உத்த வில்லன் மோடி


சந்தடி சாக்கில், மோடியை ஏதோ ஊழலுக்கு எதிரானவர் என்று காமடி செய்கிறார்கள்..

 பிஜேபி ஆட்சி இல்லாத தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம், டெல்லி, கேரளாவை தவிர, வேறு எந்த மாநிலங்களில் இதுபோன்ற ரெய்டுகளை நடத்துகிறார்கள்??? 

கருப்பு பணத்தில் திளைக்கும் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற பிஜேபி ஆளும் மாநிலங்கள், ராஜஸ்தான், மபி, ஜார்கண்ட், பஞ்சாப், சட்டிஸ்கர் போன்றவைகள் எல்லாம் உத்தமசீலர்கள் வாழும் மாநிலங்களா ??
பிஜேபியின் எடியூரப்பா, பங்காரு லட்சுமணன், ஸ்ரீராமுலு, ரெட்டி சகோதரர்கள் எல்லாம் யாரு ??? 
ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்ட சவப்பெட்டியிலேயே பிஜேபியினர் ஊழல் செய்தது மறந்துவிட்டதா??? பாஜக பல ஆண்டுகளாக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் வெளிவந்துள்ள மிகப்பெரிய ஊழலான, பல நூறு மக்கள் "மர்மமான" முறையில் மரணமடைய வைத்த, "அரசு வேலைக்கு லஞ்சம்" "வியாப்பம் ஊழல்" குறித்து தெரியாதா??
மோடிக்கு நெருக்கமான "அதானி" சம்பந்தப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள்....
 மோடியின் மெகா 20,000 கோடி இயற்கை எரிவாயு ஊழல்.. 
மோடியின் மெகா இயற்கை எரிவாயு ஊழல்.. ஊடகங்களில் மறக்கப்பட்ட மிகப்பெரும் ஊழல்.... 
"இல்லாத" எரிவாயுவை பூமியில் இருந்து எடுக்க மோடி வழங்கிய சுமார் 20,000 கோடி .
. இப்படி பிஜேபியின் ஊழல்கள் குறித்து பெரிய பட்டியலே உண்டு..

1. குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் ஊழல்...... -- தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் (CAG Audit) தகவல்....

2. குஜராத் அரசாங்க பெட்ரோலிய கார்பரேஷன் மூலம் 17,000 கோடி ஊழல்....

3. தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு ஆதரவாக ரகசிய ஆவணம் அளித்த பிஜேபி முதல்வர் வசுந்தரா...

4. மகராஷ்டிரா பிஜேபி அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு 200 கோடி ஊழலில் தொடர்பு....

5. பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் மிக பெரிய ஊழலான VYAPAM (The MP recruitment scam or Vyapam scam)... பிஜேபி முதல்வர் சவுகான் முதல் RSS தலைமைகள் வரை இந்த அரசு வேலைக்கு ஊழல், மதிப்பெண் ஊழல், தேர்வு ஊழலில் சம்பந்தப்பட்டு இருகிறார்கள்... அதிர்சிகரமாக, இந்த ஊழலில் குற்றம்சாட்டபட்டுள்ளவர்களும், சாட்சிகளும் தொடர்ச்சியாக மர்மான முறையில் மரணமடைந்து வருகிறார்கள்... இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் மரணம்..

6. போலியான, தவறான கல்வி தகுதியளித்த பிஜேபி அமைச்சர் ஸ்மிரிதி இராணி.... (மத்திய கல்வி துறை அமைச்சர்)

7. ராஜஸ்தான் மாநில பிஜேபி அரசின் முதலமைச்சர் வசுந்தராவின் மகன் துஷ்யந்த் சிங்கின் நிறுவனத்தின், (PAR VALUE) ரூபாய் 10/- மதிப்புள்ள பங்குககளை, லலித்மோடி எனும் தேடப்படும் குற்றவாளிக்கு ஒரு பங்கை ரூபாய் 96200/- விற்றுள்ளார்... அதாவது லலித் மோடி முதலீடு செய்துள்ளார்..

8. சுமார் ஆயிரம் கோடி அபராதம் விதிகப்படகூடிய பொருளாதார குற்றவாளியான, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, இந்தியாவின் சட்டத்துக்கும், நீதிதுறைக்கும் சவால்விட்டு, வெளிநாட்டில் பதுங்கியுள்ள, லலித் மோடிக்கு "உதவி" செய்த பிஜேபி மத்திய அமைச்சர் சுஷ்மா....

9. அரசு பொறுப்பில் இருக்கும் சுஷ்மாவின் கணவரும், மகளும் அரசு வக்கீல் பதவி......

10. சட்டிஸ்கர் மாநிலத்தில் ரேஷன் அரிசி வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல், பிஜேபி முதல்வர் ராமன் சிங் மற்றும் அவரின் மனைவி வீணா சிங்கிற்கும் தொடர்பு...

11. பிஜேபி ஆளும் குஜராத்தில் அகமதாபாத் மெட்ரோ ரயில் ஊழல்..

12. பிஜேபி ஆளும் ஹரியானாவில் பென்ஷன் ஊழல்..

இப்படி பாஜகவின் (BJP) ஊழல்களை பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.. 

அதனால், மோடியை உத்தபுத்திரன் என்று வாய் கிழிய பேசுபவர்கள் வாயை மூடி பேசவும்...                                                                                                                                                                                                                                                                                                                                       -பிரகாஷ் ஜே.பி,
                                                                                                                                                   முகநூலில் 
=================================================================================================
ன்று,
டிசம்பர்-23.
  • இந்திய விவசாயிகள் தினம்
  • விஷ்வ பாரதி பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது(1921)
  • முதல் டிரான்சிஸ்டர் பெல், வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது(1947)
  • முதல் மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் நடத்தப்பட்டது(1954)
  • உலகின் மிகப் பெரிய இரும்பினாலான கோபுரமான டோக்கியோ கோபுரம் திறக்கப்பட்டது(1958)
  • ==================================================================================================          
                                                                   
                                                                    

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?