அழகை தரும் தண்ணீர்!
அழகை தரக்கூடிய கைகண்ட ஊட்ட பானம் ஒன்று உண்டு.
, அது தண்ணீர் தான்.
தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.
அதிலும் தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் நல்ல ஆரோக்கியமாக செயல்படும்.
இத்தகைய தண்ணீரை தினமும் தவறாமல் குடித்து வந்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.
தினமும் போதிய அளவில் தண்ணீர் பருகினால், ஆரோக்கியமான உடல், பொலிவான சருமம் மற்றும் பட்டுப்போன்ற கூந்தலைப் பெற முடியும்.
தினமும் தண்ணீரை போதுமான அளவில் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் சருமமும் வறட்சியின்றி, மென்மையாக இருக்கும்.
தடுக்கும் தண்ணீர் குடித்தால், இளமையிலேயே சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்கலாம். நீர்ச்சத்து உடலில் குறைவாக இருந்தால், கண்கள் பொலிவிழந்து காணப்படும்.
எனவே தண்ணீரை தினமும் போதிய அளவில் குடித்து வந்தால், நீர்ச்சத்து அதிகரித்து கண்கள் பளிச்சென்று காணப்படும். மேலும் தண்ணீரைக் கொண்டு பொலிவிழந்த கண்களை கழுவினாலும், கண்களில் உள்ள நச்சுக்கள் வெளியேறி கண்கள் அழகாக இருக்கும்.
தண்ணீர் சிகிச்சை மேற்கொள்ளும் போது, வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தினால், இறுதியில் குளிர்ந்த நீரை ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.
ஏனெனில் வெதுவெதுப்பான தண்ணீர் சருமத்துளைகளை திறக்கவும், குளிர்ந்த நீர் திறந்த சருமத்துளைகளை மூடவும் உதிவியாக இருக்கும். இதனால் தேவையற்ற மாசுக்கள் சருமத் துளைகளில் தங்குவதை தவிர்த்து, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளலாம்.
இளமையை தக்க வைக்க தண்ணீர் ஒரு சிறந்த மருந்து.
ஏனெனில் இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை சீராக பராமரித்து, சுருக்கம், சரும வறட்சி போன்றவற்றை தடுத்து, எப்போதும் இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.
தண்ணீர் அதிகம் குடித்தால், சாப்பிடும் அளவு குறைந்து, செரிமான மண்டலம் சீராக இயங்கி, உடல் எடை குறைவிற்கு பெரிதும் துணையாக உள்ளது.
குளிக்கும் போது, சருமத்தில் தங்கியிருக்கும் நோய்த்தொற்றுகள் நீக்கப்படுவதோடு, சருமத்துளைகளில் தங்கியுள்ள நச்சுக்களும் வெளியேற்றப்பட்டு, உடலை நன்கு புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறது.
தண்ணீரை தினமும் போதுமான அளவில் பருகினால், உடலின் வெப்பநிலையானது சீராக பராமரிக்கப்பட்டு, உடலை மற்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.
குடிக்கும் நீரின் அளவை அதிகரித்தால், உடல் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.
தண்ணீர் அதிகம் குடிப்பதினால், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வாயிலாக வெளியேறி விடும்., அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறுவதைத் தவிர்க்கலாம்.
தண்ணீரை அதிகமாக குடித்து நம்மை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வோம்.
இப்போது ஓரு கேள்வி எழலாம்.
அதிகளவு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும் என்பது உண்மையா?
எப்படி?
80 கிலோ எடையுள்ள ஒருவர், ஒரு நாளைக்கு 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படிக் குடித்தால் அந்தளவு அடிக்கடி சிறுநீரும் வெளியேறுமே... இதனால் சிறுநீரகம் பாதிக்கப் படாதா?
அதிகளவு தண்ணீர் குடிப்பதால் எடை குறைந்து விடாது.
நிறைய தண்ணீரும் குடித்துக் கொண்டு, கூடவே அரிசி உணவைக் குறைத்து, காய்கறி, பழங்களை அதிகம் எடுத்துக்கொண்டு, கலோரி குறைவான உணவு களை சாப்பிட்டு வந்தால் எடை குறையலாம்.
பொதுவாக வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
வியர்வை வழியே உடலின் நீர் வெளியேறுவதால், அதை ஈடுகட்ட, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
வெயில் இல்லாத மற்ற நாள்களில், வியர்வை அதிகமிருக்காது. உடலின் தண்ணீர் சத்திலும் இழப்பிருக்காது. அதனால் அதிக தண்ணீர் குடித்தால், சிறுநீரின் அளவும் அதிகரிக்கும்.
அதிக தண்ணீர் குடிப்பது என்பது, ஆரோக்கியமான சிறுநீரகங்கள் மற்றும் இதயம் நோய் கொண்டவர்களுக்கு ஒன்றும் செய்யாது.
சிறுநீரகம் பழுதடைந்திருந்தாலோ, சுவாசப் பிரச்னை இருந்தாலோ, கல்லீரல் அல்லது இதயக்கோளாறு இருந்தாலோ, அதிகளவு தண்ணீரானது உடலுக்குள்ளேயே தங்கி, வெளியேற்ற முடியாமல் போகும்.
அந்த நிலையை ‘ஃப்ளூயிட் ஓவர் லோடு’ என்கிறோம்.
சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் நாளொன்றுக்கு ஒன்றரை முதல் 2 லிட்டர் வரையிலும், இதயக் கோளாறு இருப்பவர்கள் 1 லிட்டரும் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்.
எனவே அவர்கள் மட்டும் குடிக்கிற தண்ணீரின் அளவில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
=====================================================================