இந்திய வரலாற்றிலேயே......

வருவாய்க்கு மீறி ரூ.66.65 கோடி சொத்துக்குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும்,
 ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனி நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பிணையை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்துள்ள இந்திய உச்சநீதிமன்றம்,
ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்,
இதற்காக சிறப்பு அமர்வு ஒன்றை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்திற்கு ஆணையிட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய நீதித்துறை வரலாற்றில் இதற்கு முன் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரியவில்லை. 
கடந்த காலத்தில் இதே போன்ற கோரிக்கை ஜெயலலிதா தரப்பில் முன்வைக்கப்பட்டபோது அதை உச்சநீதிமன்றம் நிராகரித்த வரலாறு உள்ளது.
ஆனால்  சதாசிவம்,லோதா,தத்து பதவியேற்புக்குப் பின்னர் உச்ச நீதிமன்றம் ஜெ கூறுவதற்கெல்லாம் ஒத்துப்போவதாகவே தெரிகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நிலுவையிலுள்ள கிரிமினல் வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உதவ வேண்டும் என்று கடந்த ஜூன் 11ல் பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டார்.
ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, “சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதற்காக அவர்கள் மீதான வழக்குகளை விரைவாக நடத்தினால், அதன் காரணமாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மற்ற வழக்குகள் பாதிக்கப்படும். 
குறிப்பிட்ட சிலரின் வழக்குகளை விரைவாக நடத்துவதை விட அனைத்து வழக்குகளையும் விரைந்து விசாரிப்பதற்கான நடைமுறையை உருவாக்குவது தான் சிறந்தது” என்று தெரிவித்திருந்தார்.
அப்படியானால் “இத்தகைய சூழலில் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்? ”
என்பது தான் மக்கள் மனதில் எழுந்துள்ள மிகப்பெரிய வினாவாகும்.
 ஊழல் வழக்குகள் விரைந்து விசாரித்து முடிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கம் கூட இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த நல்ல நோக்கத்தை காட்டுவதற்குக்கூட இவ்வழக்கு தகுதியற்றது என்பது தான் மக்களின் கருத்தாகும்.
அதிகபட்சமாக ஓராண்டிற்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டிய சொத்துக்குவிப்பு வழக்கை 17 ஆண்டுகளுக்கு இழுத்தடித்தவர் ஜெயலலிதா. இல்லாத காரணங்களைக்கூறி வழக்கு விசாரணையின்போது 185 முறை வாய்தா வாங்கியவர்.
இப்படிப்பட்ட ஜெயலலிதா அவரது சொந்த நலனுக்காக மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று கோரும்போது, உச்சநீதிமன்றத்திற்கு அதை ஏற்க வேண்டிய தேவை என்ன? 
என்பது தான் என்னை போன்றவர்களின் மனதில் எழும் வினா.
உச்சநீதிமன்றத்தில் 64,919 வழக்குகள் உட்பட நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மொத்தம் 3.15 கோடி வழக்குகள் பல ஆண்டுகளாக தேங்கிக்கிடக்கின்றன. 
காவிரி பிரச்சினை தொடர்பான வழக்குகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் தீர்வு ஏற்படவில்லை.
”காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் மனு மீதான விசாரணை விரைவுபடுத்தப்படவில்லை.
 செய்யாத குற்றத்திற்காக 24 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரும் தண்டனைக்காலம் முடிவடைந்த பிறகும் விடுதலை செய்யப்படாதது குறித்த வழக்கின் விசாரணை விரைவுபடுத்தப்படவில்லை.
எந்தத்தவறும் செய்யாத இலட்சக்கணக்கானோர் விசாரணை கைதிகளாகவே தண்டனைக்காலத்தை விட அதிக காலம் சிறையில் வாடும் சோக வரலாறு நம்முன் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் குற்றவாளி ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை மட்டும் விரைந்து விசாரித்து முடிப்பதன் மூலம் நாட்டுக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடப்போகிறது? என்பது தான் தெரியவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, அதை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று ஆணையிடாத நீதிமன்றம் இப்போது மட்டும் அவசரம் காட்டுவது ஏன்? என்ற வினா மக்களிடையே எழுந்துள்ளது.
தாமதிக்கப்பட்ட நீதி… மறுக்கப்பட்ட நீதி என்பதைப்போல, அவசரம் காட்டப்படும் நீதி….. புதைக்கப்பட்ட நீதி என்பதை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது ஏன் எனத்தெரியவில்லை.
அதுமட்டுமின்றி, இந்த வழக்கை இரு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும், அடுத்த ஒரு மாதத்தில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது இவ்வழக்கை விசாரிக்கவிருக்கும் நீதிபதிகள் மீது ஒருவிதமான அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் ஜெயலலிதாவின் பிணை மனுவை முடித்து வைக்காமல் இன்னும் ஆய்விலேயே வைத்திருப்பதும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அரியானாவில் ஆசிரியர் நியமன ஊழலில் த
ண்டிக்கப்பட்ட அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 123 நாட்களுக்கு பிறகு தான் பிணை வழங்கப்பட்டது. கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் 75 நாட்களுக்கு பிறகே பிணையில் விடுதலையாக முடிந்தது. இவர்களின் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, பிணை விதிகளை மீறியதாகக் கூறி ஓம்பிரகாஷ் சவுதாலா மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், நீதித்துறையை அடுத்தடுத்து அவமதித்த ஜெயலலிதாவுக்கு நிபந்தனைகளே இல்லாமல் இடைக்கால பிணை வழங்கப்படுகிறது அவர் கோரியவாறு மேம்முறையீட்டு மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது “சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானா?”
என்ற வினா சாமானியர் மனதில் மீண்டும் மீண்டும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
                                                                                        -மருத்துவர்  ராமதாஸ் .
====================================================================================================
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்.


கிறித்துவ மயக்கம்

கிருத்துவ மதம் கடலோரப் பகுதிகளில் பரவி, பின் வளர்ந்தது. அதற்குக் 
காரணம் அங்கு இருந்த இயற்கை வளங்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் 
கொண்ட கிறித்தவ மதப் போதகர்களே.

1. கடல்நீர் கரிப்பதையும், கடலுக்கருகே மணலில் தோண்டப்படும் கேணிநீர்
 இனிய சுவை தருவதையும், கர்த்தரின் மகிமை என்றனர். 
கல்வியறிவில்லா பாமரர் மனம் அதை மெய்யென்று நம்பத்தூண்டியது
; நம்பினர்.


2. கடல் நண்டுகளின் ஓடுகள் மேல் + குறி இருந்தது. அதனை கிறித்துவ மதப் 
போதகர்கள் தங்கள் மதக்குறி என்று சொல்லி ஏய்த்தனர்.

3. தங்களிடம் இருந்த சில உளநூல் திறத்தாலும் கல்வியறிவின்றி இருந்த
கடற்கரைப் பகுதி மக்களை தங்கள் சாதுர்யப் 
பேச்சுக்களால்கர்த்தரைப்பற்றியும், இயற்கையான வற்றையெல்லாம்
 (கண்டதையெல்லாம்) கர்த்தரின் படைப்பால் பாமரர் 
மயக்கமுற தேமதுர இசையொலியையும், பாடல் களையும், கர்த்தரின் 
குணாதிசயங்களாக அன்பையும், அருளையும் 
சொல்லி கிறித்துவ மதத்தைப் பரப்பினர்.

மேலும் அவர்களுக்கு தேவையான சமயத்தில் வினோதமான சிலஅறிவியல்
 கருவிகளைக் காட்டி அவைகளையெல்லாம் 
கர்த்தர் தந்ததாகக் கூறியதோடு, அவற்றை அவர்களுக்குத் தந்தனர். 
பணஉதவி, படிப்புதவி இவைகளாலும் எதற்கு 
மயங்குவானோ அதையும் தந்து தம் மதம் என்னும் மயக்கத்திலாழ்த்தினர்.  

அவர்கள் எங்கள் நாட்டுக்கு கப்பலில் வந்து இறங்கிய போது அவர்களிடம்
 பைபிளும் எங்களிடம் நிலங்களும் இருந்தன.
இப்போது அவ்ர்களிடம் எங்கள் நிலங்களும் எங்கள் கைகளில் அவர்களின் 
பைபிளும் இருக்கின்றன,
-இது ஆப்ரிக்க கவிதை?
                                                                                                                                                                                                                    -பாணன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?