குரோம் பிரவுசர் பற்றி...,

தினந்தோறும்  குறைந்த பட்சம் சில ஆயிரம் பேராவது, தங்களின் வழக்கமான பிரவுசரை விட்டுவிட்டு, குரோம் பிரவுசருக்கு மாறி வருவது இப்போது வழக்கமாகிவிட்டது. 
இதற்குக் காரணம், இதன் பாதுகாப்பான தன்மை, எளிதான இடைமுகம், கூடுதல் வசதிகள், நம் விருப்பத்திற்கு வளைக்க வசதி எனப் பலவற்றைக் கூறலாம். 
கீழே அதனைப் பயன்படுத்துவதில் சில குறிப்புகள் தரப்படுகின்றன. 
1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச்செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. 
முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4...) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும்.

2. ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும் என்பதனை நீங்கள் அறிந்திருக்கலாம். 
இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம்.

3. குரோம் அதன் எக்ஸ்டன்ஷன்களுக்குச் செல்ல ஷார்ட் கட் கீ வழிகளை அமைக்க வசதி தருகிறது. இதற்கு chrome://extensions எனச் செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் கீழாகச் செல்லவும்.
இங்கு “Keyboard shortcuts” என்ற இடத்தில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் செயல்பாடுகளுக்கு, ஷார்ட் கட் கீகளை அமைக்கலாம். சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் பின்னணியில் இயங்கினாலே போதும். 
எனவே, ஏன் அவை பிரவுசரின் டூல்பாரில், இடம் எடுத்துக் கொண்டு தேவையற்ற வகையில் காட்டப்படுகிறது. இதனைப் போக்க, எந்த எக்ஸ்டன்ஷன் காட்டப்பட வேண்டாம் என்று எண்ணுகிறீர்களோ, அதற்கான ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனுவில், “Hide button” என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். 

4. எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல், இணையப் பக்கத்தில் உலா வர, F11 என்ற கீயை அழுத்தவும். 
உடன், குரோம் பிரவுசர் முழு திரையிலும் காட்டப்படும். வழக்கமாகக் காட்டப்படும் பிரவுசர் சார்ந்த ஐகான்கள் மற்றும் பிற வகை தோற்றங்கள் அனைத்தும் மறைக்கப்படும். 

5. நிறைய டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரைப் பயன்படுத்து பவரா நீங்கள்? இவற்றில் சிலவற்றை மறைத்து வைக்க விரும்புகிறீர்களா? பிரவுசரின் முகவரி விண்டோவில், chrome://flags என டைப் செய்திடவும். அங்கு Stacked Tabs என்பதனைத் தேடி அறியவும். 
அதனை இயக்கும் வகையில் enable செய்திடவும். இதனால், டேப்கள் அனைத்தும் சுருங்கி, சிறியதாகக் காட்சியளிப்பதற்குப் பதிலாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் காட்சி அளிக்கும்.

6. எந்த இணைய தளத்தினையும், அதன் காட்சித் தோற்றத்தினைப் பெரிதாக்கிப் (Zoom) பார்க்கலாம். பின் சுருக்கலாம். 
இதற்கு கண்ட்ரோல் கீ அழுத்திய நிலையில் “+” அல்லது “---” கீயினை அழுத்த வேண்டும். ஸூம் செய்யப்படும் அல்லது ஸூம் செய்த காட்சி சுருக்கப்படும். இதன் மூலம் இணைய தளப் பக்கத்தில் உள்ள எழுத்துக்களும் படங்களும் விரிக்கப்பட்டுக் காட்டப்படும்.

7. கண்ட்ரோல் + ஸீரோ (Ctrl+-0) அழுத்தினால், நீங்கள் ஸும் செய்த ஸ்கிரீன், அல்லது சுருக்கிய திரை பழைய 100% நிலைக்குத் திரும்பும். 

8. நீங்கள் எப்போது விரும்பினாலும், குரோம் பிரவுசரின் தாய் முகப்புப் பக்கத்திற்குச் செல்லலாம். Alt-+Home கீகளை அழுத்திப் பெறலாம். இதற்குப் பதிலாக ஹோம் பட்டன் இருந்தால், அதனை மட்டும் அழுத்திச் செல்லலாம் அல்லவா? 
இதனைப் பெற, chrome://settings தேர்ந்தெடுத்துச் செல்லவும். அங்கு, “Show Home button” என்று உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, இதற்கான பட்டன் ஒன்று ஸ்கீரினில் காட்டப்படும்.

9. எந்த இணையதளத்திற்குமான ஷார்ட் கட் ஒன்றை, விண்டோஸ் டெஸ்க்டாப்பில் அமைக்கலாம். 
முகவரி கட்டத்தில் காட்டப்படும் முகவரியினை, மவுஸ் மூலம் அப்படியே இழுத்துச் சென்று, திரையில் அமைத்தால், அது, அந்த இணைய தளத்திற்கான ஷார்ட் கட் கீயாகச் செயல்படும். அப்ளிகேஷன்களுக்கு நாம் ஏற்படுத்தும் ஷார்ட் கட் கீ ஒன்றையும், இணையப் பக்கங்களுக்கு ஏற்படுத்தலாம். பிரவுசரின் மெயின் மெனுவிற்குச் செல்லவும். 
அங்கு Tools தேர்ந்தெடுக்கவும். இதில் “Create application shortcuts” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, குறிப்பிட்ட பக்கமானது முழுமையாகத் திரை முழுவதும் காட்டப்படும். வழக்கமான பிரவுசர் சார்ந்த எதுவும் காட்டப்பட மாட்டாது.

10. பிரவுசரில் பல இணைய தளங்களைப் பார்த்துத் தேவையான தகவல்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். கம்ப்யூட்டரை நிறுத்தி, வேறு சில வேலைகளை முடித்து மீண்டும் திரும்ப நினைக்கிறீர்கள். 
பிரவுசரில் பார்த்த அனைத்து தளங்களும் அதன் டேப்களோடு உங்களுக்கு வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கு, chrome://settings செல்லவும். அங்கு, “On startup” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 
இதில் “Continue where I left off.” என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து அமைக்கவும். அடுத்த முறை, குரோம் பிரவுசரை இயக்கும்போது, அதற்கு முன் இயக்கியபோது நீங்கள் பார்த்த அனைத்துஇணைய தளங்களுடன், பிரவுசர் திறக்கப்படும்.
                                                                                                                 நன்றி:தினமலர்.


திருப்பூர் குமரன் (அக்டோபர் 41904 - ஜனவரி 111932
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1904 அக்டோபர் 4ம் தேதி, நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923ல் தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை மணம் முடித்தார்.
கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, ஈங்கூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார்.
1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில்இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 11 இல் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன் . இதனால், கொடிகாத்த குமரன்என்றும் அழைக்கப்படுகிறார்.
ஜனவரி 10 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் 11 இல் மருத்துவமனையில் அதிகாலையில் உயிரிழந்தார். பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். 
. காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரிப்பார்.
தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணிய சிவா...,
விடுதலைப்போரில் இளைஞர்களை தன் எழுச்சிமிகு உரைகளால் கட்டிபோட்ட மனிதர் இவர். 
சிறுவனாக இருக்கும் பொழுதே ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து ஆப்ரிக்காவில் போராடி வந்த போயர்களுக்கு ஆதரவாக கவிதைகள் எழுதினார்.  
அரசு வேலையை தூக்கி எறிந்து விட்டு, தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து விடுதலைக்கனலை மூட்டினார். வங்கப்பிரிவினை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே வேற்றுமையை கொண்டுவரும் போக்கில் நிறைவேற்றப்பட, அதை எதிர்த்து சுதேசி இயக்கம் நாடு முழுக்க பரவியது. தமிழகத்துக்கு பிபின் சந்திர பால் வந்து உரையாற்றி எழுச்சி ஏற்படுத்திவிட்டு போயிருந்தார்.

பாரதியார் எழுச்சி கீதங்கள் பாடினார். சுதேசி கம்பெனி,கப்பல்கள் என்று வ.உ.சி அவர்கள் இயங்கிக்கொண்டே இருந்தார். சுப்ரமணிய சிவா தூத்துக்குடியில் வ.உ.சி அவர்களை சந்தித்தார். கோரல் மில் போராட்டத்தில் அவருடன் இணைந்து பங்கு கொண்டார். எழுச்சி மிகு உரைகளால் இருவரும் மக்களை கிளர்ந்து எழ செய்தார்கள்.
காந்தியின் அகிம்சை வழிமுறைகளில் நம்பிக்கையில்லாமல் பல்லுக்கு பல் என ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியவர். 
திலகரை தலைவராக ஏற்றுக்கொண்டு வெள்ளையருக்கு ஓயாமல் தொல்லைகள் கொடுத்துக்கொண்டு இருந்த இவர்களை வழக்குகள் போட்டு ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்தது. ஆங்கிலேய அரசால் சென்னை மாகாணத்தில் சிறையில் அரசியல் கைதியாக முதன்முதலில் அடைக்கப்பட்டவர் இவரே. நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டு தொழுநோய் தாக்கி சிறையை விட்டு வெளியேறி வந்தார்.

தொழுநோய் தொற்று நோய் என அரசு கருதியதால் தொடர்வண்டிகளில் தொழுநோயாளிகள் பயணிக்க கூடாது என அரசு தடை விதித்த பொழுது ."பாரத மாதா என் அக்ரதேவதை;இந்த நாடே நான் ஆராதிக்கும் புண்ணிய பூமி !"என நெகிழ்ந்து சொல்லி சாக்கு மூட்டையில் தன்னை கட்டிவைக்க சொல்லி ஊர் ஊராக தொலைவண்டியில் பயணம் சென்று அன்னை தேசத்துக்கு போராட இளைஞர்களை திரட்டினார்.

புண்களில் ரத்தம் வடிய நடந்தே சுதந்திர கனலை தமிழகமெங்கும் பரப்பிய அவர் சென்னை மைலாப்பூரில் வசித்த காலத்தில் மாலை நேரத்தில் ஒரு மேஜை,ஒரு நாற்காலி,ஒரு இரவு விளக்கு ஆகியன மட்டும் எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு போவார். அங்கே மேசையின் மீது ஏறி நின்று வந்தே மாதரம் என்று முழங்கிவிட்டு விடுதலை தாகம் பொங்கும் உரைகளை நிகழ்த்துவார்.

ஞானபானு இதழை நடத்திய அவர் அதில் வ.உ.சி மற்றும் பாரதி ஆகியோரை எழுத வைத்தார். 
மீண்டும் தொழுநோயோடு இரண்டு முறை சிறை தண்டனை பெற்றாலும் அவர் விடுதலைப்போரால் தன்னால் ஆன பங்களிப்பை தந்துகொண்டே இருந்தார். பாரத மாதாவிற்கு பாப்பாரப்பட்டியில் கோயில் கட்ட வேண்டும் என்று சித்தரஞ்சன் தாஸ் அவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டி நிதி திரட்டிய அவர், அந்த ஆலயத்தில் பூசாரிகள் கிடையாது என்றும், எளிய மக்களே வழிபடுவார்கள் என்றும் உறுதி கூறினார். அந்த கனவு நிறைவேறும் முன்னரே மரணமடைந்தார்.
                                                                                                             நன்றி:விகடன்.
நம் தமிழ் நாடு அரசு பள்ளிகளை மூடி தனியாரிடம் கொடுத்து விட்டு சாராய விற்பனையை அரசுடமையாக்கியுள்ளது.தெருக்கள் தோறும் டீக்கடைகளைவிட அதிகமாக சாராயக்கடைகளை திறந்துள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?