இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 5 டிசம்பர், 2016

கார்டியாக் அரெஸ்ட் என்றால் ?

செப்டம்பர் மாதம் 22ந்தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவால்,சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. 
அதையடுத்து ஜெ. உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் தொடர்ந்து சொல்லிவந்தனர் .
ஜெயலலிதாமுழுக்குணமடைந்து விட்டார். மருத்துவமனையை விட்டு வீடு செல்லும் நாளை அவர்தான் முடிவு செய்வார்  என்று அப்போலோ மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரதாப் ரெட்டி கூறிய நிலையில் ஜெயலலிதாவுக்கு  திடீரென இதயத்துடிப்பில் கார்டியாக் அரெஸ்ட்  ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 இதுவரையிலான   ஜெ. உடல்நிலை  பற்றிய விபரம் :-
22 செப்’16- சாதாரண காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதி
23 செப்’16-ஜெயலலிதா  உடல்நிலை சீராக இருப்பதாக அப்போலோ முதல் அறிக்கை
24 செப்’16 - ஜெயலலிதா சாதாரண உணவுகளை உட்கொள்வதாக சொன்னது அப்போலோ 25 செப்’16 - ஜெ. மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வார் என்று தவறான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் அப்போலோ கேட்டுக் கொண்டது.
29 செப்’16-  ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சீராக உள்ளது, அவர் சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார் என்றது அப்போலோ.
2 அக்’16 -  லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியெல்  அப்போலோ  வருகை தந்து மருத்துவர்களுடன் ஜெயா ' சிகிச்சை குறித்து ஆலோசனை.
3 அக்’16-  ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோயை சரிசெய்ய, நோய்க்கொல்லி மருந்துகள் தரப்பட்டது , சுவாசக்கருவிகள் பொருத்தம்.
4 அக்’16-  ஜெயலலிதா உடல்நிலை முன்னேறி வருகிறது, அவருக்குத் தரப்படும் சிகிச்சை தொடரப்படுகிறது எனத் தகவல்.
6 அக்’16 - எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண்டன் மருத்துவர் அனைவரும் அப்போலோ மருத்துவர்களுடன் ஜெயலலிதா சிகிச்சை குறித்து கலந்தாலோசனை. 
விண்டர் பிராங்கைடிஸ் மற்றும் நாட்பட்ட நீரிழிவு நோய்க்கு தகுந்தது போல் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தகவல்
8 அக்’16-  ஜெயலலிதா நுரையீரலில் இருக்கும் அடைப்புகளை நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
10 அக்’16 - பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்கள் மீண்டும் அப்போலோ வருகை.
21 அக்’16- தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களின் தலைமையில் இதயநோய்,நுரையீரல் நோய், தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக அப்போலோ அறிக்கை.
4 டிச’16- ஜெயலலிதாவுக்கு  மாலையில் திடீர் இதயதுடிப்பு பிரச்னை இதயத்துடிப்பில் பாதிப்பு (cardiac arrest) ஏற்பட்டதாக  அப்போலோ அறிக்கைஏற்பட்டதால் இதயநோய் மற்றும் நுரையீரல் நோய் மருத்துவர்கள்  சிகிச்சை அளிப்பதாக அப்போலோ திடீர் அறிவிப்பு .
கார்டியாக் அரெஸ்ட் என்றால் ?
இதயத்தின் செயல்பாடு திடீரென நின்றுவிடும் நிலையில், அது கார்டியாக் அரெஸ்ட் எனப்படும். 
இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயிலோ அல்லது இதயத்திலிருந்து ரத்தம் வெளியேற்றும் குழாயிலோ அடைப்பு ஏற்பட்டால் அல்லது இதயத் தசைகளில் பிரச்னை ஏற்பட்டாலோ இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். 
இதயத்தசைகளுக்கும் ரத்த ஓட்டம் தடைபடுவது, நாட்பட்ட இதயநோய் பிரச்னை இருப்பது, மரபணு ரீதியாக இதய பாதிப்பு ஏற்படுவது போன்றவை இந்த சிக்கலை உருவாக்கும். 
நாட்பட்ட சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் இதயச் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட அதிக சாத்தியம் உண்டு.
 நுரையீரலும் இதயமும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவது என்பதால் அதன் செயல்பாட்டில் ஏற்படும் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தலாம். 
 சிறுநீரக கோளாறால் ஏற்படும் இதயநோய் சிக்கலை விட நுரையீரலால் இதயச் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவது குறைவு .
======================================================================================
ன்று,
நவம்பர்-05.
  • உலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி பிறந்த தினம்(1901)

  • முதல் எஸ்.டி.டி., தொலைப்பேசி இணைப்பு சேவை இங்கிலாந்தில்  2ம் எலிசபெத் ராணியால் துவங்கப்பட்டது(1958)

  • தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா இறந்த தினம் (2013)

=======================================================================================
'1901-ம் ஆண்டு டிசம்பர் 5 -ம் நாள் அமெரிக்காவில் பிறந்தவர், தான் வால்ட் டிஸ்னி. அவருக்கு சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் வரைவதிலும், வண்ணம் தீட்டுவதிலும் ஆர்வம் அதிகம். ஏழு வயதிலேயே கற்பனையாக ஓவியங்களை வரைந்து அண்டை வீட்டுக்காரர்களிடம் விற்றுள்ளார். பள்ளிப்பாடங் களை படிப்பதை காட்டிலும் இயற்கை காட்சிகளையும், விலங்குகளையும் வரைவதே வால்ட் டிஸ்னியின் நாட்டமாக இருந்தது.

தந்தைக்கு அது பிடிக்கவில்லையென்றாலும், அவரது தாயார் பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்குமாறு வால்ட் டிஸ்னிக்கு ஊக்கமூட்டினார்.

சிக்காகோவின் மெக்கின்லி (McKinley High School) உயர்நிலைப்பள்ளியில் ஓவியம் மற்றும் புகைப்படத்துறையில் படித்தார். ஒரு நுண்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது ஓவியத் திறமையை வளர்த்துக்கொண்டார். 

தனக்கு மிகவும் விருப்பமான திரைப்பட நாயகன் சார்லி சாப்ளினைப்போல், பள்ளியில் பலமுறை நடித்து அசத்தியுள்ளார். ஆசிரியர்கள் கதை சொல்லுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டால், டிஸ்னி கதையை ஓவியங்களாக வரைந்துகொண்டே கதை சொல்லுவாராம்.

தந்தைக்குத் தெரியாமல் இரவு நேரங்களில் உள்ளூர் அரங்குகளில் நகைச்சுவை நாடகங்களில் நடித்த அனுபவமும் அவருக்கு உண்டு.

'1922-ம் ஆண்டு 21 வயதானபோது வால்ட் டிஸ்னி, 'லாப் ஓ கிராம்' (Laugh O Grams) என்ற சொந்த நிறுவனத்தை சகோதரர் ராயுடன் இணைந்து தொடங்கினார். 

தனது மாமாவிடம் 500 டாலர் கடனாக பெற்று, அந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். கேலிச்சித்திர படங்களை உருவாக்குவதில் ஆர்வமாக இருந்த டிஸ்னி, 'அலைஸ் இன் த கார்ட்டூன் லாண்ட்' என்ற கார்ட்டூன் படத்தைத் தயாரித்தார். 
அது தோல்வியைத் தழுவியது. 
இதனுடன் புதிதாக தொடங்கிய நிறுவனமும் நொடிந்துப் போனது. ஆனால் அந்த முதல் தோல்வியால் அவர் வருந்தவில்லை. அடுத்து 'ஆஸ்வல்ட் த லக்கி ராபிட்' (Oswald the Lucky Rabbit) என்ற புதிய கேலிச்சித்திரத்தை உருவாக்கினார்.
 அது ஓரளவு சிறப்பாக அமைந்தாலும், அதன் உரிமையை இன்னொருவர் வாங்கிக்கொண்டு டிஸ்னியை ஏமாற்றினார். அப்போதும் மனம் தளராத டிஸ்னி, தன் சகோதரருடன் இணைந்து புதுப்புது கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கத் தொடங்கினார். அப்படி உலகுக்கு அறிமுகமானது தான் அதிசய எலி 'மிக்கி மவுஸ்' (Mickey Mouse).

முகம், இரண்டு காதுகள் என வெறும் மூன்று வட்டங்களால் உருவாகி, இன்று வரை உலகில் வட்டமடித்து வருகிறது. மிக்கி மவுஸின் பிறப்பு, வால்ட் டிஸ்னியின் பக்கம் ஹாலிவுட்டை திரும்பியது. 

மிக்கிக்கு உருவம் தந்த டிஸ்னிதான் அதற்கு குரலும் கொடுத்தார். அவர் அடுத்தடுத்து தயாரித்த 'ஸ்டீம்போட் வைல்', 'தி ஸ்கேலிட்டன் டான்ஸ்' (Steamboat Willie, The Skeleton Dance) போன்ற கேலிச்சித்திரங்களுடன் மிக்கி மவுஸ் அடித்த லூட்டிகளையும், சேட்டைகளையும் இமை கொட்டாமல் மக்கள் பார்த்து ரசித்தனர். 
குழந்தைகள் கற்பனை வானில் சிறகடித்துப் பறந்தனர். 
பெரியவர்கள் மீண்டும் குழந்தைகளாகி தங்கள் கவலைகளை மறந்து சிரித்தனர்' என்று புன்னகையை உதிர்க்கும் நர்கீஸ், டிஸ்னியின் உந்துதலாலேயே திரைத்துறையில் நுழைந்துள்ளார்.

ஆரம்பத்தில் நர்கீஸின் தந்தை மறுக்க, அதற்கு பதிலாக டிஸ்னியின் கதையையே நர்கீஸ் கூறி தந்தையின் உத்தரவை பெற்றுள்ளார். 

தற்போது வெற்றி சிகரத்தில் நிற்கும் நர்கீஸ் பக்ரிக்கும் கூட, திரைத்துறை தொடக்கத்தில் சறுக்கலாகவே இருந்தது. 
அதையும் மீறி இன்று வெற்றி கோட்டையை எட்டி பிடித்ததற்கு டிஸ்னியையே காரணமாக கூறுகிறார்.

'1932-ம் ஆண்டு டிஸ்னி உருவாக்கித் தந்த 'பிளவர்ஸ் அண்ட் டிரீஸ்' (Flowers and Trees) என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. 

மிக்கி மவுஸ் என்ற சுட்டி எலியை தந்த டிஸ்னி, கேலிச்சித்திர உலகில் அடுத்து அறிமுகப்படுத்திய வெற்றி கதாபாத்திரம் 'டொனால்ட் டக்' (Donald Duck) என்ற வாத்து. அந்த வாத்தும், எலியும் செய்த சேட்டைகளை எண்ணி இன்றும் தன்னை மறந்து சிரிக்கும் பெரியவர்களும்  உண்டு.

1937-ம் ஆண்டில் 'ஸ்னோ வைட் அண்ட் த செவன் டிரப்ஸ்' (Snow White and the Seven Dwarfs) என்ற முழுநீள கேலிச்சித்திரத்தை வழங்கினார், டிஸ்னி. 


அதற்கு அப்போது ஆன செலவு எவ்வுளவு தெரியுமா? 


1அரை மில்லியன் அமெரிக்க டாலர். அவ்வுளவு பொருட்செலவில் உருவான அந்தப்படம், மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது. வறுமையின் பிடியில் கிடந்தவரை மிக்கி மவுஸ் என்ற கற்பனை எலி எவ்வளவு உயரத்திற்கு கூட்டி சென்றுள்ளது என்பதை நினைத்து பாருங்கள். 
அதன் பின்னர் நிறைய புகழ்பெற்ற கேலிச்சித்திர படங்களை டிஸ்னி உருவாக்கினார்.

திரையில் மட்டுமே காட்ட முடிந்த கற்பனை உலகை நிஜமாக்கி காட்ட விரும்பிய டிஸ்னி, 1955-ம் ஆண்டில் 17 மில்லியன் டாலர் செலவில் மிகப்பிரமாண்டமான டிஸ்னி வேர்ல்ட் (Disneyland Park) என்ற பொழுதுபோக்குப் பூங்காவை அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் உருவாக்கினார். இந்த பூங்கா நிச்சயம் முதல் ஆண்டிலேயே நொடித்துப்போகும் என்று பலரும் கருதினர். 


ஆனால் பூங்காவை பார்க்க வந்தவர்களோ மிக்கி மவுஸின் அழகை ரசித்து பூலோக சொர்க்கம் என்று வர்ணித்தனர். முதல் 25 ஆண்டுகளில் பல உலகத்தலைவர்கள் உள்பட 200 மில்லியன் பேர் கண்டு ரசித்து மிக்கி மவுஸ் உடன் செல்பி எடுத்துள்ளனர். தற்போதும் ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் வருகையாளர்களை அது ஈர்க்கிறது. ஒவ்வொரு குழந்தையும் சென்று பார்த்து வர விரும்பும் கனவுலகம் அது.

டிஸ்னி சிறுவனாக இருந்தபோது, பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு பூங்கா இருந்தது. அதில் கட்டணம் செலுத்தினால்தான் விளையாட முடியும். டிஸ்னி அப்போது ஏழ்மையில் வாடியதால், ஒருமுறைகூட அவரால் அந்த பூங்காவில் விளையாட முடியவில்லை. அந்த ஏக்கம்தான் உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் பூங்காவை உருவாக்கும் எண்ணத்தை அவருக்குள் விதைத்தது.மிக்கி மவுஸ் பிறந்த கதை


ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் டிஸ்னி. இளம் வயதில் தூங்கிக்கொண்டிருந்த ஆந்தையை பிடிக்கப் போய், அது இவருடன் போராடி இறந்துவிட்டது. 

அதிலிருந்து மிருகங்கள் மீது, டிஸ்னிக்கு எல்லையில்லாத காதல் பிறந்துள்ளது. உலகப்போர் சமயத்தில், ஆம்புலன்ஸ் டிரைவராக டிஸ்னி பணியாற்றினார். அப்போது அவர் ஓட்டிய வண்டி முழுவதும் விதவிதமான வடிவங்களில் விலங்குகள் ஓவியமாக தீட்டப்பட்டு இருக்குமாம். அப்படி எங்கு சென்றாலும் கார்டூன்களை வரைந்துகொண்டே இருந்துள்ளார்.

அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் வசித்தபோது, அங்கு சில எலிகளை வளர்த்துள்ளார். தெருவில் இருந்த தொட்டியில் இவர் போடும் சாப்பாட்டு மிச்சங்களுக்கு காத்திருக்கும் அவை, இவருக்கு ஹாய் சொல்லுமாம். அதிலும் பிரவுன் கலர் எலி, அவருக்கு ரொம்ப செல்லமாக இருந்துள்ளது.

 வாழ்க்கையை தொலைத்த விரக்தியில் ரெயிலில் பயணித்து கொண்டிருந்த சமயத்தில் தான், பாப்கார்னை கொறித்துக்கொண்டு இருந்த எலி ஒன்று இவரது கண்ணில் சிக்கியது. அதன் சேட்டைகளை கவனிக்க ஆரம்பித்துள்ளார். அந்த நிலையிலும் கொஞ்சமாக சிரித்தவர், பென்சிலை எடுத்து மனித சாயலில் ஒரு எலியை உருவாக்கினார்.

அது தான் ‘மிக்கி மவுஸ்’.

அதற்கு மார்டிமர் மவுஸ் என பெயர் வைத்துள்ளார். 

இருப்பினும் அவரின் மனைவிக்கு பிடிக்கவில்லையாம். இதனால் மனைவியின் விருப்பப்படியே மிக்கி என பெயரிட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார். 
பிறகு எல்லாமே ஏற்றம் தான். பல படங்களை எடுத்தார். வாழ்நாள் முழுக்க உலகை டொனல்ட் டக், மிக்கி மவுஸ் முதலிய கதாபாத்திரங்களால் சிரிக்க வைத்தார். 
அறுபத்தி நான்கு முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருபத்தி ஆறு முறை வென்று இருக்கும் டிஸ்னியின் சாதனை, மிக்கி மவுஸின் மூலம்உலகம் முழுக்க  நிலைத்து நிற்கிறது.
========================================================================================