புதன், 8 அக்டோபர், 2014

சாப்பிட்டவுடன் .....


சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும்  ஒரு அறிவியல் காரணம் உண்டு.
* உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது.

வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு  முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

* தேநீர் குடிக்கக் கூடாது. 


தேயிலை அதிக அளவு  அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.

* புகை பிடிக்கக் கூடாது. 


உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என  ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
* இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது. 

சாப்பிட்ட பிறகு  லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட  உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

* குளிக்கக் கூடாது. 


சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில்  உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.

* உடனே நடக்கக் கூடாது. 

சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள  சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.

* சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. 

சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும்  நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.


பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம்.
வாழ்ந்தது இருபத்தொன்பது வயதுவரைதான். 
அதிலும் சினிமாவில் பணியாற்றியதோ ஐந்து வருடங்கள் மட்டுமே. ஆனாலும் தமிழ்சினிமாவில் பலவருடங்கள் கோலோச்சி நின்று தங்களது தனித்தன்மையை நிரூபித்துக் காட்டிய ஜாம்பவான்கள் மத்தியில் தான் வாழ்ந்த குறைந்த காலத்திலேயே காலம் உள்ளளவும் தனது பெயரை அழியாத கல்வெட்டாய் ஆழப்பதித்துச் சென்றவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 
இன்று அவரது 54வது நினைவு நாள்.
1930ல் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கம் படைத்தான்காடு கிராமத்தில் பிறந்த பட்டுக்கோட்டையார் முதன்முதலில் கவிதை எழுதுத ஆரம்பித்தபோது அவருக்கு வயது பதினான்கு. இவரது தந்தை அருணாசலக் கவிராயரும் கவிஞர் என்பதால் இவருக்கும் கவிதை ரத்தத்திலேயே ஊறியிருந்தது. பொதுவுடமைச் சிந்தனைகள் அவரிடம் மேலோங்கியிருந்ததால் சுயமரியாதை இயக்கக் கூட்டங்களிலும் கம்யூனிஸ்ட் கூட்டங்களிலும் பங்கேற்றுப் பாடிவந்தார்.
பாவேந்தர் பாரதிதாசனை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட பட்டுக்கோட்டையார் பாண்டிச்சேரிக்கு வந்து பாரதிதாசனைச் சந்தித்து அவரிடம் மாணவராகச் சேர்ந்து அவர் நடத்திவந்த ‘குயில்’ இதழை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டார்.
பட்டுக்கோட்டையாரின் திருமணம்கூட பாரதிதாசனின் தலைமையில்தான் நடைபெற்றது. அதன்பின்னர் அவரை அழைத்துவந்து மார்டன் தியேட்டர்ஸில் பாட்டெழுத சேர்த்துவிட்டார் பாரதிதாசன். பட்டுக்கோட்டையாரின் சினிமாப்பிரவேசத்திற்கு பிள்ளையார்சுழி போடப்பட்ட்து இங்கேதான். இவர் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில்தான் புராணப்படங்களின் ஆதிக்கம் குறைந்து சமூகப்படங்களின் வரவு தலைதூக்கவும், பாடல்களில், வசனங்களில், நடிப்பில் மாற்றங்கள் உருவாகவும் ஆரம்பித்திருந்தன.
இவர் முதன்முதலில் பாடல் எழுதிய படம் படித்த பெண். ஆனாலும் இரண்டாவது படமான மகேஸ்வரி முந்திக்கொண்டு 1955ல் ரிலீஸானது. இவர் பாடல் எழுத ஆரம்பித்த நேரத்தில் உடுமலை நாராயணகவி, கண்ணதாசன், மருதகாசி போன்றவர்கள் வலுவான இடத்தில் இருந்தனர்.
ஆனாலும் பட்டுக்கோட்டையாரின் பாடல்வரிகள் இவர்கள் யாருக்கும் போட்டியாக இல்லாமல் நாடோடி மரபோடும் முற்போக்கு கருத்தோடும் தனிப்பாதையில் நடைபோட ஆரம்பித்தன. திரையுலகம் அவரைத் தன் தோள்களில் பெருமையுடன் தூக்கிவைத்துக்கொண்டது. பட்டுக்கோட்டை பாட்டுக்கோட்டை ஆனார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த படங்களில் இவர் பாடல் எழுத ஆரம்பித்தபின் அவருக்கு வெற்றிமேல் வெற்றி குவிய ஆரம்பித்தது. ‘சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா’., ‘ தூங்காதே தம்பி தூங்காதே’, ‘திருடாதே பாப்பா திருடாதே ’, குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்’என எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பாடல்கள் அரசியல் அரங்கில் எம்.ஜி.ஆர் வெற்றிநடை போட ரத்தினக்கம்பளம் விரித்தன.
தூங்காதே தம்பி தூங்காதே பாட்டைக் கேட்டு பல தமிழர்கள் தங்களது நீண்டநாள் அறியாமை உறக்கம் கலைந்து கண்விழிக்க ஆரம்பித்தார்கள். இன்னும் சொல்லப்போனால் பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு சினிமாவிலும் அரசியலிலும் ஒரு புதிய தோற்றத்தை வடிவமைத்துக் கொடுத்தன என்றுகூட சொல்லலாம்.
திரையுலகில் நுழையும் யாரும் ஏதோ ஒருகட்டத்தில் சில சமரசங்கள் செய்து கொள்வது வாடிக்கையான ஒன்றுதான்.. ஆனால் இசைக்கு ஏற்ப பாடல் எழுதும் நிலையிலும் தனது அடையாளத்திலிருந்து பட்டுக்கோட்டையார் ஒருபோதும் விலகி நிற்கவில்லை.
பட்டுக்கோட்டையின் பாடல்களில் நகைச்சுவை, கேலி, கிண்டல் எல்லாமே ஆங்காங்கே விரவிக்கிடக்கும். ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி’, ’ஆடைகட்டிவந்த நிலவோ, ‘வாடிக்கை மறந்தது ஏனோ’, ‘என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே’ ‘உன்னைக்கண்டு நானாட’ ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என எல்லாவிதமான பாடல்களிலும் முத்திரை பதித்தவர் பட்டுக்கோட்டையார்.
1959-ம் வருடம் தனது இருபத்தொன்பது வயதிலேயே மரணத்தை தழுவிய பட்டுக்கோட்டையார் சினிமாவில் தான் பணியாற்றிய ஐந்து வருடங்களில் மட்டும் ஐம்பத்தேழு படங்களில் மொத்தம் இருநூற்று அறுபத்தியிரண்டு பா டல்களை எழுதியிருக்கிறார்.
1981ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது மறைந்த பட்டுக்கோட்டையாருக்கு தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கி அவரை கௌரவப்படுத்தினார். 1993ல் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது பாடல்களை நாட்டுடமை ஆக்கினார். 2000-ம் ஆண்டில் அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி பட்டுக்கோட்டையில் அவருக்கு மணிமண்டபம் அமைத்து தமிழர்களின் நீண்டநாள் ஏக்கத்தை தீர்த்துவைத்தார்.

பட்டுக்கோட்டையார் ஒரு தன்னிகரற்ற கவிஞர். அவர் இன்னும் ஒரு ஐம்பது வருடங்களாவது வாழ்ந்திருக்கவேண்டும். ஆனாலும் சமத்துவ நோக்குடன் பாட்டாளி வர்க்கத்தை முன்னிறுத்தி அவர் எழுதிய பாடல்கள் மூலம் இன்றளவும் பட்டுக்கோட்டையார் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

எபோலா 
ஆப்பிரிக்காவில் கிளம்பி 
உலக  நாடுகளை அச்சுறுத்தும் நோய்

இன்று மருத்துவ உலகில் அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தை எபோலா. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதியன்று உலக சுகாதார நிறுவனம் மேற்கு ஆப்பி ரிக்க நாடுகளில் பரவி வரும் இந் நோயை, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் அவசர மக்கள் சுகாதாரப் பிரச்சனை என அறிவித்தது. இந்த அறிவிப்பு மேற்கு ஆப்பிரிக்காவின் கினியாவில் கடந்த நான்குமாதங்களுக்கு முன்னர் சுமார் இரண்டு வயது குழந்தை இறந்ததின் காரணத்தை கண்டுபிடித்த திலிருந்து இதன் வேர்கள் விரிவ டைகின்றது.
இந்த நோய் ஏதோ புதிதாக உருவானது அல்ல; பல ஆண்டுகளாகவே ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்ததுதான்.ஆனால் இந்தாண்டில் கினியாவில் துவங்கிய இந்நோய் அண்டை நாடுகளான லைபீரியா, சிரியா, நைஜீரியாவிற்கு பரவிற்று. இந் நோய்க்கு இதுவரையில் 1500 பேர் பலியாகியுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் புள்ளி விபரப்படி மேற்படி இறப்பு எண்ணிக்கை என்பது சொற்பமே. நோயின் வீரியமாகவும், தாக்கத்தின் காரணமாகவும் எண்ணிக்கை அதிகமா கத்தான் இருக்கும் என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் கருது கின்றனர்.
சமீபத்தில் நைஜீரியாவிலிருந்து ஜெர்மனிக்கு சென்ற 30 வயது மதிக் கத்தக்க பெண் ஒருவர் தனிமையில் வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டார். அவர் ஜெர்மனி வந்ததிலிருந்து யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தாரோ அவர்கள் அனைவரும் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டனர். கடைசி யில் நைஜீரியாவிலிருந்து வந்தபெண்ணுக்கு எபோலா வைரஸ் தாக்கம் இல்லை என்று கண்டறியப்பட்டது.
இது மற்ற உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சத்தின் ஒரு பகுதி. இதே போல் ஒன்றிரண்டு சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்தேறின. ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல் லும் விமானங்களை இயக்க விமா னிகள் மறுத்து வருகின்றனர். நைஜீரியா வழியாக தங்கள் நாட்டுக்கு வரும் எல்லையை மூடு வது என்று கேமரூன் அரசு முடிவெடுத்துள்ளது.சீனாவில் நடைபெறவிருக்கும் இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் எபோலாவால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் தடகள வீரர்களைப் பங் கேற்க அனுமதிப்பதில்லை என அதன் ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
நாற்பது ஆண்டுகால பின்னணி
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான் முதன் முதலாக எபோலா வைரஸ் நோய் கண்ட றியப்பட்டது. ஏற்கனவே எபோலா ரத்தக்கசிவு காய்ச்சல் என்று அழைக்கப்பட்டது என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது. 1976ல் சூடான் மற்றும் காங்கோ நாடுகளில் ஏற்பட்ட நோய் தாக்கம் பின்னர் எபோலா நதிக்கரையின் ஒரு சிறு கிராமத்தில் ஏற்பட்டதால் இந்நோய்க்கு அப்பெயரே சூட்டப் பட்டது.இந்த நோயின் தாக்கம் மற்றும் உயிர்ச்சேதங்கள் பெரு மளவு மருத்துவ உலகிலோ பொதுவெளியிலோ விவாதிக்கப்பட வில்லை என்றாலும் கூட, ஆப்பி ரிக்க நாடுகளில் ஆங்காங்கே நடை பெறும் பிரச்சனைகள் மட்டும் வெளிவந்தன.
எபோலா பரவுவது எப்படி?
எபோலா வைரஸ் நேரடியாக மனிதர்களை தாக்குவதில்லை. இது பொதுவாக மிருகங்களையே குறி வைத்து தாக்குகின்றது. இறந்து போன மிருகங்களை (கொரில்லா, சிம்பன்சிகள், பழம் தின்னும் வெளவால்கள், குரங்குகள்) மனி தர்கள் கையாள்வதால் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
சிம்பன்சிகளும், கொரில்லாக் களும் பெருமளவு இறந்து போன தற்கு காரணம் இந்த வைரஸ்தான் என்று கண்டறியப்பட்டுள்ளது.மனிதர்களை அடையும் வைரஸ் மற்றொரு மனிதனின் தோல் பகுதி மூலமோ (அல் லது) சிராய்ப்பு ஏற்பட்ட பகுதி யின் மூலமோ உடலுக்குள் செல்லும் கிருமி, அனைத்து உறுப்பு களையும், சுரப்பிகளையும் தாக்கு கின்றது.பாரம்பரியமாக மனித சட லங்களை அடக்கம் செய்யும் முறையினால் கூட நோய் பரவ வாய்ப்புள்ளது. எபோலா நோயாளி களை கையாளும் சுகாதாரப் பணி யாளர்கள் தான் இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நோயாளி நோயின் தாக்கத்திலிருந்து மீண்டு,ஏழு வாரங்கள் ஆன பின்னருங்கூட அவரிடமிருந்து மற்றொருவர்க்கு நோய் பரவ வாய்ப்புள்ளது. அவ்வளவு பயங்கரமானது இந்தக் கிருமி.எபோலா ஒரு மனிதரை தாக்கிய திலிருந்து 2 முதல் 21 நாட்களுக்குள் பெருக்கமாகி நோயாக உரு வெடுத்து, உபாதைகளை உண்டாக்கத் துவங்கும். முதற்கட்டமாக கடுமையான காய்ச்சல். உடல் முழுவதும் தீராத வலி, தலைவலி ஏற்படும். அடுத்தக்கட்டமாக வேகமாக வாந்தி, தோல்களில் சிரங்குகள், உள் மற்றும் வெளி இடங்களில் ரத்தக்கசிவு என வேகமாக நோய் தாக்கம் அதிகமாகும். இதோடு சிறுநீரகங்களும் செயலிழக்கத் துவங்கும். எபோலாவால் மரணப்படுக்கைக் குச் செல்லாதவர்கள் முழுமையாக தப்பித்துக் கொள்வார்கள்.
எனினும் இந்நோய்க்கு எந்த ஒரு மருந்தும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.மற்ற வைரஸ் நோய்களைப் போல் அல்லாமல், எபோலா பெரும் எண்ணிக்கையில் மனிதர்களை பீடிக்காது. ஏனென் றால், எபோலாவில் பாதிக்கப் பட்டவரோடு நேரடி தொடர்போ, உடல் பகுதிகளின் நெருக்கமான பிணைப்போ ஏற்படுவது மூலம் நோய் பரவும். 
மற்றொன்று, எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர் ஏதோ ஒரு வகையில் நோயின் தாக்கத்தை வெளிக்காட்டிவிடுவார் என்பதால் அவரை தனிமையில் சிகிச்சை அளித்திட முடியும் என்பதால் எபோலாவை கொள்ளைநோய் என அறிவிக்கப்படும் நிலை உருவாகவில்லை.
எபோலா நோய் பரவிய நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் பொருளாதார வார்த்தைகளில் சொன்னால் ஏழை நாடுகள் லைபீரியா - கினியா சியாராலியோன் ஆகிய மூன்று நாடுகளும் ஐ.நா. மனித வள மேம்பாட்டுக்கான (குறிப்பாக சுகாதாரத்தில்) குறியீட்டு அட்ட வணைகளில் முறையே 175, 179, 187ம் இடங்களில் உள்ளன.அந்த நாடுகளில் சுகாதார திட்டங்களோ வசதிகளோ கிட்டத்தட்ட இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தற்பொழுது கூட பரவி வரும் எபோலா வறுமை யின் காரணமாக உருவானது தான்.
இன்னும் சொல்லப்போனால் இந்நாடுகளின் வறுமைநிலை குறித்தோ -சுகாதார கட்டமைப் புகள் இன்றி அவதிப்படுவதைப் பற்றியோ, குறைந்தபட்ச அக்கறை கூட எந்த அதிகாரம் படைத்த அமைப்பிற்கோ, உலக சுகாதார நிறுவனத்திற்கோ ஏற்பட்டது அல்ல.
இதெல்லாம் தெரியாமல் நடந்தது அல்ல. மாறாக திட்ட மிட்டு உருவாக்கப்பட்டவை என்பதே குற்றச்சாட்டு.லைபீரியா, கினியா, சியாரா லியோன் ஆகிய மூன்று நாடுகளும் ஏதோ வறுமையிலேயே உழன்றுவிட வேண்டும் என முடிவு எடுக்கவில்லை. காலங்காலமாக அந்நாடுகளில் உருவாகியிருந்த காலனி யாதிக்கம் அவர்களை இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. 
இதைத் தவிர உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனங்களின் வழிகாட்டுதலில் பின்பற்றப்பட்ட பொருளாதார கொள்கைகளினால் வறுமை கோரத் தாண்டவமாடி வருகின்றது.இந்த நாடுகளை மறு சீரமைப்பு என்ற பேரிலும், பன்னாட்டு உதவிகள் என்று சொல்லியும் பல வகைகளில் பணக்கார நாடுகள் சீரழித்து விட்டன.
எல்லாமே வர்த்தக மயம்
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் இந்த துயரம் உலகெங்கிலும் விவாதிக்கப்படுவதேயில்லை. இவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகு தான், உலகசுகாதார நிறுவனம் தற்போது உலக அவசரம் என வரையறை செய்துள்ளது.எல்லாவற்றையும் வர்த்தகம் லாபமாக பார்க்கும்இந்த முதலா ளித்துவ சமூக அமைப்பில் இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழத்தான் செய்யும். உலக சமூகம் இது போன்ற மரண நிகழ்வுகளை பற்றியும் -பாதிப்புகள் பற்றியும் சில நாட்கள் பேசி விவாதிக்கும். 
அதன்பிறகு எல்லாம் மறந்துபோகும்! ஆனால் ஒன்று மட்டும்நிச்சயம் சமூகத்தில் புரையோ டியுள்ள ஏற்றத்தாழ்வுகளை களையாமல் நோய்களை எதிர் கொள்ள மனித சமூகத்தால் முடி யாது
.- என்.சிவகுரு