பதில் சொல்லுங்கள் மோடி



500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்க செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் பெரும் சுபிட்சம் ஏற்பட்டுவிட்டதாக பிரதமர் நரேந்திரமோடி வெள்ளியன்று நாட்டு மக்கள் முன்பு நாடகமாடினார். 
ஆனால்  இந்த பண மதிப்பிழப்பினால் மக்கள் அடைந்த துன்பங்கள்,இறப்புகளுக்கு ,குளறுபடிகளை பதில் கேட்டு எழுப்பப்பட்ட  எந்தவொரு கேள்விக்கும் - சந்தேகத்திற்கும் பதிலளிக்கவில்லை.

எதிர்க்கட்சிகள் மற்றும் ஏழை, எளிய மக்களின் மனக்குமுறலுக்கும் அவர் விடை சொல்லவில்லை.
மக்களின் துயரம் குறித்து 16 கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் சொல்ல தயாரா என பிரதமர் நரேந்திரமோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்விக்கணைகள் தொடுத்திருந்தது.
அந்த கேள்விகளுக்கு பிரதமர் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.
இதுதொடர்பாகமார்க்சிஸ்ட், கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்ட அறிக்கை வருமாறு:பணம் மதிப்பு நீக்கம் தொடர்பான பிரச்சனையில் டிசம்பர் 30க்குப் பிறகு புதிய பல்வேறு அறிவிப்புகளை வெளியிடப் போவதாக பிரதமர் அறிவித்திருந்தார். 

ஆனால் வெளியே,பாஜக கட்சி கூட்டங்களில் வாய் கிழிய பேசும் மோடி பிரதமர் என்ற முறையில் மக்களவை கூட்டத்தில் எதிர்க்கட்ச்சிகள் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஒளிந்து கொண்டார்.அவரால் இந்த கூட்டத்தொடர் முழுக்க வீணானது.வெளியே வீரம் காட்டும் மோடி மக்கள் பிரதிநிதிகள் கேள்விகளுக்கு முன்னாள் கோழையாகி மன்மோகன் சிங்கை விட மவுனியானார் என்பதுதான் வரலாற்று உண்மை.
1.டிசம்பர் 30 என்ற இறுதிநாளுக்குப் பிறகு, வங்கிகளில் தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை எடுத்து கொள்வதற்கான அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்படுமா என அறிய விரும்புகிறோம்.பண மதிப்பு நீக்கம் என்பது இந்தியப் பொருளாதாரத்தை மிகக் கடுமையான துயரத்தின் பிடியில் தள்ளியிருக்கிறது; அன்றாடம் உழைத்து பிழைக்கும் ஏழை, எளிய மக்களின் வாழ்வு துயரமானதாக மாறியிருக்கிறது. 
இதன்விளைவாக பொருளாதார வீழ்ச்சிக்கான அறிகுறிகள் துவங்கியுள்ளன. அதை தடுத்து நிறுத்திட கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்:

2.வழக்கமான விவசாயப் பணிகள் எதுவும் இந்தக் காலத்தில் மேற்கொள்ளப்படாமல் சீர்குலைந்திருக்கிறது; இதனால் நெருக்கடியில் சிக்கியிருக்கும் விவசாயிகளின் கடன்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

3.பதிவு செய்த அனைவருக்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நூறு நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, நிதி ஒதுக்கீட்டை உடனடியாக இரண்டு மடங்காக்க வேண்டும்.

4.பிரதானமாக ரொக்கப் பரிவர்த்தனை மூலமாகவே தங்களது அன்றாட தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நிற்கின்றன. 
அவற்றை மீட்கும்விதமாக வரிச்சலுகை அளிக்கப்பட வேண்டும்.

5.கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யவும், டெபாசிட் செய்த பணத்தை எடுக்கவும் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க வேண்டும். 
எந்தவொரு கூட்டுறவு வங்கி மீதும் முறைகேடு தொடர்பாக குறிப்பிட்ட புகார்கள் இருக்குமானால், அவற்றுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; ஆனால் கிராமப்புற இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் கூட்டுறவு வங்கி கட்டமைப்பை எந்தவிதத்திலும் சீர்குலைக்கக் கூடாது.
பண மதிப்பு நீக்க அறிவிப்பு, பல மாநிலங்களில் கணிசமான அளவிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு கடுமையான பிரச்சனையாகும். 
இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள:

6.மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை மத்திய அரசு கட்டாயம் ஈடுசெய்ய வேண்டும்.

7.எப்ஆர்பிஎம் சட்டத்தின்படி மாநில அரசுகள் கடன் பெறுவதற்கான உச்சவரம்பு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3 முதல் 4 சதவீதம் என்ற அளவில் இருக்கும் வகையில் உயர்த்தப்பட வேண்டும்.பிரதமர் தொடர்ச்சியாக பணமற்ற பொருளாதாரத்தை நோக்கி செல்ல போவதாகவும், அதன் தேவை குறித்தும் பேசி வருகிறார். அப்படியானால் அதன்மூலம் மக்களுக்கு கூடுதல் செலவு என்ற சுமைகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு:

8.டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான செலவினங்கள் அனைத்தையும் நீக்க வேண்டும்.

9.ரேசன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் பொருள் விநியோகம் கட்டாயம் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று ஆக்கப்பட்டுள்ளதால் மிகப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ரேசனில் பொருள் மறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 
அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
பண மதிப்பு நீக்கப்பட்டதை தொடர்ந்து செல்லாது என அறிவிக்கப்பட்ட பணம் வங்கிகளுக்கு எவ்வளவு வந்து சேர்ந்துள்ளது என்பதை பிரதமர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
 இரண்டு வாரங்களுக்கு முன்பு 82 சதவீத பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்து விட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

10.தற்போது செல்லாது என அறிவிக்கப்பட்ட அனைத்து பணமும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டதா?அப்படி வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது என்று சொன்னால், அனைத்து கறுப்புப் பணமும் வெள்ளையாக மாற்றப்பட்டு விட்டது என்று பொருளாகும். 
இன்னும் நிறைய பணம் வந்து சேர வேண்டியுள்ளது என்று சொன்னால் கள்ள நோட்டுகள் அனைத்தும் செல்லும் நோட்டுகளாக மாற்றப்பட்டுவிட்டன என்று பொருளாகும்.

11.இதுவரை அச்சிடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை மற்றும் மதிப்பு எவ்வளவு?

12.செல்லாது என அறிவிக்கப்பட்ட பணத்தின் மதிப்பிற்கு இணையான புதிய ரூபாய் நோட்டுகள் எப்போது முழுமையாக புழக்கத்திற்கு விடபப்டும்?ஊழலை முடிவுக்கு கொண்டு வரப் போவதாக பிரதமர் பேசிக் கொண்டே இருக்கிறார்.

13.அப்படியானால் வியாபம் ஊழல், சகாரா - பிர்லா நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் விவகாரங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயங்குவது ஏன்?

14.பணமதிப்பு நீக்கப்பட்ட பிரச்சனையால், தாங்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை எடுப்பதற்காக வங்கிகள் முன்பு மிக நீண்ட வரிசைகளில் காத்திருந்து மயங்கி விழுந்து உயிர் பறிபோன நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

15.இந்த நடவடிக்கையால் தேசத்திற்கு ஒட்டுமொத்த ஏற்பட்ட பொருளாதார இழப்பு எவ்வளவு என்பதை அரசாங்கம் என்ன மதிப்பீடு செய்திருக்கிறார்?

16.2016 நவம்பர் 8ம்தேதி பிரதமர் வெளியிட்ட பணமதிப்பு நீக்க அறிவிப்பை தொடர்ந்து எத்தனை மக்கள் வேலைகளையும், வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள்?
நாட்டின் மிக பெருவாரியான மக்கள் அடைந்துள்ள துயரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு சிறிய நிவாரணமாவது கிடைக்கும் விதத்தில், இந்த கேள்விகளுக்கு எல்லாம் பிரதமர் பதில் சொல்ல வேண்டியது அவசியமாகும்.
என்று மார்க்சிஸ்ட் கட்சி  மோடிக்கு சவால் விடுத்துள்ளது.
ஆனால் மோடி வழமை போல் இதற்கு பதில் சொல்லப்போவதில்லை.மீண்டும் வீரம் கொப்பளிக்க தன்னைப்புகழ்ந்து தானே பேசிக்கொண்டு அலைவார்.
வெளிநாடுகளிலும் ,பொதுவான நிகழ்வுகளிலும் மட்டுமே தனது பெருமையை சொல்வதிலும்,எதிர்க்கட்சிகளை திட்டவும் மட்டுமே தனது நேரத்தை மோடி செலவு செய்கிறார்.

======================================================================================
ன்று,
டிசம்பர்-31.
  • பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவிற்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது(1599)
  • விக்டோரியா மகாராணி, கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்(1857)
  • வெள்ளொளிர்வு விளக்கு முதல் முறையாக தாமல் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது(1879)
  • மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது(1909)
  • =======================================================================

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?