.இரு விமர்சன கடிதங்கள்....

அன்பு கமல்..,

ஏதோ ஒரு வெளியில், பணியிலிருந்து ஓய்வுபெற்றவனுக்கும், ஒரு துறவிக்குமான இடைப்பட்ட நிலையிலிருந்து, எனது குறைகளையும், வலிகளையும் பேணிக்கொண்டே, இந்த உலகில் நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஆனால் கமல் ஹாசனின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில், சட்டென எனது வயது குறைகிறது, களைப்பு வடிகிறது, முதுகுத் தண்டு நிமிர்கிறது, மூட்டுக்கள் குணமாகின்றன, இதயம் லேசாகிறது, என் புன்னகை விரிகிறது, எனது ஆன்மா எழுச்சி பெறுகிறது.
ஒவ்வொரு படைப்பாளியும், நடிகனாக இருந்தாலும் சரி, தொழில்நுட்ப வல்லுநராக இருந்தாலும் சரி, தனது புகழ் மற்றும் தேவைக்கு ஏற்றவாறு, ஐந்து நிலைகளைப் பார்த்தாக வேண்டும்.
எனது பெயரை எடுத்துக்காட்டாகக் கொண்டால்,
முதல் நிலை, ‘பாலச்சந்தர் யார்?’
அடுத்த நிலை, ‘எனக்கு பாலச்சந்தர் மட்டுமே வேண்டும்’
மூன்றாம் நிலை, ‘எனக்கு பாலச்சந்தரைப் போல யாராவது வேண்டும்’
நான்காம் நிலை, ‘எனக்கு இளமையான பாலச்சந்தர் வேண்டும்’
கடைசி நிலை, மீண்டும் -‘அட, பாலச்சந்தர் யார்?’
ஆனால் திரு. கமல்ஹாசன் தான் சாதித்ததன் மூலமாக, எனக்கு இந்தக் கடைசி நிலை வருவதைத் தவிர்த்துவிட்டார்.
கமல் ஒரு அடையாளம். தான் எடுத்த எல்லாத் துறைகளிலும் மன்னன். மின்சாரத்தைக் கண்டுபிடித்தது எடிசன் என்கிறோம், தொலைபேசியைக் கண்டுபிடித்தது அலெக்சாண்டர் பெல் என்கிறோம், ரேடியோவுக்கு மார்கோனி, அசையும் படங்களை வைத்துக் கதையைச் சொன்னவர்கள் லூமியர் சகோதரர்கள் என்கிறோம்.
மேற்சொன்ன தொழில்நுட்பங்கள் எவ்வளவு முன்னேறினாலும் அதைக் கண்டுபிடித்தவர்களின் பெயர்கள், அவர்களது தொலைநோக்குப் பார்வையால், அவர்கள் முன்னோடியாக இருந்ததால், என்றென்றும் நினைவுகூரப்படும்.
இந்த ஒப்பற்ற பட்டியலில் எனது பெயருக்கும் ஒரு இடமிருப்பதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். ஏனென்றால் கமலைக் கண்டறிந்தது நான் என்பதால்.
உண்மையாகப் பார்த்தால் கமலை நான் கண்டறியவில்லை. அவரை அவரே தெரிந்துகொள்ள ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தேன். அவ்வளவே. அந்தக் காலகட்டத்தில் என்னை நானே அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
கமல், சினிமா வீதிகளில் நடக்கக் கற்றுக்கொண்டபோது, தனது கையைப் பற்றிக்கொள்ள எனக்கு அனுமதி அளித்தார். அடுத்து, நான் யோசிக்கும்போது தனது மனதைப் பற்றிக்கொள்ள அனுமதி அளித்தார். அடுத்து, அவரது கற்பனா சக்தியின் எல்லைகளை எனக்குக் காண்பித்தபோது, நான் அதில் ஆராய்ந்தேன், தொடர்ந்து அவரது படைப்பாற்றலுக்கான எல்லை விரிந்தபோது, அதற்கான பசி அதிகரித்தபோது நான் மனப்பூர்வமாக அவரை என் பிடியிலிருந்து விடுவித்தேன், அவர் தன்னை அறிந்துகொள்ள, சிறகுகளை விரித்துப் பறந்ததைப் பார்த்தேன்.
கமல், தனக்கான தரத்தையும், வரம்பையும் தானே நிர்ணயிக்கும்போது நான் வியப்பதை என்றைக்குமே நிறுத்தியதில்லை. அந்த அளவில் ஒரு தரம் இருக்கும் என்பதையே பலரால் நினைத்துப் பார்க்க முடியாது. அவர் எந்த விதியையும் பின்பற்றுவதில்லை. மாறாகத் தனக்கான விதிகளை உருவாக்குகிறார். பின் அதை உடைத்துவிட்டு மீண்டும் புதிதாகத் தொடங்குகிறார்.
அவருக்கு இன்று தெரிந்திருக்கும் அத்தனையும் நான் கற்றுத் தந்ததல்ல. எனக்குத் தெரிந்த அனைத்தையும் அவர் உள்வாங்கிக் கொண்டார். மிச்சத்தை, கேள்வி கேட்டு, விசாரித்து, கோரி, பார்த்து, கவனித்து, படித்து, மேம்படச் செய்து, பரிசோதித்து, அனுபவித்து, கற்று அவரை அவரே அறிந்துகொண்டார். தனது எல்லைகளுக்கு அப்பால் செல்ல அவர் என்றுமே பயந்ததில்லை.
சினிமாவுக்காகத் தனது புகழையும், சம்பாத்தியத்தையும் கமலைப் போல யாரும் பணயம் வைத்ததில்லை. இது புகழ் மற்றும் பணத்துக்கான தேடல் அல்ல. இது அதையும் தாண்டியது. கமல் பெற்றதைவிட இழந்ததே அதிகம். போட்டிகளை, போட்டியாளர்களைக் கடந்தவர் கமல்.
இந்தியாவின் மீதிருக்கும் தீராத பற்றே அவரது உற்சாகத்துக்குக் காரணம்
அவர் தனித்து, உயர்ந்து நிற்கிறார்.
அவர் ஒப்பிட முடியாத நிலையில் இருக்கிறார்.
ஆனாலும் அவரது பாதங்களும், இதயமும் இந்திய மண்ணோடு கலந்து உறுதியாக நிற்கின்றன. தோள்கள் உறுதியாக, புகழ் தரும் சலனத்துடன் சண்டையிட்டு, நிலைத்து நிற்கும் உண்மையான, நிலையான படைப்பாற்றலைத் தேடி நிற்கிறார்.
ஆம், அதில் காயங்கள் ஏற்பட்டாலும் என்றும் அவர் தோற்கவில்லை. காயப்பட்டாலும், தாழ்ந்து போகவில்லை.
டேய் கமல், ரொம்ப பெருமையா இருக்குடா !!!
(கேரள மாநில அரசு கமல் ஹாசனின் வாழ்நாள் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக விருது வழங்கியது. அந்த விருது விழாவில் கலந்துகொள்ள இயலாத இயக்குநர் பாலச்சந்தர் கமல் ஹாசனுக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் இது. உத்தம வில்லன் திரைப்படம் வெளியாகும் இந்த தருணத்தில் இங்கே பிரத்யேகமாகப் பிரசுரமாகிறது)
                                                                                              -தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா.
நன்றி:தமிழ் இந்து.
=============================================================================================
அன்பு 
?????????????????????
[மிழ் நாடு முதல் அமைச்சர் [?]
 அவர்களுக்கு








========================================================================
========================================================================
சத்யஜித் ரே 
இந்திய சினிமாவின் போக்கை மாற்றிய இணையற்ற திரை நாயகன். எளிமையாக வாழ்க்கையை வாழ்ந்த மனிதர் இவர். மொத்தம் வாழ்நாளில் எடுத்ததே முப்பத்தி ஆறு படங்கள் தான். ஆனால், அவர் இந்திய சினிமாவை மடைமாற்றியவர். அப்பா இளம் வயதிலேயே தவறி விட அம்மாவின் சொற்ப வருமானத்தில் தான் வாழ்க்கை கழிந்தது அவருக்கு.

தாகூரின் சாந்தி நிகேதனில் சேர்ந்து ஓவியம் கற்றுத்தேறிய பொழுது அப்படி ஒரு ஆனந்தம் அவருக்கு உண்டானது .அங்கே தாகூரிடம் தன் பிறந்த நாளுக்கு வாழ்த்து பெற போனார்; ஒரு படபடக்கும் தாளில் ஒரு கவிதை எழுதி தந்து இதைப் பெரியவன் ஆனதும் படி என்று கொடுத்து விட்டு போய் விட்டார். இவர் ஒரு விளம்பர நிறுவனத்தில் மாதம் எண்பது ரூபாய்ச் சேர்ந்தார். அங்கே நன்றாகப் போய்க்கொண்டு இருந்தாலும் அடிக்கடி ஆங்கிலேயருக்கும் இந்தியர்களுக்கும் சச்சரவு உண்டானது, கூடவே வாடிக்கையாளர்களின் ரசிப்புத்தன்மை வெறுப்பு உண்டு செய்ய வெளியேறினார் மனிதர்.


புத்தக நிறுவனம் ஒன்றில் சேர்ந்து அட்டைப்பட ஓவியங்கள் வரைய ஆரம்பித்தார். நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியா நூலுக்குக் கூட ஓவியம் வரைந்திருக்கிறார். 

பின் ழான் ரீனோர் எனும் பிரெஞ்சு திரைப்பட இயக்குனரை பார்த்ததும், பைசைக்கிள் தீவ்ஸ் படமும் அவரைப் படம் எடுக்கு உந்தி தள்ளியது. தாகூர் கொடுத்த கவிதை தாளை பிரித்துப் பார்த்தார்; 

“உலகம் முழுக்க 
எத்தனையோ நதிகள் நீர்நிலைகளுக்கு 
சென்று இருக்கிறேன் ; 
இறைவா 
ஆனால் 
என் வீட்டின் 
பின்புறம் இருந்த சிறிய புல்லின் 
நுனியில் தவழ்ந்து சிரிக்கும் 
பனித்துளியை கவனிக்க 
தவறி விட்டேன்"
எனும் வரிகள் அவரை உலுக்கின.

ஆனால் தன் முதல் படத்தை வங்கத்தின் தலை சிறந்த நூலான பதேர் பாஞ்சாலியை படமாக்க முடிவு செய்தார்.

மூன்று வருட போராட்டம்; நிதி இல்லை. மனைவியின் நகைகளை அடமானம் வைத்தார். கொஞ்சம் பகுதிகள் எடுத்த பொழுது படம் நின்று போனது; அரசிடம் படத்துக்கு நிதி கேட்டார் முதல்வர் பி சி ராய் அதிகாரிகளைப் படத்தைப் பார்க்க சொன்னார். 

"என்ன படம் இது தேறாது!" என்று விட்டனர். நேரு வரை போய் அரசாங்கத்துக்கு படத்தின் உரிமையைத் தாரைவார்த்து படமெடுக்க நிதி பெற்றார். படம் வெளிவந்த பொழுது தான் அதன் மகத்துவம் புரிந்தது .தேசிய விருது கிடைத்தது உலகம் முழுக்க மிகப்பெரும் கவனம் பெற்றது .படத்தைத் திட்டி நியூ யார்க் டைம்ஸ் எழுதியும் அமெரிக்காவில் படம் ஹவுஸ் புல்லாக ஓடியது. 

பெரிய நகைமுரண் படத்தைப் பார்த்து விட்டு அந்த நாவலை எழுதிய ஆசிரியர், "என்னய்யா இப்படி சொதப்பி இருக்கே!" என்றாராம். அபராஜிதோ தங்க சிங்கம் விருதை பெற்றுத்தந்தது. 

அவர் குழந்தைகளுக்காக கதைகள் எழுதிய அனுபவம் உள்ளவர். பெலூடா எனும் கதாபாத்திரம் மறக்கவே முடியாதது; அறிவியியல் புனை கதைகளும் எழுதியவர். படமெடுத்து பொருளீட்ட கூடிய தருணத்தில் திரும்ப வந்து சந்தேஷ் எனும் தாத்தா உண்டாக்கிய பத்திரிக்கையைப் புதுப்பித்து எண்ணற்ற கதைகள் எழுதினார்.

வங்கத்தின் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையைப் படம் பிடிப்பதாக அவரின் படங்கள் இருந்தன .வறுமையைப் படமாக்கி காசு பார்க்கிறார் என விமர்சித்தார்கள். சிக்கிம் அரச பரம்பரை பற்றி இவர் எடுத்த படத்தைப் போடவே விடாமல் அரசு தடை செய்தது அவர், மரணத்துக்குப் பல ஆண்டுகள் கழித்து அப்படம் வந்த பொழுது பார்த்தால் சிக்கிமின் வனப்பை பற்றியே படம் பேசி இருக்கிறது எனத் தெரிந்தது; படத்தைப் பார்க்காமலே தடை செய்திருக்கிறார்கள்.

சாருலதா எனும் அவரின் பெண்மொழி பேசும் படத்தில் பைனாகுலரில் கணவன் வருவதை பெண் பார்த்து விட்டு கதவை திறக்கிற ஷாட்டைப் பதினைந்து நிமிடம் வைத்திருப்பார் ."ஒரு பெண் வாசலுக்கு வந்து கதவைத் திறப்பதை 15 நிமிடம் காட்டவேண்டுமா?: என ஒருவர் கேட்க , "ஒரு பெண் வாசலுக்கு வரும் ஒரு 15 நிமிடத்தை உங்களால் பொறுக்கமுடியவில்லை எனில், இவ்வளவு ஆண்டுகாலமாக வெளியே வராமலேயே இருக்கும் பெண்களைப் பற்றி உங்களுக்குக் ஒன்றுமே தெரியவில்லையா? "என்றார் 

பெரும்பாலும் நல்ல நாவல்களையே படமாக்கினார். நகர வாழ்வை வெறுத்து காடு புகும் நண்பர்கள் பற்றி ஒரு படம், மகளை வேசியாக்கி விடும் அப்பா, எளிய பெண்ணைத் தேவியாக்கி விடும் மக்கள், விமானத்தில் சீட்டு கிடைக்காத காரணத்தால், இரயிலில் பயணம் செய்யும் ஒரு நடிகனுக்குப் பொது இடத்திலஏற்படும் அனுபவங்கள், அறிவுத்துணையாகத் தன் கொழுந்தனை பார்க்கும் பெண் என அவர் எடுத்துக்கொண்ட கதைக்கருக்கள் தனித்துவம் வாய்ந்தவை.

ஏலியன் என்கிற கதை ஸ்க்ரிப்டை அமெரிக்க நிறுவனத்தோடு சேர்ந்து எடுக்க முயன்று முடியாமல் நின்று போனது; அதே பாணியில் ஈ டி படம் வந்த பொழுது அதைத் தன் கதையின் திருட்டு என ரே சொன்னார்.

அவருக்குப் பிரான்ஸ் அரசு விருது வாங்கிக் கவுரவித்தது. உலகத் திரையுலக பிதாமகர் அகிரோ குரோசோவா இப்படிச் சொல்கிறார், "ரேவின் படங்களை பார்க்காதவர்கள் வானில் சூரியனையும்,சந்திரனையும் காணாதவர்கள்.”

எந்த அளவுக்கு அவருக்குத் திரைத்துறை மீது காதல் இருந்தது எனச் சொல்லி இந்த கட்டுரையை முடிக்கலாம். GhareBaire எனும் தாகூரின் கதையின் படமாக்கி கொண்டிருந்த இரண்டு முறை மாரடைப்பு வந்தது மனிதருக்க. கொஞ்ச நாளில் மீண்டு வந்தவர் எடுத்த ஒய்வு என்ன தெரியுமா? ஓயாமல் மூன்று படங்கள் இயக்கியது. 

ஸ்ட்ரெச்சர் ஆம்புலனஸ் தயாராக இருக்கும் மனிதர் படம் எடுத்து கொண்டிருப்பார். மரணப்படுக்கையில் இருந்த பொழுது வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் அறிவிக்கப்பட்டது. அவரால் போக முடியாததால் ஆஸ்கர் அவர் படுக்கைக்கே வந்து சேர்ந்தது. 
சத்யஜித் ரே  உலகை இந்தியாவை நோக்கி திருப்பிய துணிச்சல்காரர்.

                                                                                                                                                                                       - பூ.கொ.சரவணன்
============================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?