மோடியின் "கச்சா" ஆட்சி ?
பெட்ரோலியப் பொருட்களின் விலை சர்வதேச அளவில் சரிந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைய மறுத்து அடம்பிடிப்பதேன்?
கச்சா எண்ணெய் விலையைவிட அதனை இறக்கு மதி செய்ய கொடுக்க வேண்டிய டாலரின் விலை நம்மை கடிக்கிறது (10 வருடங்களுக்கு முன்னால் ஒரு டாலர் 43.50 இருந்தது இன்று சுமார் 68 ரூபாய்)அதாவது ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, இந்திய எண் ணெய் நிறுவனங்களின் கொள்ளை லாபம், அரசுகள் தீட்டும் வரிச்சுமைகள், டாலர் மோகம் இந்நான்கும் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உசத்துகின்றன.
இன்றைய உலகமயச்சூழல், பெட்ரோலியத் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்பமாற்றங்கள் இரண்டும், பெட்ரோலிய வர்த்தகத்தின் திசையை மாற்றிவிட்டது.
எண்ணெய் வள நாடுகள் பணக்கார நாடு களை சார்ந்து இருந்த காலம் மலை ஏறிவிட்டது. அமெரிக்கா ஒரு காலத்தில் இந்தியாவைப் போலவே பெட்ரோலியத் தேவைகளை பூர்த்தி செய்ய 80 சதவீதம் இறக்குமதியைச் சார்ந்து இருந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாகக் குறைத்து இன்று 90 சதவீதம் தேவைகளை உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்து கொள்கிறது. 2015ஆம் ஆண்டில் ஏற்று மதி செய்ய இருக்கும் தடையை நீக்கக் கோரி அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் போராடத் துவங்கிவிட்டன.
இப்பொழுது ஜப்பானும் அணுசக்தியையும் உள் நாட்டு பெட்ரோலிய உற்பத்தியையும் சார்ந்து இருக்க முடிவு செய்து இறக்குமதியை குறைத்து வருகிறது. ஐரோப்பிய பணக்கார நாடுகள் எரிபொருளுக்கு சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியதோடு வெயில்(சூரிய ஒளி), காற்று, நிலத்தடி வெப்பம், அணுசக்தி இவைகளை கலந்து பயன்படுத்தும் முறைக்கு மாறிவருகின்றனர்.
பெட் ரோலிய எரிப்பு காற்று மண்டலத்தை கெடுப்பதால் மாற்று எரிசக்தியை நாடுவது உலக நாடுகளுக்கு அவசியமாகிவிட்டது.இதன் விளைவாக மேற்கு நோக்கி போய்க் கொண் டிருந்த எண்ணெய் கப்பல்கள் இப்பொழுது கிழக்கு நோக்கிப் போகும் நிலைக்கு வந்துவிட்டது.
இனி ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் தொழில் வளர்ச்சியைச் சார்ந்தே பெட்ரோலிய வர்த்தகம் நிலைக்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது. எரிசக்தி விலையை குறைக்காமல் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் வாங்கும் நிலையில் இல்லை என் பதை கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிற நாடுகள் உணரத் தள்ளப்பட்டனர். இந்த எதார்த்த நிலைகளின் நிர்ப்பந்தத்தால் விலையைக் குறைக்கின்றனர்.
பத்திரிகை செய்திப் படியும் இத்துறை நிபுணர்களின் எழுத்துப் படியும் பார்த்தால் அவர்களே விலைச் சரிவை தடுக்க விரும்பவில்லை என்பது தெரியும்.
கடந்த காலத்தைப் போல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு உற்பத்தியைக் குறைத்து கிராக்கி ஏற்படுத்தி விலையை ஏற்ற விரும்பவில்லை;
முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் மொழியில் சொல்வதென்றால் உலக பெட்ரோலியச் சந்தை விற்போர் சந்தையாக இருந்தது மாறி வாங்குவோர் சந்தையாக மாறிவிட்டது. இந்த விலை குறைவிற்கு டிமாண்டை விட சப்ளை அதிகம் என்ற அரசியல் கலப்பற்ற பழமைவாத பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சவூதி அரேபியா என்ற எண்ணெய் வளநாடு ஈரானையும், ரஷ்யாவையும் நெருக்கடியில் தள்ளவே விலைச்சரிவை தூண்டுகிறது என்று பிரிட்டன் நாட்டு செய்தி ஊடகமான பி.பி.சி. அரசியல் காரணத்தை காட்டுகிறது. அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் உலகளவில் சந்தையை விரிக்க திட்டமிட்டு விலையைச் சரிக்கிறது என்று வேறு சில பத்திரிகைகள் எழுதுகின்றன. (ஏன் எனில் இந்த விலைகுறைப்பிற்கு அமெரிக்க எண்ணெய்ச் சந்தை தான் தலைமை தாங்குகிறது).
ஈரான் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் அதன் உற்பத்தியும் சர்வதேசச் சந்தையில் குவிவதால் விலை சரிகிறது என்றும் எழுதுகின்றன.
இந்த விளக்கம் இன்னொரு பக்கத்தைப் பார்க்காமல் கூறப்படுவதாகும். ஏன் எனில் புளூம்பெர்க் என்ற அமெரிக்க வர்த்தகச் செய்தி பத்திரிகை இந்த விலைக் குறைவால் கடந்த இரண்டாண்டுகளாக மூன்றாம் உலக நாடுகளின் எரிபொருள் இறக்குமதி ஆர்டர் குவிவதால் தினசரி 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கூடுதலாக உற்பத்தியாகிறது என்கிறது.
அதனால் எண்ணெய்க் கப்பல்கள் கிராக்கி ஏற்பட்டு 300 மீட்டர் நீளமுள்ள எண்ணெய்க் கப்பலின் தினசரி வாடகை 30 ஆயிரம் டாலராக இருந்தது 69 ஆயிரம் டாலராக உயர்ந்துவிட்டது என்று சுட்டிக்காட்டுகிறது. ( 3-9-2015 புளூம் பெர்க்).
இன்று பெட்ரோலிய ஏற்றுமதியில் 60 சதவீதம் குழாய்கள் மூலமும், 40 சதவீதம் கப்பல்கள் மூலமும் நடைபெறுகிறது.விலை சரிவிற்குக் காரணம் எதுவாக இருந்தாலும் ஏழை நாடுகளின் விவசாயமும் தொழிலும் லாபகரமாகி மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீள ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது எனலாம். ஆனால் இந்திய மக்களுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
ஆட்சியாளர்களின் பழமைவாத பொருளாதாரக் கண்ணோட்டமும், பழமைவாத அரசியல் நடைமுறை யும் இந்த வாய்ப்பைப் பறித்துவிட்டது.
சற்று பின்நோக்கிப் பாருங்கள். ஈரான் நாட்டு அரசு இந்தியாவிற்கு குழாய்கள் மூலம் பாகிஸ்தான் வழியாக பெட்ரோலிய எரிசக்தி தர முன்வந்த பொழுதுஅமெரிக்காவை பகைக்கக் கூடாது என்று நமது பெரு முதலாளிகளின் அரசு அதை நிராகரித்துவிட்டது.
குழாய்மூலம் வந்திருந்தால் சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால்பணம் என்று கப்பல் கட்டணச்செலவு உயர்வு நம் தலையில் இன்று விழுந்திருக்காது.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலும் பழமைவாத அரசியல் ஆதிக்கம் ஒழிந்து விவேகமான அரசியல் சூழல் உருவாகி இருந்தால் ஒத்துழைப்பு மனப்போக்கு உருவாகியிருக்கும். மலிவு விலையில் எரிபொருள் குழாய் மூலம் வந்திருக்கும்.
நமது நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் கடந்த காலங்களில் திரண்ட நட்டத்தை சரிக்கட்ட வேண்டி யிருப்பதால் விலையை குறைக்க இயலவில்லை என்று பாஜக அரசு கூறுகிறது. உண்மையில் நமது வரிப்பணத்திலிருந்த அரசு மானியமாகக் கொடுத்துவிட்டதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்த நட்டமும் இல்லை என்பதை அரசு மறைக்கிறது.
அரசு இன்னொரு முட்டாள் தனத்தையும் மறைக்கிறது. டாலர் சம்பாதிக்கும் நோக்கத்துடன் பெட்ரோலிய நிறுவனங்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து சுத்திகரிப்பு செய்து பெட்ரோலியப் பொருட்களாக ஏற்றுமதி செய்கிறது.
உலகளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை இந்தியாவில் இருப்பதை விட பல மடங்கு குறைவாக இருப்பதால் உற்பத்திச் செலவை விட குறைந்த விலைக்கே விற்கநேருகிறது. அதில் ஏற்படும் நட்டத்தை நம் தலையில்கட்டவே விலையை குறைக்க மறுக்கிறது.
சர்வதேசபங்குச்சந்தையில் இந்தியப் பெட்ரோலிய நிறுவனங் களின் பங்குகளுக்கு கிராக்கியை உருவாக்க வேண்டுமானால் கொள்ளை லாபம் திரட்டுகிற நிறுவனமாக இருக்க வேண்டும். எனவே கச்சா எண் ணெய் விலைச்சரிவு நிறுவனங்களின் லாபமாக திரள்கிறது.
நுகர்வோருக்குக் கிடைக்கச் செய்ய அரசும் விரும்பவில்லை. தனியார் எண்ணெய் நிறுவனங்களும் விரும்பவில்லை. இதன் விளைவாக விவசாயமும், தொழிலும் நட்டப்பட்டு படுக்கையில் தள்ளப்படுகிறது.முதலில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நட்ட வர்த்தகத்திற்கு முடிவுகட்ட வேண்டும்.
அமெரிக்க அரசு வழியில் உள்நாட்டுத் தேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் உற்பத்தி என்ற நிலையை கொண்டுவர வேண்டும். இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் டாலர் தேவையும் குறையும்.
அடுத்து இப்பொழுது முடக்கப்பட்ட துறைகளாக உள்ள உள்நாட்டு எண்ணெய் வளத்தை பயன்படுத்த வேண்டும்.
வெயில் (சூரிய ஒளி), காற்று அணுசக்தி இவைகளையும் பயன்படுத்திட வேண்டும். எரி சக்திக்குப் பிறநாட்டைச் சார்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும்.சுருக்கமாக இந்திய பெருமுதலாளிகளும் அரசும் பழமைவாத பொருளாதார பார்வையால் உருவான டாலர் மோகத்தைக் கைவிட்டு ரூபாயின் மதிப்பை உயர்த்தும் நாட்டுப்பற்றோடு பொருளாதாரத்தை வளர்க்க முன்வர வேண்டும்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்டிரீஸ் முடிவடைந்த மூன்றாவது
காலாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 7,293 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது..
நான்காவது காலாண்டில் இதை விட அதிக லாபம் எதிர் பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் கச்சா எண்ணை 110 டாலரில் இருந்து 28 டாலராக அடிமட்ட விலைக்கு வாங்கினாலும் பெற்றோல் விலையை மன்மோகன் சிங் ஆட்சிகால[ 110 டாலர் ] அளவிலேயே வைத்து விற்கும் மோடி அரசு அம்பானி ,அதானி கொள்ளை அடிப்பதாக யாரும் கூறி விடக்கூடாது என்பதற்காக பெட்ரோலியப் பொருட்களின் காலால் விலையை உயர்த்தி யுள்ளது. அப்படி உயர்த்தினாலும் கூட பெட்ரோல் விலையை ரூ 40குறைக்கும் அளவுதான் இன்றைய கச்சா எண்ணை விலை நிலவரம் உலக அளவில் உள்ளது.
ஆனால் விலை நிர்ணயிப்பதை அம்பானியிடம் ஒப்படைத்த அரசு எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் ?.
அம்பானி சம்பாதித்த லாபம் 7293 கோடிகள் உண்மையிலேயே அரசுக்கு வர வேண்டிய மக்கள் பணம்.
மாதம் மாதம் மோடி இந்தியாவுக்குமேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா,கிளின் இந்தியா,ஸ்டார் அப் இந்தியா,டிஜிடல் இந்தியா,காவி இந்தியா என்று பெயர் மட்டும் சூட்டுகிறார்,என்று மக்கள் இந்தியா என்று வருகிறதோ அன்றுதான் இந்தியாவுக்கு விமோசனம்.
================================================================================================
இன்று,
ஜனவரி-22.
===========================================================================================
கல்வியறிவு மதம் சார்ந்து அதிகரிப்பு விபரம்.