தொகுதிக்கு சேவை?

மக்களவை,மாநிலங்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு 
நிதி 1993-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 
அன்றைய காலக் கட்டத்தில் தொகுதிக்கு 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 
பி்ன்னர் 1994-95-ல் ஒரு கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்டது. 
1998-ல் அவை இரண்டு கோடியாக உயர்த்தப்பட்டது. 
கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இந்நிதி5 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான எம்.பிக்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்காமல் இருப்பதாக புள்ளியியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 542 தொகுதிகளில் ஆண்டு தோறும் தொகுதி மேம்பாட்டிற்காக சுமார் 5 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
 இந்த நிதி மூலம் எம்.பி ஒருவர் தனது தொகுதியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியும். 
இருப்பினும் கடந்த 15-ம் தேதி வரையில் எவ்வித பணியையும் மேற்கொள்ளாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆளும் பா.ஜ.க,கட்சியை சேர்ந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சட்டத்துறை அமைச்சர் சதானந்தாகவுடா, ரசாயணத்துறை அமைச்சர் அனந்த குமார் சிறு மற்றும் குறுந்தொழில் துறை அமைச்சர் கல்ராஜ்மிஸ்ரா, நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி ஆகியோர் தங்களது தொகுதி நிதியை பயன்படுத்தாமல் உள்ளனர்.

அதே போல் எதிர்கட்சியை சேர்ந்த சோனியா, சமஜ்வாடி கட்சியை சேர்ந்த முலாயம்சிங் யாதவ் ஆகியோரும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தாமல் உள்ளனர். 

பிரதமர் மோடி தன்னுடைய வாரணாசி தொகுதியல் சுமார் 16 சதவீதம் அளவிற்கு தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொகுதி மேம்பாட்டு நிதியை முழுவதுமாக பயன்படுத்தாத மாநிலத்தை பொறுத்த வரை யில் உ.பி. முதலிடத்தையும், மகராஷ்டிரா, பீகார் போன்றவை அடுத்தடுத்த இடத்தையும் பிடித்து வருகின்றன. 
தமிழ்நாடு , கேரளா , மேற்கு வங்க மாநிலங்களை பொறுத்தவரையில் திமுக,காங்கிரசு,கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியைபெரும்பாலான அளவிற்கு பயன்படுத்தியுள்ளனர்  கூறியுள்ளது.
========================================================================
இன்று,
மே -27.

  • நைஜிரியா குழந்தைகள் தினம்
  • பொலீவியா அன்னையர் தினம்
  • இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இறந்த தினம்(1964)
  • ரஷ்ய சார் மன்னன் முதலாம் பீட்டர், புனித பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தார் (1703)
========================================================================
ஜெயலலிதா தொடர்ந்து முதல்வராக நீடிக்க வேண்டும் என்றால், 6 மாதத்தில் தமிழகத்தில் இருந்து ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றிபெறவேண்டும்.  
அதற்கு வசதியாக, சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட ஆர்.கே.நகர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் கடந்த 17ம் தேதி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். 
உடனே ஆர்.கே.நகர் ெதாகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதைப்போல் ஜெயலலிதா பதவியிழந்த போது ஸ்ரீரங்கம்  தொகுதி காலியானது என்று அறிவிக்க பல நாட்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற ஜூன் மாதம் 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேகாலயா மாநிலத்தில் சோக்பாட் (தனி), கேரளாவில் அனுவிக்காரா, திரிபுராவில் பிரதாப்கர்க் (தனி), சுர்மா (தனி ), மத்தியபிரதேசம் கரோத், தமிழகத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் காலி இடம் ஏற்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்த தொகுதிகளில் ஜூன் 3ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய ஜூன் 10ம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 11ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். ஜூன் 13ம் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். 27ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதில் பதிவான வாக்குகள் ஜூன் 30ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் தமிழகத்தில் நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றுள்ளது. 

காரணம், தமிழக முதல்வர் ஜெயலிதா  தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லை. எனவே, அவர் ஆர்.கே.நகர் தொகுதியில்  போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. அவர் முதல்வராக அடுத்த ஆண்டு தேர்தல்  வரை இருக்க வேண்டும் என்றால், இந்த தேர்தலில் அவர் போட்டியிட்டு  வெற்றிபெற்றே ஆக வேண்டும். எனவே, அவர் ஆர்.கே.நகர் தொகுதியில்  போட்டியிடுவார் என்றே தெரிகிறது. அதே சமயம் எதிர்கட்சிகள் இணைந்து ெபாது வேட்பாளரை நிறுத்தலாம் என்று ஆலோசித்து வருவதாக கூறப்படுவதால், ஆர்.கே.நகர் ெதாகுதி இடைத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
தேர்தல் விதிகள் உடனடி அமல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. அதன்படி, இந்த தொகுதியில் நலத்திட்ட உதவிகள், புதிய அறிவிப்புகள், அரசு அதிகாரிகள் இடமாற்றம், புதிய அதிகாரிகள் நியமிப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய முடியாது.

குறிப்பாக, தமிழக அரசு செயல்படுத்தி வரும் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் உள்ளிட்ட இலவச திட்டங்கள் எதுவும் சென்னை மாவட்டத்துக்குள் வழங்க அனுமதி கிடையாது. ஆனால், மக்களின் அத்தியாவசியான திட்டங்களான குடிநீர், சாலை, மின்சார வசதிகள் செய்ய தடை இருக்காது. குறிப்பிட்ட ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். அதன்படி இன்று முதல் வாகன சோதனைகளை அவர்கள் தொடங்குவார்கள். முதல்வர், அமைச்சர் உள்ளிட்ட யாரும் அரசு வாகனங்களில் தொகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
===========================================================
சருமம்
----------------
சருமம் பற்றிய புரிதல் அதிகம் இல்லாமல், நம்மில் பலர் இருக்கின்றனர். வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் மிக மென்மையான சருமம் என, மூன்று வகைகளாக இருக்கிறது.
 மிக மென்மையான சரும வகையை சேர்ந்தவர்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சருமத்துக்கான பிற பொருட்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

மென்மையான சருமத்தினரை அதிகம் பாதிப்பது எதுவென்றால், சருமம் எளிதில் சிகப்பாக மாறுவது, மாய்ச்சரைசர்கள் உட்பட அனைத்து பொருட்களுக்கும் சருமத்தில் எதிர் விளைவுகள் உண்டாவது, சூரிய வெப்பத்தால், பாதிப்புக்கு உள்ளாவது, வெப்பம், குளிரில் விரைவாக பாதிக்கப்படுவது ஆகியவற்றை சொல்லலாம். 
இவர்கள், அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை, போதியளவு குறைக்க வேண்டும். வாசனையற்ற, கிளென்சிங் மூலம் சருமத்தை சுத்தப்படுத்திய பின், மாய்ச்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம். 
அழகு சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு முன், சரும நிபுணரிடம் கேட்டறிவது நல்லது. பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் ஆகியவை மென்மையான சருமத்தினருக்கு சிறந்தது.

சரும பாதுகாப்பு
பவுடர் மேக்-அப் பயன்படுத்துவது நல்லது. திரவ பவுண்டேஷன் பயன்படுத்தினால், சிலிக்கானை அடிப்படையாக கொண்ட பவுண்டேஷனை பயன்படுத்துவது சருமத்துக்கு நல்லது. கண்களுக்கான அழகுப் பொருட்களில், பழைய பொருட்களை பயன்படுத்தக் கூடாது. பவுண்டேஷன் மற்றும் லிப்ஸ்டிக்கை, ஓராண்டு வரை பயன்படுத்தலாம். மஸ்காராவை, மூன்று முதல் நான்கு மாதங்கள் வரையே பயன்படுத்த வேண்டும். 
முகப்பவுடரை இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். மேக்-அப் பிரஷ் மற்றும் ஸ்பான்ஜ்களை அடிக்கடி முறையாக சுத்தம் செய்ய வேண்டும். பென்சில் ஐ லைனர், மெழுகை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுவதோடு, அவற்றில் பதப்படுத்தும் பொருள் குறைவாகவே சேர்க்கப்படுகிறது. 
இதனால், பென்சில் ஐ லைனர் பயன்படுத்துவது நல்லது. 
திரவ ஐ லைனரில், சேர்க்கப்படும் லேட்டக்ஸ், மென்மையான சருமத்தை உடைய சிலருக்கு, ஒவ்வாமையை தோற்றுவிக்கலாம். 
அதிகபட்சமாக, 10 பொருட்கள் மட்டுமே சேர்த்து தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதே சாலச்சிறந்தது. 
எந்த ஒரு புதிய அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பும், முறையான சோதனை செய்ய வேண்டும். 
மென்மையான சருமத்தினர் ஒரு நாளைக்கு, மூன்று முறைக்கு மேல் அடிக்கடி முகம் கழுவுவதை தவிர்க்க வேண்டும். 
அடிக்கடி முகம் கழுவினால், தோலில் இயற்கையாக காணப்படும் எண்ணெய் தன்மை போய்விடும்.
========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?