புத்தாண்டு கொண்டாட்டம்
பிற நாடுகளில்...எப்படி?
முதலில் இவங்கதான்!
புவியியல் அமைப்புப்படி, உலகத்திலேயே முதன் முதலில் புத்தாண்டை வரவேற்பவர்கள் நியூசிலாந்து மக்கள்தான்.
அதன் பிறகே நேரத்தை பொறுத்து மற்ற நாடுகள் புத்தாண்டு கொண்டாடுகின்றன.
நம் ஊரில் பொங்கல் விழாவின்போது நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளும் முக்கியமாக கிரிக்கெட், குதிரை சவாரி ஆகியவையும் இடம்பெறும்.
1 மற்றும் 14-ல்!
கடந்த காலங்களில் 'ஜீலியன்' காலண்டரின்படி ஜனவரி 14ம் தேதி புத்தாண்டை கொண்டாடி வந்தனர் ரஷ்யர்கள்.
ஆனால், தற்போது 'கிரிகோரியன்' காலண்டர் வழக்கப்படி ஜனவரி 1ம் தேதி கொண்டாடுகின்றனர். 'Sovim godom' என்று கூறி புத்தாண்டை வரவேற்கின்றனர்.
இங்கே கிறிஸ்துமஸ் மரம் என்று கூறுவதை, அங்கு புத்தாண்டு மரம் என்று கூறுகின்றனர்.
ஜனவரி 7ம் தேதி கிறிஸ்துமஸ் முடியும் வரை இந்த மரத்தை தங்களது வீட்டில் வைத்து சிறப்பிக்கின்றனர் ரஷ்யர்கள்.
மேலும், பழைய ஜீலியன் காலண்டர் வழக்கப்படியும் இங்கு புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.
மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தை வணங்கி புத்தாண்டை வரவேற்று பாரம்பரிய உணவுகளை சமைத்து உண்டு மகிழ்கின்றனர்.
திராட்சை தின்னு!
ஸ்பெயின் மக்களிடம் தொன்றுதொட்டு ஒரு பழக்கம் இருக்கிறது. அது என்னவென்றால், டிசம்பர் 31ம் தேதி அன்று இரவு 12 திராட்சைகள் உண்பதுவே. அந்த 12 திராட்சைகளையும் சரியாக 12 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.
அதுபோல நேரத்தை சரியாக பின்பற்றி 12 மணிக்கு கடைசி திராட்சையை உண்டு முடிப்பவர்களுக்கு அந்த வருடம் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும், செழிப்பாகவும் அமையும் என்பது அவர்களது நம்பிக்கை.
சிக்னல் நிறங்கள்!
புத்தாண்டை 'Agueros' என்ற பெயரில் கொலம்பியாவில் கொண்டாடுகின்றனர். இந்த வார்த்தை லத்தின் மொழியில் இருந்து வந்தது. புத்தாண்டுக்கு முந்தைய இரவில் 12 திராட்சையை உண்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். மேலும், அந்த 12 திராட்சையில் 6 பச்சை திராட்சைகளையும், 6 சிகப்பு திராட்சைகளையும் உண்கின்றனர்.
தேவாலயத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கு மணியோசை எழுப்பப்படும் போது ஒவ்வொரு திராட்சையாக உண்கின்றனர். அதை விட இவர்களுடைய விநோதமான பழக்கம், டிசம்பர் 31 இரவு முழுவதும் மஞ்சள் வண்ண கால்சட்டை அணிவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். வருகிற புத்தாண்டை மகிழ்ச்சிகரமாக வரவேற்கிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில் மஞ்சள் கால் சட்டை அணிவதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றனர்.
1...2...3... எல்லாம் ஓடுங்க!
'அனோ நோவெ' என்ற பெயரில் பிரேசில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுகிறது. நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜொலிக்கும் வண்ண விளக்குகளுடன் ரியோ டி ஜெனிரோவில் உள்ள பூங்காவில், அனைவரும் ஒன்று கூடி வான வேடிக்கையுடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.
மேலும், இவர்களிடம் ஒரு புதுமையான பழக்கம் இருக்கிறது.
டிசம்பர் 31 அன்று இரவு அனைவரும் வெள்ளை ஆடை அணிந்து கொள்கின்றனர்.
கெட்ட ஆவிகளை துரத்தி இந்த வருடத்திலிருந்து நல்லவைகளே நம்மை நெருங்க வேண்டும் என்ற நம்பிக்கைதான்.
உணவு நிறைவு!
ஜனவரி முதல் நாள் பொழுது விடிந்ததும் கையில் ரொட்டி துண்டும், நிலக்கரி கட்டியும் வைத்துக் கொண்டு நண்பர்கள் வீட்டுக்கு செல்வது வழக்கம். இப்படி சென்றால் இருவருடைய வீடுகளிலும் ஆண்டு முழுவதும் உணவுக்கு பஞ்சமே இருக்காது என்கின்றனர்.
இது இங்கிலாந்து தேசத்து நம்பிக்கை.
சத்தமும், சவாரியும்!
புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணி முதல் விசில் சத்தம் தருகின்றனர் பல நாடுகளில்.
அதன் கூடவே கிலுகிலுப்பை சத்தமும்! அந்நேரத்தில் குதிரை போன்ற விலங்குகளின் மீது சவாரி செய்வதும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.
பார்த்து மாடு சாப்ட்றபோகுது!
குட்டி நாடென்றாலும் படு சுட்டி நாடு ஜப்பான். புத்தாண்டு அன்றைக்கு வீடுகளின் முன்னால், வைக்கோலால் செய்த கயிறுகளை தொங்க விடுகின்றனர். இப்படி செய்தால் கெட்டது விலகி நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர்.
உருகலும் வாழ்க்கை நகரலும்!
உலகப் போரில் பங்கு கொண்ட வலிமை நாடுகளில் ஒன்று ஜெர்மனி. புத்தாண்டு அன்று ஒரு சிறு பனிக்கட்டியை கீழே போட்டு உருக விடுகின்றனர். அது உருகி இதய வடிவில் அல்லது மோதிர வடிவில் வந்தால் அந்த ஆண்டு திருமணம் நடக்க போவதாக அர்த்தம்.
கப்பல் வடிவில் வந்தால் பயணம், பன்றியின் வடிவில் வந்தால் அந்த வருடத்தில் உணவு பொருட்களுக்கு பஞ்சம் வராது என்பது நம்பிக்கை.
தீயை தாண்டறாங்க!
வட ஆப்பிரிக்காவில் புத்தாண்டு அன்று தீ மூட்டி அதை வணங்கிய பின் அதை தாண்டி செல்வர். அப்படி தாண்டும்போது அவர்களது தவறுகள் பாவங்கள், தீக்கிரையாகி விடுவதாக நம்புகின்றனர்.
மூக்குபிடிக்க மொக்கு!
ஆஸ்திரிய நாட்டின் நியூ இயர் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வசிப்பது டின்னர்தான். இளம்பன்றியை ரோஸ்ட் செய்து அதன் மேல் மாவு, பனை வெல்லம், குக்கீஸ், சாக்லெட் என்று அலங்கரித்து சாப்பிடுகின்றனர்.
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு!
ரோமானியர்கள் புதுவருடம் பிறந்தவுடன் கருமையான, உயரமான மனிதரை பார்த்தால் அந்த வருடம் தங்களுக்கு அதிர்ஷ்டமானது என்று நம்புகின்றனர்.
நல்ல சக்தி வேண்டும்!
ஹங்கேரியில் ஊர் மக்கள் எல்லாருமாக சேர்ந்து கொடும்பாவியை எரிக்கின்றனர். இப்படி செய்வதன் மூலம் சென்ற வருடத்தில் ஊருக்குள் வந்த கெட்ட சக்தியை அழிப்பதாக நம்புகின்றனர்.
வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
=======================================================================================
இன்று,
1,ஜனவரி-2016.
==========================================================================================

- சர்வதேச குடும்ப தினம்
- உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது(1995)
- யூரோ நாணயம் அறிமுகம் செய்யப்பட்டது(1999)
- ஐரோப்பிய அமைப்பு அமைக்கப்பட்டது(1958)
- சீன குடியரசு அமைக்கப்பட்டது(1912)