பேடிஎம் பணப்பரிவர்த்தனை எப்படி?
மத்திய அரசு ரூ.500/- மற்றும் ரூ.1000/- நோட்டுகளை தடை செய்யப்பட்ட பின்பு இந்தியாவில் மக்கள் பணத்துக்காகவும் ,பணபரிவர்த்தனைக்காகவும் திண்டாடி வருகின்றனர்.
தங்களது சேமிப்புப்பணத்தை மட்டுமல்லாமல் வங்கிகளில் போடப்பட்ட சம்பளப்பணத்தை எடுக்கவும் கூட திணறி வருகின்றனர்.
இப்போது அவர்களுக்கு கைகொடுப்பது பணமில்லா பரிவர்த்தனைதான்.
புதிதாக அச்சிட்டு புழக்கத்துக்கு விடுவதாக சொல்லப்படும் 500,2000 பணத் தாள்களும் சரியான முறையில் மக்களிடம் புழக்கத்திற்கு விடப்படவில்லை.அரசால் மக்களின் தேவைக்கான பணத்தை தேவையான முன்னேற்பாடில்லாததால் அச்சிட்டு சமாளிக்க முடியவில்லை.
முன்னாள் நிதியமைசர் ப.சிதம்பரம் கூறியது போல் நம்மிடம் உள்ள பணத்தாள்கள் அச்சிடும் அச்சகம் முழுத்திறனுடன் அச்சிட்டாலும்இந்திய நாடுமுழுக்க தடை செய்யப்பட பணத்தாள்கள் எண்ணிக்கையை 7 மாதங்களாகும் என்றது உண்மையாகி விட்டது.
தற்போது அமைசர்களும்,அதிகாரிகளும் இன்னும் 4 மாதங்களாகும் என்று வெளிப்படையாக பேசத் துவங்கி விட்டனர்.
அதனால் வேறு வழியின்றி டிஜிட்டல் பண பயன்பாடான பேடிஎம் நிறுவனத்தின் வசதிகளை அதிகம் பயனப்டுத்த ஆரம்பித்துள்ளனர்.
மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான சில நாட்களுக்குள் பயனர்களுக்கு ஏதுவாக பேடிஎம் நிறுவனம் அதன் தளத்திற்கு ஆயிரக்கணக்கான புதிய வியாபாரிகள் சேர்த்ததும் குறிப்பிடத்தக்கது.
அதற்கு நன்றியாகத்தான் பிரதமர் மோடி பணம் செல்லாது என்றவுடன் நாளிதழ்களில் முதற் பக்கத்தில்,முழுப்பக்க விளம்பரம் பேடிஎம் கொடுத்தது.
காய்கறி விற்பவர்களில் இருந்து மளிகை கடைகாரர்கள் வரை பேடிஎம்-ன் பணமில்லா பணப்பரிவர்த்தனை அனைவரையும் சென்றடைய மத்திய அரசு முயற்சிக்கிறது.
காய்கறி விற்பவர்களில் இருந்து மளிகை கடைகாரர்கள் வரை பேடிஎம்-ன் பணமில்லா பணப்பரிவர்த்தனை அனைவரையும் சென்றடைய மத்திய அரசு முயற்சிக்கிறது.
ஆனாலும் பலருக்கு பேடிஎம் வழியாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்வது திணறடிக்கும் குழப்பங்கள் நிறைந்ததாகவே உள்ளது.
தங்கள் பணம் அளவுக்கு அதிகமாக இதன் மூலம் எடுக்கப்பட்டு விடுமோ என்ற பயம் உள்ளது.
அது போக சேவைக்கட்டணமாக அதிகப்படியாக பணம் எடுக்கப்படுவதும் வேதனை தருவதாக உள்ளது.
தங்கள் பணத்தை கொடுத்து பொருள் வாங்குவதற்கு சம்பந்தமே இல்லாதவர் ஒருவருக்கு எதற்கு தண்டம் அழ வேண்டும் என்ற வருத்தம் உள்ளது.அது நியாயமானதுதான்.
இருந்தாலும் தற்போது மத்திய மோடி அரசு மக்களை வேறு எந்தப்பக்கமும் போக முடியாதபடி முட்டுசந்தில் கொண்டு போய் நிற்கவைத்து விட்டது .
பேடிஎம் ஆப் பயன்படுத்தி எந்தவொரு வங்கி கணக்கிற்கும் பணம் பரிமாற்றம் செய்வது எப்படி என்பதை நாம் கண்டிப்பாக இந்த சூழலில் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
பேடிஎம் டெஸ்க்டாப் வலைத்தளம் வழியாக பேடிஎம் வேலட்டில் இருந்து வங்கிக்கு பணம் பரிமாற்றம் செய்வது எப்படி என்பதை சற்று சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
பேடிஎம் ஆப் பயன்படுத்தி எந்தவொரு வங்கி கணக்கில் இருந்தும் பணம் பரிமாற்றம் செய்ய
1. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பேடிஎம் ஆப்பை திறக்கவும் பின்னர் பாஸ்புக் ஐகானை கைதேர்வு செய்யவும்.
2. இப்போது சென்ட் மணி டூ பேங்க் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
3. டிரான்ஸ்பர் ஆப்ஷனை டாப் செய்யவும்.
4. எவ்வளவு பணம், அக்கவுண்ட் வைதிருப்பவரின் பெயர், வங்கி கணக்கு எண், மற்றும் ஐஎப்எஸ்சி கோட் ஆகியவைகளை பதிவிடவும்.
5. இறுதியாக 'சென்ட்' பொத்தானை டாப் செய்யவும்.
பேடிஎம் டெஸ்க்டாப் வலைத்தளம் வழியாக பேடிஎம் வாலட்டில் இருந்து வங்கிக்கு பணம் பரிமாற்றம் செய்ய
பேடிஎம் டெஸ்க்டாப் வலைத்தளம் வழியாக பேடிஎம் வாலட்டில் இருந்து வங்கிக்கு பணம் பரிமாற்றம் செய்ய
1. பேடிஎம்.காம் வலைத்தளத்தினுள் நுழைந்து உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
2. திரையின் மேல் வலது பக்கத்தில் உள்ள உங்கள் பெயர் மீது மவுஸ் கர்சரை ரோல் செய்து உங்கள் பேடிஎம் வேலட்டை கிளிக் செய்யவும்.
3. இப்போது விண்டோவில் டிரான்ஸ்பர் டூ பேங்க் ஆப்ஷனை தேர்வு செய்து மற்றும் தேவையான விவரங்கள் டைப் செய்யவும்.
4. இறுதியாக 'சென்ட் மணி' பொத்தானை அழுத்தவும்.
உங்கள் பணம் வங்கிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டு விடும்.இதற்கு பேடிஎம் தனது சேவை(?)க்காக கொஞ்சம் நமது பணத்தை எடுத்துக்கொள்ளும்.
நாம் உழைத்து அந்தப்பணத்தில் பொருள் வாங்க பேடிஎம் க்கு தண்டம் அழுவதுதான் தற்போதைய தேசபக்தி .அப்படித்தான் மத்தியில் அரசாளும் பாஜகவினர் கூறுகின்றனர்.
========================================================================================
இன்று,
டிசம்பர்-16.
- பஹ்ரைன் தேசிய தினம்(1971)
- கசக்கிஸ்தான் விடுதலை தினம்(1991)
- தாய்லாந்து ஐநா.,வில் இணைந்தது(1946)
=========================================================================================
பண்ணையடிமைத்தனத்தை ஒழித்த கடசியின் தலைவன் தோள் துண்டை கையில் எடுத்து கொத்தடிமையாக கடசியின் பெருமையை காற்றில் பறக்கவிட்டாள் காட்சி.