமை நீதிபதி தத்து, ஜாமீன் வழங்கியிருக்கிறார். 

சாதாரண வழக்கு என்றாலுங்கூட, குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குவதற்கு முன்பு எதிர்த் தரப்பினரிடம் விளக்கம் கேட்கப்படும். ஆனால் இந்த வழக்கில் எதிர்த் தரப்பான கர்நாடக அரசையும், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையையும் விசாரிக்காமலேயே ஒருதலைப் பட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஊழல் குற்றவாளிகள் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில் ஜாமீன் வழங்கும் போது அதற்கான காரணங்களைத் தெளிவாகக் கூற வேண்டுமென ஏற்கனவே உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது. இதற்கு மாறாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதற்கான காரணம் எதையுமே கூறாமல், நான்கே வரிகளில் தலைமை நீதிபதி தத்து ஜாமீன் உத்தரவை வழங்கியுள்ளார். 

இவ்வளவு ஏன்?
ஜெயலலிதா உட்பட நான்கு குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பதற்கான காரணங்களை கர்நாடக உயர் நீதிமன்றமே நாற்பது பக்க உத்தரவில் தெளிவாகக் கூறியுள்ளது.
 இவற்றிற்கெல்லாம் மேலாக ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் ஜாமீன் கேட்டு மட்டுமே மனுச் செய்த வழக்கில் (குற்றவாளிகள் கோரிக்கை எதுவும் வைக்காத நிலையிலேயே) மேல் முறையீட்டு மனுவையும் விரைந்து முடிக்க வேண்டு மென்று தலைமை நீதிபதி தத்து உத்தரவிட்டுள்ளார். 

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, ஜெயலலிதாவுக்கு தலைமை நீதிபதி தத்து வழங்கியிருக்கும் இந்த “சூப்பர்” சிறப்புச் சலுகை முறைகேடானது.
 ஒரு ஊழல் குற்றவாளி தொடர்பான வழக்கிலேயே இப்படியொரு முறைகேடான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது மக்களுக்கு விடப்பட்டிருக்கும் அபாய எச்சரிக்கையாகும்” என்றெல்லாம் கூறியதோடு, குறிப்பாக, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆயிரம் வழக்கறிஞர்களின் கையெழுத்துக்களுடன் குடியரசுத் தலைவரிடம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குன்கா 
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முன்பே சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, பாலி நாரிமனின் மகன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பதால், பாலி நாரிமன் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவது பார் கவுன்சில் விதித்துள்ள நெறிகளுக்கு எதிரானது என்று புகார் அளித்துள்ளார். “இந்த வழக்கு தொடர்பாக உங்கள் மீது ஊழல் புகார் இருப்பதால், விசாரிப்பதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ள வேண்டும்”
 என்று டிராபிக் ராமசாமி தலைமை நீதிபதி தத்துவுக்கே மனு அளித்துள்ளார் என்பதும் நினைவிலே கொள்ளத்தக்கது.

ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதா தன் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அந்த வழக்கு விசாரணை மூன்று மாதம் நடந்து முடிந்த நிலையில் 11-5-2015 அன்று நீதிபதி குமாரசாமி, சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா உட்பட நான்குபேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்திருக்கிறார்.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள திரு. ஆச்சார்யா அவர்கள் இந்தத் தீர்ப்பு பற்றி கருத்துக் கூறும்போது, “The entire appeal proceedings were conducted without making Karnataka State a Party, though it was a necessary legal requirement. Counsel for the accused allowed to make oral arguments for nearly two months, but no
prosecutor authorised by Karnataka was present during such arguments. Thereby the principles of natural justice were denied to the prosecution during the appeal proceedings”
என்றெல்லாம் கூறியதோடு, “எனது 58 ஆண்டு கால வக்கீல் தொழிலில் இப்படியொரு தீர்ப்பைப் பார்த்தது இல்லை.
 இது ஒருதலைப்பட்சமான தீர்ப்பு. வழக்கில் குற்றவாளிகள் மீது என்னென்ன குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பதை தீர்ப்பில் குறிப்பிடவில்லை.
 உச்ச நீதிமன்றம் அரசுத் தரப்பு வாதத்தைத் தாக்கல் செய்ய ஒரு நாள்தான் கொடுத்தது. அதுவும் நேரடியாக வாதாட அனுமதி கொடுக்காமல் எழுத்துப்பூர்வமான வாதத்தைத் தான் தாக்கல் செய்ய உத்தரவிட்டது” என்றும் வருத்தப்பட்டிருக்கிறார்.
நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா தரப்பினரை விடுதலை செய்த போதிலும், அந்த மேல் முறையீட்டு வழக்கினை அவர் விசாரித்த போது, இடையிடையே அவர் வெளியிட்ட கருத்துக்களுக்கும், இறுதியாக அவர் எழுதிய தீர்ப்புக்கும் இடையே ஏராளமான முரண்பாடுகள் இருப்பதை நாடு கண்டது.
 உதாரணமாக ஒருசில வற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
சுதாகரன் திருமணச் செலவு பற்றிய விவாதம் நடைபெற்ற போது, குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி அவர்கள், “இத்தனை கோடி ரூபாய் செலவு செய்து இவ்வளவு பிரமாண்டமாக திருமணம் செய்ய சுதாகரன் என்ன அ.தி.மு.க. தொண்டரா? 
அல்லது ஜெயலலிதா வின் மகனா?
இதுவரை 28 நாட்கள் வாதம் செய்துள்ளீர்கள். தனி நீதிமன்ற நீதிபதி தவறாகத் தீர்ப்பு வழங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள்.
அவர் வழங்கியுள்ள தீர்ப்பில் என்ன குறை என்பதை 20 நாளில் உங்களால் உறுதி செய்ய முடியவில்லை. இப்படி இருந்தால் நான் மட்டும் என்ன செய்ய முடியும்?
தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நானும் உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலைதான் தற்போது நிலவுகிறது. 

ரூபாய் 66 கோடி வருமானத்திற்கு சொத்து உள்ளது என்பதை இல்லை என்று மறுக்கும் வகையில் ஆதாரமில்லையே? 
ஒன்று, வாதத்திற்குத் தேவையான ஆதாரம் கொடுங்கள்.
 இல்லையெனில் நானே ஒரு ஆடிட்டரை நியமனம் செய்து கொண்டு கணக்குகளைச் சரி பார்க்கிறேன். 
அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதமும் அவசியமில்லை. 
நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்பு வழங்கி விடுகிறேன். 
இது தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று நீதிபதி குமாரசாமி விசாரணையின் போதே கூறியிருக்கிறார். 

சுதாகரன் திருமணத்திற்காக கோடிக் கணக்கில் செலவு செய்யப்பட்டதாக நீதிமன்ற  விசாரணையின் போது கூறிய நீதிபதி குமாரசாமி, தனது தீர்ப்பில் ஒரு சில இலட்சங்கள்தான் அந்தத் திருமணத்திற்காக ஜெயலலிதா செலவிட்டார் என்று எழுதியிருப்பது முரண்பாடு இல்லையா?
 16-2-2015 அன்று ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பி. குமார், “இது அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டுள்ள பொய் வழக்கு” என்றபோது, குறுக்கிட்ட நீதிபதி சி.ஆர். குமாரசாமி அவர்கள், “இது பொய் வழக்கு, பொய் வழக்கு என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறீர்கள்.
 ஆனால், குற்றவாளிகள் மீது கூறியுள்ள புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் முழுமையாகக் காட்டாமல், வாய் வழியாக பொய் வழக்கு என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? 
அரசுத் தரப்பில் 259 சாட்சிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். புகார் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் 2 ஆயிரத்து 341 ஆவணங்கள் தாக்கல் செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகள் தரப்பில் 99 சாட்சிகளும் 385 ஆவணங்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளீர்கள். அதிலும் அரசுத் தரப்புக் குற்றத்தை முறியடிப்பதற்கான ஆதாரங்கள் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை” என்றார்.

ஜெ. வழக்கறிஞர் குமார், ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது, ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கினார் என்று கூறிய போது, நீதிபதி குமாரசாமி அவர்கள், “முதல்வர் பதவியில் இருப்பவர் ரூ. 1 சம்பளம் வாங்கினாலும், பொது ஊழியராகத்தான் கருதப்படுவார்.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனும் போது, ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு 66 கோடி ரூபாய் வருமானம் உள்ளதை லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இல்லை என்பதற்கு உங்கள் தரப்பில் எந்த ஆதாரமும் கொடுக்க வில்லையே” என்று நீதிபதி கூறி, அப்போதே அது ஏடுகளிலே வெளி வந்தது.

சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர், ஜெயலலிதா குற்றம் செய்ய உடந்தையாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இருந்தனர் என எந்த ஓர் அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறியபோது, நீதிபதி குமாரசாமி,
 “கூட்டுச் சதியில் ஈடுபடாதவர்களை எப்படி தனி நீதிமன்றம் தண்டித்து இருக்கும்? 
தமிழக ஊழல் தடுப்புப் போலீசார் ஆதாரங்கள் இல்லாமல் வழக்கைப் பதிவு செய்யத்தான் முடியுமா? 
இல்லை, இந்த வழக்கை 18 ஆண்டுகள் நடத்தி இருக்கத்தான் முடியுமா?
 இல்லை, இதையெல்லாம் ஆராயாமல் தனி நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருக்கத்தான் முடியுமா?
 தேவை இல்லாததைப் பேசி நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குவதை விட, தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தவறுகள் இருந்தால் அவற்றை உங்கள் தரப்பு ஆதாரங்களோடு நிரூபியுங்கள். தேவையில்லாமல் வாதிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
 இதுவரை 20 சதவிகிதம் கூட ஆதாரங்களோடு வாதிடவில்லை” என்று கூறினார்.

மீண்டும் ஒரு முறை, நீதிபதி குமாரசாமி, “தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த சாட்சியங் களோடும் ஆதாரங்களோடும் 82 - 92 சதவிகிதம் நிரூபித்திருக்கிறார்கள். 
ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஆதாரங்களைக் காட்டவும் இல்லை. 30 - 35 சதவிகிதம் வரைதான் வாதிட்டிருக்கிறீர்கள். பள்ளிக் கூடத்தில் 35 மார்க் எடுத்தால் பாஸாக இருக்கலாம். 
ஆனால் நீதிமன்றத்தில் எதிர்த் தரப்பை விட அதிக மார்க் வாங்கினால்தான் பாஸ் பண்ண முடியும். 
அப்படிப் பார்த்தால் உங்களை விட அவர்கள் 65 மார்க் அதிகமாக வாங்கியிருக்கிறார்கள்.

அதனால் அவர்கள்தான் பாஸ்” என்று தெரிவித்தார். 

ஆனால் தனது தீர்ப்பில், 65 மதிப்பெண் பெற்றவர்களைத் தேர்ந்தெடுக்காமல், 35 மதிப்பெண் பெற்றவருக்கு “பாஸ்” போட என்ன காரணம்?
 மேலும் நீதிபதி குமாரசாமி, “குற்றவாளிகள் தரப்பில் வாய்மொழியாக முன் வைக்கும் வாதங்களை வைத்து தீர்ப்பு வழங்க முடியாது.
 ஆதாரங்கள், ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்க முடியும். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரது வருமானத்தைப் பயன்படுத்தி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்துக் குவித் தார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. அதனை எப்படி ஆதாரத்துடன் பொய் என்று நிரூபிக்கப் போகிறீர்கள்? சுதாகரனும், இளவரசியும் சட்ட விரோதமாக சொத்து குவிக்கவில்லை என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம், ஆவணங்கள் இருக்கின்றன? அந்தக் குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும் ஆவணத்தையும்
நீங்கள் இதுவரை தாக்கல் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.
20ஆம் தேதியன்று விசாரணையின் போது நீதிபதி குமாரசாமி, வழக்கறிஞர் சுதந்திரத்தைப் பார்த்து, “உங்கள் தரப்பு வாதத்தை முடித்து விட்டீர்களா?” என்ற போது “ஆம்” என்றார். 
அதைத் தொடர்ந்து நீதிபதி, “கடந்த 31 நாட்களாக விசாரணை நடந்தது. டி.வி.ஏ.சி. பொய் வழக்குப் போட்டுள்ளதாகக் கூறினீர்கள். 
ஆனால் அதற்கான ஆதாரம் கொடுங்கள் என்று நான் கேட்டதைக் கொடுக்காமலே, வாதத்தை நிறைவு செய்துள்ளீர்கள்” என்றார்.

மேலும், “சொத்துக் குவிப்பு வழக்கை முழுமையாக விசாரணை நடத்திய தனி நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகள் தவறு செய்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் தனது தீர்ப்பில் 150 முடிச்சுகள் போட்டுள்ளார். 
மேல்முறையீட்டு மனு விசாரணையில் அந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து உரிய ஆதாரங்களுடன் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இதுவரை இந்த முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சியை நீங்கள் யாரும் மேற்கொள்ளவில்லை.
 அதற்கான ஆதாரங்களையும் காட்டவில்லை” என்று சிறப்பு நீதிபதி போட்ட எந்த முடிச்சும் மேல் முறையீட்டு விசாரணையின்போது அவிழ்க்கப்படவே இல்லை
 என்பதை நீதிபதி குமாரசாமி தெளிவுபடுத்தியிருந்தார். 

“சிறப்பு நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கின் 65 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களைப் படித்து, 252 சாட்சிகளிடம் விசாரித்து, உங்கள் தரப்பு, அரசுத் தரப்பு, வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்டு, முழுவதுமாக அலசி ஆராய்ந்துதான் 1,000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு எழுதியிருக்க முடியும். 
ஆதாரங்கள் இல்லாமல் எப்படிக் குற்றவாளி களுக்குத் தண்டனை வழங்கியிருக்க முடியும்? அவர் வழங்கியுள்ள தீர்ப்பில், உங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தவறு என்று இந்த 28 நாட்களில் உங்களால் ஆதாரத்தோடு உறுதிப் படுத்த முடியவில்லை.
 இப்படி இருந்தால் நான் மட்டும் என்ன செய்ய முடியும்? 
கீழமை நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பையே நானும் உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையாகத் தான் இருக்கிறது. ஜெயலலிதா ரூ. 66 கோடிக்கு சொத்துகள் சேர்க்கவில்லை என்று சொல்வதற்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லையே?” 
என்று உறுதிபடக் கருத்துத் தெரிவித்தவர்தான் நீதிபதி குமாரசாமி.

இப்படியெல்லாம் நீதிமன்றத்தில் மனதில் பட்ட கருத்துகளைப் பளிச்சென வெளியிட்ட நீதிபதி குமாரசாமிதான் தன்னுடைய தீர்ப்பில், ஜெயலலிதா தரப்பினரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
 தீர்ப்பு வெளிவந்ததும், தமிழகம் முழுவதுமுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டாடினார்கள். அவர்களுடைய கட்சி நாளேட்டில் நூற்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் ஜெயலலிதாவைப் பாராட்டி விளம்பரங்கள் வெளிவந்தன. 
இது பற்றியெல்லாம் நமக்கு எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. உண்மை யில் சொல்லப்போனால், ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதோ, அவர் தண்டனை அனுபவித்திட வேண்டும் என்பதோ நம்முடைய விருப்பமே அல்ல.
ஆனால் சட்டத்தின் முன்
அனைவரும் சமம் என்பதும், சட்டத்தின் ஆட்சியும் நீதியின் தனிச் சிறப்பான மாண்பும் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பும் ஆகும்.


அதைத்தான் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற “டான்சி” வழக்கில் நீதிபதி அவர்களே தனது தீர்ப்பில் கூறும்போது, “பொதுத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் ஜெயலலிதா பங்குதாரராக உள்ள கம்பெனிகளுக்கு, அவர் முதலமைச்சராக பதவியிலே இருந்த காலத்தில் விற்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
டான்சி நிறுவனத்தின் விதிமுறைகளின்படி அதை விற்பனை செய்வதற்கு முன்பு அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றாக வேண்டும். அது வரை விற்பனை முழுமை அடைந்ததாகாது. விற்பனை தொடர்புடைய ஆவணங்களில் ஜெய லலிதா தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளாவிட்டாலும், அந்த அனுமதியினை அரசு இயந்திரம் உடனடியாக வழங்கியுள்ளது. வழக்கு சம்பந்தப்பட்ட சொத்துக்களின் மதிப்பு குறித்து எங்களின் முடிவு எதுவாக இருந்த போதிலும், அதிலே ஜெயலலிதாவிற்கு லாபம் இருந்ததா இல்லையா என்பதை விட, முதல் அமைச்சரே வழக்குசொத்துக்களை வாங்க எத்தனித்துவிட்ட நிலையில், அதிகார வர்க்கம் அளவுக்கு மீறி அதிலே ஆர்வம்காட்டி, இந்த விற்பனையை சுமூகமாக, முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பும் விலைக்கேமுடித்திருக்கிறார்கள் என்பதை எங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது.
 எந்த நிலையிலும்,ஜெயலலிதாவின் இந்தச் செயல்கள் நடத்தை விதிகளின் உட்பொருளுக்கு விரோதமானதாகும்.நியாயமாகப் பேசவேண்டு மென்றால், அரசின் சாதாரண அதிகாரிகளுக்காக ஒரு சட்டமும், முதல் அமைச்சருக்காக ஒரு சட்டமும் இருக்க முடியுமா?
இதுபோன்ற நிலைகளில், நன்னடத்தை விதி என்பது அருங்காட்சியகத்திலே வைக்கப்பட வேண்டிய வெறும் ஆடம்பரப் பொருள் மட்டும் தானா?
அது கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா? இவைகள் தான் எங்களுடைய மனச் சாட்சியைத் துன்புறுத்துகிறது.
முதல் குற்றவாளியான ஜெயலலிதா, தான் இந்த வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக டான்சி நிலப் பத்திரத்திலே உள்ள, அவருடைய ஆடிட்டரும் அரசு அதிகாரிகளும் ஏற்றுக் கொண்ட அவருடைய கையெழுத்தையே, இல்லை என்று மறுக்கக் கூடிய அளவிற்குச் சென்றிருக் கிறார்” என்றெல்லாம் தெரிவித்தார்.

அதைப் போலவேதான் தற்போது இந்த வழக்கும் நடைபெற்று, டான்சி வழக்கில் அவரை விடுதலைசெய்ததைப் போலவே இந்த வழக்கிலிருந்தும் நீதிபதி குமாரசாமி அவரை விடுவித்திருக்கிறார். 
ஆனால்நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு முறையானது தானா?
 நீதிமன்ற வரலாற்றில் இதுவரை வந்த தீர்ப்புகளில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் உள்ள குளறுபடிகள், தவறுகள் போல வேறு எந்தத்தீர்ப்பிலாவது நடந்தது உண்டா? 

நீதித் துறையைச் சார்ந்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள் எல்லாம்நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்களா?

பள்ளிப் பிள்ளைகள் கூட்டல் கணக்கில் தவறு செய்தால், அதனை ஏற்றுக் கொள்ளலாம். முக்கியமானதொரு தீர்ப்பிலேயே கூட்டுத் தொகையிலே மாபெரும் தவறு செய்து, யாரும் எளிதில் கண்டுணரக்கூடிய தவறான அந்தக் கூட்டுத் தொகையின் அடிப்படையிலேயே தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ள நிலையில்,அதனைச் சட்டப்படி முறையான சரியான தீர்ப்பென்று ஏற்றுக் கொள்ள ஏதும் முகாந்திரம் உண்டா?எட்டும், ஏழும் சேர்ந்தால் எவ்வளவு கூட்டுத் தொகை என்று நீதிபதி தீர்ப்பிலே எழுதியிருக்கிறார்தெரியுமா?
 எட்டையும், ஏழையும் கூட்டினால் 35 என்று நீதிபதி தீர்ப்பிலே எழுதியிருக்கிறார் என்றால்,இதைவிட வேறு என்ன தவறு இருக்க முடியும்?
 ஜெயலலிதா தரப்பினர் பல நிறுவனங்களைத் தொடங்கவங்கியில் பத்து முறை கடன் வாங்கி யிருக்கிறார்கள்.
 ஒவ்வொரு முறையும் யார் பெயரில் எவ்வளவுவாங்கினார்கள் என்று குறிப்பிட்ட நீதிபதி, இறுதியாக மொத்தமாக எவ்வளவு வாங்கினார்கள் என்றுகுறிப்பிடும்போது, 24 கோடி ரூபாய் கடனாகப் பெற்றிருக்கிறார்கள் என்று தீர்ப்பிலே சொல்கிறார்.

ஆனால் பத்து முறை பெற்ற கடனையும் யார் எப்படிக் கூட்டினாலும் பத்து கோடி ரூபாய் தான் வருகிறது.எனவே பத்து கோடி ரூபாய் என்பதை தவறுதலாக 24 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு, இந்த 24 கோடிரூபாயை வருமானமாக எடுத்துக் கொண்டு, ஜெய லலிதா 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு செய்யவில்லை, வருவாய்க்கு மேல் 2 கோடி ரூபாய்தான் சொத்து சேர்த்தார், 2 கோடி ரூபாய் என்பது அவரதுவருவாயில் 8 சதவிகிதம் தான்,
 எனவே அவரை தண்டனையிலிருந்து விடுவிக்கிறேன் என்றுதான்நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்திருக்கிறார்.
கூட்டுத் தொகை 24 கோடி ரூபாய் என்று நீதிபதி தவறுதலாகக் குறிப்பிடாமல், உண்மையானகூட்டுத் தொகையான 10 கோடி ரூபாய் என்று கணக் கெடுத்தால், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 8 சதவிகிதம் என்பதற்குப் பதிலாக 76 சதவிகிதம் என்றாகிறது. அப்போது ஜெயலலிதா தண்டனைக்கு உரியவர் ஆகிறார் அல்லவா?
 நீதிபதி இவ்வாறு தவறுதலாகக் கணக்கிட்ட காரணத்தால், ஒரு பெரியவழக்கில் தண்டனை அளிப்பதற்கு மாறாக, விடுதலை அளித்திருக்கிறார். அது எவ்வளவு பெரிய தவறு?சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அவர்கள் இந்த வழக்கினை எத்தனை மாதங்கள் நடத்தி, எவ்வளவுசிரமப்பட்டு ஆவணங்களையும், சாட்சியங்களையும், வாதங்களையும் மிகக் கவனமாக ஆய்வு செய்துஒரு தீர்ப்பினை எழுதி, ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதித்திருக்கின்ற நிலையில், அந்தத் தண்டனையை அப்படியே தலைகீழாக மாற்றி வேறொரு தீர்ப்பு எழுதுகின்ற நேரத்தில், இந்தத்தவறுகளை உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி செய்திருக்கலாமா?

இது மிகப் பெரிய தவறு. இதைத் தவிர தீர்ப்பில் வேறு சில தவறுகளையும் வழக்கறிஞர்களும்,அரசியல் தெரிந்தவர்களும் கூறுகிறார்கள்.
ஒரு மூத்த பெண் வழக்கறிஞர், “ நீதிபதி குமாரசாமிஎழுதிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள கடன்களில் பலவற்றை வட்டியுடன் திருப்பி அடைத்திருப் பார்களே,அந்தத் தொகைக்கான வருமானத்தை நீதிபதி கணக்கிட்டிருக்க வேண்டாமா” என்று வாதத்தைஎழுப்புகிறார்.

ஜெயலலிதாவின் இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்து செயல்பட்டவர்பவானிசிங். இவர் குற்றவாளிகளான ஜெயலலிதா தரப்பினருக்கு எதிராக வாதிட வேண்டியவர்.ஆனால் அவ்வாறு அவர் வாதிடவில்லை என்றும், அவர் நீக்கப்பட வேண்டுமென்றும் பிறிதொரு வழக்குஉச்ச நீதிமன்றம் வரை நடைபெற்றது. 
இவர் முறையாக வாதிடவில்லை என்பதற்கு ஒரே ஒரு உதாரணம்,இவர் தான் அரசு வழக்கறிஞராக நீடிக்க வேண்டுமென்று ஜெயலலிதா தரப்பினரே உச்ச நீதிமன்றம்வரை இவருக்காக வாதாடினார்கள் என்பதிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?
அரசு நியமித்த ஜெயா தரப்பு பவானிசி ங்.
இறுதியாக உச்ச நீதிமன்றம் வரை அந்த வழக்கு சென்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர்இணைந்து அளித்த தீர்ப்பில் பவானி சிங்கை நீக்க வேண்டுமென்றும், அவருடைய வாதத்தை நீதிபதிஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும், அவருக்குப் பதிலாக கர்நாடக மாநில அரசு வேறொருவரை அரசுவழக்கறிஞராக நியமிக்க வேண்டுமென்றும் தீர்ப்பளித் தார்கள். அந்தத் தீர்ப்பில், உச்ச நீதிமன்ற நீதிபதிதிரு. ஜெ. தீபக் மிஸ்ரா அவர்கள் கூறும்போது,  
“We are absolutely sure that the learned Single Judge, as the appellate Judge, shall keep in mind the real functioning of an appellate court. The appellate court has a duty to make a complete and comprehensive appreciation of all vital features of the case. The evidence brought on record in entirety has to be scrutinized with care and caution. It is the duty of the Judge to see that justice is appropriately administered, for that is the paramount consideration of a Judge. The said responsibiity cannot be abdicated or abandoned or ostracized, even remotely, solely because there might not have been proper assistance by the counsel appearing for the parties. The appellate Court is required to weigh the materials, ascribe concrete reasons and the filament of reasoning must logically flow from the requisite analysis of the material on record. The approach cannot be cryptic. It cannot be perverse. The duty of the Judge is to consider the evidence objectively and dispassionately. The reasonings in appeal are to be well deliberated. They are to be resolutely expressed. An objective judgment of the evidence reflects the greatness of mind - sans passion and sans prejudice. The reflective attitude of the Judge must be demonstrable from the judgment itself. A judge must avoid all kind of weakness and vacillation. That is the sole test. That is the litmus test. This being the position of a Judge, which is more elevated as the appellate Judge, we are of the considered opinion that there is no justification for rehearing of the appeal as the matter has been heard at length and reserved for verdict” 
 என்று எழுதியிருக்கிறார்கள். 
நன்றி:வினவு.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இத்தகைய முக்கியமான அறிவுரைகளை முன் கூட்டியே தெரிவிக்க என்ன காரணம்? ஏதாவது தவறு நடைபெறக்கூடும் என்று எதிர்பார்த்தார்களோ என்று தானே தற்போது வெளிவந்துள்ள தீர்ப்பைப் பார்க்கும் போது தெரிகிறது. 
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரி வித்த அந்த அறிவுரைகள் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியால் பின்பற்றப்பட்டிருக்கிறதா?

ஒரு கடைக்காரர் கூட்டுத் தொகையில் தவறு செய்தால், ஒரு சில ரூபாய்கள் இழப்புடன் பிரச்சினை முடிந்து விடும். ஆனால் ஒரு பெரிய வழக்கில், ஏராளமான பிரச்சினைகளை எழுப்பக்கூடிய விதத்தில், ஒரு தீர்ப்பிலே இவ்வளவு அபத்தமாக கூட்டுத் தொகையில் நீதிபதி செய்த தவறுக்கு என்ன பிராயச்சித்தம்?
At page 853 of Judgement of Justice Kumarasamy, a heading is given “Gifts as income”. Judge takes Rs. 77 lacs foreign remittance as income (page 854). There is a CBI prosecution for receiving this amount and the case is pending in SC. According to conduct rules Minister cannot receive gifts. If gifts and foreign money remittances are accepts as lawful income that will breed corruption. 


நீதிபதி குமாரசாமி, தனது தீர்ப்பில், “இந்த வழக்கின் முதல் எதிரி ஜெயலலிதா தனக்கு ரூ. 2.15 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் வந்ததாகவும் - ரூ. 77 இலட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் வந்ததாகவும் கூறியுள்ளார். ஜெயலலிதா அவரது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். அவரது வளர்ப்பு மகனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார்.
 அதன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு வந்த பரிசுப் பொருள்கள் மூலம் அவருக்கு ரூ. 1.50 கோடி வருமானம் கிடைத்ததாக மதிப்பீடு செய்கிறேன்” என்று நீதிபதி குமாரசாமி தமது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.
 இதில் ஒரு விஷயம் மிகவும் கவனமாகத் தவிர்க்கப் பட்டிருக்கிறது.

ஜெயலலிதா அரசியல் கட்சித் தலைவராக இந்தப் பரிசுப் பொருள்களை வாங்கவில்லை. முதல்அமைச்சராக இருந்து கொண்டு இந்தப் பரிசுகளை வாங்கியுள்ளார் என்பது தீர்ப்பு ஆணையில் மறைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்களாக இருப்பவர்கள் எந்தவித பரிசுப் பொருள்களையும் வாங்கக்கூடாதுஎன்று நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது.

அதை மீறி ஜெயலலிதா பரிசு வாங்கியதே குற்றம். அதைஎப்படி வருவாயாக எடுத்துக் கொள்ள முடியும்?

ஜெயலலிதா இவ்வாறு விதிகளை மீறி பரிசுப் பொருள்களைப் பெற்றது தொடர்பாக, அவர் மீதுநடுவண் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்தநிலையில் ஜெயலலிதா பரிசுகளாக வாங்கிய பொருள் களை வருமானமாக நீதிபதி அறிவித்திருப்பதுஎப்படிச் சரியாகும்?

ஊழல் வழக்கில் தண்டனை அடைந்த அரசியல் வாதிகள் தங்கள் பதவியை இழக்கும் வகையில்தேர்தல் ஆணையச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரக் காரணமான வழக்கை உச்ச நீதிமன்றத்தில்தொடுத்தவர் 82 வயதான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லில்லி தாமஸ்.
அவர் கூறும்போது,“லாலு பிரசாத் யாதவ் உட்பட பலரது மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்ஜெயலலிதா வுக்கு மட்டும் விரைந்து தீர்ப்பு வெளியாகக் காரணம் என்ன?
 இது எதன் அடிப்படையில்அளிக்கப்பட்டது என்பது தனி விஷயமாக இருப்பினும், அதனால் ஏற்பட்டுள்ள சூழல்கவலைக்குரியதாக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
நன்றி:வினவு.
ஜெயலலிதா தரப்பினர் தங்களின் சொத்துக் களுக்கு வருமான வரித் துறையிடம் கணக்குக் காட்டி,அதை வருமான வரித் துறை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதைக் காரணம் காட்டியே ஜெயலலிதாதரப்பை அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் குமாரசாமி விடுவித்திருக்கிறார்.
 ஆனால், ஜெ.சொத்துக் குவிப்பு வழக்குத் தொடரப்பட்ட பிறகே ஜெயலலிதா, தமது சொத்துக்கள் குறித்த வருமானவரிக் கணக்கைக் காட்டினார் என்பதையும், அந்த விஷயத்தில் வருமான வரித் துறையின் முடிவுநீதிமன்றங்களைக் கட்டுப் படுத்தாது என்பதையும் நீதிபதி குமாரசாமி கருத்திலே கொள்ளவில்லை.

இந்தத் தவறான தீர்ப்பு காரணமாக தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா 17ஆம்தேதியன்றே மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கப் போவதாகவும், அதற்குப் பிறகுதான்
சட்டப்பேரவையில் நிலுவையிலே உள்ள மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறும்என்றும், தமிழகத்திலே திட்டங்கள் முடிவுற்று திறக்கப்படாமல் உள்ள பல்வேறு திட்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்குமென்றும் சொல்லப்பட்டது.
ஆனால் ஏடுகளில் தீர்ப்பு பற்றி வெளியிடப்பட்டதவறுகளையெல்லாம் கண்டவுடன் ஜெயலலிதாவுக்கே வெளியேவரத் தயக்கம். எம்.எல்.ஏ.க்களின் கூட்டமும் 17ஆம் தேதி நடைபெற வில்லை. ஆனால் 22ஆம் தேதியன்று சட்டமன்ற உறுப்பினர்களின்கூட்டத்தைக் கூட்டி, அன்றைக்கே முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்க இருப்பதாகச் செய்திகள்வருகின்றன.

இப்படித்தான் 2000ஆம் ஆண்டு ஜெயலலிதா வுக்கு எதிரான டான்சி நில பேரம் தொடர்பானஇரண்டு வழக்குகளில் 9-10-2000 அன்று சென்னை சிறப்பு நீதிமன்றம் அவருக்கு சிறைத் தண்டனைவிதித்தது.
அதனைத் தொடர்ந்து 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ஜெயலலிதாநான்கு இடங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த போதும், போட்டியிடத் தகுதியில்லை என்றுதேர்தல் அதிகாரிகளால் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனால் அவர் போட்டியிடவில்லை.
தீர்ப்பின் மூலம் நீதித்துறை மேல் தப்புக்கணக்கை
போட வைத்த குமாரசாமி 
ஆனாலும் அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றதால், அவசர அவசரமாக அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி,
அதிலே தன்னை சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்ந் தெடுத்துக் கொண்டு, ஆளுநராகஇருந்த பாத்திமா பீவியின் உதவியோடு முதலமைச்சராக 14-5-2001 அன்று பதவியேற்றுக் கொண்டார்.
 ஆனால் அவ்வாறு பதவியேற்றது செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா முதல் அமைச்சராகப் பதவியேற்றது செல்லாது என்று 21-9-2001 அன்று தீர்ப்பளித்தது.

2000ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டேஓட்டல் வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு காலம் கடுங்காவல்தண்டனை விதித்தது.
அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவிடுவிக்கப்பட்டார்.

இந்த ஒரு வழக்கிலே மாத்திரமல்ல; 1991-1996ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா முதலமைச்சராகஇருந்த போது வெளிநாடுகளிலிருந்து மூன்று இலட்சம் டாலர்களுக்கான வரைவோலைகளைஜெயலலிதா பெற்ற நேரத்தில், யார் அனுப்பியது என்று தனக்குத் தெரியாது என்று ஜெயலலிதாகூறினார்.
இருந்தாலும் அந்த வரைவோலைகளை தனது கணக்கிலே வரவு வைத்துக் கொண்டார்.இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கி லிருந்தும் ஜெயலலிதாபின்னர் விடுவிக்கப்பட்டார்.
அதுபோலவே, இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டதில் நடைபெற்ற ஊழல்குறித்தும், தரமற்ற நிலக்கரி வாங்கியதில் மின்சார வாரியத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு குறித்தும்,‘டிட்கோ’விடம் இருந்த ஸ்பிக் நிறுவனப் பங்குகளைத் திருப்பிக் கொடுத்ததில் ஏற்பட்ட இழப்புகுறித்தும், மற்றும் பல்வேறு ஊழல்கள் குறித்தும் வழக்குகள் தொடரப்பட்டு ஒருசிலவற்றில் தண்டனைபெற்றும் கூட, மேல் முறையீட்டு வழக்குகளில் தன்னை எப்படியோ விடுவித்துக் கொண்டார்.
அதைப்போல தற்போது சொத்துக் குவிப்பு வழக்கிலும், இந்த வழக்கு எப்படியும் உச்ச நீதிமன்றத்திலேமேல் முறையீட்டுக்குச் செல்லும் என்ற நிலைமை இருந்த போதிலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல்
ஜெயலலிதா முதல் அமைச்சராகப் பதவியேற்க எண்ணுகிறார்.
மீண்டும் விலகும் முதல்வர் கனவு.
இந்த நிலையில் தமிழகத்திலே உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் தங்கள் கருத்துகளைவெளியிட்டு வருகின்றன. பெரும்பாலான கட்சிகள் இந்த வழக்கில் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட வேண்டு மென்ற நிலையினை எடுத்துள்ளன. 
மத்திய அரசைஆளும் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் பற்றி இந்தத் தீர்ப்பைத் தொடர்புபடுத்தி சில அய்யப்பாடுகள்வெளியிடப்பட்டு வருகின்றன. 
ஏனென்றால் நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவை விடுவித்து தீர்ப்பளித்ததும் இந்தியப் பிரதமரே அவருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.இன்னும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வாழ்த்தியிருக்கிறார். நமது ஊரைச் சேர்ந்த பா.ஜ.க.அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்ததோடு, தமிழக முதல் அமைச்சராகஜெயலலிதா வர வேண்டுமென்றும் பேட்டியளித் திருக்கிறார். இவர்களுக்கெல்லாம் மேலாக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்தத் தீர்ப்புக்கு முன்பாகவே ஜெயலலிதா வீட்டுக்கே சென்று விட்டுவந்திருக்கிறார். 
அ.தி.மு.க. ஆட்சி மீது குறை கூறி வந்த பா.ஜ.க.வின் இந்த மாற்றத்திற்கு என்னகாரணம் என்ற விமர்சனம் பெரிதும் வைக்கப்படுகிறது.
 இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ்கட்சியின் தமிழகத் தலைவர், தம்பி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தீர்ப்புக்கும் பா.ஜ.க. அரசுக்கும்சம்பந்தம் உண்டு என்றே கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
 ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கைமுதன் முதலில் தாக்கல் செய்தவரே திரு. சுப்பிர மணிய சுவாமி அவர்கள்தான். அவர் இப்போதுபா.ஜ.க.விலே தான் இருக்கிறார். அந்த வழக்கிலே விடுவிக்கப்பட்டவருக்கு, அதே பா.ஜ.க. வின்முன்னோடிகள் வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள் என்றால் “பீம்சிங், இது என்ன புது குழப்பம்?”என்றுதானே கேட்க வேண்டியுள்ளது.

இதற்கிடையே நீதிபதி குமாரசாமி, தனது தீர்ப்பிலே மிகப் பெரிய தவறு இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அவரே தனது தீர்ப்பில் மாற்றம் செய்யக் கூடும் என்ற ஒரு கருத்தும் கூறப்பட்டது. ஆனால்அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களேதீர்ப்பில் திருத்தங்களை மேற்கொள்ளத் தடை விதித்திருக்கிறார்.

ஜெயலலிதா தரப்பினரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க நீதிபதி குமாரசாமி என்ன புள்ளிவிவரங்களை தனது தீர்ப்பிலே அடிப்படையாக வைத்திருக்கிறாரோ, அந்த அடிப்படை அஸ்திவாரமேநொறுங்கிப் போய் விட்ட நிலையில், இதற்கெல்லாம் என்னதான் முடிவு என்று தமிழக மக்கள்எல்லோரும் எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும், இந்தத் தீர்ப்பின்காரணமாக தமிழக நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையினை விரிவாக விளக்கியிருக்கின்றன.
 இந்த நேரத்தில் நீதிக்கே பங்கம் நேர்ந்து விட்டதோ என்று அனைவரும் கவலைகொண்டிருக்கின்ற நிலையில், நீதியைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமது ஜனநாயகத்திலும்,அரசியல் சட்டத்திலும் நம்பிக்கை உள்ள ஒவ்வொரு வருக்கும் உண்டு.
குறிப்பாக இந்த நேரத்தில்கர்நாடக அரசுக்கு உண்டு.
ஏனென்றால் அவர்கள் தான் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய முதல்உரிமை பெற்றவர்கள். ஆனால் அவர்களையும் திசை திருப்புவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகக்கூறுகிறார்கள்.
 எனவே அத்தகைய விமர்சனங் களுக்கெல்லாம் இடம் தராமல், கர்நாடக அரசு நீதியின்முக்கியத்துவத்தை உணர்ந்து, உடனடியாக உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்வதுதான்ஏற்பட்டுள்ள தவறைக் களைவதற்கு வழிவகுக்கும் என்பதால், அதற்கான அறிவிப்பினைச் செய்யவேண்டுமென்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.


                                                                                                                                                          -கலைஞர் கருணாநிதி .

=============================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?