இனி இல்லை ஸ்கைப்?



:"ஸ்கைப்' இணையதள வசதி மூலம் உள்ளூர் செல்போன், தொலைபேசி அழைப்புகளுக்கான சேவை நவம்பர் 10 ஆம் தேதியுடன் இந்தியாவில் நிறுத்தப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
"ஸ்கைப்' என்ற வசதி மூலம் இணையத்தின் வழியாக உள்ளூர், வெளிநாடுகளில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகளுக்கு வாடிக்கையாளர்கள் இலவசமாகத் தொடர்பு கொண்டு பேச முடியும். 
ஸ்கைப் மென்பொருள் வசதி மூலம் வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். 
இதுபோன்ற அழைப்புகளுக்கு இணையத் தொடர்பு பயன்பாட்டுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். 
இதன்மூலம், மலிவான கட்டணத்தில் பார்த்துப் பேசி மகிழ முடியும் என்பதால், மிகுந்த வரவேற்பை "ஸ்கைப்' பெற்றது.

அதேநேரத்தில், ஸ்கைப் சேவையினால் தங்களது வருவாய் பெருமளவு பாதிக்கப்படுவதாக இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாகக் குற்றம்சாட்டின.
 இந்த நிலையில், ஸ்கைப்'பின் தாய் நிறுவனமான மைக்ரோசாப்ட் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

நவம்பர் 10 ஆம் தேதியுடன் ஸ்கைப் வசதி மூலம் இந்தியாவில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகள் இடையேயான உள்ளூர் அழைப்பு வசதி ரத்து செய்யப்படுகிறது. 
இருப்பினும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ளசெல்போன்கள், தொலைபேசிகளுக்கும் ஸ்கைப் வசதி மூலம் இலவசமாகப் பேசிக்கொள்ளும் வசதி தொடர்ந்து நீடிக்கும்.
மேலும், ஸ்கைப் மூலமான வை-பை, குறுஞ்செய்தி வசதிகளை இந்திய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மைக்ரோசாப்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய்ஸ் அழைப்புகளை இனி அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ் அப்., அறிவித்துள்ளது. 
------------------------------------------------------------------------------------------------------------------------
மருத்துவ நோபல் பரிசு

2014-ம் ஆண்டின் மருத்துவம் / உடற்கூறியல் துறைக்கான நோபல் பரிசை அமெரிக்கா, நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் மூவர் வென்றுள்ளனர்.
மூளை உயிரணுக்கள் குறித்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் ஓகீஃபே மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ தம்பதியரான மே-பிரிட் மோசர், எட்வர்ட் ஐ. மோசர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
நாம் எங்கே இருக்கிறோம் என்பதை எப்படி நம் மூளை அடையளம் காண்கிறது? 
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு புதிய இடத்திற்கு எப்படி நம்மால் சரியாக செல்ல முடிகிறது?
அதே பாதையில் அடுத்த முறை செல்லும்போது எப்படி மூளை அதை நினைவில் வைத்துக் கொள்கிறது. 
செல்போன்களில் இருக்கும் ஜி.பி.எஸ். போல் மூளையில் செயல்படும் அந்த அணு எது? 
இதைத் துல்லியமாக கண்டுபிடித்து சாதனை புரிந்ததற்காகவே, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஓ’கீஃபே, நார்வேயைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மே- பிரிட் மோசர், எட்வர் ஐ. மோசருக்கும் மருத்துவ நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
நீதித்துறையை எதிர்த்து மாணவர்களா?

 இதுவரை இல்லாத கேலி கூத்தாக சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, தனியார் பள்ளி, கல்லூரிகளை இன்று ஒரு நாள் அடைக்கும் போராட்டத்தை நடத்துவதாக வெளியிட்ட அறிவிப்பை, கடைசி நேரத்தில், வாபஸ் பெற்றனர் பள்ளி, கல்லூரி சங்க நிர்வாகிகள். 
பொதுமக்கள் கடும் எதிர்ப்பு மற்றும் அடைப்பிற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது தான், வாபஸ் பெற்றதற்கு காரணம்.
  ஜெ., சிறைக்கு சென்றதில் இருந்து, அவருக்கு ஆதரவாக, பல தரப்பினர், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
 'லெட்டர் பேடு' கட்சி முதல், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் வரை, 'ஜெ.,வுக்கு ஆதரவாக போராடினோம்' என்பதை, பதிவு செய்வதற்காகவே, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அதற்கான செலவுத்தொகையை அதிமுக அமைச்சர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்த வரிசையில், கல்வித்துறை அமைச்சர் மிரட்டலின் படி சிறை குற்றவாளி 'ஜெ.,வுக்கு ஆதரவாக, 7ம் தேதி (இன்று) ஒரு நாள், தனியார் பள்ளிகள் மூடப்படும்' என, தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பு செயலர், இளங்கோவன் அறிவித்தார். 
இதைத் தொடர்ந்து, 'சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் மூடப்படும்' என்ற அறிவிப்பை, சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பின் நிர்வாகி, செல்வராஜ் அறிவித்தார். 
இதனால், இன்று, தனியார் பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
இதுவரை பல்வேறு போராட்டங்கள்,கடையடைப்புகள்,பேருந்து நிறுத்தம் போன்றவற்றால் எரிச்சலில் இருந்த தமிழக மக்கள் கடைசியில் சட்டம்,நீதியை கடை பிடிக்க மானவர்களிடம் கற்பிக்க வேண்டிய கல்வித்துறையே ஒரு ஊழல் தண்டனைக்காக சிறையில் இருக்கும் குற்றவாள் ஜெயா வுக்கு அளிக்கப்பட்ட நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்த் போராட்டம் நடத்துவதற்குசங்க நிர்வாகிகளின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 
தி.மு.க., தலைவர், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்தனர். 
அத்துடன், பள்ளி, கல்லூரி அடைப்பிற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று, அவசரமாக திமுக மற்றும் சில அமைப்புகள் பெயரில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 
இது போன்ற இக்கட்டான நிலையில், பள்ளி, கல்லூரியை அடைத்தால், அது, தமிழக அரசு கல்வித்துறைக்கும்,அரசுக்கும் கடும் சிக்கலை ஏற்படுத்தும் என, தமிழக அரசு கல்வித்துறையினர் பயந்தனர்.அதனால்  பிற்பகல், அவசரம் அவசரமாக, பள்ளி, கல்லூரி அடைப்பு போராட்டத்தை, 'வாபஸ்' பெற்றனர். . இதனால், இன்று வழக்கம் போல், தனியார் பள்ளிகளும், பொறியியல் கல்லூரிகளும் இயங்கும்.

காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், தமிழகம் முழுவதும், இன்று, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 
ஆளுங்கட்சியினரின் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால், பள்ளிகளில் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது.
இது குறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'பள்ளிகளில், பாதுகாப்பு ஏற்பாடு எதுவும் செய்யவில்லை. பள்ளிகளில், எந்த பிரச்னையும் ஏற்படாது என, நம்புகிறோம்' என்று தெரிவித்தது.அதாவ்து ஆளுங்கட்சியினர் பள்ளிகளை அடைக்க சொன்னால் பாதுகாப்பு அளிக்க வில்லை என்று பெற்றோர்களை மறைமுகமாக எச்சரித்துள்ளது கல்வித்துறை.
ஜெ.,வுக்கு ஆதரவாக, பல போராட்டங்களை, அ.தி.மு.க.,வினர் நேரடியாக களத்தில் நின்று நடத்தி வருகின்றனர். 
சில வகை போராட்டங்களை,  பணம் கொடுத்தும் ,அரசு -காவல்துறை மூலம் மிரட்டியும்பின்னணியில் இருந்து நடத்துவதாகவும் தெரிகிறது.
 இரண்டாவது வகையில்  தனியார் பள்ளி, பொறியியல் கல்லூரியை மூடும் போராட்டமும் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பை, ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளி ஒருவரே, தூண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. 
பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்படும் என்று சொல்லப்பட்ட பின்னர் கல்வி துறை அதிகாரிகள், மவுனம் காத்தது, ஆளுங்கட்சி பிரமுகரின் தலையீட்டை வெளிப்படுத்தியது.
. தனியார் பள்ளி ,கல்லூரி அடைப்பு அறிவிப்பு செய்தி, ஆளுங்கட்சி ஜெயா 'டிவி'யில், தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது .
ஆனால் திமுகவினர் நீதிமன்றத்துக்கு சென்றதும்,நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தண்டனை வழங்கப்பட்டவருக்கு ஆதர்வாக போராட்டம் மக்களிடமும்,நீதிமன்றத்திடமும் எதிர்ப்பை பெற்றுத்தரும்.இதற்காக உரிமங்கள் ரத்து செய்யப்படும் தண்டனை கூட வழங்கப்படலாம் என்ற செய்தியும் கல்வி வியாபாரிகளிடம் பய்த்தை ஏற்படுத்தி விட்டது.
.கடைசி நேரத்தில், விவகாரம் சிக்கலாக மாறியதால், கல்வி வியாபர சங்க நிர்வாகிகள் தாங்கள் மட்டும் போராடுவதாக அறிவித்து பின்வாங்கி விட்டனர்.
இனி அதிமுக வினரால் தூண்டப்படும் போராட்டங்கள் இதே முறையில் முடக்கப்படும் என்று தெரிகிகிறது,.
--------------------------------------------------------------------------------------------------------------------------.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?