முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்டு கொண்டேன்,,,,,,.! கருப்பு பணம்தனை..!!


சுரன்30102014

 காங்கிரசு அரசு கொண்டுவர முடியாத கருப்புப் பணத்தை அன்னிய வங்கிகளில் இருந்து தான்  கொண்டு வந்து விடப்போவதாகவும்.
அதில் இருந்து இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு வைத்தால் தலா 19 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று திருவாளர் மோடி திருவாய் மலர்ந்து முழங்கினார்.
ஆனால் இன்று ஏற்கனவே அனுமதி பெற்று அன்னிய வங்கியில் கணக்கு வைத்திருப்போர் பட்டியலை வைத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
அவர்கள் வெளியிட்ட மூன்று  பெயர்கள் அனைத்தும் வெளிநாடுகளில் வணிகம் செய்பவர்கள் பெயர்கள்தான்.
நமக்கு என்னவோ மோடி இந்த கருப்பை கண்டு பிடித்து  தலா 19லட்சம் தருவார் என்ற நம்பிக்கை இல்லை.


கருப்பு பணம் என்றால்....?

வருவாயில் இருந்து அரசுக்குக் கணக்குக் காட்டாமல் மறைக்கப்படும் பணம் எல்லாமே கருப்பு பணம்தான். பொதுவாக வரி கட்டுவதைத் தவிர்க்கவே, வருவாய் மறைக்கப்படுகிறது. சில வேளைகளில் குற்ற வழிகளில் வந்த பணத்தையும் கணக்குக் காட்ட முடியாமல் போவதால் அதுவும் கருப்பு பணமாகி விடுகிறது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு, பணப் பரிவர்த்தனை மூலமே நடைபெறுகிறது. ஆண்டுக்கு சுமார் 62 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு மளிகைப் பொருட்கள் வாங்கு கிறோம். அதற்குப் பதிலாகப் பணம் கொடுக் கிறோம். அதற்குப் பெரும்பாலும் ரசீது இல்லை. அந்தப் பணம் கருப்பு பணமாக மாறுகிறது. இதுதவிர ரியல் எஸ்டேட், உற்பத்தி பொருட்கள், தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கு வதில் ஏராளமான கருப்பு பணம் புழங்குவதாகக் கூறப்படுகிறது. கருப்பு பணம் எப்படி கை மாறுகிறது என்பதைப் பார்ப்போம்.
ஒரு நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கான பொருட்களை இன்னொரு நிறுவனத்துக்குச் சப்ளை செய்கிறது. 
ஆனால், அதற்குரிய ரசீதை வழங்க வில்லை. அதன்பிறகு சப்ளை செய்த பொருட்களின் மதிப்பில் ரூ.60 ஆயிரத்துக்கு மட்டும் ரசீது வழங்குகிறது.
பொருட்களை வாங்கிய நிறுவனம், ரூ.40 ஆயிரத்துக்கான காசோலையை வழங்குகிறது.
 ரூ.20 ஆயிரத்தை வரியாகக் கழித்து விடுகிறது.
ஒரு மாதம் கழித்து, மீதித் தொகை ரூ.40 ஆயிரம், பொருட்கள் சப்ளை செய்த நிறுவனத்துக்கு பணமாகக் கொடுக்கப்படுகிறது.
 இந்தப் பணம் கணக்கிலேயே வராது. இதுதான் கருப்பு பணம்.

ஒரு நிறுவனத்துக்கு ஒருவர் ரூ.10 கோடி கடனை பணமாகக் கொடுக்கிறார். 
அதைப் பெற்றுக் கொண்ட நிறுவனம், தனது விற்பனையாளர்களுக்கு பணமாக முதலீடு செய்கிறது. கடைசியில் அந்த நிறுவனம் நுகர்வோர்களிடம் இருந்து காசோலையாகப் பணத்தைத் திரும்பப் பெறுகிறது. 
அதன்பின், 10 கோடி ரூபாய் கடனாக வழங்கியவர், பணத்துக்குப் பதில் நிறுவனத்திடமிருந்து பங்குகளாக வாங்கிக் கொள்கிறார்.

ஒருவர் தன்னுடைய நிலத்தை ரூ.20 கோடிக்கு இன்னொருவருக்கு விற்கிறார். 
அதில் 50 சதவீதத் தொகையை (ரூ.10 கோடியை மட்டும்) பணமாகப் பெற்றுக் கொள்கிறார். மீதி 50 சதவீதத் தொகையை காசோலையாகப் பெறுகிறார். ரூ.10 கோடிக்கான காசோலையை வங்கியில் செலுத்தி, ஒரு பெருந் தொகையை பணமாக எடுத்துக் கொள்கிறார். 
மீதியை தங்கம் வர்த்தகம் செய்வதற்காக வங்கியில் இருந்து டிமாண்ட் டிராப்டாக பெற்றுக் கொள்கிறார்.
இந்த விஷயத்தில் முதலில் பணமாகப் பெற்ற ரூ.10 கோடி அரசுக்கு கணக்குக் காட்டப்படாமல் போகும். 

அது கருப்பு பணமாக மாறி விடும்.
சுரன்30102014
 இப்படி பல வழிகளில் அரசுக்குக் கணக்குக் காட்டாமல், வரியைத் தவிர்க்க சேர்க்கப்படும் பணம்தான் கருப்பு பணம்.
=======================================================================
இந்தியர்களின் கருப்பு பணம் 
வெளிநாட்டு வங்கிகளில் 
பதுக்கி வைக்கப்பட்டுள்ளது 
பற்றி ஒரு பார்வை.


வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் குறித்த அதிகாரபூர்வ கணக்கீடு எதுவும் இல்லை.
இருப்பினும், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் கணக்கீட்டின்படி, இந்த தொகை 
“466 பில்லியன் அமெரிக்க டாலர் (28 லட்சத்து 57 ஆயிரத்து 512 கோடி ரூபாய்) முதல் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய கணக்கில் 85 லட்சத்து 88 ஆயிரத்து 300 கோடி ரூபாய்கள்  இருக்கலாம்”
 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
=============================================================================

கருப்பு பணம் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் பற்றிய ரகசியங்களை சுவிஸ் வங்கி நிர்வாகம் எந்த அளவுக்கு காப்பாற்றுகிறது என்பதை விளக்கும் விதத்தில் ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதி இருக்கும் சிறுகதையின் சுருக்கம்...

நைஜீரிய நாட்டின் புதிய நிதி அமைச்சர் இக்னாசியஸ் அகர்பி. மிகவும் நேர்மை யானவர். ஊழலை அறவே பிடிக்காது. தான் குடும்பத்துடன் செல்லும் பயணங்களுக்கு கூட அரசு பணத்தை தொட மாட்டார். தனது சொந்தப் பணத்தை மட்டுமே செலவு செய்பவர். அதிரடி நடவடிக்கைகள் மூலம் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் ஊழலை அம்பலப் படுத்தி குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலம் ஆனவர்.
நாட்டின் அதிபருக்கு இவர் மீது நல்ல நம்பிக்கை. ஸ்விஸ் வங்கியில் பணக்காரர்கள் பதுக்கியிருக்கும் பணத்தை கண்டுபிடித்து மீட்க இவர்தான் சரியான ஆள் என முடிவு செய்கிறார். அந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார். நைஜீரிய அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தை எப்படியாவது கண்டுபிடிக்கும்படி கூறி அவரை ஸ்விட்ஸர்லாந்து அனுப்புகிறார்.
அதிபரின் உத்தரவுப்படி ஸ்விஸ் வருகிறார் அகர்பி. சம்பந்தப்பட்ட ஸ்விஸ் வங்கிக்கு செல் கிறார். கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் தனது நாட்டவரின் பட்டியலைக் கேட்கிறார். அதெல்லாம் மிகவும் ரகசியமான விஷயம். யார் கேட்டாலும் தர மாட்டோம் என மறுக்கிறார் வங்கி நிர்வாகி.
நைஜீரியா எவ்வளவு ஏழை நாடு என்பது உங்களுக்குத் தெரியும். அங்குள்ள மக்கள் பசி, பட்டினியோடு வாழ்கிறார்கள். அவர்களை சுரண்டிக் கொழுத்த பணத்தை அவர் களுக்கே செலவிட உதவுங்கள் என கெஞ்சுகிறார் அமைச்சர் அகர்பி.
அதெல்லாம் உங்கள் பிரச்சினை. அதற்கும் எங்களுக்கும் சம்பந்த மில்லை. எங்கள் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை தரும் வழக்கம் எங்களுக்கு இல்லை. கிளம் புங்கள் என மறுக்கிறார் வங்கி நிர்வாகி. இப்படி எல்லாம் கேட்டால் நீ சரிப்பட்டு வர மாட்டாய் என கோபத்துடன் துப்பாக்கியை எடுத்து நிர்வாகியின் நெற்றிப் பொட்டில் வைக்கிறார் அகர்பி.
தாராளமா சுட்டுக்கோ. நீ சுட்டாலும் நீ கேட்ட ரகசிய தகவல தரவே மாட்டேன் என உறுதியாக சொல்லி விடுகிறார் வங்கி நிர்வாகி.
அப்படியா... என சந்தோஷத்துடன் தான் கொண்டு வந்திருந்த சூட்கேஸை திறக்கும் அகர்பி, இந்தா இதுல 50 லட்சம் டாலர் இருக்கு. இத நான் இங்க முதலீடு செய்றேன்... ’ கவனம். அத்தனை பணமும் யாருக்கும் தெரியாமல் ஊழலில் சேர்த்தது.”என்றார் மெல்லிய குரலில்.
==========================================================================

உலகில் கருப்பு பணத்தை பதுக்கிவைக்கும் சொர்க்கபுரிகளாக ஐரோப்பாவை சேர்ந்த சில நாடுகள் திகழ்கின்றன. 

இந்தப் பட்டியலில் மொத்தம் 11 நாடுகள் உள்ளன.

இந்நாடுகளில் உள்ள பன்னாட்டு வங்கிகளில் பல்லாயிரம் கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அப் பணத்துக்கு ஒரு சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது. 

கருப்பு பணம் அதிகம் பதுக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலின் முதல் இடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது.

இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 41,285 கி.மீட்டர். மக்கள் தொகை 72,88,010. 
இதற்கு அடுத்து 10 மிகச் சிறிய நாடுகள் உள்ளன. அவை வருமாறு:

ஜிப்ரால்ட்டர்: ஜிப்ரால்டார் நீரிணை பகுதியில் அமைந்துள்ள இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 6.8 கி.மீட்டர். மக்கள் தொகை 28,875.

மொனாக்கோ: பிரான்ஸ் அருகேயுள்ள மிகச் சிறிய நகர நாடான மொனாக் காவின் பரப்பளவு 2.02 கி.மீட்டர். மக்கள் தொகை 36,371.

சான் மரீனோ: ஜரோப்பாவின் பழமையான குடியரசு நாடு என்றழைக்கப்படும் சான் மரீனோவின் பரப்பளவு 61 கி.மீட்டர். மக்கள் தொகை 28,117.

லீச்டென்ஸ்டெய்ன்: நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள லீச்டென்ஸ் டெய்ன் நாட்டின் பரப்பளவு 160 கி.மீட்டர். மக்கள் தொகை 33,987.

குயெர்ன்சி: சிறிய தீவு தொகுப்புகளை கொண்ட குயெர்ன்சியின் பரப்பளவு 78 கி.மீட்டர். மக்கள் தொகை 65,573.

மான் தீவு: பிரிட்டன் அருகேயுள்ள மான் தீவின் பரப்பளவு 572 கி.மீட்டர். மக்கள் தொகை 80,058.

அந்தோரா: பிரான்ஸ் அருகே அமைந்துள்ள அந்தோராவின் பரப்பளவு 468 கி.மீட்டர். மக்கள் தொகை 71,822.

ஜெர்ஸி: பிரான்ஸ் அருகே உள்ள ஜெர்ஸி நாட்டின் பரப்பளவு 116 கி.மீட்டர். மக்கள் தொகை 89,300.

லக்சம்பர்க்: மேற்கு ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க்கின் பரப்பளவு 2586 கி.மீட்டர். மக்கள் தொகை 4,39,539.

சைப்ரஸ்: மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள சைப்ரஸ் மிகச் சிறிய தீவு நாடாகும். இதன் பரப்பளவு 9251 கி.மீட்டர். மக்கள் தொகை 788457.

ஆக குறைவான மக்கள் தொகை கொண்ட இந்த நாடுகளின் வங்கிகளில் இருக்கும் பணமோ கற்பனைக்கும் எட்டாதது.

இந்திய அரசு கருப்பு பணத்தை மீடக ஒரு குழுவையும் அமைத்துள்ளது.

 சிறப்பு புலனாய்வுக் குழுவில் 13 பேர் இடம்பெற்றுள்ளனர். 
அவர்கள் விவரம்:

ஷா மற்றும் பசாயத்.
1. எம்.பி.ஷா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, தலைவர்

2. அரிஜித் பசாயத், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, துணைத் தலைவர்

3. மத்திய வருவாய் துறை செயலர்

4. ரிசர்வ் வங்கி துணை கவர்னர்

5. புலனாய்வுத் துறை (ஐ.பி.) இயக்குநர்

6. மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குநர்

7. சிபிஐ இயக்குநர்

8. மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர்

9. மத்திய நேரடி வரிகள் வாரிய இணைச் செயலர்

10. ‘ரா’ அமைப்பின் இயக்குநர்

11. போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர்

12. வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநர்

13. நிதிப் புலனாய்வுத் துறை இயக்குநர்.

இந்த குழுவில் உள்ளவர்களில் ஒருவருக்கும் மேற்கண்ட வங்கிகளில் கணக்கு ஏதும் இருக்காது என்று நம்புவோம்.
===========================================================================
சுரன்30102014


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?