போராளி சே குவேரா



இன்று உலகமெங்கிலும் இளையோர்கள் தங்கள் உடைகளில் சே குவேரா படங்களை பல வடிவங்களில் தாங்கி அலைவதை பெருமையாக அல்லது ஓரு விருப்பமாக கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது போன்று அலையும் இளையோர்களில்  எத்துணை பேர்களுக்கு தோழர் "சே" பற்றி உண்மையிலேயே தெரியும்?
மக்களுக்காக வாழ்ந்தவர்களின் மரணம் இமயமலையை விட கனமானது பிற்போக்காளர்களின் மரணமோ இறகை விட லேசானது - மாவோ .

காலனியாதிக்க ஒடுக்குமுறை களுக்கும் ஏகாதிபத்திய, முத லாளித்துவச் சுரண்டல்களுக்கும் எதிரான போராட்டத்தில் வீரமரணமடைந்த மிகச் சிறந்த மனிதர் களின் வாழ்வும் பணிகளும் படைப்புகளும் தான் விடுதலை வேட்கை யின் அடிப்படைகளாக உள்ளன. 
மக்களுக்காக வாழ்ந்த இப்படிப் பட்டவர்களின் வாழ்க்கையிலிருந்து படிப்பினைகளைப் பெறாமல் நமதுபோராட்டத்தில் முன்னேற முடியாது.

‘சே’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சே குவேரா அர்ஜெண்டினாவில் 1928ம் ஆண்டு பிறந்தார். 
அக்காலத்திய அர்ஜெண்டினா வறுமையிலும் அதன் விளைவாக சுகாதார முறை களிலும் பின்தங்கியிருந்தது. இதன்விளைவாக சே பிறந்த ஒரு சில மாதங்களிலேயே ஆஸ்துமா நோயால் பீடிக்கப்பட்டார்.
 மருத்துவம் படித்து ஒரு சிறந்த மருத்துவராக சேவை புரிந்து பின்னாளில் மார்க்சிய லெனி னியச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு புரட்சியாளாராக மாறினார்.
கியூபாவிற்குச் சென்று அந் நாட்டின் புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மாபெரும் போராளி. அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளையும் விடு தலைசெய்ய பயணித்தபோது தென்பொலிவியக் காடுகளில்அமெரிக்கா ஏகாதிபத்தியவாதிகளா லும் பொலிவிய படைகளினாலும் சதித்தனமான முறையில் கொல்லப் பட்டார்.
அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் கியூபாவின் விடுதலைக்கு வித்திட்ட வர் சே குவேரா. 

அவர் கொல்லப் பட்டபோது அமெரிக்க மற்றும் பொலிவியப் படைக்கு தலைமை தாங்கிய கேரி ப்ராடோ சால்மோன் என்பவனுக்கு தான் கொன்றது சேவின் உடலைத்தான், 
அவரது சிந்தனைகளை அல்ல 
என்பதும் பின்னாளில் அவர் இளைஞர்களின் மிகப்பெரிய ஆதர்ச நாயகனாக, ஒரு புரட்சியாளனின் அடையாளமாகத் திகழப்போகிறார் என்பதும் தெரிய வாய்ப்பில்லை. 
சே பள்ளி நாட்களிலும் மருத்து வக் கல்லுரியிலும் பயின்ற போது கல்வித் திட்ட பாடங்களை விடஉள்நாட்டு மற்றும் உலக இலக்கியங்கள், நாடுகளின் வரலாறுகள், மார்க் சிய நூல்கள் மற்றும் புரட்சிகளின் வரலாறுகள் ஆகியவற்றை அதிகமாக படிப்பதிலேயே காலத்தைச் செலவ ழித்தார்.

 ‘சே’வை புரட்சியாளராக முழுமையாக மாற்றியதில் அவரு டைய பெற்றோர் அளித்த ஊக்கமும் கருத்து ரீதியான உரையாடல் களுமே முக்கியப் பங்காற்றின. 
ராணுவ யுத்த தந்திரங்களை ஆழ்ந்துபடித்த சே கியூபப் புரட்சியின் போது புதிய யுக்தியை அறிமுகப் படுத்தினார்.
அமெரிக்க ஏகாதிபத் தியவாதிகளை நடுங்க வைத்த அந்த கொரில்லா போர்த் தந்திரம்தான் இன்றுவரை பல இளைஞர் களை ஈர்க்கும் சக்தியாக விளங்குகிறது. பிறந்திலிருந்தே பீடித்த கடு மையான ஆஸ்துமா அவருடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
 சில சமயங்களில் அவர் நினை விழக்கும்படி ஆஸ்துமாவின் தாக்குதல் இருக்கும். அவருக்கு நினைவு திரும்பியவுடன் மீண்டும்புரட்சிப் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபடுவார் என அவர் மன வுறுதி குறித்து வியப்புடன் தெரிவிக் கின்றனர் அவருடன் இருந்த சக போராளிகள். மருத்துவராக இருந்த அவர் மருத்துவத் தொழிலில் ஈடுபடவில்லை. 

முழுமையாக தன்னை புரட்சிப் பணிகளுக்கு அர்ப்பணித்துக் கொண்டார். மலை களிலும் காடுகளிலும் அழுக்கான உடைகளில் எந்தச் சத்தான உணவுமின்றி கடும் குளிருடனும் ஆஸ்துமாவுடனும் போராடிக் கொண்டே அவரது புரட்சிகரப் பணியை எந்தச் சமரசமுமின்றி தொடர்ந்தார்.
புரட்சிக்குப் பிந்தைய கியூபா வில் அவர் மத்திய வங்கியின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற் றினார். 
கியூபாவின் நிதிக் கொள்கைஅந்நிய செலாவணிக் கை யிருப்பு மற்றும் விரிவான பொரு ளாதாரத் திட்டங்களுக்கு அவர் பொறுப்பாளாராக இருந்தார். ராணுவத்தைக் கட்டியமைப்பது, கியூபாவின் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றிலும் ஈடுபட்டார்.கடந்த 1964 டிசம்பர் 11ம் தேதி யன்று சே கியூபாவின் பிரதிநிதியாக ஐநா சபையில் 19 வது பொது அமர்வில் உரையாற்றினார். 
உலக சமாதானம் குறித்த அந்த அற்புதமான புரட்சிகரமான உரையின் சில "முக்கிய பகுதிகளை பார்ப்போம்.

உலகின் பல பகுதிகளில் ஏகாதிபத்தியம் தனது ஆதிக்க பாணியி லான அரசமைப்பையும் அதன் பொம்மை அரசையும் நிறுவ முயற்சிக்கிறது.
இதன் மூலம் உலக நாடுகளுக்கு இடையிலான சமாதான சகசவாழ்வை சீர்குலைக்க முயற்சிக்கிறது. 
எனவே ஒடுக்கப் பட்ட மக்கள் சோசலிச முகாமுடன் ஒன்றிணைந்து சமாதான சக வாழ்வு என்றால் என்னவென்று ஏகாதிபத்தியவாதிகளுக்கு அவர்களுக்கே புரியும்படி உணர்த்த வேண்டும் அவர்களின் போராட்டங்களுக்கு ஐநா சபை ஆதரவு அளிக்க வேண்டும். சமாதான சகவாழ்வு என்ற கருத்தி யல் இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு மத்தியில் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். மார்க்சியவாதிகள் என்ற முறையில் நாங்கள் சமாதான சகவாழ்வு என்பது சுரண்டுபவர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் இடையில் அல்ல 
ஒடுக்குபவர் களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக் கும் இடையில் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஐநாவின் அடிப்படை கொள்கைஎன்பது ஒவ்வொரு நாடும் அனைத்து வகையான காலனி யாதிக்க ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெறும் உரிமையை உறுதி செய்வதே.'

மேற்கண்டவாறு உரையாற்றிய சே இன்றைய நாளில்தான் ஏகாதிபத்தியவாதிகளினால் கொல்லப்பட்டார். 

அவரது அர்ப்பணிப்புட னான வாழ்வும் மரணமும் என்றென்றும் உலக இளைய தலைமுறை யினரை வழிநடத்திச் செல்லும்.

 புரட்சியாளர் "சே குவேரா "

47 வது "நினைவு தினம்" இன்று
                                                                                                                                                                                                               

                                                                                                                                                                                                             - சேது

@ உலக கண் பார்வை தினம் 2014.

தானத்தில் சிறந்தது கண் தானம். 
கார்னியல் பார்வைக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கள் தானமாகக் கிடைத்தால் 
மட்டுமே செய்யக்கூடிய கார்னியா மாற்று ஆபரேஷன் மூலமே மீண்டும் பார்வை கிடைக்க முடியும். 
அப்படிப்பட்டவர்களுக்கு பார்வை கிடைப்பதற்க்காக கண்கள் தானமாக தேவைப்படுகிறது.
நமக்கு தெரிந்தவர்கள் யாரேனும் மரணமடைந்துவிட்டால், மரணமடைந்தவரின் உறவினரைச் சந்தித்து,  மரணமடைந்தவரின் கண்களை தானமாக வழங்குமாறு ஊக்குவித்து ஆறு மணி நேரத்துக்குள் அவர்களது கண்களை தானமாக வழங்கிட வேண்டும் .


-----------------------------------------------------------------------------------------------------------------------
உலக அஞ்சல் தினம்.
1712 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் அஞ்சல் சேவை முதன்முதலில் தொடங்கியது. 
இந்தியாவில் ஆங்கில ஆட்சிக் காலத்தில் 1764-66 காலக்கட்டத்தில் பெருநகரங்களிடையே அஞ்சல் சேவை தன் பயணத்தை ஆரம்பித்தது.


 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?