மாட்டிறைச்சிஉட்கொள்வதன் காரணம் என்ன?

ஆன்லைன் - டிராப்பாக்ஸ்
 பயனாளர்களே உஷார்!
தொழில்நுட்பம் வளர்ந்துள்ள அளவுக்கு சைபர் கிரைம் நடவடிகைகளும் வளர்ந்திருக்கிறது என்பதை நம் யாராலும் மறுத்துவிட முடியாது.
 சமீப காலமாக சைபர் கிரைம்கள் அதிகமாக நடந்து வருகின்றன. சென்ற வாரத்தில் ஹேக்கர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது 'டிராப்பாக்ஸ்' எனப்படும் புகைப்பட சேமிப்பு வலைதளம்.

இது புகைப்படங்களை சேமிப்பதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வலைதளத்தில் ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.
 கூகுளின் ஜிமெயில் கணக்கை போல பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு கொண்டு இந்த வலைதளத்தில் புது கணக்கை துவங்கலாம். 
அந்த கணக்கில் புகைப்படங்களை அப்லோடு செய்து வைத்துக் கொண்டு தேவை என்கிற போது அதை தரவிறக்கமும் (டவுன்லோடு) செய்து கொள்ளலாம்.

சரி, நல்ல விஷயம்தான். இதிலென்ன ஆபத்து வந்துவிடப் போகிறது என்கிறீர்களா? 
சில வாரங்களுக்கு முன்பு போஸ்ட்பின் என்கிற வலைதளத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபர் 400 'டிராப்பாக்ஸ்' கணக்கர்களின் பயனாளர் எண் மற்றும் பாஸ்வேர்டு விவரங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தான் 'டிராப்பாக்ஸ்' சர்வரை ஹேக் செய்து விட்டதாகவும், தன்னிடம் தற்போது சுமார் 7 மில்லியன் 'டிராப்பாக்ஸ்' கணக்காளர்களின் பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு இருப்பதாகவும், அதற்கு தகுந்த பணத்தை யார் வழங்க முன் வருகிறார்களோ அவர்களுக்கு 'டிராப்பாக்ஸ்' கணக்குகள் குறித்த விவரங்களை வழங்க தயார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இது டிராப்பாக்ஸ் பயனாளர்கள் எலோரையும் அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.
போலி ஆப்ஸ்களே காரணம்!

இது குறித்து டிராப்பாக்ஸ் தரப்பு, "ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போல டிராப்பாக்ஸ் தேர்டு பார்ட்டி அப்ளிகேஷன்கள் பல்வேறு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் ஸ்டோர்களில் இருக்கின்றன. இந்த போலி அப்ளிகேஷன்களை பயன்படுத்தியே ஹேக்கர்கள் டிராப்பாக்ஸ் விவரங்களை திருடி இருக்கலாம். மற்றபடி டிராப் பாக்ஸ் சர்வர் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை. அதுமட்டுமல்லாமல், முன்னனெச்சரிக்கை நடவடிக்கையாக டிராப்பாக்ஸ் பயனாளர்கள் எல்லோருக்கும் அவரவர்களின் பாஸ்வேர்டை மாற்றச் சொல்லி மெயில் அனுப்பட்டு விட்டது" என்று தெரிவித்துள்ளது.
இன்றைய நிலையில் ஆண்ட்ராய்டு போன்களின் ஆதிக்கம்தான் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. டிராப் பாக்ஸ், ஃபேஸ்புக் தொடங்கி சமூக வலைதளத்தின் இன்றைய ஜாம்பவான் வாட்ஸ்அப் வரை போலியான அப்ளிகேஷன்கள் ஸ்டோர்களில் உலாவி வருகின்றன.
 அதனால் அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்யும்போது மிகவும் கவனமுடன் செயல்படுவது அவசியம். முடிந்தவரை அப்ளிகேஷன்களை அதன் ஆதாரபூர்வமான அப்ளிகேஷன் ஸ்டோர்களில் டவுன்லோடு செய்யுங்கள்.

ஏ.டி.எம். பின் நம்பரை அடிக்கடி மாற்றுவது போல, முக்கியமான, நமது விவரங்கள் அதிகம் இருக்கக் கூடிய வலைதளங்களின் பாஸ்வேர்டுகளை கூட அடிக்கடி மாற்றிக் கொள்வது நல்லது.
 நாம் எச்சரிக்கையுடன் இல்லாமல் போனால் சமூக வலைதளங்கள், இதுபோன்ற தகவல் சேமிப்பு வலைதளங்கள் மற்றும் வங்கி கணக்குகள் என எல்லாவற்றிலும் ஒரிஜினல் போலவே வலைதளங்களை உருவாக்கி கூட நமது விவரங்களை ஹேக்கர்கள் திருடிவிடக் கூடும்.


=====================================================================

மற்றவர்கள் உணவை 

தேர்வு செய்ய இவர்கள் யார்?

மோடி அரசாங்கம் பதவியேற்ற பிறகு மதக்கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்படுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இடத்திற்கு தகுந்தவாறு வெவ்வேறு பிரச்சனைகளை சங் பரிவாரங்கள் கையில் எடுக்கின்றன.
சமீ பத்திய பக்ரித் பண்டிகை பொழுது அவர்கள் கையில் எடுத்தது “பசு/ மாடுகள் வதை தடுப்பு”.பசுவதை தடுப்பு என்பதை அனைத்து மாடு விலங்கினங்களுக்கும் பொருத்தி மாட்டிறைச்சி சாப்பிடுவதை தடை செய்ய வேண்டும் என்பது சங் பரிவாரம் எழுப்பும் புது கூக்குரல் ஆகும்.
தனது விஜயதசமி உரையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் குறிப்பிட்டார்
“இறைச்சி ஏற்றுமதிக்கு குறிப்பாக மாட்டி றைச்சி ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டியது அவசியம் என நாங்கள் கருதுகிறோம்
இவர்களுக்கு பசு தெய்வம்
என்றால் இவர்கள்
திங்காமல் இருக்க வேண்டியதுதான்.
.” இந்த உரையை விளக்கிய ஆர்எஸ்எஸ் நிர் வாகக்குழு உறுப்பினர் சேஷாத்தரிச்சாரி “பசு மட்டுமல்ல;
அதன் வம்சத்தை சார்ந்த அனைத்து மாடுகளின் வதையையும் தடை செய்ய வேண்டும் என்பதே மோகன்பகவத் தின் அறிவுரை ஆகும்.” என்கிறார்.
 பசு மட்டுமல்ல; அனைத்து வகையான மாடுகள் கொல்லப்படுவதையும் அதன் இறைச்சி சாப்பிடுவதையும் தடை செய்ய வேண்டும் என்பதே சங் பரிவாரத்தின் புதிய நிலை!“
பழங்கால சடங்குகள் அடிப்படையில் மாட்டிறைச்சி சாப்பிடாதவன் ஒரு இந்துவாக இருக்க இயலாது என இருந்தது என்பதை நான் கூறினால் நீங்கள் அதிர்ச்சி அடை வீர்கள்!
சில தருணங்களில் மாட்டை பலி கொடுத்து அதன் இறைச்சியை இந்து உட்கொள்ள வேண்டும் என இருந்தது” என்றார் விவேகானந்தர்.

விவேகானந்தர் கூற்றுப்படியே பசு புனித பிராணியாக பழங்காலம் முதலே இருந்தது இல்லை என்பதை உணர முடியும்.
எனினும் இன்று இசுலாமியர்களுக்கு எதிராக சாதாரண இந்துக்களை திரட்டிட பசு மட்டுமல்லாது அனைத்து வகை மாடுகளையும் புனித பிராணிகளாக மாற்றிட முயல்கின்றனர்.
பசுவும் எருமை மாடும் ஒரேவகை மரபணு கொண்ட பிராணிகள் அல்ல. அதனால்தான் அவை ஒன்று கூடுவது இல்லை. ஆடுக்கும் ஒட்டகத்திற்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளதோ அவ்வளவு வேறுபாடு பசுவுக்கும் மாடுக்கும் உள்ளது என்கிறார் புஷ்பா பார்கவா எனும் உயிரியல் ஆராய்ச்சியாளர். எனினும் சங்பரிவாரம் வரலாறு அல்லது விஞ்ஞானம் அடிப்படையிலான உண்மைகள் பற்றி அலட்டிக்கொள்வது கிடையாது.

இறைச்சி உணவு உட்கொள்வதில் உள்ள சில பொருளாதார உண்மைகளை சங் பரிவாரம் மறைத்து விடுகிறது.
மாடிறைச்சி விற்பனை
உலகமெங்கும் உள்ளது.
இந்தியாவில் கோழி இறைச்சிதான் மிக அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. அடுத்ததாக மீனும் ஆட்டுக்கறியும் மக்கள் உட்கொள்கின்றனர். மாட்டிறைச்சி மிகக்குறைந்த அளவே உட் கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் ஒரு ஆண் டிற்கு 20 லட்சம் டன் மாட்டிறைச்சி உணவாக பயன்படுத்தப்படுகிறது எனில் கோழி இறைச்சி 120 கோடி டன் அதாவது 12000 இலட்சம் டன் பயன்படுத்தப்படுகிறது.
 அதே சமயத்தில் இறைச்சி ஏற்றுமதியில் மாட்டு இறைச்சிதான் மிக அதிகமாக உள்ளது என்பதை கீழ்கண்ட விவரங்கள் தெளிவாக்கும்:
இறைச்சி ஏற்றுமதி மதிப்பு ரூ.கோடியில் ஆண்டிற்குமாட்டிறைச்சி 26457ஆட்டிறைச்சி 694கோழி இறைச்சி 565மற்றவை 9“தேசத்தில் இளஞ்சிவப்பு புரட்சிதான்((Pink Revolution) ஊக்கப்படுத்தப்படுகிறது”

அதாவது இந்துக்கள் புனிதமாக கருதும் மாடுகள் கொல்லப்பட்டு இறைச்சியாக மாற்றி ஏற்றுமதி செய்யப்படுகிறது என மோடி தேர்தல் பிரச்சாரத்தில் இசுலாமியர்களுக்கு எதிராக கருத்துக்களை உருவாக்க முயன்றார்.
 அவரது அமைச்சரவை உறுப்பினரான மேனகாகாந்தி ஒரு படி மேலே போய் “மாட்டிறைச்சி ஏற்றுமதியில் வரும் வருமானம் பயங்கரவாதச் செயல்களுக்காக பயன்படுத்தப்படுகிறது” என குற்றம் சாட்டினார்.
 அதாவது மாட்டி றைச்சி தொழிலில் இசுலாமியர்கள் அதிகமாக உள்ளனர்.
அவர்களது வருமானம் இசுலாமிய தீவிர வாதத்திற்கு பயன்படுத்தப்படு கிறது என்கிறார் மேனகா காந்தி!
ஆனால் உண்மை என்ன?
மாட்டி றைச்சி ஏற்றுமதியில் பசுவின் இறைச்சி தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனைய மாடுகளின் இறைச்சிதான் ஏற்றுமதி செய் யப்படுகிறது. அவ்வாறு மாட்டிறைச்சி ஏற்றுமதி யில் ஈடுபடும் பெரும்பாலான வணிக நிறுவனங் கள் இசுலாமியர் அல்லாதோருக்கு சொந்த மானது ஆகும்.

மாட்டிறைச்சிஉட்கொள்வதன் காரணம் என்ன?

இவ்வளவு பிரச்சனைகள் இருந்தா லும் மக்கள் ஏன் மாட்டிறைச்சி உட்கொள்கின் றனர்?
இவைகளுக்கு வக்காலாத்து சங் பரிவார்.
கோழி,காடை ,ஆடுகளுக்கு வக்காலத்து ?
முக்கிய காரணம் மாட்டிறைச்சி விலை குறைவு என்பதாகும்.

ஆட்டிறைச்சி விலை யுடன் ஒப்பிடும் பொழுது மாட்டிறைச்சி விலைபாதிக்கும் குறைவாக உள்ளது.

 இன் னொரு காரணம் புரோட்டீன் போன்ற சத்துப்பொருட்கள் மாட்டிறைச்சியில் அதிகம்.

 புரோட் டீன் அதிகமாக தரும் பருப்பு தானியங்களின் விலை செங்குத்தாக உயரும் பொழுது மக்கள்மேலும் மேலும் மாட்டிறைச்சியின் பக்கம் தள்ளப்படுகின்றனர்.

தோல் தொழிலுக்கு மாட்டுத்தோல் ஒரு முக்கிய மூலப்பொருளாகும்.

இந்திய ஏற்றுமதி சம்மேளனத்தின் முதன்மை அதிகாரி அஜய்சாஹி கூறுகிறார், “ மாட்டிறைச்சி தொழில் தான் எங்களுக்கு (தோல் பொருட்கள் உற்பத்திக்கு) மூலப்பொருட்களை தருகிறது.

தற்சமயம் சுமார் ரூ.60,000 கோடிக்கு தோல் பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம்” என்கிறார்.
 மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டால் தோல் பொருள் தயாரிப்பு தொழில் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது!

இந்த சமூக பொருளாதார உண்மைகளை மறைத்துவிட்டு சங் பரிவாரம் மாட்டிறைச்சி பிரச்சனையை இசுலாமியர்களுக்கு எதிராக பயன்படுத்த முயல்கிறது.
மனித இறைச்சியே இங்கு மறைமுகமாக விறபனைக்கு வருகிறது.
சைவமா அல்லது அசைவமா என்பதும் அசைவத்தில் எதனை உட்கொள்வது என்பதும் அவரவர் விருப்பத்திற்குட்பட்டது.

 இதனை மதப்பிரச்சனையாக ஆக்குவது திட்டமிட்ட வஞ்சகச் செயல் ஆகும்.

மதச்சார்பின்மை அடிப்படையில் சாதாரண இந்துக்கள் மற்றும் இசுலாமியர்கள் ஒற்றுமை மூலம்தான் சங் பரிவாரத்தின் வஞ்சக பிரச்சாரத்தை முறியடிக்க முடியும்.

                                                                                                                                                                                      - அ.அன்வர் உசேன்
============================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?