கொள்ளை லாபம் சம்பாதித்து



 பங்கு போடும் முத­லா­ளித்­துவம்!

சமீ­பத்தில் நடந்த தேர்­தலின் போதும், அதன் பின்­னரும் அர­சியல் கட்சித் தலை­வர்­களும், அதி­கா­ரி­களும்,குரோனி கேப்­பிட்­ட­லிசம்” என்ற வார்த்­தையை அடிக்­கடி உப­யோ­கிக்­கின்­றனர். ‘குரோனி என்­பதன் பொருள், அக­ரா­தியில் நட்பு என்று சொல்­லப்­ப­டு­கி­றது. 
‘குரோனி கேப்­பிட்­ட­லிசம் என்றால் என்ன? 
இதை சமீப காலத்தில் உப­யோ­கிக்க காரணம் என்ன?
நம் நாட்டில், ‘குரோனி கேப்­பிட்­ட­லிசம் எந்த அளவில் உள்­ளது, அர­சி­யல்­வா­திகள் ஏன் இந்த வார்த்­தையை உப­யோ­கிக்­கின்­றனர்? 
அரசு தொழிற்­து­றையில் இறங்­கினால், லஞ்சம் தான் ஏக­மாக பர­வு­கி­றது. ‘தனிப்­பட்ட தொழில் முனைவோர், இன்­றைய இளை­ஞர்­க­ளுக்கு சிறந்த முறையில் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்க முடியும். 
இதை நான் ஆத­ரிக்­கிறேன்; ஆனால், குரோனி கேப்­பிட்­ட­லி­சத்தை அல்ல என்று சமீ­பத்தில் ஒரு எதிர்க்­கட்சி தலைவர் கூறினார்.
வாழ்க்கை தரம்:
அதி­கார வர்க்­கமும், தொழில் முனை­வோரும் கை கோர்த்து, ஏக­போக வர்த்­த­கத்தை வளர்த்து தொழில் சலு­கை­களைப் பெற்று, தாம் செய்யும் தொழிலில் போட்­டி­க­ளையும் கூடி­ய­வரை தவிர்த்து, கொள்ளை லாபம் சம்­பா­தித்து, அதை இரு சாராரும் பங்கு போட்டுக் கொள்­வது தான், ‘குரோனி கேப்­பிட்­ட­லிசம்! அதா­வது, கை கோர்க்கும் அல்­லது பங்கு போடும் முத­லா­ளித்­துவம் என்று கூறலாம்.
நம் நாட்டில் செல்வம், எந்த அள­வுக்கு ஏற்றத் தாழ்­வு­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது அல்­லது பர­வ­லாக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை பார்க்க வேண்டும். 
எவ்­வ­ளவு செல்வம், யாரிடம் உள்­ளது? 
நாட்டு மக்­களின் வாழ்க்கைத் தரம் தான், நாட்டின் வளர்ச்­சிக்கு அள­வுகோல். பொரு­ளா­தார வளர்ச்­சியின் பயன், பர­வ­லாக அனைத்து தரப்பு மக்­க­ளையும் சென்­ற­டை­கி­றதா அல்­லது மிகச் சில பேர், நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சியின் பெரும்­ப­குதி பலன்­களை தங்­களின் கட்­டுப்­பாட்­டிற்குள் வைத்­தி­ருக்­கின்­ற­னரா என்று கண்­ட­றிய வேண்டும்.
நம் நாட்டின் செல்வம், எந்த அள­வுக்கு ஏற்­றத்­தாழ்­வு­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது அல்­லது பர­வ­லாக்­கப்­பட்­டுள்­ளது? எவ்­வ­ளவு செல்வம் யாரிடம் உள்­ளது? இதைப் பார்க்­கும்­போது, நம் நாட்டின் செல்வம் மிகக் குறை­வான கோடீஸ்­வ­ரர்­க­ளி­டமே மையம் கொண்­டுள்­ளது.
 வெளி­நாட்டுப் பத்­தி­ரி­கை­யான, ‘போர்ப்ஸ் வெளி­யிட்­டுள்ள ௨௦­௧௧ம் ஆண்­டிற்­கான பணக்­கா­ரர்­களின் பட்­டி­ய­லின்­படி,
நம் நாட்டின் மொத்த செல்­வத்தில், 17 சத­வீதம், 55 பெரிய கோடீஸ்­வ­ரர்­களின் கட்­டுப்­பாட்­டிற்குள் இருக்­கி­றது. ஆனால், நம்மை விட பெரிய பொரு­ளா­தார சக்­தி­யாக இருக்கும் சீனாவில், 4 சத­வீத்தைத் தான், 115 கோடீஸ்­வ­ரர்­களும் சேர்ந்து அனு­ப­விக்­கின்­றனர்.

யார் கோடீஸ்­வ­ரர்?:
 சர்­வ­தேச மதிப்பில், ஒரு பில்­லியன் டாலர், அதா­வது, 6,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்­ப­வர்கள், பெரும் கோடீஸ்­வ­ரர்கள் எனப்­ப­டு­கின்­றனர். நம் நாட்டை விட, சீனாவின் பொரு­ளா­தாரம் நான்கு மடங்கு பெரி­தாக இருப்­பினும், 2014-ம்ஆண்டின், ‘போர்ப்ஸ் செல்­வந்­தர்­களின் பட்­டி­ய­லின்­படி, மூன்று இந்­தி­யர்கள் சீனாவின் மிகப்­பெ­ரிய செல்­வந்­தரைக் காட்­டிலும் பெரிய கோடீஸ்­வ­ரர்­க­ளாக இருக்­கின்­றனர். 
2013 ம் ஆண்டு இந்­திய செல்­வந்­தர்­களின் மதிப்பு, சீனாவின் செல்­வந்­தர்­களைக் காட்­டிலும் ஏறக்­கு­றைய இரண்டு மடங்கு அதி­க­மாக இருந்­தது.
நாம் அமெ­ரிக்கா, சீனா அல்­லது ஐரோப்­பிய நாடு­களின் செல்­வந்­தர்­களின் பட்­டி­யலை ஆராய்ந்தால், ஆண்­டுகள் செல்லச் செல்ல புதுப்­புது பெயர்­களும் வெளி­வரும். 
தர வரி­சையில் ஏற்ற இறக்­கங்­களும் சகஜம். ஆனால், இந்­தி­யாவைப் பொறுத்­த­வரை, கோடீஸ்­வ­ரர்­களின் பட்­டி­யலில் பெரிய மாற்­றங்கள் ஏதும் ஏற்­ப­டு­வ­தில்லை. மாறாக, அதே கோடீஸ்­வ­ரர்­களே மேலும் மேலும் வளர்­கின்­றனர். இந்­திய செல்­வந்­தர்­களின் இத்­த­கைய கெட்­டிக்­கா­ரத்­தனம், மகிழ்ச்சி அளிக்கக் கூடி­யதோ அல்­லது பாராட்­டப்­படக் கூடி­யதோ அல்ல. 
மாறாக, இது மிகவும் கவ­லைப்­பட வேண்­டிய விஷயம்.
எந்த பொரு­ளா­தார அமைப்­பிலும், அள­வுக்கு மீறி மக்கள் வரு­மா­னத்தில் ஏற்­றத்­தாழ்­வுகள் ஏற்­பட்­டாலும், பொரு­ளா­தா­ரத்தின் அள­வுக்கு அதி­க­மான விகி­தத்தில் கோடீஸ்­வ­ரர்கள் தோன்­றி­னாலும், அந்த பொரு­ளா­தா­ரத்தில் தேங்கும் நிலை ஏற்­ப­டலாம் அல்­லது தொடர்ந்து அந்த நிலை நீடித்தால் பொரு­ளா­தார அமைப்பு, ஒட்­டு­மொத்­த­மாக தடு­மாறி கவிழ்ந்­து­விடும்.
நாம் சுதந்­திரம் அடைந்­த­வுடன் சோஷ­லி­சத்தை உரு­வாக்­கு­கிறோம் என்று பறை­சாற்­றி­விட்டு, எல்லா தொழில் முயற்­சி­க­ளிலும் அனு­ம­தி­க­ளையும், கட்­டுப்­பா­டு­க­ளையும் மாறி மாறி ஆட்­ப­டுத்­திய தவ­றான பொரு­ளா­தாரக் கொள்கை தான், நம் இந்­தியா ஏழ்மை நாடா­கவே இருப்­ப­தற்குக் காரணம்.
பல ஆண்­டு­க­ளாக, சில வேண்­டி­ய­வர்­க­ளுக்கு மட்டும் உற்­பத்­தியை கட்­டுப்­ப­டுத்தும் விதத்தில் உரி­மங்­களும், லைசென்ஸ்­களும் கொடுத்­ததால், அவர்கள் பாது­காப்­பாக, போட்­டி­யின்றி தொழில் செய்­வ­துடன், அவர்கள் உற்­பத்தி செய்த பொருட்­களை, போட்­டி­யா­ளர்கள் இல்­லாத கார­ணத்தால், ஏக­போக சந்­தையில் அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் அடைந்­தனர்.
இதன்­மூலம், தொழில் வளர்ச்­சியும் ஏற்­ப­ட­வில்லை; 
தொழில்­நுட்­பமும் வள­ர­வில்லை. 
நாம் தொழில்­நுட்­பத்தில் பின்­தங்கி விட்­டது தான் மிச்சம், 
அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும், அதி­கா­ரி­க­ளுக்கும் வேண்­டப்­பட்ட தொழில் அதி­பர்கள் மட்­டுமே, கோடீஸ்­வ­ரர்கள் ஆக முடிந்­தது.
கனிம வளங்கள்:
தொழில் துவங்க அனு­மதி, சலு­கைகள் போன்­றவை, அர­சியல் மற்றும் அதி­கார வர்க்­கத்­தி­ன­ரிடம் தொடர்பும் செல்­வாக்கும் உள்­ள­வர்­க­ளுக்கு மட்­டுமே கிடைத்­தன. கட்­டுப்­பா­டு­க­ளுடன் கூடிய லைசென்ஸ் ராஜ் கார­ண­மாக, பல முனைப்­புள்ள, துடிப்­பான தொழில் முனைவோர், தொழில் துவங்க முன்­வ­ர­வில்லை.
 சிறந்த புத்­திக்­கூர்­மை­யுள்ள தொழில் முனை­வோர்­க­ளாக வாய்ப்பு பெற வேண்­டிய இளை­ஞர்கள், வெளி­நா­டு­க­ளுக்கு சென்று, அங்கு அவர்­களின் சிந்­த­னைக்­கேற்­ற­வாறு வேலை வாய்ப்­பு­க­ளையும், சந்தைப் பொரு­ளா­தா­ரத்­தையும் தங்­க­ளுக்கு சாத­க­மாக்கி, தங்கள் வாழ்க்­கையை அமைத்துக் கொண்­டனர்.
இந்­தியா சுதந்­திரம் அடைந்த நாளி­லி­ருந்து இரும்­புத்­தாது, நிலக்­கரி சுரங்­கங்கள், கனிம வளங்கள் மற்றும் தாதுப் பொருட்­களை எடுக்கும் உரிமை, பெரிய சிறிய மின் உற்­பத்தி நிலை­யங்கள், தொலைத்­தொ­டர்பு துறை­களில் அனு­மதி, எண்ணெய் வளங்கள், மின்­சார உற்­பத்தி போன்ற துறை­களில் அரசின் தயவும் அனு­ம­தியும் பெற்று, அந்த அரசின் பாது­காப்­போடும், அனு­ச­ர­ணை­யோடும் தொழில் செய்து, அதன்­மூலம் முன்­னே­றி­ய­வர்கள் தான் பெரு­வா­ரி­யாக இந்­திய கோடீஸ்­வ­ரர்கள்.
லைசென்ஸ் முறையின் மூலம் தங்­க­ளுக்கு போட்­டி­யா­ளர்கள் வராமல் பார்த்துக் கொண்­டனர். 
அதனால், அவர்கள் உற்­பத்தி செய்த பொருட்­களின் தரம் குறை­வாக இருப்­பினும், அதி­க­மான விலைக்கு விற்­றனர். 
இறக்­கு­மதி, ஏற்­று­ம­திக்­கான வரி­க­ளிலும், முறை­க­ளிலும் இவர்­க­ளுக்­காக அரசு வளைந்து கொடுத்­ததும் உண்டு. 
போட்­டி­யில்­லாத கார­ணத்தால், செயற்­கை­யான தட்­டுப்­பா­டு­க­ளையும் உண்­டாக்கி இரும்பு, சிமென்ட் மற்றும் பல உலோகப் பொருட்­களை அதிக விலைக்கு விற்­றதும் உண்டு. 1947க்குப் பின், 40 ஆண்டு காலம் இந்­திய மக்கள் புதிய காரோ அல்­லது இரு­சக்­கர வாக­னமோ வாங்க ஐந்­தாண்­டுகள் முதல், பத்­தாண்­டுகள் வரை காத்­துக்­கி­டந்­ததும் உண்டு. 
இருப்­பினும், புதிய வாகன உற்­பத்­திக்கு யாருக்கும் அனு­மதி கொடுக்­கப்­ப­ட­வில்லை. ஆனால், அனு­மதி வழங்­கப்­பட்ட பின்னர், இத்­து­றையை பன்­னாட்டு நிறு­வ­னங்கள் பயன்­ப­டுத்தி, அதன் பலனை அனு­ப­விக்­கின்­றனர்.
ஆனால், அன்றும் சரி, இன்றும் சரி... சோஷ­லி­சத்தை கைவிட்டு விட்டோம் என, வெளிப்­ப­டை­யாக சொல்ல எந்த அர­சி­யல்­வா­திக்கும் தைரி­ய­மில்லை. அது மட்­டு­மல்ல, இந்­தியா முத­லா­ளித்­துவ பொரு­ளா­தா­ரத்தை ஏற்றுக் கொண்ட பிறகும், அதை வெளியே சொல்ல பயன்­ப­டு­கின்­றனர்.
ரகசிய உடன்பாடு:
முத­லா­ளித்­து­வத்தின் முக்­கிய அம்சம், ‘பழை­யன கழி­தலும், புதி­யன புகு­தலும் தான். இதற்கு தேவை மாற்­றங்­களும், புதிய முறை­களும். இதன் சிறப்பே தொடர்ந்து நடை­மு­றைக்கு வரும் மாற்­றங்­களும், புதிய முறை­களும் தான். ஜோசப் சம்­டரர் என்ற பொரு­ளா­தார நிபுணர், ‘காலா­வ­தி­யான தொழில்­மு­றை­களும், கோட்­பா­டு­களும் காணாமல் போவது ஆக்­க­பூர்­வ­மான அழிவு – அது நல்­லது என்று கூறு­கிறார். 
ஆம்; அது ஆரோக்­கி­ய­மான போட்­டி­களால் ஏற்­படும் நல்ல மாற்றம்.ஆனால், நம் நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த செல்­வந்­தர்கள் கொள்­கை­களை உரு­வாக்கும் அர­சி­யல்­வா­தி­க­ளுடன் ஒன்று கூடி, ரக­சி­ய­மாக உடன்­பாடு ஏற்­ப­டுத்தி, அவர்­க­ளு­டைய போட்­டிக்கு எல்லை வரை­ய­றுத்துக் கொள்­கின்­றனர். இத்­த­கைய நட­வ­டிக்­கைகள், ஆக்­கப்­பூர்­வ­மான முத­லா­ளிது­வத்­தையும், நடை­மு­றை­க­ளையும் பாதிக்­கின்­றன. 
ஆகவே, இந்­தி­யாவின் கைகோர்க்கும் அல்­லது பங்கு போடும் கோடீஸ்­வ­ரர்கள், உண்­மை­யி­லேயே முத­லா­ளித்­து­வத்தின் நல்ல அம்­சங்­க­ளுக்கு முக்­கிய விரோ­தி­க­ளாக திகழ்­கின்­றனர்.
இது, இந்­திய நாட்டின் இன்­றைய நிலை. வாய்ப்­பு­க­ளிலும், வச­தி­க­ளிலும், கல்வி, அடிப்­படை சுகா­தாரம் போன்­ற­வற்­றிலும் இருப்­போ­ருக்கும், இல்­லா­த­வர்­க­ளுக்கும் உள்ள ஏற்­றத்­தாழ்வு மலைக்கும் மடு­வுக்கும் போன்­றது. இன்று ஆட்சி மாறிய சூழ்­நி­லையில் இந்­தி­யாவின் எதிர்­கால பாதை எது? இந்­திய தொழில் முனைவோர் என்ன செய்யப் போகின்­றனர்?சிந்­திக்­கலாம்...
                                                                                                                                                                       – சிறு­தொ­ழிலோன் –
=================================================

“என்னுடைய மனதில் இரண்டு சந்தேகங்கள், ஒன்று காந்திஜி இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாரா ?
அல்லது இந்தியா காந்திஜிக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததா?
, இரண்டு தலைவர்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை நான் நேசிக்கிறேன், காந்திஜியிடம் ஏறக்குறைய ஆடைகளே இல்லை,.
 ஆனால், ஒருவரிடமோ 10000 புடவைகள் இருக்கிறது. [அது எந்த தலைவி?]
காந்திஜி மட்டுமே எப்போதுமே ஊழலற்ற ஒரு தலைவராக இருந்திருக்கிறார். காந்திஜி மட்டும் உயிரோடிருந்திருந்தால் அவர் கடந்த தேர்தலில் காங்கிரஸிற்காக பிரச்சாரம் செய்திருப்பாரா அல்லது பிஜேபிக்காக பிரச்சாரம் செய்திருப்பாரா/
                                                              -ராம் கோபால் வரமா[திரைப்பட இயக்குனர்]. 
=================================================
நோபல் பரிசு
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில், அமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய, எட்வர்டு ஸ்னோடனின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்டு தோறும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 
எட்வர்டு ஸ்னோடனின்
உலகின் மிக உயரிய விருதாக கருதப்படுவதால், நோபல் பரிசு பெறுவோரின் பட்டியல் வெளியாகும் போது, உலகமே அதை ஆவலுடன் எதிர்பார்க்கும்.
இந்நிலையில், இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில், அமெரிக்காவை சேர்ந்த எட்வர்டு ஸ்னோடனின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 
உலக நாடுகளின் ரகசியங்களை உளவு பார்த்த அமெரிக்காவின் சதிச் செயலை அம்பலப்படுத்திய, அந்நாட்டை சேர்ந்த ஸ்னோடன் தற்போது, ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அமெரிக்க அரசு அவரை கைது செய்ய துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு பெறுவோர் பரிந்துரைப் பட்டியலில் ஸ்னோடனின் பெயர் இடம் பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அமெரிக்காவை மேலும் எரிச்சல் அடையச் செய்துள்ளது.
 தவிர, பெண் கல்விக்காக குரல் கொடுத்து, பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான பாக்., சிறுமி மலாலா மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோரின் பெயர்களும், அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?