தெரு விட்டு தெரு சென்றால் கூட
மக்கள் சாலை பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் "கண்டிப்பாக "வந்து விடும் அபாயம் காத்திருக்கிறது.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியாவை தனியார்,அன்னியர் கையில் விற்கும் மோடி அரசு, சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா (2015)-ஐ பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இருக்கிறது. பொதுப்போக்குவரத்தில் இருக்கும் அரசின் கட்டுப்பாட்டை முழுவதையும் நீக்கி, மாற்றி தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்கு விடுவதுதான் இந்த சட்டத்தின் நோக்கம்.
இந்த சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா, கட்டுப்பாடுகள் என்ற பெயரில் ஓட்டுனர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை ஒழித்துக் கட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.
- இனி கார், லாரி, மினிடோர், டெம்போ, டாக்ஸி போன்ற வாகனங்களின் ஓட்டுனர்கள் மட்டுமல்ல, இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் வரை எல்லோரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.அது ஆண்டுக்கு ஒருமுறையாக மாற்றவும் திட்டம் உண்டு.
- புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற இருப்பவர்களுக்கு 9 மாதங்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் பயிற்சியளிக்கப்படும். அதன் பின்னர் 3 மாதங்கள் சோதனை காலம். அதன் பிறகுதான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.அந்த உரிமத்தை பயிற்சியளிக்கும் தனியார் நிறுவனமே வழங்கிடும்.
- இனி சாலை விதிகளை மீறினால், அதற்கான தண்டனைகள் கடுமையானவை. ஒருமுறை சாலைவிதியை மீறியதாக குற்றஞ்சாட்டப் பட்டவர் தனது சொந்த செலவில் இரண்டு தமிழ் செய்தித் தாள்கள், ஒரு ஆங்கில செய்தித்தாளில், “நான் தவறு செய்தவன்” என்று சொந்த செலவில் விளம்பரம் செய்ய வேண்டும்.
- சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தினால், அந்த ஓட்டுனர் ரூ 50,000 அபராதம் கட்ட வேண்டும்.
- ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
- இவைமட்டுமல்ல, சாதாரண தவறுகளுக்கு கூட தண்டனைத் தொகை தற்போதைய தொகையைவிட 10 முதல் 50 மடங்கு அதிகம்.
- போக்குவரத்து காவலர்களிடம் தாஜா செய்து தப்பிக்க முடியாது.காரணம் அம்பானி நிறுவனம்தான் இன்றைக்கு குத்தகைக்கு எடுக்கிறது.அதன் ஊழியர்கள் உங்களை சும்மா விட்டால் காமிரா மூலம் அதை பார்க்கும் அம்பானி அடியாட்கள் அவரை சும்மா விடமாட்டார்கள்.
- தற்போது வைத்துள்ள ஓட்டுனர் உரிமங்களை எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்குள் காலாவதியாகிவிடும்.
- ஆர்.டி.ஓ. அலுவலகமே இனி இருக்காது.ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை இனி அரசு நடத்தாது. இதனை கண்காணிப்பதையும் ஆர்.டி.ஓ. செய்ய மாட்டார். அவர்தான் இனி கிடையாதே.
- இச்சட்டப்படி, ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி என்பது சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இருக்க வேண்டும். அங்கு மருத்துவ சோதனைகள், பணிமனை (ஒர்க் சாப்) போன்றவை இருக்க வேண்டும். பயிற்சியும் அங்கேதான் தரவேண்டும். இவ்வளவு பெரிய அளவில் யார் நடத்துவது என சிந்திக்கிறீர்களா. ஆமாம், தற்போது இருக்கும் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை மூடிவிட வேண்டியதுதான். ஏனென்றால், வாகன தயாரிப்பு நிறுவனங்களே (கார்ப்பரேட் கம்பெனிகள்) இந்த ஓட்டுனர் பயிற்சியை அளிக்கும்.
- ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி மட்டுமல்ல ஓட்டுனர் உரிமத்தையும் அவர்கள் தான் வழங்குவார்கள்.
- இரு சக்கர வாகனத்தில் சென்று பழகியவர்களுக்கு ஒரு அதிரடி.வாகனம் தயாரிக்கும் நிறுவனம் அந்த இரு சக்கர வாகனம் உபயோகக் காலக்கெடுக்குப்பின்னர் நீங்கள் இப்போது போல் 10,15 ஆண்டுகள் ஊட்ட முடியாது காலக்கெடுவான 5 ஆண்டுகளுக்குப்பின்னர் அந்த வாகனத்தை ஓரங்கட்டி விட்டு புதுவாகனம்தான் வாங்க வேண்டும் .என்ன ஒரு ஆறுதல் என்றால் மாற்றுதல் வாய்ப்பு [எக்சேஞ்
- ஆபர்]இருக்கலாம்.அதுவும் கூட இந்த சட்டம் வந்த பின்னர் கட்டாயம் புது வண்டி என்பதால் வாய்ப்பை நிறுவனங்கள் நிறுத்திவிடலாம்.
வாகனங்கள் ஓடும் தகுதியுடைனவாக இருக்கின்றதா என சோதிப்பது (எப்.சி. – Fitness Certificate) தற்போது ஆர்.டி.ஓ. அலுலகங்கள் மூலம் நடத்தப்படுகிறது. இனி இதுவும் ஒழிக்கப்படும். அதனை கார்ப்பரேட் கம்பெனிகள் தான் வழங்குவார்கள். தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனகங்ளுக்கு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்.சி. பார்ப்பது என்ற தற்போதைய நடைமுறையை மாற்றி 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, வாகனங்களுக்கான பதிவையும் (Registration) இனி கார்ப்பரேட் கம்பெனிகள் தான் வழங்குவார்கள். இந்தக் கட்டுப்பாடுகள் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட எல்லா வாகனங்களுக்கும் பொருந்தும். இந்த இரண்டு கட்டுப்பாடுகள் மூலம் ஒரு வண்டியை தகுதியற்ற வண்டி என்று சொல்லி புதிய வண்டிகளை வாங்க நிர்ப்பந்திக்க முடியும்.
ஓடும் நிலையில் உள்ள வண்டிகள் என்பதற்கான வரையறையும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர், தான் வைத்துள்ள வண்டிகள் ஓடும் நிலையில் இருக்க வேண்டும் என்றால் வண்டி தயாரித்த நிறுவன அசல் உதிரி பாகங்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று இந்த சட்டம் சொல்கிறது.
இதன் மூலம், ஒரு கம்பெனி தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்ட முடியும். மேலும், உதிரி பாகங்கள் விற்கும் கடைகளையும் ஒழித்துக் கட்ட முடியும்.சிறு அளவில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு இனி மூடு விழாதான்.
வாகனங்களில் பழுது நீக்கும் வேலையான (சர்வீஸ் ஒர்க்) என்பது தனியொரு தொழில் அல்ல. பெயின்டிங், வெல்டிங், ரப்பிங், பாலிசிங், கிரீசிங் என்று நூற்றுக்கணக்கான வேலைகளை உள்ளடக்கியது. முக்கியமாக பழைய பாகங்களை புதுப்பித்து பயன்படுத்துவது என்பது மிகப்பெரும் அளவில் நடக்கிறது. இவற்றையெல்லாம் உள்ளடக்கிய சர்வீஸ் தொழிலை தற்போது வாகன உரிமையாளர்கள் என்ற வகையில் நமது விருப்பப்படி உள்ளூர் பட்டறைகளில், சாலை ஓரக் கடைகளில் செய்து வருகிறோம். இந்தச் சட்டப்படி இனி உள்ளூர் கடைகளில் சர்வீஸ் செய்யக் கூடாது. மாறாக, சர்வீஸ் சென்டர்கள் என்று ஒவ்வொரு வாகன தயாரிப்பு – விற்பனை நிலையங்கள் வைத்திருக்கும் இடத்தில் தான் செய்ய வேண்டும்.
மொத்தத்தில், நாட்டில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் – லட்சக்கணக்கான சிறு முதலாளிகள் பங்கு பெரும் வாகனங்கள் பழுது நீக்கும் தொழிலை (சர்வீஸ் ஒர்க்) முற்றிலும் ஒழித்துக் கட்டுவதுதான் இதன் நோக்கமாக உள்ளது.
தற்போது அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நாடு முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேருந்துகள் நாள் தோறும் மக்களை சுமந்து செல்கின்றன.
இனி இந்த வண்டிகளின் பர்மிட் காலம் முடிந்தவுடன் அந்த பேருந்துகளுக்கு மறு பர்மிட் வழங்கப்படாது.
அதாவது, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இனி இயங்காது. அவை முற்றிலும் ஒழிக்கப்படும்.
இந்த பர்மிட்களை இனி அரசின் மூலம் வழங்குவதும் நிறுத்தப்படும். இதற்கென தனியாக ஒரு ஆணையம் தேசிய அளவில் அமைக்கப்பட இருக்கிறது.
அந்த ஆணையத்தின் பெயர், நேசனல் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி (National Transport Authority).
இந்த ஆணையம் எல்லா வழித்தடங் களையும் ஏலத்தில் விடும்.
இந்த ஏலத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளும் பங்கேற்கலாம்.அதற்காகத்தானே இந்த சட்டங்களே உருவாக்கப்பட்டுள்ளன்.
அந்த வகையில், நம்மூர் அரசு பேருந்து, தனியார் பேருந்துகளை ஒழித்துக் கட்டி பன்னாட்டுக் கம்பெனிகளின் பேருந்துகள் மட்டும்தான் ஓடப்போகின்றன. இது மட்டுமல்ல, அதிக விலைக்கு ஏலம் எடுக்கும் கம்பெனிக்குதான் தடம் உரிமம் வழங்கப்படும்.
அந்தக் கம்பெனி அந்த வழித்தடத்தில் செல்வதற்கான பேருந்து கட்டணத்தை இனி அரசு நிர்ணயம் செய்ய முடியாது.அந்த நிறுவனமே பேருந்து கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ளும்.அரசு கட்டுப்பாட்டிலேயே தற்பொதைய தனியார் ஆம்னி பேருந்து கொள்ளை உங்களுக்கு தெரியாதது அல்ல.
அதனால், இலாபம் தரும் வழித்தடங்களில் மட்டும்தான் பேருந்துகளை இனி பார்க்கமுடியும். லாபம் இல்லாத தடங்கள்,கிராமங்களுக்கான பேருந்துகள் நிறுத்தப்படும்!
விவசாயத்திற்கு அடுத்தப்படியாக அதிகப்படியான மக்களால் மேற்கொள்ளப்படும் தொழில்களில் ஒன்றான ஆட்டோ மொபைல் தொழில், போக்குவரத்துத் தொழில் அதனை சார்ந்த சிறு, குறு முதலாளிகள், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் ஒழிக்கப்பட இருக்கிறது. மற்றொருபுறம், மக்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நடமாடும் உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகிறது. இது இந்த துறையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டின் எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது.
நில அபகரிப்புச் சட்டம், தொழிலாளர் துறை திருத்தச் சட்டம், சிறு–குறுந்தொழில்களை ஒழிக்கும் பல சட்டங்கள், இரயில்வே தனியார்மயம், பொதுத்துறைகள் தனியார்மயம், கனிம வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்க இருந்த தடைகள் எல்லாம் நீக்கம், பி.எப். தனியார்மயம், இன்சூரன்ஸ் முழுவதும் தனியார்மயமாக்கம், வங்கிகள் தனியார்மயம் என்று ஒட்டுமொத்த நாடே கார்ப்பரேட் கம்பெனிகளின் பேயாட்சிக்கான களமாக மாற்றப்பட்டு வருகிறது. பெயரளவிலான ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, பாசிசத்தை சட்டபூர்வமாக அரங்கேற்றுகிறது மோடி அரசு.
தேச வளர்ச்சி என்று கூறி மக்கள் மீதான பல்வேறு ஒடுக்குமுறைகளை தட்டிக்கேட்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் பறிக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, ஊழல், பண ஆதாயம், பொது நலம், இலாப நோக்கம், வறுமை, பேரழிவு, சுற்றுச்சூழல் சீர்க்கேடு, ஏழைகள், பணி நிரந்தரம், மருத்துவ உதவி, சிறு தொழில்கள், தேச முன்னேற்றம், அச்சுறுத்தல், நாட்டுப் பற்று, சட்ட மீறல், தேச வளர்ச்சிக்கு எதிரான குற்றம் என எல்லாவற்றிற்கான வரையறைகளையும் மாற்றி இந்தியாவை ஒரு திறந்தவெளி சிறைச்சலையாக மாற்றி வருகிறது மோடி அரசு. அதன் ஒரு பகுதிதான் சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா 2015.
ஜனநாயகம் என்ற பெயரில் இதுகாறும் கடைப்பிடித்து வந்த ஏட்டளவிலான உரிமைகளை ஏன் ஒழிக்கிறார்கள்?
இந்த நாட்டின் கார்ப்பரேட் முதலாளிகள் தேச முன்னேற்றத்தை கொண்டுவருவோம் என்று 1947 முதல் கூறி வந்தனர்.
ஆனால், இவர்கள் மேற்கொண்ட எந்த சீர்த்திருத்தங்களும் தேசத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லவில்லை. மாறாக, மீள முடியாத கடும் நெருக்கடிக்கு கொண்டு சென்றுள்ளது.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்து அமெரிக்க வழிகாட்டலில் 1992–ல் கொண்டுவரப்பட்ட தனியார்மயம் – தாராளமயக் கொள்கைகளை அமுல்படுத்தியதன் விளைவாக, இன்று நாடே திவாலாகும் நிலையை எட்டிவிட்டது.
நாட்டில் அநீதிகள் பெருகி, ஏற்கனவே சொல்லப்பட்ட கடமைகள், உரிமைகள், நியாயங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டன. மொத்தத்தில், இந்த நாட்டை ஆளும் வர்க்கங்கள், மக்களுக்கு வாழ்வளித்து காக்க இலாயக்கற்றதாகிவிட்டன. இந்த அரசும் அதன் கட்டுமான உறுப்புகளும் செயலிழந்துவிட்டன.தினசரி விலையேற்றம் .ஏழைகள் மேலும் எழைகளா கின்றனர் பணக்காரர்கள் பண முதலைகளாகின்றனர்.
தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களில் சர்வாதிகாரம் நேரடியாக ஆதிக்கம் புரிய வேகமாக வந்து கொண்டிருக்கிறது. போலி ஜனநாயகக் கட்டமைப்புகள் இடிந்து நொறுங்கி விழுந்து கொண்டிருக்கின்றன.
மக்களுக்கு உதவாத செயலிழந்துபோன இந்த சட்டம், நீதியை நம்பிக்கொண்டிருப்பதைக் கைவிட்டு உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை நிறுவிக் கொள்வது ஒன்றே தீர்வு.
எங்கள் ஊரில் மணல் கொள்ளை அடிக்கக் கூடாது, எங்கள் ஊரில் சிப்காட்டுக்கு நிலம் எடுக்கக் கூடாது, எங்கள் ஊரில் மீத்தேன் எடுக்கக் கூடாது, காட்டு யானைகள் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று நாடெங்கும் மக்கள் போர்க்கோலம் பூண்டு முன்னேறி வருகிறார்கள். எந்த ஓட்டுக் கட்சியையும் நம்புவதற்கு இனியும் மக்கள் தயாராக இல்லை.
விவசாய நிலமேடுப்பு மசோதா மட்டுமல்ல சாலை பாதுகாப்பு சட்ட மசோதாவை யும் இந்த மோடி மஸ்தான் அரசு நிறைவேற்றிடக் கூடாது.மக்கள் இணைந்து முறியடிக்க
வேண்டும் !
அடுத்த நாடு போகணும் .சீக்கிரம் ஏலத்தை கேளுங்க. இந்தியா ஒருதரம்,!இந்தியா இரண்டு தரம்!!. |
சட்டம் நிறைவேறினால்
- ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி நடத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவது,
- , வாகனங்களுக்கு எப்.சி. பார்ப்பது,
- வாகனங்களுக்கான சர்வீஸ்
- – உதிரி பாகங்கள் விற்பனை –
- இன்சூரன்ஸ் போன்ற அனைத்தும் தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே!
- அரசு மற்றும் தனியார் பேருந்துகளை ஒழித்துக்கட்டி எல்லா வழித்தடங்களும் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கப்படும்!
- இனி போக்குவரத்துக் கட்டணத்தை அவைதான் தீர்மானிக்கும்!
- ஆட்டோ, டெம்போ, லாரி, பேருந்து ஓட்டுனர்கள், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் உதிரி பாகங்கள்,விற்கும் கடைகள், ஒர்க் சாப்கள், சிறு வாகன உரிமையாளர்கள் ,ஏன்
- இரு சக்கரம் வாகானம் வைத்திருப்பவர்கள் வரை பல கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை,உரிமையைப் பிடுங்குவதுதான் சாலை பாதுகாப்புச் சட்ட
- மசோதா!
- மோடி அரசு இன்னமும் ஆட்சியில் இருந்தால் தெருக்களின் பராமரிப்பை கூட தனியாரிடம் விட்டு சுங்கச்சாவடிகள் வைத்து தெரு விட்டு தெரு சென்றால் கூட மக்கள் கட்டணம் செலுத்த வெண்டிய கட்டாயம் கண்டிப்பாக வந்து விடும் அபாயம் காத்திருக்கிறது.
- அம்பானி,அதானி,டாடா,பிர்லா ,இந்துஜா,போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளின்
- ஆ ட்சிக்கு வழிவகுக்கும் சாலை பாதுகாப்புச் சட்ட மசோதாவை முறியடிப்போம்!
- அனைத்தையும் தனியார்,அன்னியர்களுக்கு தாரைவார்த்து விட்டு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் போகும் இந்த ஆளும் அருகதையற்ற இந்த மோடி அரசை அகற்ற முயற்சிக்க வேண்டும்
- வாக்களித்த மக்கள் எண்ணப்படி ,முதலாளிகளுக்கல்லாமல் அவர்கள் நலனுக்காக உழைக்கும் அவசியத்தை கட்சியினர்களுக்கு உருவாக்க வேண்டும் .அதற்கு மோடி வித்தைக்காரர்களை இனி நாற்காலிகளில் ஏற்றி அதிகாரத்தை கைகளில் கொடுக்ககூடாது என தீர்மானிக்கவேண்டும்.
இன்று,
மே -03.
- சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம்
- போலந்து அரசியலமைப்பு தினம்
- ஜப்பான் அரசியலமைப்பு தினம்
- வாஷிங்டன், டிசி நகரமாக்கப்பட்டது(1802)
- முதலாவது கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன(1959)
- சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சட்ட விதி 19ன் கீழ், பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 3ம் தேதி "சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம்' கொண்டாடப்படுகிறது.
பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது;கருத்து சுதந்திரத்தை கட்டிக்காப்பது;பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களை தடுப்பது;பணியின் போது உயிர்நீத்த பத்திரிகையாளர்களுக்கு மரியாதை செலுத்துவது ஆகியவை இத்தினத்தின் நோக்கம். உலகில் எங்காவது பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடும் தனி நபர், பத்திரிகை, தொண்டு நிறுவனங்களுக்கு "யுனெஸ்கோ' சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது.1997ல் நிறுவப்பட்ட இவ்விருதுக்கு உரியவரை தேர்வு செய்ய 14 நடுவர்கள் உள்ளனர். விருதுக்கு போட்டியிடுவோரின் பட்டியலை, ஒவ்வொரு நாட்டில் இருந்தும், பத்திரிகை சுதந்திரத்திற்காக பாடுபடும் தொண்டு நிறுவனங்கள், அந்தந்த நாட்டு அரசுகள அனுப்பும்.அதில் இருந்து, விருதுக்கு உரியவர் தேர்வு செய்யப்படுவார்.
இவ்விருது, "குல்லர்மோ கானோ இசாசா' என்ற கொலம்பிய நாட்டு பத்திரிகையாளரின் பெயரால் வழங்கப்படுகிறது. "எல் எஸ்பெக்டேட்டர்' என்ற பத்திரிகையில் பணிபுரிந்த இவர், போதை பொருள் மாபியா கும்பலுக்கு எதிராக தொடர்ந்து எழுதியதால், பத்திரிகை அலுவலகத்தின் முன்பாகவே, 1986ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.அவரது சேவையை பாராட்டியே, விருதுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் இருந்து பத்திரிகையாளர்களை அழைத்து, பத்திரிகை சுதந்திரத்தை எதிர்நோக்கி உள்ள பிரச்னைகள், அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் போன்றவற்றை "யுனெஸ்கோ' ஆராய்கிறது. இருப்பினும், பத்திரிகை சுதந்திர அளவுகோல், நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.தமிழ் நாட்டில் பத்திரிகைகள் நடந்து கொள்ளும் விதம் ,அதன் நடுநிலை பற்றி நமக்கு தெரிந்ததுதான்.ஆளுங்கட்சிக்கு ஆதரவாக,அதுவும் அதிமுக ,ஜெயலலிதா என்றால் கொத்தடிமைகள் போல் செய்திகளை போட்டு நடுநிலையை கடைபிடிப்பதில் நம்மவூர் ஊடகங்களை யாரும் மிஞ்ச முடியாது.உலகளவில் 2013 கணக்கின் படி, 71 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 826 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2160 பேர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். 87 பேர் கடத்தப்பட்டுள்ளனர். 77 பேர் சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.பலரை மிரட்டி காரியம்,பணம் பண்ணும் பத்திரிகைகள் மஞ்ச:ள் பத்திரிகைகள்.அவை இன்று பல இருந்தாலும் அன்று இந்து நேசன் இவைகளுக்கெல்லாம் வழிகாட்டி .அதன் ஆசிரியர் பலரை தாக்கி அசிங்கமாக எழுதியதால் யாராலோ படு கொலை செய்யப்பட்டார்.ஆனால் அக்கொலை பழி அன்றைய திரையுலக பிரபலங்கள் கலைவாணர்,தியாகராஜபாகவதர் மேல் விழுந்தது. - 1945 - மே 3
- தீர்ப்பு நாள் ! 'இந்து நேசன்' எனும் மஞ்சள் பத்திரிகையின் ஆசிரியர் லட்சுமி
- காந்தன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர், பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு, ஒரு துணை நடிகை ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
- வழக்கின் தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட இருந்த நாள் அன்று, நடிகர்கள் இருவரும் விடுதலை ஆகி விடுவர் என்று, கோர்ட் வாசலில் ஆவலுடன் ஏராளமான ரசிகர்கள்.
- என்.எஸ்.கே., விடுதலை பெற்றதும், அன்று மாலையே, திருச்சியில், ஈ.வெ.ரா., தலைமையில் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக ஏற்பாடு. கிருஷ்ணன் விடுதலை பெற்றதும், அவரைக் காரில் அழைத்துச் செல்ல காத்திருந்தார், என்.வி.நடராசன்.
- 'கிருஷ்ணன் விடுதலை; மீட்டிங் வேலைகளை துவங்குக' என்று, தந்தி ஒன்றை எழுதி தயாராக வைத்திருந்த நடராசன், கோர்ட்டில் அதை கிருஷ்ணனுக்கு துாக்கிப் பிடித்து காட்டினார்.
- கிருஷ்ணனும், மகிழ்ச்சியோடு தலையாட்டினார். வெள்ளைக்கார நீதிபதி, தீர்ப்பை படித்தார். '
- கிருஷ்ணன், பாகவதர் இருவருக்கும் ஆயுள் தண்டனை...' என்றார்; எல்லாரும் வாய்விட்டு அழுதனர்...
- ரசிகர்களும் தான்! இக்கொலை சதியில் சம்பந்தமில்லை என, மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டனர்;
- பாகவதர், கிருஷ்ணன் இருவரும், சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த மோடி மட்டும் அப்பவே இந்தியாவுக்கு பிரதமரா வந்திருந்தா நம்ம கி ழக்கிந்திய கம்பெனி இந்தியாவை கைப்பற்ற அவ்வளவு கஷ்டப்பட்டிருக்காதில்ல .அவரே நமக்கு குத்தகைக்கு கொடுத்திட்டு நாடு,நாடா போயிருப்பாரு. |