திங்கள், 11 ஜனவரி, 2016

மது அருந்தும் முறை எப்படி?

அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், மது குடிப்பவர்களுக்கு எப்படி மது குடிக்கலாம் என்று  புதிய வழிகாட்டு நெறிமுறைகள் லண்டன் ஆய்வாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளன.
எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அந்த வழிகாட்டல்  கூறுகிறது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது சிறந்தது என  தெரிவித்துள்ளனர்.
அதிகளவில் மதுபானத்தை அருந்துவதனால், புற்றுநோய்க்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
மதுபானத்தை தொடர்ச்சியாக அருந்துபவர்கள், வாரத்திற்கு 14 யூனிட்களுக்கு அதிகமாக அதனை உட்கொள்ளக்கூடாது என்று அந்த ஆய்வு பரிந்துரை செய்துள்ளது.
அதாவது, ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக ஆறு பைன்ட் அளவு பியர் அல்லது ஏழு கிளாஸ் வைன் ஆகியவற்றுக்கு மேலாக உட்கொள்வதை தவிர்க்குமாறு அந்த அறிவுறுத்தல் கூறுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் மது அருந்துவதை முழுமையாக தவிர்க்க வேண்டும் எனவும் அந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன.
தினந்தோறும் மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், வாரத்தில் சில நாட்கள், அதனை அருந்துவதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது எனவும் புதிய ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதிக அளவு மது அருந்துவதால் ஏற்படும் நோய்கள் தவிர , மது அருந்துபவர்களால்  வீதி விபத்து மற்றும் காயங்களுக்குள்ளாவதும் அதிகம் நடைபெறுவதாகவும் இந்த விபத்துகளால் மற்றவர்களு பாதிக்கப்படுவதாகவும்,மரணம் வரை உண்டாவதாகவும்  அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.


புதிய ஆய்வின் பரிந்துரையின்டி பியர் என்றால் ஒரு பைண்ட் அதாவது 576 மில்லி லிட்டர் அளவு, வைன் என்றால் 175 மில்லி லிட்டர் அளவு, விஸ்கி அல்லது ரம் போன்ற கூடுதல் ஆல்கஹால் கொண்ட மதுபானமாக இருந்தால் 50 மில்லி லிட்டர் அளவுகள் ஆகியவை சராசரியாக இரண்டு யூனிட் அளவுகளாக மதிப்பிடப்பட்டுள்ளன.
 முந்தைய வழிகாட்டலின்படி, ஆணொருவர் நாளொன்று மூன்று முதல் நான்கு யூனிட் அளவும், பெண்கள் இரண்டு முதல் மூன்று யுனிட் அளவும் மதுபானம் அருந்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய பரிந்துரை வாரத்திற்கே இருபாலாரும் அதிகபட்சமாக 14 யுனிட் மட்டுமே மதுபானம் அருந்துவதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளது.
பெண்கள் கர்ப்பிணியாக இருக்கும்போது, மது அருந்த வேண்டிய அளவு முன்னர் மட்டுப்படித்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் முழுமையாக மது அருந்தக் கூடாது என்று புதிய ஆய்வு பரிந்துரைக்கிறது
குறைந்தளவில் மது அருந்துவது மாரடைப்பை தடுக்கும் என முந்தைய சில ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும், அது உண்மையானதா என்று தொடர்ந்து ஆய்வு நடப்பதாகவும்  தெரிகிறது.
அத்தோடு, அதிக மது அருந்துவதனால் வாய், தொண்டை மற்றும் மார்பு ஆகிய பகுதிகளில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வுகள் பிரிட்டன் போன்ற மேலைய நாடுகளுக்குத்தான் பொருந்தும்.
காரணம் நாம் அயல்நாட்டு மது என்று டாஸ்மாக்கில் வாங்கி ஏற்றிக்கொள்ளும் மதுவகைகள் அனைத்துக்கும்  எரிசாராயம்தான் அடிப்படியாக உள்ளது ..
கலக்கப்படும் மற்ற கலவை,வண்ணம் பொன்றவைகளால்தான் அவை விஸ்கி,பிராந்தி,ஜின்,ரம் என்று 
சாதிபிரிவுகள் உண்டாக்கப்படுகின்றன.
ஆனால் கோதுமை ,பார்லி,மரப்பட்டைகள்,திராட்சை, மூலம்தான் மேலை நாட்டின் பாரம்பரிய மதுவகைகளான விஸ்கி,பிராந்தி,ஜின்,ரம் தயாராகின்றன.
நம் பாரம்பரிய மது வகைகள் கள்,வடி சாராயம்தான் . சாராயத்தையும் பழவகைகள்,கடுக்காய் போன்ற பொருட்களை வைத்தே நம் முன்னோர்கள் உண்டாக்கி மது அருந்தி வந்தார்கள்.இவைகள் அவர்களின் வலிமையை கூட்டியதே ஒழிய வியாதிகளை உண்டாக்கியதில்லை.ஆனால் அவர்கள் போதையில் செய்த,செய்யக்கூடிய தவறுகளை தடுக்கவே கள்ளுண்ணாமை போன்ற கட்டுப்பாடுகள் உண்டானது.
அயல் நாட்டு மது வகைகளுக்கு  அவர்கள் கூறும் கட்டுப்பாடுகள் நம் ஊருக்கு ஒத்து வராது என்றே தெரிகிறது.
=======================================================================================================

இந்தியா மற்றும் இந்தியர்களை

 பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பல உண்மைகள்..!!!
1. அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 33% பேர் இந்தியர்கள்.
2. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12% பேர் இந்தியர்கள்.
3. உலகில் உள்ள ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 23% பேர் இந்தியர்கள்.
4. அமெரிக்க விண்வெளித்துறை நாசா"வில் (NASA) பணிபுரிபவர்களில் 36% பேர் இந்தியர்கள்.
5. உலகில் உள்ள இன்டெல் (INTEL) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 17% பேர் இந்தியர்கள்.
6. உலகில் உள்ள மைக்ரோசாப்ட் (MICRO SOFT) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 34% பேர் இந்தியர்கள்.
7. உலகின் அனைத்து மொழிகளுக்கும் வேராக முதல் தோன்றிய மொழி என்று எடுத்துக்கொள்ளப்படும் தமிழ் ஒரு இந்திய மொழி..
8. சமஸ்கிருதம் (SANSKRIT) தான் அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் வேர் மொழி.
9. இன்று உலகமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் அஞ்சலை (E Mail) உருவாக்கியபவர் சிவா ஐயாத்துரை என்ற இந்தியர்.
10. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவரான ஆர்யபட்டா (ARYABHATTA) ஒரு இந்தியர்.
11. எண்ணியல் முறையை உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.
12. அல்ஜீப்ரா"வை (ALGEBRA) உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.
13. சதுரங்க (CHESS) விளையாட்டை உருவாக்கியது இந்தியா.
14. இந்தியாவின் சமஸ்கிருத மொழி கணிணி மொழியுடன் மிகவும் ஒத்து போவதாக போர்ப்ஸ் (Forbes magazine) பத்திரிக்கை 1987"ல் அறிவித்தது.
15. நுண் கணிதம் (CALCULUS) உருவாக்கியது இந்தியா.
16. திரிகோணமிதி (TRIGNOMETRY) உருவாக்கியது இந்தியா.
17. கூகுள்"ன் (GOOGLE) தற்போதைய தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை ஒரு இந்தியர்.
18. ஹெச்.பி"யின் HEWLETT PACKARD (HP) பொது மேலாலர் ராஜீவ் குப்தா ஒரு இந்தியர்.
19. இன்று உலகில் உள்ள கணிணியில் பயன்படுத்தக்கூடிய பென்டியம் சிப் (PENTIUM CHIP) உருவாக்கிய வினோத் தாம் ஒரு இந்தியர்.
20. பை (PI) 3.14 "க்கான கணக்கீட்டை உருவாக்கிய புத்யானா (BHUTHYANA) ஒரு இந்தியர். ஐரோப்பிய கணக்கியல் உருபவாக்கத்திற்கு முன்பு 6"ஆம் நூற்றாண்டுகளிலேயே இதற்கான விளக்கத்தை உருவாக்கியவர்.
21. இந்தியாவில் தான் உலகிலேயே மிக அதிகமாக 5600 செய்தித்தாள்களும் 3500 வார மற்றும் மாத இதழ்களும் 1 கோடியே
20 லட்சம் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.
22. 2600 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை உடலுருப்பு, எலும்பு முறிவு, சிறிநீரக கற்கள் மற்றும் தலையின் மண்டை ஒட்டை பிளந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சுஸ்ருதா (SUSRUDHA) ஒரு இந்தியர்.
23. உலகிலேயே விலை உயர்ந்த 700 கோடி (70 MILLION POUNDS) ரூபாய் மதிப்புள்ள வீட்டை இங்கிலாந்தில் வைத்திருக்கும் இரும்பு தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ஒரு இந்தியர்.
24. உலகின் 4 ஆவது பலமான ராணுவத்தை கொண்டது இந்தியா.
25. மிக அதிகமான போர் வீரர்களை கொண்ட ராணுவத்தின் வரிசையில் 2 ஆம் இடம் இந்தியாவுக்கு.
=====================================================================================================  

இன்று,

ஜனவரி-11.  • இந்திய விடுதலை போராட்ட தியாகி திருப்பூர் குமரன் இறந்த தினம்(1932)
  • இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இறந்த தினம்(1966)
  • நீரிழிவுக்கு மருந்தாக மனிதனில் இன்சுலின் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது(1922)
  •    அல்பேனியா குடியரசு தினம்(1946)


=====================================================================================================
மாதுளை,

பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலை எந்த நோயும் தாக்காது. 
அதுவும் அந்தந்த பருவகாலங்களில் விளையும் பழங்கள், அதிக பலனை தரும். 
குறிப்பாக, மாதுளம்பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலை தாக்கும் முக்கிய நோய்களை விரட்டலாம்.
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. 
இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்துக்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தை போக்குகிறது; 
இருமலை நிறுத்துகிறது.
 மாதுளையை சாப்பிட்டால், வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. 
ரத்த பேதிக்கு சிறந்த மருந்தாகிறது. 
தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. 
பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. 
எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. 
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால், ரத்தவிருத்தி ஏற்படும். 
சீதபேதிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலவீனம் அடைந்தவர்கள், மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும்; எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. 
ஆண் தன்மையில் பலவீனம் உள்ளவர்கள், மாதுளம்பழம் சாப்பிடுவதால், மிகுந்த தியை பெறலாம்.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால், விக்கல் உடனே நிற்கும். 
அதிக தாகத்தைப் போக்கும். 
மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், உடல் சூட்டு நோய்கள் நீங்கும். 
சரீரம் குளிர்ச்சியடையும். 
காய்ச்சல் தணியும். 
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின், தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும்.
புதிய ரத்தம் உற்பத்தியாகும். மாதுளம் பூக்களை உலர்த்தி பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். 
மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு. 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக, மூன்று தினங்களுக்கு சாப்பிட்டால், பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூச்சாற்றை, 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த மூலம் நீங்கும். 
மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
மாதுளம் பூக்கள், 15 கிராம் எடுத்து, 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். 
மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்ப நோய்கள் தீரும்.