இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 27 ஜனவரி, 2016

பத்ம விருது பெற்ற பத்தரை மாற்று தங்கங்கள்!

இவ்விருதுக்கு தகுதி பெற்றுள்ள சில அறிவு ஜீவிகளைப்பற்றி நம் பார்வை:
முதலாவதாக இந்தி நடிகர் அனுபம் கேர் விருது பெற்றுள்ளார். 
இவர் பச்சை காஷ்மீர் பண்டித ஆர் எஸ் எஸ் பார்ப்பனர். இன்று வரை சுகபோக வாழ்வு வாழும் காஷ்மீரி பண்டித பார்ப்பனரகள் ஏதோ சாப்பாட்டிற்கே வழியில்லாமல் சிரமப்படுவதைப்போலவும் அவரகள் காஷ்மீருக்கு திரும்ப முடியாமல் இருப்பதாகவும் படம் காண்பித்து கொண்டிருப்பவர். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மற்றும் சிறப்பு சட்டப்பிரிவு ஆர்ட்டிக்கில் 370 ஐ நீக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளுடன் சேர்ந்து போராடிக்கொண்டிருப்பவர். 2010 ஆம் ஆண்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட போது இவ்விருதுகள் கேலிக்கூத்து, நம்பகத்தன்மையற்றது என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார். ஆனால் இன்று தன் பெயர் இருப்பதை அறிந்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி, பெருமையடைந்தேன். இது தன்னுடைய வாழ்நாளின் மிக பெரிய தருணம் என்று புளங்காகிதம் அடைந்திருக்கிறார். இவருக்கு பார்ப்பனர் என்ற மனு தர்ம அடிப்படையில் இந்த விருது தரப்பட்டுள்ளது என்பதை தவிர குறிப்பிடத்தக்க தகுதி வேறொன்றுமில்லை.
முன்னால் மத்திய கணக்கு ஆய்வாளர் வினோத் ராய் 
இரண்டாவது ஜெயாவின் வருமானத்திற்கு மேலாக முறையற்ற வகையிலான சொத்துகுவிப்பு வழக்கில் அதிசயமும் வரலாற்று சிறப்பும் மிக்க தீர்ப்பு எழுதிய கர்நாடக (பெங்களூரு) சிறப்பு உயர்நீதி மன்ற நீதிபதி கணித அறிஞர் குமாரசாமிக்கு கணிதப்பாடம் சொல்லிக்கொடுத்த பேராசிரியர் முன்னால் மத்திய கணக்கு ஆய்வாளர் வினோத் ராய் பெயரும் இடம் பெற்றுள்ளது.
padma awards 2016
இவர் தகவல் தொடர்பு துறையில் மிகப்பெரிய புரட்சி செய்து ஒரு சில பனியா நிறுவனங்களின் ஏக போக உரிமையில் இருந்த 2ஜி என்ற அலைக்கற்றையை தகவல் தொடர்பு உரிமையை எல்லோருக்கும் குறைந்த விலைக்கு பகிர்ந்தளித்து இன்று வறிய மற்றும் எளிய மக்களும் கூட கை பேசி வைத்திருக்க காரணமான மேனாள் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா அவர்களின் மீது 1,70,000 கோடி இழப்பு ஏற்படுத்தினார் என்று அபாண்டமாக குற்றச்சாட்டு கூறிய இந்த நவீன கணக்கு மேதை வினோதமான வினோத் ராய் ஆர் எஸ் எஸ் பாரதிய ஜனதா இயக்கத்தினரின் கைப்பாவையாவார் .
இதில் குறிப்பிடத்தக்க ஒன்று பாரப்பன பாரப்பனீய அடிமை ஊடகங்கள் தங்கள் வசதிக்கேற்ப மறந்து விட்ட ஒரு உண்மை இன்று 2ஜி அலைக்கற்றை போய் 3ஜி அலைக்கற்றை போய் 4ஜி அலைக்கற்றை வந்து விட்டது. கடந்த வருடம் 4ஜி அலைக்கற்றைக்கான பிரம்மாண்ட ஏலத்தொகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஏலம் உச்சநீதிமன்றத்தின் நேரிடையான மேற்பார்வையில் ஏலம் விடப்பட்ட போது இந்த கணித மேதை வினோத் ராய் குறிப்பிட்ட இழப்புத்தொகையின் பாதி அளவுக்கு கூட ஏலத்தொகை போகவில்லை என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
தாழ்த்தப்பட்டவர் உயர் பதவி வகித்ததுடன் மிகப்பெரிய புரட்சி செய்து பனியா நிறுவனங்களின் ஏக போக உரிமையில் கை வைத்த ஒரே காரணத்திற்காக எல்லா நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து ஆ.ராசாவை ஒழிக்க பாரப்பன ஊடகங்களின் உதவியுடன் மேற்கொண்ட முயற்சியில் பெரும்பங்கு வகித்தவர்தான் இந்த வினோத கணக்கு சொன்ன வினோத் ராய்.
இதற்க்கான பிரதி பலன்தான் இன்று கிடைத்திருக்கும் இந்த விருது வெகுமதி எல்லாம்...
அடுத்து நமது AYYAR THE GREAT ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்.
யார் இந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜிஜிஜி?
இரவிசங்கரன் அய்யர் - தஞ்சாவூர் ஜில்லா பாபனாசம் பெருமாள் கோவில் தெற்கு மட விளாகத்தில் பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர், பாபனாசம் மேல வீதி வித்தியா பாட சாலையில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்புவரை கல்வி கற்றார், படிக்கும்போது ஒழுக்கக் குறைவாக பள்ளியில் நடந்துகொண்டதால், பள்ளியின் தாளாளர் நாகசுப்பிரமணிய அய்யர் இரவிசங்கரனைப் பள்ளியிலிருந்து வெளியேற்றி விட்டார்.
வீட்டில் பெற்றோர்கள் கண்டித்ததனால், ஊரை விட்டு ஓடிவிட்டான் சிறுவன். 
1944 ஆம் ஆண்டு ஓடிய அச்சிறுவன், 2000 ஆம் ஆண்டு பாபனாசம் வந்து தன் பெற்றோர்கள் வாழ்ந்த ஓட்டு வில்லை வீட்டைப் பழுது பார்த்து, அதில் ஒரு அறைக்கு மட்டும் சலவைக்கல் பதித்து அழகுபடுத்தினார். தேக்கு மரத்தால் கட்டினார். கும்பகோணம் வட்டம் திம்மகுடியில் பிள்ளையார் கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்தார். கும்பாபிசேக நிகழ்ச்சிக்கு கர்நாடகாவிலிருந்து பேருந்து மற்றும் காரில் 100 பேரை அழைத்து வந்தார். அவர்களுக்குத் தான் பிறந்த பாபனாசம் வீட்டின் அறையைக் காட்டினார். இந்த அறையில்தான் பிறந்தேன் என்று பெருமையாகக் கூறிக் கொண்டார். விளம்பரப் பிரியர், பாபனாசத்தில் தன் செலவில் விளம்பரம் செய்து உள்ளூர்காரர்களைக் கூட்டி, யோக தியானம், மூச்சு அடக்கல், செய்யத் தூண்டினார். 
கர்நாடகா அரசு தன் பணிக்கு 230 ஏக்கர் தரிசு நிலம் தந்திருக்கிறது எனவும் கூறிக் கொள்கிறார். இனமாக தந்ததாம் கர்நாடகா அரசு. 
பெங்களூருக்கு அருகில் ஒரு மலையை அரசிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்து “வாழும் கலை’யைக் கட்டணம் வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கும் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கரின் வருடாந்திர வர்த்தக மதிப்பு 400 கோடி.
சாமியாராகி விட்டால் பழசெல்லாம் மறந்து போகுமா? 
பழசை மறக்கடிக்கத்தான் சாமியார் வேடமா? 
அண்ணா சொன்னதுபோல விதைக்காது விளையும் கழனி, முதலில்லா வியாபாரமாயிற்றே சாமியார் தொழில்! 
இரவிசங்கர் அய்யர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி ஆன மர்மம் இதுதான்!
இவர் ஏற்கனவே ஆப்கான் பாலஸ்தீன மற்றும் ஈரான் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டவர் இந்நாளில் அந்த நாடுகளில் நிலவும் அமைதிக்கு இவர் கண்ட தீர்வு காரணம் என்பதை மறுக்க இயலாது இவருக்கு விரைவில் “Noபல்” ( Noble Prize) பரிசு விரைவில் கிடைக்க இருக்கிறது.
மேலும் இவர் முன்னால் இலங்கை அதிபர் ராஜ்பக்ஷேவின் மிக நெருங்கிய நண்பர்.
இதன் மூலம் மதிமுகவின் பொதுச்செயலாளர் வை கோபால்சாமியுடன் இணைந்து இலங்கை பிரச்சினைக்கு தீர்வு எட்டியிருக்கிறார் என்பது நமக்கு கிடைத்த தகவல். இவரை கடந்த வருடம் வைகோ அவர்கள் 45 நிமிடங்கள் சந்தித்து பேசியதற்கான காரணம் இதுதான்.
இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கண்ட காரணத்தினால்தான் இவருக்கு இந்த அரிய விருது கிடைத்திருக்கிறது என்று நம்புவோமாக
 மசாலா நடிகர் ரஜினிகாந்த் 
அடுத்து கடைசியாக நமது மண்ணுக்காக இனத்துக்கு இன்றளவும் தன்னை அர்ப்பணித்து கொண்டிருக்கின்ற அரசியல் புரோக்கர் சோ மற்றும் மேக் இன் இந்தியா புரட்சியாளர் கருப்பு பணத்தை மீட்டு இந்திய மக்களுக்கு பதவியேற்ற 100 நாட்களில் பகிர்ந்தளித்த ஏழை பங்காளர் செல்ஃபி அறிஞர் மோடி அவர்களின் நெருங்கிய நண்பருமான சூப்பர் டூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கிடைத்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?
இந்தியா முழுவதும் ஆறுகளை இணைக்க குரல் கொடுத்தது மட்டுமல்ல அந்த திட்டத்திற்கான முழு செலவையும் ஏற்று பல கோடி ரூபாய் பணத்தை அரசாங்கத்துக்கு அளித்ததும் ஒரு காரணம்.
இரண்டாவதாக சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதித்த மக்களுக்காக தான் இது வரை சம்பாதித்த மொத்த வருமானமான ரூபாய் 10 லட்சத்தை கருணை மனதுடன் அளித்த வள்ளல்தன்மையும் காரணமாம்.
நமது கவலையெல்லாம் இந்த முறை ஏற்பட்ட ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில்அடுத்த ஆண்டாவது ,பாரத ரத்னா விருதுக்கு சர்வதேச அரசியல் புரோக்கர் சுப்ரமணியம் சுவாமியும் மற்ற விருதுகள் ஆசிர்வாதம் ஆச்சாரி,ஆடிட்டர் குருமூரத்தி, தினமணி வயித்தியநாத அய்யர், துக்ளக் சோ, சிந்தனையாளர் ராமசுப்ரமணியன் மற்றும் பானு கோம்ஸ் போன்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் மேலும் பாரப்பன சமுதாய முன்னேற்றத்திற்காக சேவையில் ஈடுபட்டுள்ள பிராமணர் சங்கத்தலைவர் நாராயணன் அவர்களுக்கு சிறந்த சமுதாய சேவகருக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்பதுதான்.
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது ஈரோட்டு கண்ணாடியின் உதவியுடன் உற்று பார்த்தால் எல்லா உண்மைகளும் அவாளின் கூட்டு சதியும் தெரிகிறது. 
அய்யா பெரியார் அடிக்கடி சொல்வார் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்று அது இந்த மத்திய அரசின் பத்ம விருதுகளின் அறிவிப்பின் மூலம் வெளி வந்து விட்டது.
                                                                                                                                               -செல்வம்,
நன்றி:கீற்று.


==================================================================================================

மனநோய் பற்றிய சில உண்மைகள்


உங்களுக்கு மனநோய் இருக்குனு டாக்டர் சொன்னா, உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்க குடும்பத்தில இருக்கிற யாருக்காவது மனநோய் வந்தா நீங்க என்ன செய்வீங்க? கவலைப்படாதீங்க, மனநோயை குணப்படுத்த முடியும். முதல்ல, மனநோய்னா என்னனு நாம தெரிஞ்சிக்கலாம்.*

சில உண்மைகள்

“உலகம் முழுசும் கோடிக்கணக்கான மக்கள் மனநோயால பாதிக்கப்படுறாங்க. உலகத்தில இருக்கிற, 25 சதவீத மக்களுக்கு வாழ்க்கையில ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில மனநோய் வருது. நிறைய பேர் மனச்சோர்வால (Depression) கஷ்டப்படுறாங்க. மனச்சிதைவும் (Schizophrenia) பைபோலார் டிஸாடரும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும். . . . நிறைய பேர் மனநோயால பாதிக்கப்பட்டாலும், அந்த நோயை பத்தி வெளில சொல்றதில்ல, சிகிச்சையும் எடுக்கிறதில்ல. மக்களும் மனநோய் வந்தவங்களை ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள் .”

—உலக சுகாதார அமைப்பு (WHO).
மனநோய் இருக்கிறது தெரிஞ்சா, மத்தவங்க கேவலமா நினைப்பாங்களேனு, நிறைய பேர் சிகிச்சை சில எடுத்துக்க தயங்குகிறார்கள் .—உலக சுகாதார அமைப்பு.
நிறைய விதமான மனநோயை குணப்படுத்த முடியும். இருந்தாலும், நிறைய பேர் அதுக்கு சிகிச்சை எடுக்கிறதில்லை. அமெரிக்காவுல, மனநோயால பாதிக்கப்பட்ட 60 சதவீத பெரியவங்களும் 50 சதவீத இளைஞர்களும் (8-15 வயசு) சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை.—நேஷ்னல் அலயன்ஸ் ஆன் மென்டல் இல்னஸ்.

மனநோய் என்றால் என்ன?
மனநோய் இருக்கிறவங்களால உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது, சரியா யோசிக்க முடியாது; மத்தவங்களோட சகஜமா பழக முடியாது. தினம் தினம் வாழக்கையை ஓட்டுறதே அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்.
கெட்ட குணங்கள் இருக்கிறதுனாலயோ, பலவீனம் இருக்கிறதுனாலயோ ஒருத்தருக்கு மனநோய் வரும்னு சொல்ல முடியாது
மனநோய் இருக்கிற எல்லாருக்கும், ஒரே மாதிரி அறிகுறிகள் இருக்காது. சிலருக்கு அந்த அறிகுறிகள் அதிகமா தெரியும், சிலருக்கு அந்தளவுக்கு தெரியாது; சிலர் ரொம்ப நாள் கஷ்டப்படுவாங்க, சிலருக்கு கொஞ்ச நாள்லயே சரியாயிடும். அவங்களுக்கு வந்திருக்கிற மனநோயை பொறுத்தும் அவங்களோட சூழ்நிலையை பொறுத்தும் அந்த அறிகுறிகள் மாறும். ஆண்-பெண், சின்னவங்க-பெரியவங்க, படிச்சவங்க-படிக்காதவங்க, ஜாதி-மதம்னு வித்தியாசம் இல்லாம யாருக்கு வேணாலும் மனநோய் வரலாம். ஒருத்தர்கிட்ட கெட்ட குணங்கள் இருக்கிறதுனாலயோ, பலவீனங்கள் இருக்கிறதுனாலயோ அவருக்கு மனநோய் வரும்னு சொல்ல முடியாது. மனநோயால பாதிக்கப்பட்டவங்க சரியான சிகிச்சை எடுக்கும்போது எல்லார் மாதிரியும் சந்தோஷமா வாழ முடியும்.

சிகிச்சை எடுக்க தயங்காதீங்க

மனநோய்க்கு சிகிச்சை எடுக்கிறது ரொம்ப முக்கியம். சிகிச்சை எடுக்கிறதுக்கு முன்னாடி, நல்ல மனநல ஆலோசகர்கிட்டயோ மனநல மருத்துவர்கிட்டயோ ஆலோசனை கேளுங்க.சரியான சிகிச்சை எடுத்தாதான் நல்ல பலன் கிடைக்கும். மனநல ஆலோசகர்கிட்ட தயங்காம எல்லா விஷயத்தையும் சொல்லுங்க. அப்பதான், உங்களுக்கு வந்திருக்கிற மனநோயை பத்தி புரிஞ்சிக்க முடியும். நீங்க தொடர்ந்து சிகிச்சை எடுக்கிறதுக்கும் உங்க பிரச்சினைகளை சரிசெய்றதுக்கும் அவர் உங்களுக்கு உதவி செய்வார். மருத்துவரையோ ஆலோசகரையோ பார்க்க போகும்போது, ஒரு நண்பரோ குடும்பத்தில இருக்கிற ஒருத்தரோ கூடவே இருந்து உதவி செய்றது ரொம்ப முக்கியம்.
மனநோய் வந்த நிறைய பேர் அதை சமாளிச்சிருக்காங்க. அதுக்கு காரணம், அவங்களுக்கு வந்த மனநோயை பத்தி நல்லா தெரிஞ்சிகிட்டாங்க, தொடர்ந்து சிகிச்சை எடுத்தாங்க. 
சிகிச்சை எடுக்கிறதுக்கு முன்னாடி, நல்ல மனநல ஆலோசகர்கிட்டயோ மனநல மருத்துவர்கிட்டயோ ஆலோசனை கேளுங்க
ஒரு மனநோயாளியின் உணர்வு...
“மனநோய் வந்ததுக்கு அப்புறம், என்னால சில விஷயங்களை செய்ய முடியல. படிக்கனும்னு நினைப்பேன், ஆனா, என்னால சரியா கவனம் செலுத்த முடியாது. மத்தவங்களை விட்டு ஒதுங்கியே இருப்பேன். நண்பர்கள்கிட்டகூட சரியா பேச மாட்டேன். சிலர் எனக்கு ஆறுதல் சொல்வாங்க; ‘கவலப்படாதீங்க, எல்லாம் சரியாயிடும், நீங்க நினைக்கிற அளவுக்கு இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை, இதை பத்தியே யோசிக்காம, வாழ்க்கையில இருக்கிற நல்ல விஷயங்களை பத்தி யோசிச்சு பாருங்க’னு சொல்வாங்க. அவங்க ஆறுதலா பேசனும்னு நினைச்சுதான் இதையெல்லாம் சொல்றாங்கனு எனக்கு தெரியுது. அவங்க சொல்ற மாதிரி செய்யனும்னுதான் நானும் நினைக்கிறேன். ஆனா, அவங்க சொல்றதெல்லாம் கேட்டா எனக்கு இன்னும் கஷ்டமாதான் இருக்கும். எதுக்குமே லாயக்கில்லைனு தோனும். நான்தான் சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் பெரிசுபடுத்துறேனோனு தோனும்.”
.