வாரம் 3 மணிநேரம் ......,
5 ஆண்டு ஆயுளைக் கூட்டும்!
புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால், ஆயுள் நீடிக்கும் என்பதைப் போல, வயோதிகக் காலங்களில் தொடர்சியாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர் தமது ஆயுளை அதிகரித்துக்கொள்ள முடியும் என்று, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நார்வேயில், 5,700 வயோதிக ஆண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு மூன்று மணிநேர உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், உடற்பயிற்சி செய்யாத வயோதிகர்களைவிட, ஐந்து ஆண்டுகள் அதிகம் வாழ்வதாக தெரியவந்துள்ளது.
வயதோரிகர்களது ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்துமாறு, பிரிட்டிஷ் ஜேர்ணல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற பத்திரிகையில், ஆசிரியர்கள் விழிப்புணர்வுடன் கூடியதொரு அழைப்பு விடுத்துள்ளனர்.
வயோதிகர்கள் மத்தியில் குறைந்துவரும் உடற்பயிற்சி குறித்து, தொண்டு நிறுவனம் ஒன்று எச்சரித்ததை அடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நார்வேயின், ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலை மேற்கொண்ட ஆய்வில், மிதமான உடற்பயிற்சி, மற்றும் தீவிர உடற்பயிற்சி, ஆகிய இரண்டுமே ஒருவரின் ஆயட்காலத்தை நீடிப்பதாக தெரிவித்துள்ளது.
65 வயதிற்கு மேற்பட்ட வயோதிகர்கள், வாரத்திக் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என, பிரித்தானியாவில் உள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
68 தொடக்கம் 77 வயதிற்குட்பட்டவர்கள், வாரம் ஒன்றிற்கு 60 நிமிடங்களுக்கும் குறைவான மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், எந்த பலனும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
பதினொரு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ஏதாவது ஒருவகை உடற்பயிற்சியை தொடர்ச்சியாக 30 நிமிடம் வாரத்துக்கு ஆறுமுறை செய்யும்போது, அப்படி செய்பவர் மரணமடையும் வீதம் 40 விழுக்காடு குறைவதாக தெரிவிக்கப்படுகிறது.
புகைப்பிடித்தலை நிறுத்துவதால் உயிரிழப்புக்கள் குறைவடைவதைப் போல, உடற்பயிற்சி மேற்கொள்வதாலும் நன்மை ஏற்படுகிறது என்பதுடன், உடற்பயிற்சியை அதிகரிப்பதுடன், புகை பிடிக்கும் பழக்கவழக்கத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும் என, ஆண் வயோதிகர்களுக்கான பொது சுகாதார உக்திகள் தெரிவிக்கின.

வயோதிகர்களை ஆராய்ச்சிக்குட்படுத்திய இந்த ஆய்வு, அவர்கள் முன்னர் தமது வாழ்க்கையில் எவ்வளவு ஆரோக்கியமாயிருந்தார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
மக்கள் மிகவும் குறைவான அளவு உடற்பயிற்சியை மேற்கொள்வதாக, பிரித்தானியாவை தளமாக கொண்டு செயற்படும் பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் பின்புலத்தில் இந்த ஆய்வும் வெளிவந்துள்ளது.
எந்தெந்த நாடுகளில் மிதமான அளவில் உடற்பயிற்சி செய்வதில்லை என பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், போர்ச்சுக்கலில் 69 வீதமானோரும், போலாந்தில் 55 வீதமானோரும், பிரான்ஸில் 46 வீதமானோரும், பிரித்தானியாவில் 44 வீதமானோரும், குரோஷியாவில் 34 வீதமானோரும், ஜேர்மனியில் 26, வீதமானோரும் நெதர்லாந்தில் 14 வீதமானோரும் மிதமான உடற்பயிற்சியைக் கூட செய்யாமல் இருக்கிறார்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
வயது பேதமின்றி, தொடர்ச்சியாக மேற்கொள்ளும் உடற்பயிற்சியானது, இதய சுகாதாரத்திற்கு நல்லது என்பதுடன், ஆயுளையும் நீடிக்கச் செய்யும் என தொண்டு நிறுவனத்தின் சார்பாக பேசிய ஜூலி வாட் தெரிவித்தார்.
தமது புதிய புள்ளிவிவரத் தரவுகளின் படி, பிரித்தானியாவின் மக்கள் தொகையில் அரைவாசிப் பேர் வரை, மிதமான உடற்பயிற்சியைக்கூட செய்வதில்லை என்றும், மற்ற பல ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இது மிகவும் அதிகமான அளவு என்றும் அவர் கூறினார்.
உடற்பயிற்சியும் அதனூடாக பேணப்படும் ஆரோக்கியமான வாழ்வும் ஆயுளைக் கூட்டும் என்பதே இந்த இரண்டு ஆய்வுகளின் ஒருமித்த முடிவாக வெளியிடப்பட்டுள்ளது.
========================================================================
மே-20.
- கமரூன் தேசிய தினம்
- ப்ளூடூத் வெளியிடப்பட்டது(1999)
- குவோமிங்தான் அரசு தாய்வானில் ராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது(1949)
- உலகின் முதலாவது நவீன அட்லஸை ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்(1570)
1506 - மே 20:
அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ், 'தாம் ஒரு புதிய கண்டத்தை கண்டு பிடித்திருக்கிறோம்' என்ற உண்மையை அறியாமல், இந்தியாவை மட்டும் கண்டுபிடித்து விட்டதாக கடைசி வரை எண்ணியிருந்து, இறந்தார்.
ஸ்பெயின் நாட்டு ராணி இசபெல்லா நிதியுதவியால், மூன்று கப்பல்கள், 80 ஊழியர்கள் சகிதமாக, 1492 ஆக., 3ம் தேதி கடற்பயணம் புறப்பட்ட அவர் கண்டுபிடித்த, 'புதிய பூமி'யில், ஏற்படுத்திய குடியேற்றங்கள் ஏமாற்றத்திலேயே முடிந்தன.
முதல் காலனியில் குடியேற்றப்பட்டவர்களை, அங்குள்ள பழங்குடிகள் கொன்று விட்டனர்; இரண்டாவது காலனியின் கவர்னராக, இசபெல்லா ராணியால் நியமிக்கப்பட்டவன், கொலம்பஸ் மீது பகை கொண்டு, பலவித குற்றம் சுமத்தி, கைதியாக்கி, கை விலங்கிட்டு, கப்பலேற்றி, ஸ்பெயினுக்கே திருப்பி அனுப்பி வைத்தான்.

ஸ்பெயினை அடைந்ததும், விடுதலை பெற்ற போதிலும், இந்த சம்பவங்களால் ஏற்பட்ட அவமானத்தால் மனம் உடைந்து, போற்றுவாரும், புலம்புவாரும் இன்றி, அனாதையாக இறந்து போன, கிறிஸ்டோபர் கொலம்பஸ் இறந்த நாள் !
பாலு மகேந்திரா.
1939 மே 20-ம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர், கல்லூரி அதிபர். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969-ல் தங்கப்பதக்கம் பெற்றார்.
ப்ரிட்ஜ் ஒப் ரிவெர் க்வாய் (Bridge of river kwai) திரைப்படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படும்போது பாலகன் பாலு மகேந்திரா அதனை காண நேர்கின்றது. அந்த தாக்கமே அவரை திரைப்படத்துறையில் ஈடுபாடுடையவராக்குகின்றது.
அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரைசெம்மீன் படப்புகழ் ராமு காரியத் அவரது நெல்லு படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972-ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத்தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் சுக்கு, ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி, சட்டக்காரி, பி என் மேனோனின் பணிமுடக்கு போன்றவை முக்கியமான படங்கள்.
தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். 1977-ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான கோகிலாவை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977-ல் வெளியாயிற்று. 1978-ல் தமிழில் அவரது முதல் படமான அழியாத கோலங்கள் வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பாலு மகேந்திரா தனது பேச்சுக்களின் போது படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுவார் "ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக்கொண்டிருக்கும்.ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய். உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார். வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவரே.
பாலு மகேந்திராவின் திறமையை பாராட்டி சத்யஜித் ராயின் ஒளிப்பதிவாளரும், இந்திய சினிமாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளருமாக கருதப்படும் சுப்ரதா மித்ரா தனது காட்சிக் காணியை பரிசாக வழங்கியுள்ளார்.
கடைசியாக தலைமுறை என்ற படத்தி இயக்கி அதில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
பாலு மகேந்திரா பெப்ரவரி 13, 2014 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.
பாலு மகேந்திரா.
1939 மே 20-ம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர், கல்லூரி அதிபர். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969-ல் தங்கப்பதக்கம் பெற்றார்.
ப்ரிட்ஜ் ஒப் ரிவெர் க்வாய் (Bridge of river kwai) திரைப்படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படும்போது பாலகன் பாலு மகேந்திரா அதனை காண நேர்கின்றது. அந்த தாக்கமே அவரை திரைப்படத்துறையில் ஈடுபாடுடையவராக்குகின்றது.
தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். 1977-ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான கோகிலாவை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977-ல் வெளியாயிற்று. 1978-ல் தமிழில் அவரது முதல் படமான அழியாத கோலங்கள் வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பாலு மகேந்திரா தனது பேச்சுக்களின் போது படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுவார் "ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக்கொண்டிருக்கும்.ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய். உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார். வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவரே.
பாலு மகேந்திராவின் திறமையை பாராட்டி சத்யஜித் ராயின் ஒளிப்பதிவாளரும், இந்திய சினிமாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளருமாக கருதப்படும் சுப்ரதா மித்ரா தனது காட்சிக் காணியை பரிசாக வழங்கியுள்ளார்.
கடைசியாக தலைமுறை என்ற படத்தி இயக்கி அதில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
பாலு மகேந்திரா பெப்ரவரி 13, 2014 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.
============================================================================================================
நலம் பெருக.சில.
மருத்துவ குணம் கொண்ட உணவு பொருட்கள் எளிமையாக கிடைக்கும் வகையில் இருப்பினும், அதில் இருக்கும் பயன்கள் மற்றும் மூலிகை குணங்களை நாம் அறிவதில்லை. இன்னும் சில பொருட்களை, எந்தெந்த உடல் பிரச்னைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாததால், அதனை பயன்படுத்துவதில்லை.
முதல் நாள் சோற்றில் நீர் ஊற்றி, அடுத்த நாள் உண்ணும் சாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள வைட்டமின்கள் அடங்கியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பழைய சாதம் உண்பதால் அதிலிருந்து பெருகும் சக்தி, நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் காய்ச்சல் உள்ளிட்டவை அணுகாது. வெப்பத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். சிறு குடலுக்கு நன்மை அளிக்கும்.
குடல் புண், ஒவ்வாமை, அரிப்பு போன்றவை சரியாகும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். உடல் எடை குறையும். உடலில் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை பெரும் அளவு உற்பத்தி செய்து உடலுக்கு நன்மை தரும். எனவே உடலுக்கு நன்மை செய்யும் எளிமையான உணவுகளை உண்ண வேண்டும்..
இவ்வாறு எளிமையாக கிடைக்கும் மருத்துவ பொருட்களில் ஜாதிக்காயும் ஒன்று.
ஜாதிக்காயை தூளாக அரைத்து அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், உடல் சூடு குறைவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வழக்கமாக, தூக்கமின்மை பிரச்னைகள் என்றாலே, ஆயுர்வேதத்தில் ஜாதிக்காயை பரிந்துரைப்பதுண்டு.

ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து குடித்தால், நன்றாக உறங்கலாம். மூளையின் செயல்பாட்டை தூண்டுகிறது. முகத்தில் ஏற்படும், பருக்கள், கிருமிகளை அறவே போக்கும் தன்மை இதற்கு உண்டு.
ஜாதிக்காய் பொடியுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவினால், கிருமிகளை முழுமையாக நீக்கிவிடும்.
முகத்தை பொலிவு பெற செய்வதற்கு, இப்பொடியை, தேன் அல்லது நீரில் குழைத்து முகத்தில் பயன்படுத்தினால், முகம் பொலிவு பெறுவதோடு, வெயிலினால் ஏற்படும் கருமையையும் அகற்றும். ஜாதிக்காய் பொடி யை, அன்றாடம் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலந்து தேய்த்து வந்தால், பொடுகு, வெள்ளை பூச்சுகள் குறையும்.
குழந்தைகளுக்கு, உணவில் கலந்து கொடுப்பதால், அஜீரண கோளாறுகள் நீங்கிவிடும். முதியோர்களின் மூட்டு வலி, தசை வலி போன்ற பிரச்னைகளை நீக்குவதற்கு, ஜாதிக்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். பலவீனமான பற்கள் மற்றும் கிருமிகளால் சொத்தை ஏற்படுவது போன்ற பிரச்னைகளை போக்கவும் ஜாதிக்காய் பயன்படுகிறது.