கட்ஜுவும் தத்துவும் .




தலைமை நீதிபதி தத்து மீதான ஊழல் குற்றச்சாட்டு மறைக்கப்பட்டது ஏன் ?

----------------------------------------------
ற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் எச்.எல். தத்து. தலைமை நீதிபதி ஆவதற்கு முன் அவர் சட்ட விரோதமாக சொத்து குவித்தது தொடர்பான ஆவண ஆதாரங்களின் தொகுப்பு ஒன்று அப்போது ஊடக கவுன்சில் தலைவராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவின் கைக்கு போயிருக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படவில்லை.
கட்ஜூ இந்த ஆவணங்களை உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண், பிரஷாந்த் பூஷண், டைம்ஸ் ஆஃப் இந்தியா – தி ஹிந்து – இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கிறார். யாரும் இந்த முக்கியமான ஆதாரத்தை பொது வெளியில் அம்பலப்படுத்தவில்லை.
ஏன் அம்பலப்படுத்த வில்லை? மற்ற அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள் போல நீதித்துறை ஊழலும் மக்களிடையே பிரபலமாகிவிட்டால் பிறகு எதைக்காட்டி அச்சுறுத்துவது? இங்கே கட்ஜு கூறியிருப்தைப் பார்த்தால் பிரபல வழக்கறிஞர்கள், பிரபல ஊடக நிறுவனங்கள் எவையும் இது குறித்து பேசுவதற்கு தயாராக இல்லை.
இது தொடர்பாக எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் எழுப்பிய கேள்விக்கு கட்ஜூ பதிலளித்துள்ளார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையாளர் மகாபத்ரா என்பவர், கட்ஜூ அந்தத் தகவல் தொகுப்பை சரியாகக் கையாளவில்லை என குற்றம் சாட்ட, அதற்கும் பதிலளித்திருக்கிறார் கட்ஜூ.
இனி அவரது விளக்கத்தை பார்ப்போம்.
1. தத்துவின் பதிவு – தத்து மீது விசாரணை நடத்த வேண்டும் – முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ
எகனாமிக் டைம்ஸ் நாளிதழிலிருந்து இன்று எனக்கு (கட்ஜு) வந்த மின்னஞ்சல் இது
தேதி : மே 12, 2015 8:43:44 pm IST
To: justicekatju@gmail.com
பொருள் : உடனடியாக கருத்து கோரி
ஐயா,
  1. தி எகனாமிக் டைம்ஸ் சார்பாக தலைமை நீதிபதி தத்து தொடர்பாக ஒரு ஆய்வு செய்து வருகிறோம். நீதிபதி தத்து மற்றும் அவரது மனைவிக்கு எதிரான புகார் ஒன்று உங்களுக்கு அனுப்பப்பட்டதாக எனக்கு தெரிய வந்தது. அது தொடர்பாக நீங்கள் ஏதாவது நடவடிக்கைகள் எடுத்திருந்தால் அவற்றையும், இது தொடர்பான உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
  2. அந்த புகார் பண்டிட் நரேந்திர சர்மா என்பவரின் பெயரில் அனுப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 2014-ல் குற்றச்சாட்டு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இணைத்து, தேவையான நடவடிக்கை எடுக்கும்படி உங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது.
    மேலே குறிப்பிட்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை கூடிய விரைவில் அனுப்பினால் நன்றியுடையவனாக இருப்பேன்.
பணிவுடன்,
தி எகனாமிக் டைம்ஸ், டெல்லி
மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண், அவரது மகன் பிரஷாந்த்
தத்து ஊழல் குற்றச்சாட்டு ஆவணங்களை பெற்று நடவடிக்கை எடுக்காத உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண், அவரது மகன் பிரஷாந்த்
என்னுடைய பதில்
From: mark_katju@yahoo.co.in
Sent: Wednesday, May 13, 2015 7:05
அன்புள்ள ஐயா,
உங்கள் மின்னஞ்சல் வரப்பெற்றேன்.
தற்போது நான் வான்கூவரில் உள்ளேன். ஜூலை மத்தியில்தான் இந்தியாவுக்குத் திரும்ப உள்ளேன்.
நீதிபதி தத்து அவரது நீதித்துறை வாழ்க்கையின் போது குவித்த சொத்துக்கள் தொடர்பான ஆவணச் சான்றுகள் அடங்கிய ஒரு தொகுப்பு எனக்கு வந்தது உண்மை. இது அவர் தலைமை நீதிபதி ஆவதற்கு முன்பு நடந்தது.
அந்தத் தொகுப்பை பல பிரதிகள் எடுக்க வைத்து, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண், அவரது மகன் பிரஷாந்த், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தனஞ்சய் மகாபத்ரா (அவர் என்னுடைய வீட்டுக்கு பிரதியை வாங்க வந்திருந்தார். அவரோடு இது தொடர்பாக விரிவாக பேசியிருந்தேன்), இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு தலா ஒரு பிரதி அனுப்பி வைத்தேன். வருத்தப்படும் விஷயம் என்னவென்றால், அவர்கள் யாரும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தத் தொகுப்பில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், தத்து தலைமை நீதிபதியாக ஆக்கப்பட்டிருக்கவே கூடாது என்பதால்தான் நான் அவர்களை விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தேன்.
அந்தத் தொகுப்பின் நகல் என் கைவசம் இப்போது இல்லை. ஆனால், நோய்டாவில் இருக்கும் எனது வீட்டில் வைத்திருக்கிறேன். நான் நாடு திரும்பியதும் அதை உங்களுக்குத் தர முடியும். இருப்பினும், நான் கவனமாக படித்திருந்த அந்த தொகுப்பின் உள்ளடக்கம் பற்றி எனது நினைவிலிருந்து கூறுகிறேன் :
நீதிபதி தத்துவின் அரண்மனை போன்ற வீடு
பெங்களூருவில் உள்ள தத்துவின் அரண்மனை போன்ற வீடு (கட்ஜூ பேஸ்புக்கில் பகிர்ந்த புகைப்படம்).
நீதிபதி தத்துவின் மனைவி காயத்ரியின் பெயரில் பெரு எண்ணிக்கையிலான வீட்டு மனைகள் பெங்களூருவிலும், சுற்று வட்டார பகுதிகளிலும் வாங்கப்பட்டிருந்தன. அவை வாங்கப்பட்டது தொடர்பான விற்பனைப் பத்திரங்களின் நகல்கள் அந்தத் தொகுப்பில் இருந்தன. இந்த விற்பனைப் பத்திரங்கள் நீதிபதி தத்துவின் மனைவி காயத்ரியின் பெயரில் இருந்தாலும், அவரை குருவாயூரின் மகள் என்றுதான் குறிப்பிடுகின்றன (அவரது தந்தையின் பெயராக இருக்கலாம்), தத்துவின் மனைவி என்று குறிப்பிடவில்லை. இது விசித்திரமானது, ஏனென்றால், அந்த வீட்டுமனைகள் அவரது திருமணத்துக்கு வெகு காலத்துக்குப் பிறகு வாங்கப்பட்டிருந்தன. இந்த பரிமாற்றங்களை மறைப்பதற்குத்தான் இது செய்யப்பட்டிருந்ததா என்ற கேள்வி எழுகிறது.
1. இந்த வீட்டுமனைகளில் பெரும்பாலானவை கர்நாடகா நிலச் சீர்திருத்த சட்டத்திற்கு விரோதமாக வாங்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சட்டத்தின்படி குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ 2 லட்சத்துக்கு அதிகம் உடைய ஒரு நபர் கர்நாடகாவின் ஊரகப் பகுதிகளில் எந்த நிலத்தையும் வாங்க முடியாது. இந்த மனைகள் வாங்கப்படும் போது, அவை அனைத்தும் நடைமுறையில் விரிவாகி வந்த (இந்தியாவின் மற்ற நகரங்களைப் போலவே) பெங்களூரு நகரத்தில் இணைந்து விட்டாலும், அதிகாரபூர்வமாக ஊரகப் பகுதிகளாகவே இருந்தன. இந்த மனைகள் வாங்குதல் நடைபெற்ற காலகட்டத்தில் நீதிபதி தத்துவின் வருமானம் ஆண்டுக்கு ரூ 15 லட்சம் (உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம்). எனவே, அவரது மனைவி சட்டவிரோதமாக இந்த மனைகளை வாங்கியிருக்கிறார்.
2. நீதிபதி தத்து பெங்களூருவில், 1,200 சதுரமீட்டர் (13,450 சதுர அடி) பரப்புடையதாக சொல்லப்பட்ட நிலத்தில் ஒரு அரண்மனை போன்ற வீட்டை கட்டியிருக்கிறார். அந்த வீடு மட்டுமே ரூ 50 கோடி அல்லது அதற்கும் மேல் மதிப்புடையதாக இருக்கும். யாரோ அந்த வீட்டின் புகைப்படங்களை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்கள், அவற்றை தேடி உங்களுக்கு அனுப்ப முயற்சிக்கிறேன்.
தத்துவின் அரண்மனை வீடு படங்கள்
3. பெங்களூருவில் ஒரு வீட்டு மனை தத்துவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தின் கீழ் உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கு மட்டும்தான் மனை ஒதுக்கப்பட முடியும், எனவே தத்துவுக்கு மனை ஒதுக்கப்பட்டிருக்க முடியாது. உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு ஊழியர் இல்லை (அவர் ஒரு அரசியல் சட்ட ரீதியான பதவி வகிக்கிறார், அவர் யாருடைய ஊழியரும் இல்லை). நீதிபதி தத்து அந்த நேரத்தில் கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்தார்.
4. ஏற்கனவே பெங்களூருவில் வீட்டு மனை சொந்தமாக உள்ள ஒருவருக்கு ஒதுக்கப்பட முடியாத திட்டத்தின் கீழ் நீதிபதி தத்துவுக்கு ஒரு மனை கொடுக்கப்பட்டிருந்தது. நீதிபதி தத்துவுக்கு அவரது சொந்த பெயரிலோ, மனைவி பெயரிலோ, குழந்தைகள் பெயரிலோ ஏற்கனவே பெங்களூருவில் மனைகள் சொந்தமாக இருந்தன.
நீதிபதி தத்து சட்டமீறல்
வீட்டு மனை வாங்குதல் தொடர்பான கர்நாடகா சட்டங்களை நீதிபதி தத்துவும் ,குமாரசாமியும்  மீறினாரகள் என்பதுதான் குற்றசாட்டு..
தத்து இழைத்த இன்னும் பல சட்ட விரோத செயல்கள் அந்தத் தொகுப்பில் இருந்தன. அவை அனைத்தும் எனக்கு நினைவில் இல்லை. சுமார் 100 பக்கங்கள் கொண்ட அந்தத் தொகுப்பில் பெரும்பாலும், விற்பனை பத்திரங்கள், பிற ஆவணங்களின் நகல்கள் இருந்தன.
இந்தத் தொகுப்பை பெற்றவுடன், நான் திரு சாந்தி பூஷணுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் தொகுப்பின் நகலை வாங்குவதற்கு தனது மகன் பிரஷாந்தை என் வீட்டுக்கு அனுப்பினார். அந்தத் தொகுப்பை பல நகல்கள் எடுத்து, என் வீட்டுக்கு வந்த பிரஷாந்துக்கு ஒன்றை கொடுத்தேன்; அதில் அடங்கியிருந்த குற்றச்சாட்டுகள் பற்றி அவருடன் விவாதித்தேன்.
அடுத்த நாள் சாந்தி பூஷண் என்னை தொலைபேசியில் அழைத்து “அந்தத் தொகுப்பில் உள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை” என்று கருத்து தெரிவித்தார். “அப்படி என்றால், மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும், ஓய்வு பெற்ற நீதிபதிகளும் உறுப்பினர்களாக உள்ள, நானும் பிரஷாந்தும் கூட அதன் உறுப்பினர்கள், நீதித்துறை பொறுப்புணர்வுக்கான குழு இது தொடர்பாக ஒரு விசாரணை நடத்த வேண்டும்” என்றும் “அதே நேரத்தில் அந்த விசாரணை முடிவது வரை தத்துவை முழுமையான தலைமை நீதிபதியாக நியமிக்காமல் பொறுப்பு தலைமை நீதிபதியாக மட்டும் நியமிக்கும்படி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுத வேண்டும்” என்றும் கூறினேன். அந்தத் தொகுப்பில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தவறாக இருந்தால் அவரை தலைமை நீதிபதியாக உறுதி செய்யலாம்.
ஊடகம்
“நான் அந்தத் தொகுப்பின் நகல்களை அனுப்பிய நபர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு அது தொடர்பாக விசாரிக்கக் கூடத் தயாராக இல்லை. ஊடகம் பயந்திருக்கிறதா?”
வருத்தம் தருவது என்னவென்றால், நான் தொகுப்பை அனுப்பி வைத்த சாந்தி பூஷணோ மற்ற யாருமோ அது தொடர்பாக எதையும் செய்யவில்லை.
எனக்கு தத்துவுக்கு எதிராக எந்த சொந்த விரோதமும் இல்லை என்பதையும், நான் செய்ததற்கான ஒரே நோக்கம், நீதித்துறையின் தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே கடிதத்தை முடிப்பதற்கு முன்பு கூறிக் கொள்கிறேன். குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று மட்டும்தான் வேண்டினேன், அந்த குற்றச்சாட்டுகள் சரிதான் என்று கூறவில்லை (ஆனால், அந்தத் தொகுப்பில் இருந்த ஆவண ஆதாரங்கள் தீவிரமான மோசடிகளை சுட்டிக் காட்டின).
ஆனால், நான் அந்தத் தொகுப்பின் நகல்களை அனுப்பிய நபர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு அது தொடர்பாக விசாரிக்கக் கூடத் தயாராக இல்லை. ஊடகம் பயந்திருக்கிறதா?
நீதிபதி கட்ஜூ
2. “நீதிபதிகள் பற்றி விவாதிக்கலாமா” என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கட்ஜூவின் பதில்
கணேசன் ஐசக் – மரியாதைக்குரிய நீதிபதி அவர்களே, தற்போதைய தலைமை நீதிபதியின் சொந்த விவகாரங்களை வைத்து அவரது நேர்மையை விவாதிப்பது சரிதானா
மார்க்கண்டேய கட்ஜூ – ஏன் கூடாது? ஒரு ஜனநாயகத்தில் பொது பதவி வகிப்பவர்களின் நடத்தை கண்டிப்பாக விவாதிக்கப்பட வேண்டும்.
(பல்வேறு தருணங்களில் கட்ஜு அவர்கள் இதைப்பற்றி விரிவாக விளக்கியிருப்பார். தந்தி டி.வியின் பாண்டே “இது போன்று நீதித்துறையை விமரிசிப்பது சரியா” என்று கேட்ட கேள்விக்கு கோபத்துடன் பதிலளித்திருப்பார் கட்ஜு. நிலப்பிரபுத்துவ அமைப்பில்தான் மன்னன் எஜமானனாகவும், மக்கள் கட்டுப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஜனநாயக அமைப்பில் இது தலைகீழாக மாறுகிறது. இங்கே மக்கள் எஜமானர்களாகவும், அரசு, பிரதமர், ஜனாதிபதி, நீதிபதிகள் அனைவரும் மக்களின் சேவகர்களாகவும் இருக்கிறார்கள். அந்த வகையில் மக்களுக்குத்தான் விமரிசிக்கும் உரிமை இருக்கிறது என்கிறார்.
மேலும் நீதித்துறையில் மலிந்து விட்ட ஊழல் குறித்து பேசுவதுதான் நீதித்துறையை மதிக்கும் விசயமே அன்றி, அதை அம்பலப்படுத்தக் கூடாது என்றால் நீதித்துறை ஊழல் செய்வதற்கே உதவும் என்கிறார்.)
3. டைம்ஸ் ஆஃப் இந்தியா நிருபர் மகாபத்ராவின் பதிலும், கட்ஜூவின் எதிர்வினையும
எனது முந்தைய பதிவில், இப்போதைய தலைமை நீதிபதி தத்து பெருமளவில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முதல் பார்வையில் கூறும் ஆவணங்கள் அடங்கிய தகவல் தொகுப்பை நான் கொடுத்தவர்களில் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த திரு தனஞ்சய் மகாபத்ரா என்ற பத்திரிகையாளர் என்று குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய பதிவை அவருக்கு மின்னஞ்சலிலும் அனுப்பியிருந்தேன்.
அதற்கு பதிலாக மே 14, 2015 அன்று தனஞ்சய் மகாபத்ரா எனக்கு இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.
திரு. கட்ஜூவின் மின்னஞ்சல் தொடர்பாக சில விளக்கங்கள்
தனஞ்சய் மகாபத்ரா
நீதிபதி தத்து மீதான குற்றச்சாட்டை கண்டு கொள்ளாத , டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த தனஞ்சய் மகாபத்ரா என்ற பத்திரிகையாளர்
நீதிபதி தத்து தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அடைவதற்கு 10 நாட்களுக்கு முன்பு, நீதிபதி கட்ஜூ, முக்கியமான விஷயம் ஒன்றை சொல்லவிருப்பதாகக் கூறி என்னை அவரது வீட்டுக்கு அழைத்தார். அப்போது இந்திய ஊடக கழகத்தின் தலைவராக இருந்த அவரது வீட்டை நான் அடைந்ததும் என்னிடம், “நீதிபதி தத்து தொடர்பான நில விவகாரங்களில் முறைகேடு பற்றி” என்று குறிப்பிட்டு சில காகிதங்களை என்னிடம் கொடுத்தார்.
அது தொடர்பாக பத்திரிகையில் உடனடியாக எழுதும்படி என்னை வலியுறுத்தினார். “பத்திரிகை கட்டுரைகள் அப்படி எல்லாம் எழுதப்படுவதில்லை” என்று அவரிடம் கூறினேன். மேலும், “அந்தத் தகவல் தொகுப்பில் இருக்கும் ஆவணங்கள் களத்தில் தரவுகளோடு சரி பார்க்கப்பட வேண்டும், அதற்கு நேரம் பிடிக்கும்” என்று கூறினேன். சில நாட்களுக்குப் பிறகு, அந்த காகிதக் கட்டை திருப்பித் தரும்படி அவர் கேட்டார், நானும் கொடுத்து விட்டேன்.
தனஞ்சய் மகாபத்ராவுக்கு நான் அனுப்பிய பதில்
அன்புள்ள திரு மகாபத்ரா,
நான் உங்கள் மின்னஞ்சலை படித்தேன். நீங்கள் உண்மையை அரைகுறையாக கூறியிருக்கிறீர்கள் என்று வருத்தத்துடன் கூறிக் கொள்கிறேன்.
முதலாவதாக, இந்த தகவல் தொகுப்பு பற்றி சொல்வதற்கு நான் உங்களை தொலைபேசியில் அழைத்தது, தத்து தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு, நீங்கள் சொல்வது போல 10 நாட்களுக்கு முன்பு அல்ல.
இரண்டாவதாக, உடனடியாக அதைப் பற்றி எழுதும்படி நான் உங்களை வலியுறுத்தவில்லை. தத்து உண்மையிலேயே ஏதாவது தவறுகள் செய்திருந்தால் அந்த விஷயம் பொதுவில் வைக்கப்பட வேண்டும், ஒரு தவறான நபர் தலைமை நீதிபதி ஆகி விடக் கூடாது என்பதற்காக இந்த விஷயத்தை விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
மூன்றாவதாக, அந்தத் தகவல் தொகுப்பு (நீங்கள் சொல்வது போல, சில காகிதங்களின் கத்தை அல்ல) உங்களிடம் சில நாட்கள் இருந்ததாக நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள். ஏனென்றால், நான் உங்களுக்கு அவற்றைக் கொடுத்த சில நாட்களுக்குப் பிறகு திரும்பத் தரும்படி கேட்டதாக உங்கள் மின்னஞ்சலில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இடைப்பட்ட காலத்தில், தகவல் தொகுப்பில் இருந்த ஆவணங்களை சரி பார்ப்பதற்கு நீங்கள் என்ன முயற்சிகள் எடுத்தீர்கள்?
நான்காவதாக, நீங்கள் அந்த தொகுப்பை என்னிடம் திருப்பித் தந்து விட்டதாகக் கூறுகிறீர்கள். அதை நீங்கள் திரும்பி தந்ததாக எனக்கு நினைவில்லை. உண்மையில், என்னிடம் பல பிரதிகள் இருந்ததால், அது எனக்கு தேவையும் படவில்லை.
ஆனால், நீங்கள் கூறுவதே சரி என்றே வைத்துக் கொள்வோம். இருப்பினும், சில கேள்விகள் எஞ்சுகின்றன. உங்கள் வசம் சில நாட்கள் வைத்திருந்ததாக நீங்கள் சொல்லும், நான் கொடுத்த தொகுப்பை நீங்கள் நகல் எடுத்துக் கொண்டீர்களா? அது மிகவும் பரபரப்பான செய்தி மதிப்புடையதால் எந்த ஒரு துடிப்பான பத்திரிகையாளரும் அதைச் செய்திருப்பார்.
ஐந்தாவதாக, நீங்கள் இந்தத் தகவல் தொகுப்பைப் பற்றி உங்கள் மேலாளர்களிடம் தெரிவித்தீர்களா? அவர்களிடம் காண்பித்தீர்களா?
ஆறாவதாக, அதை அவர்களுக்கு நீங்கள் காண்பித்திருந்தால், அவர்களது எதிர்வினை என்ன?
இந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் தெளிவுபடுத்தா விட்டால், ஒரு பத்திரிகையாளராக உங்கள் கடமையில் தவறி விட்டீர்கள் என்று வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கும்.
நீதிபதி கட்ஜூ
__________________________________
காங்கிரசு கூட்டணி ஆட்சி புரிந்த முதல் ஐந்தாண்டு காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக கட்ஜு அவர்கள் ஒரு வருடம் பதவி வகித்தார். அப்போது அசோக் குமார் எனும் ஊழல் நீதிபதியை நியமிக்க தி.மு.க சார்பாக அளிக்கப்பட்ட நிர்ப்பந்தத்தை அவர் சமீப ஆண்டுகளாக வெளிப்படையாக பேசிவருகிறார். இது உண்மையாக இருக்கும் என்பதற்கு ஆதாரம் தேவையில்லை.
தனக்கு வேண்டிய துறைகள் வேண்டும் என்று தில்லியிலேயே அடம்பிடித்த கருணாநிதி அது போன்றதொரு உறுதியை முள்ளிவாய்க்கால் தொடர்பாக இந்திய அரசிடம் காட்டவில்லை என்பதை நாம் அறிவோம். இதை வைத்து கட்ஜுவை அ.தி.மு.க ஆதரவு ஊடகங்கள் (தமிழ் ஊடகங்களில் பெரும்பான்மை) நன்கு பயன்படுத்திக் கொண்டன. மேலும் கட்ஜு அவர்கள் அவர் சென்னையில் இருந்த போது ஜெயலலிதா நேரடியாக இப்படி நிர்ப்பந்திக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
அதே நேரம் அ.தி.மு.க நபர்கள் தன்னை அணுகியதாக ஒத்துக் கொண்ட அவர் இது ஜெயலலிதாவுக்கு தெரியாமல் இருந்திருக்கும் என்று நம்புகிறார். போகட்டும், ஓராண்டில் சென்னையில் இருந்தவருக்கு இங்கே தி.மு.க மட்டுமல்ல, அ.தி.முகவும் அப்படித்தான் என்பதை அறிய முடியாதது ஆச்சரியம்தான். ஆனால் பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா தரப்பு செய்த தில்லுமுல்லுகளை அவர் இன்னும் ஏன் அறியவில்லை என்பதும் ஆச்சரியத்திற்குரியது.
எனினும் ஜெயாவுக்கு ஆதரவாக பிணை வழங்கி பின்னர் பல்வேறு சலுகைகளை செய்திருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து குறித்து அவர் இறக்கியிருக்கும் அணுகுண்டு அம்மாவையும், அடிமைகளையும் நிலைகுலைய வைத்திருக்கும். அந்த வகையில் இது ஒரு ‘கவித்துவ பழிவாங்கல்’.
கட்ஜு கூறியிருப்பது போல தலைமை நீதிபதி மீதான இந்த குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இந்த குற்றச்சாட்டை விசாரிக்கவே மாட்டோம் என்று ஆளும் வர்க்கம் முடிவு செய்திருப்பதுதான் முக்கியமானது. ஊடகங்களின் கள்ள மவுனம், நீதிமன்ற அவமதிப்பு எனும் மிரட்டல், மூத்த வழக்கறிஞர்களின் அமைதி அனைத்தும் இதைத்தான் காட்டுகிறது.
எனவே ஜெயலலிதா விடுதலை என்பது ஏதோ அவரது சொந்த முயற்சி மட்டுமல்ல. அது ஒட்டு மொத்த நீதித்துறையின் செல்வாக்கில் நடந்திருக்கிறது. குமாரசாமி கூட்டல் தவறு மட்டும் இல்லை என்றால் இவை எதுவும் பேசப்பட்டிருக்காது.
நன்றி;வினவு.
===========================================================================


*முகம் பள பளக்க 
பழுத்த பப்பாளி விழுது, நான்கு ஸ்பூன் தேன், சிறிது க்ளிசரின் சேர்த்து, கண்ணைச் சுற்றின பகுதி தவிர மீதி இடங்களுக்கு பாக் மாதிரி போட்டு பதினைந்து நிமிஷம் ஊறிப் பிறகுக் கழுவிப் பாருங்க.. முகம் தங்கம்போல ஜொலிக்கும்
*உடம்பு தோல் பள பளக்கவும் பப்பாளிப்பழம் நல்லது. ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சக்கரை (தேவையானால்) சேர்த்து காலை ப்ரேக், பாஸ்ட்டாக சாப்பிட்டுப் பாருங்க... முப்பதே நாளில் தோலில் மாற்றம் தெரியும். மலச்சிக்கல் தீரும், புத்துணர்ச்சி தரும் ரத்தம் சுத்தியாகும்.
*பப்பாளிக் காயின் பால் பாத பித்த வெடிப்புக்கு நல்லது.உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாக செய்து சாப்பிடலாம்.பழங்களினால் சாலட் செய்யும் போதும், ஜாம் செய்யும் போதும் பப்பாளிப் பழத்தை நிறைய சேர்க்கலாம்.
*இந்தப் பழம் போலவே அத்தி பழமும் உடல் அழகுக்கு உதவும். இதயம் வலுப்பெறும்.
========================================================================

========================================================================
இன்று,
மே-16.
மலேசியா ஆசிரியர் தினம்

சிக்கிம், இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது(1975)

ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஆனார்(1975)

முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம், வெளியிடப்பட்டது.(1667)


========================================================================

நல்லெண்ணெய் குளியல் நன்மைகள்!


வளரும் நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும்.

நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும்.

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுத்து வந்தால், உடலில் உள்ள நரம்புகள்  ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?