சுவிஸ் வங்கிக் கேடிகளும் வக்கற்ற மோடிகளும்...,
தேர்தலில் வெற்றி பெற மோடி கூட்டம் வைத்த வாதங்களில் முக்கியமானது,சுவிஸ் வங்கியில் முடக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தை பறிமுதல் செய்து இந்தியர்கள் வங்கிக் கணக்கில் தலா 15 லட்சத்தை போடுவதாக சத்தியம் செய்து பேசியதுதான்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பின் அதை பற்றிய பேச்சையே எடுக்க வில்லை.
ஆனால் மோடி தற்போது கருப்புப்பணத்தை ஒழித்து விட்டதாகவும் அதனால் கருப்புப்பணக்காரர்கள் தன மீது கொலை வெறியுடன் அலைவதாகவும் கூறுகிறார்.
அவர் கருப்புப்பண ஒழிப்பில் பாதிக்கப்பட்டு அவரை விமர்சிப்பவர்கள்யார்?
அம்பானியா,தானியா,அன்பு நாதன் போன்றவரா ?
இல்லை.
அன்றாட கூலி ,மாத சம்பளக்காரர்கள்,தன் குழந்தைகள் திருமணத்துக்கு கடன் வாங்கி வங்கியில் போட்டுவைத்து திருமணத்தோடு பணத்தை எடுத்து செலவிட எண்ணியவர்கள்தான் இன்று மோடியின் கருப்புப்பண முதலைகள்.
அவர்கள் தங்கள் வங்கியில் போட்ட பணத்தை,சம்பளத்தை,சேமிப்பை,எடுக்க கால்கடுக்க வேலைக்கு விடுப்பு கொடுத்து நிற்கவேண்டிய நிலையை மோடியின் திட்டமிடலற்ற செல்லாப்பணம் கறுப்புப்பணம் ஒழிப்பு கொண்டுவந்து விட்டுள்ளது.
கனரா வங்கி உட்ப்பட்ட பலவங்கிகள் ஏடிஎம் கள் மோடி சொன்ன இரு நாள் மூடலை ஒட்டி மூடப்பட்டவை இன்னமும் திறக்கப்படவே இல்லை.
அவ்வப்போது திறந்து 2000 ஒரு தாள் மட்டும் வந்த ஏடிஎம்களும் படிப்படியாக மூடப்பட்டு விட்டன.
ஸ்டேட் வாங்கி மட்டும்தான் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறது,
அச்சிட்ட பணத்தாள்களும் தனியார் வங்கிகளுக்கு முதலில் கொடுக்கப்பட்டு மீதமே அரசுடமை வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டு வரப்படுகிறது.
24000,2000,என்று வங்கிகளில் கொடுக்கப்பட்டவை 1000 என்று குறைந்து விட்டது.
திருமணத்துக்கு 2.5 லட்சம் திருமணப்பத்திரிகை காட்டி எடுக்கலாம் என்று பெருந்தன்மையுடன் அறிவித்து விட்டு படிப்படியாக
ஒரு வீட்டார் மட்டுமே எடுக்கலாம் ,
செலவின பட்டியல் வைக்க வேண்டும்,
பணம் பெறுவோர் இதற்கு முன்னர் பணம் பெறவில்லை என்ற கடிதம் தர வேண்டும்,
பணம்பெறும் நபர்களுக்கு வங்கிக்கணக்கு இருக்கக் கூடாது,
பணம் பெறுபவர் தனக்கு வங்கியில் கணக்கில்லை என்று கடிதம் தர வேண்டும்,
பணம் பெறுபவர் பான்( நிரந்தர வருமான வரி கணக்கு) கணக்கு எண் வேண்டும்,(வங்கியிலேயே கணக்கு இல்லாதவர் எப்படி பான் எண் வைத்திருப்பார்?)
என்று தினம் ஒரு விதிகலை புகுத்தி இதுவரை யாருமே திருமணத்துக்கு பணம் எடுக்க முடியாதபடி செய்து விட்டது ரிசர்வ் வங்கி.
கடைசியில் திருமணத்துக்கு 2.5 லட்சம் யாருக்கும் கொடுக்க வேண்டாம்.என்று வாய் மொழி உத்திரவும் வந்து விட்டது.
காரணம் வங்கிகளிடம் பணம் கையிருப்பு குறைந்தது மற்றும் இல்லாதுதான்.
மகன்,மகள் திருமணத்துக்காக தனது சேமிப்பு பனத்தையே எதற்காக சேமித்தாரோ அதற்கு செலவிட முடியாமல் பிச்சைக்காரன் போல் தான் பணம் போட்ட வங்கிக்கும்,ஏடிஎம்களுக்கு புலம்பிக்கொண்டே திரியும் இந்த இந்தியாவில்தான் மோடி கருப்புப்பண முதலைகளை வீரத்துடன் மோதி ஒழித்த இந்தியாவில் தான் 570 கோடிகளில் ஜனார்த்தன் ரெட்டி தனது மகள் திருமணத்தை முடித்து வைத்துள்ளார். நிதின் கட்காரி தனது மகள் திருமணத்துக்கு பெருசுகள் வர 50 விமானங்களை மூன்று நாட்களுக்கு வாடகைக்கு பிடித்து வைத்துள்ளார்.
ஜனார்தன ரெட்டி மகளின் திருமண விழாவில் ஆடிய நடிகை ராகுல் ப்ரீத் சிங். இதற்காக அவர் வாங்கிய சம்பளம் ரூ. 1 கோடி மட்டும்.இவரை போல் பலர் ஆடியுள்ளனர்,பாடியுள்ளனர்,இசைத்துள்ளனர்.
இவர்கள் இருவருமே கருப்புப்பண ஒழிப்பு மாவீரர் மோடியின் கட்சிக்காரர்கள் என்பதுதான் கசப்பான உண்மை.
இதில் ஜனார்தன் ரெட்டி மோடி செல்லாத ஆணைக்குப் பின்னர்தான்ஒரு அதிகாரி மூலம் 100 கோடிகளை புதிய பணத்தாள்களாக மாற்றியுள்ளார்.அதற்காக அவருக்கு 25 கோடிகளை தரகு காசாக கொடுத்துள்ளார்.இது போல் பல அதிகாரிகள் மூலம் 2000 கோடிகளை அவர் மாற்றியுள்ளார்.
அதற்கு இந்திய வருமான வரித்துறை ஒன்றுமே இதுவரை செய்யவில்லை.
ஆனால் 100 மாற்றிய விவகாரம் வெளியே வந்ததால் அந்த அதிகாரியின் கார் ஒட்டுநர் மிரட்டப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டார் இறக்கும் முன்னர் ஓட்டுநர் இந்த பணம்மாற்றலை பர்றி விபரமாக எழுதி வைத்து விட்டார்.
அதனால் விவகாரம் வெளிவந்து மோடி புகழ் இந்தியா முழுக்க நாறுகிரது.
ஆனால் இது பற்றி நாடாளுமன்றத்தில் மோடி வாயை மூடிக்கொண்டு மன்மோகன் சிங்குக்கு அண்ணானாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
யார் கேள்விக்கும் பதில் சொல்லுவதில்லை.
ஆனால் வெளியே வந்து வானத்தை வில்லாக்கி விடுவேன்,மண்ணை திரித்து கயிறாக்கி இந்த்யர்கள் ஒவ்வொருவருக்கும் எட்டு முழம் தருவேன்.(அதை கழுத்தில் மாட்டி தொங்கிக்கொள்வதுதான் நாம் தேசத்துக்கு செய்யும் தியாகம்)
கற்களை பூவாக்கி தருவேன் அதை காதில் வைத்துக்கொள்ளலாம். இந்த தேசப்பற்று கூட இல்லையா என்று முழங்கிறார்.
ஆக மோடி வித்தைகள் பூராவும் கஞ்சிக்கத்த,நடுத்தர மக்களுக்கு எதிராகத்தான் உள்ளது.
அம்பானி,அதானி அதற்கும் கிழ் உள்ள பணமுதலைகளுக்கு ஆதர்வாகத்தான் ஒவ்வொரு நடவடிக்கையும் உள்ளது.கேட்டால் தேசம்,தேசப்பற்று அதற்காக கண்டிப்பாக பொறுத்துக்கொள்ளுங்கள் என்கிறார்.
ஆனால் இந்தியாவின் பிரதமரையே தன் ஜியோ வுக்கு விளம்பரத்துக்கு பயன் படுத்திக்கொண்ட அம்பானிக்கு அதற்கான தண்டனை 500 ரூபாய் அபராதம் மட்டும்.
மக்களுக்கோ தங்கள் சம்பளப்பணத்தை கூட மாதம் முழுக்க ஏடிஎம் களில் காத்துக்கிடந்து எடுத்து உணவு சமைக்க வேண்டிய தண்டனை.
4000 ரூபாய் வீட்டு வாடகை கொடுக்க கூட இரண்டு நாட்கள் ஏடிஎம்மில் காத்திருக்க வேண்டிய கட்டாயம்.
ஆனல் இப்படி காத்திருப்பவர்கள் முழுக்க மோடியை புகழ்வதாக பாஜக கட்சியினரும்,தினமணி போன்ற சில ஜால்ரா ஊடகங்களும் செய்திகளை பரப்புகிறார்கள்.
மோடிதான் உலகப்புகழ் மனிதர் என்று டைம் இதழ் தேந்தெடுக்கிறது என்று வேறு செய்தி.ஆனால் இதற்கு முன்னர் ராஜபக்சே கூட அப்படி முன்னணிக்கு வந்த கொடுங்கோலர்தான் என்பதை ஜால்ராக்கள் மறந்து விட்டார்கள்.
ஹிட்லர் கூட ஜெர்மனியின் ரட்சகனாக கொண்டாடப்பட்டவர்தான் என்பதை பாஜக,மோடி ஜால்ராக்கள் நினைவில் வைத்துக் கொள்வது அடுத்த தேர்தலுக்கு மிக நல்லது.
======================================================================================
முகநூலில் நீக்கம்
முகநூல் தளம் பயன்பாட்டிற்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

2004 ஆம் ஆண்டில் இது இணைய தளத்தில் கிடைக்கத் தொடங்கினாலும், அப்போது அது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு முதல், 13 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டது. இன்றைக்குப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
பலர், அதன் தொடக்க காலம் முதலே பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள், தற்போது பத்தாண்டுகளுக்கு முன் தாங்கள் பதிந்தது குறித்து வருத்தப்படலாம், வெட்கப்படலாம்.
அவற்றை நீக்க வேண்டும் என நினைக்கலாம்.
அவர்கள் எளிதாக, ஒவ்வோர் ஆண்டாக, ஒவ்வொரு மாதமாகத் தங்கள் பதிவுகளைத் தேடி அறிந்து, நீக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதை நீக்கலாம்.
அவர்கள் எளிதாக, ஒவ்வோர் ஆண்டாக, ஒவ்வொரு மாதமாகத் தங்கள் பதிவுகளைத் தேடி அறிந்து, நீக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதை நீக்கலாம்.
முதலில் உங்கள் பக்கத்தினைத் திறக்கவும். பின் அதில் உள்ள Timeline பக்கத்தைத் தேர்ந்தெடுத்து, கீழாக ஸ்குரோல் செய்திடவும். இப்போது இடது புறம், உங்கள் படம், பெயர், Timeline, Recent என்று கிடைக்கும். இதில் Recent என்பதில் கிளிக் செய்தால், 2016 லிருந்து பின்னோக்கி ஆண்டுகள் கொண்ட மெனு கிடைக்கும்.
நீங்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஆண்டைத் தேர்ந்தெடுத்தால், அருகில் உள்ள மாதங்கள் அடங்கிய மெனு கீழாக விரியும். இதில் குறிப்பிட்ட மாதத்தைத் தேர்ந்தெடுத்தால், அந்த மாதத்திய பதிவுகள் கிடைக்கும்.
அதில் உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்த்து, தேவையற்றவற்றை நீக்கலாம். நீக்குவதற்கு, குறிப்பிட்ட அந்த பதிவில், வலது மூலையில் உள்ள கீழ் நோக்கிய முக்கோண அடையாளத்தில் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Delete என்பதைத் தேர்ந்தெடுத்து நீக்கலாம்.
நீங்கள் உங்கள் பேஸ்புக் தளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், சரியாக அதே நாளில் சென்ற ஆண்டில் என்ன பதிவு செய்தீர்கள் என்று பார்க்க ஆவலா?
இதற்கான இன்னொரு எளிய வழி உள்ளது.
நீங்கள் உங்கள் பேஸ்புக் தளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், சரியாக அதே நாளில் சென்ற ஆண்டில் என்ன பதிவு செய்தீர்கள் என்று பார்க்க ஆவலா?
இதற்கான இன்னொரு எளிய வழி உள்ளது.
பேஸ்புக் தளத்தில் “On This Day” என்று ஒரு டூல் தரப்பட்டுள்ளது.
இதன் மூலம், குறிப்பிட்ட ஒரு நாளில், பல ஆண்டுகளுக்கு முந்தைய பதிவுகளைக் காணலாம். உங்கள் பேஸ்புக் தளத்தைத் திறந்த பின்னர், பிரவுசரின் இன்னொரு திறப்பில் https://www.facebook.com/onthisday/ என்று முகவரியிட்டுச் செல்லவும்.
ஓராண்டுக்கு முன்னர் அதே நாளில் நீங்கள் செய்த பதிவுகள் காட்டப்படும்.
மீண்டும் என்டர் செய்தால், ஐந்து ஆண்டுகளுக்கு முன், அதே நாளில் செய்த பதிவுகளைப் பார்க்கலாம். பார்ப்பதுடன், தேவைப்பட்டால், நீக்கவும் மறைக்கவும் செய்திடலாம்.
இந்த செயல்பாட்டினை, அலைபேசியில் மேற்கொண்டு தேவையற்றவற்றை நீக்க இயலும்.
=================================================================================================
யாகம் என்ன பலன்?
94 வயது கருணாநிதி மருத்துவமனையிலிருந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார்..அவருக்காக யாரும்
பால்குடம் தூக்கவில்லை,
மண் சோறு சாப்பிடவில்லை,
அலகு குத்தவில்லை,
யாகம் வளர்க்கவில்லை,
மருத்துவமனை முன் பூஜை செய்யவில்லை,
பூசணிக்காய் உடைக்க வில்லை...
நவீன மருத்துவ அறிவியல் அவர் உடல் நலத்தை காப்பாற்றி இருக்கிறது..
ஆனால் அதே சமயம் மேற்கண்ட அனைத்து பூஜை, சடங்குகளும் செய்த 68வயது ஜெயலலிதாவிக்கு இவையெல்லாம் பயனளிக்கவில்லை...!!
பூஜை,புனஸ்க்காரங்களுக்கும் உடல் நலத்திற்கும் ஏதொரு தொடர்பும் இல்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்...??
காலவிரயம், பண விரயங்களை உண்டாக்கும் இது போன்ற வெட்டி வேலைகளை செய்யும் நம் மக்கள் இனியேனும் உண்மையை உணர்ந்தால் நல்லது...!!!
முகனுலில் இருந்து....
===================================================================================
இன்று,
டிசம்பர்-09.
- சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
- இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது(1946)
- தான்சானியா விடுதலை தினம்(1961)
- ஐக்கிய அரபு நாடுகள் அமைப்பு ஐ.நா.,வில் இணைந்தது(1971)
வேர்ட் டாகுமெண்ட்டில் வாட்டர்மார்க்
“வாட்டர்மார்க்” என்னும் பின் குறியிடல் என்பது நாம் அமைக்கும் டாகுமெண்ட்களின் பக்கங்களில், டெக்ஸ்ட்டுக்குப் பின்புறமாக, டெக்ஸ்ட்டின் தோற்றத்தைப் பாதிக்காத வகையில் அமைக்கப்படும் டெக்ஸ்ட் அல்லது படம் ஆகும். பெரும்பாலும், ரகசிய ஆவணங்களுக்கு “confidential”, முழுமை அடையாத ஆவணத்திற்கு “Draft” எனவும் அமைப்பதுண்டு, சில நிறுவனங்கள், குறிப்பாகக் கல்வி நிறுவனங்கள், தங்கள் இலச்சினையைப் படமாக இணைப்பதுண்டு. டாகுமெண்ட் ஒன்றில், இந்த குறியீட்டினை அமைப்பது எளிதுதான். இருப்பினும் நாமெல்லாரும் பொதுவாக அறிந்ததற்கும் மேலாக, சில கூடுதல் வசதிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
கீழே தந்துள்ள செயல் முறைகளை, வேர்ட் செயலியில் ரிப்பன் மெனு கொண்ட (வேர்ட் 2007) செயலி மற்றும் அதன் பின்னர் வந்தவற்றில் பயன்படுத்தலாம். வேர்ட் 2003லும் வாட்டர்மார்க் குறியீடு அமைக்கும் வசதி உள்ளது. ஆனால், அதற்கான செயல்முறைகள் இங்கு தரப்படவில்லை.
முதலில் வாட்டர்மார்க் அமைப்பது குறித்த சில அடிப்படை குறிப்புகளைக் காணலாம். வேர்ட் 2007ல், Page Layout என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், Page Background பிரிவில், Watermark என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு பல வாட்டர்மார்க் படங்கள் கொண்ட விண்டோ கிடைக்கும். இதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இது, ஏற்கனவே அமைக்கப்பட்ட ஒன்றாக அமையும். இதனை, நெட்டுவாக்கிலோ, படுக்கை வாக்கிலோ, சாய்வாகவோ அமைக்கலாம்.
இதில் நீங்கள் விரும்பும் வகையில் அமைக்க Custom Watermark என்பதில் கிளிக் செய்து, அதில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்தி அமைக்கலாம். இந்த வசதிகளைப் பயன்படுத்தி, படம் அல்லது டெக்ஸ்ட் அமைக்கலாம். படம் அமைப்பதாக இருந்தால், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள படத்தை, அதன் போல்டரைத் திறந்து இணைக்கலாம். இல்லாமல், டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றால், அதற்கான எழுத்துரு, அளவு, வண்ணம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
அமைக்கப்பட்ட வாட்டர் மார்க் குறியீட்டினை திசை திருப்பி அமைக்க, ஹெடர் புட்டர் தேர்ந்தெடுக்க வேண்டும். வாட்டர் மார்க் படம் பார்மட் செய்திட வசதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். அதனை நம் வசதிப்படியான கோணத்தில் அமைக்கலாம்.
டாகுமெண்ட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நெட்டுவரிசை பத்திகள் அமைக்கப்பட்டிருந்தால், ஒரே ஒரு வாட்டர்மார்க் அமைத்தால், நெட்டு வரிசை பத்திகளைப் பற்றி கவலைப்படாமல் அது அமையும். ஆனால், ஒவ்வொரு நெட்டு வரிசை பத்தியிலும் ஒரு வாட்டர்மார்க் அமைக்க விரும்பினால், அந்த வகையில் அந்த பத்தியின் நடுவில் வாட்டர்மார்க் அமையும். பின்னர், ஒவ்வொரு பத்தியிலும், ஒரு வகையில் அதன் வாட்டர்மார்க்கினை அமைக்கலாம்.
இரு வேறு விதமாக பத்திகளில் அமைக்கக் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.
முதலில் மேலே குறிப்பிட்ட வகையில், வாட்டர்மார்க் அமைத்த பின்னர், இரு நெட்டு பத்திகள் இருந்தும், வாட்டர்மார்க் நடுவில் அமையும். நீங்கள் இரு நெட்டு வரிசையிலும் தனித்தனியே அதே வாட்டர்மார்க் அமைக்கப்பட வேண்டும் என விரும்பலாம். முதலில் கூறியபடி வாட்டர்மார்க் அமைந்த பின்னர், ஹெடர் பகுதியில் கிளிக் செய்து அப்பகுதியைத் திறக்கவும். இப்போது வாட்டர்மார்க் சுற்றிலும் பார்மட் செய்வதற்கான குறியீடுகளைக் காணலாம். இதனை Ctrl+C அழுத்தி காப்பி செய்திடவும். பின், Ctrl+V அழுத்தவும். இன்னொரு வாட்டர்மார்க் ஒட்டப்படும். இப்போது புதியதை இழுத்து இரண்டாவது நெட்டு பத்தியின் மையமாக அமைக்கவும்.
இன்னும் பலவகையில் நம் விருப்பப்படி இந்த வாட்டர்மார்க்கினை அமைக்கலாம். டெக்ஸ்ட் ஒன்றினை வாட்டர்மார்க்காக அமைத்தால், இன்னும் பல வகையில் அதனை பார்மட் செய்திடலாம்.
நன்றி:தினமலர்.
====================================================================================
இதுவும் அஞ்சலிதானே
பாலு ஜுவல்லர்ஸை அழித்தது,
கங்கை அமரனின் வீட்டை ஆட்டைய போட்டது,
நாட்டாமை படத்தை பார்க்க வேண்டும் என்று கூறி வாங்கிய ஃபிலிமை ரிலீஸான இரண்டாவது நாளே ஜெயா டிவியில் ( அப்போது ஜெ.ஜெ டிவி) போட்டது,
டான்சி கேஸில் ஆஜரான சன்முகசந்தரத்தை வெட்டியது,
பரிதி இளம்வழுதியை ஜான் பாண்டியனைவிட்டு ஓட ஓட விரட்டியது, சுதாகரனின் ஆடம்பர கல்யாணம் பின் அவர் மீதே கஞ்சா கேஸ் போட்டது,
சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு பின் அதையே ஓரு கலாச்சாரமாக மாற்றியது..
பாலன் என்ற பினாமியை உயிரோட வைத்து கொளுத்தியது..
ஆடிட்டரை வீட்டுக்குள் கூட்டிவந்து துவம்சம் செய்தது..
தன் கையெழுத்தை தானே போடவில்லை என்று மறுத்தது,
ஒரே கையெழுத்தில் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி ESMA, TESMA சட்டம் போட்டது, கலைஞரை நள்ளிரவு கைது செய்தது,
அதற்கு எதிராக நடந்த அமைதி பேரணியில் வன்முறை வெறியாட்டம் போட்டது,
அந்த வன்முறைக்கு துணைபோன மீனவ சமுதாயத்தை சேர்ந்த வீரமணியை வளர்த்துவிட்டது பின் காரியம் முடிந்ததும் என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ளியது..
பால் விலை பஸ் டிக்கெட் விலை ஏற்றம்,
தன் ஈகோவால் கட்டிய சட்டமன்றத்தை பூட்டியது பின் எதிர்ப்பின் காரணமாக அதை மருத்துவமனையாக மாற்றியது,
அண்ணா நூலகத்தை சீறழித்தது...
எதிர்த்தவர் மேல் எல்லாம் வழக்கு தொடர்ந்தது,
தனிப்பட்ட முறையில் என் தந்தை எதிர்க்க துணிவில்லாமல் அரசு மருத்துவரான என் தாயை குப்பை கிடங்கில் பணியமர்த்தியதோடு மட்டுமல்லாமல் பணிஓய்வு பெற 1 நாள் இருந்த சமயத்தில் பணி இடை நீக்கம்(எந்த காரணமும் இன்றி) செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியது போன்ற சைகோ தனங்களையே தன் ஆட்சி நிர்வாகமாக மாற்றிய ஜெயாவை எப்படி என்னால் ஒரு சிறந்த முதல் அமைச்சராக இரும்பு பெண்மணியாக ஏற்றுக்கொள்ள முடியும்??
பி.கு: இதெல்லாம் அவர் தனிப்பட்ட காழ்ப்புகளால் செய்த ஒன்று.. ஆட்சி நிர்வாகத்தின் கேலி கூத்துக்களை சொன்னால் ஒரு நாள் போதாது...
-சாய் லட்சுமிகாந்த்.
ஜெயலலிதா சமாதியின் ஈரம் காய்ந்து விடவில்லை. அதற்குள் கிளம்பிய சுவரொட்டி..