இந்தியாவின் வராக் கடன்காரர்கள்
பொருளியல் சிதறல்கள். |
-க.சுவாமிநாதன் |
நிலாவைப் பிடித்தவர்கள் திவால்!
முதல் முதலில் நிலவைப் படம் பிடித்த கோடக் (முடினயம) நிறுவனம் அமெரிக்காவில் மஞ்சக்கடுதாசி கொடுத்துள்ளது. 1880 ல் ஜார்ஜ் ஈஸ்ட்மன் என்பவ ரால் துவக்கப்பட்ட இந்நிறுவனம், 130 ஆண்டுகளுக்குப் பின்னர் இக்கசப் பான முடிவை எதிர்நோக்க வேண்டி யிருக்கிறது. ஈஸ்ட்மன் கோடக் நிறுவனம்தான் முதல் முதலில் கைக்கேமராக்களை அறிமுகப்படுத்திய நிறுவனமும் ஆகும். பிலிம் ரோல், கலர் பிலிம், டிஜிட்டல் கேமரா என அடுத்தடுத்து புதிய கண்டுபிடிப்புகளை புகைப் படத் துறைக்கு வழங்கிய பெருமை யும் இதற்கு உண்டு. ஆனால் தற்போது நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை முழுமையாக உள்வாங்காதது வீழ்ச் சிக்கான முக்கிய காரணியாகச் சொல் லப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 25,500 கோடி சொத்துக்களை வைத்துள்ள இந்நிறு வனத்தின் கடன் மற்றும் பொறுப்புகள் ரூ.33,750 கோடி களைக் கடந்துவிட்டது. ஒரு உச்சக் கட்டத்தில் நியூயார்க்கின் ரோசெஸ் டர் நகரில் 60,000 வேலைவாய்ப் புகளைத் தந்த இந் நிறுவனம் இப் போது 7000 ஊழியர் களைக் கொண்டதாகவே இருக்கிறது. ஒரு மாத காலமாக இந்நிறுவனத்தின் பங்கு விலைகள் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ் சேன்ஜில் ஒரு டாலருக்கும் குறை வாகவே உள்ளது. இந்தியாவில் உள்ள இதன் துணை நிறுவனமான கோடக் இந்தியாவிற்கு பாதிப்பு இருக்காது என்று சொல்கி றார்கள். சிக்கமாட்டார்கள் இப்போதைக்கு! அந்நிய விமான நிறுவனங்கள் இந் திய விமானத் துறையின் பங்குகளை 49 சதவீத வரையறைக்குட்பட்டு வாங்க லாம் என மத்திய அரசு முடிவெடுத் திருக்கிறது. ஏற்கனவே உள்ள விதிகளின்படி விமானப் போக்குவரத்து தொழிலில் ஈடுபடாத நிறுவனங்கள் மட்டுமே இந்திய விமான நிறுவனங்களின் பங்கு களை வாங்க முடியும். தற்போது ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், கிங் பிஷர் ஆகிய நிறுவனங்களின் நிதி நிலைமை சிக்கலாகி உள்ள சூழலில் இம்முடிவு எடுக்கப்படுகிறது. பங்குச் சந்தையில் பொது வெளியீட்டைச் செய்துள்ள நிறுவனங்களின் பங்குகளை மட்டுமே அந்நிய நிறுவனங்கள் வாங்க முடியும் என்ற நிபந்தனை போடப்பட்டிருப் பதால் கோ ஏர், இண்டிகோ போன்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்க முடியாது. ஏனெனில் இவை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள். எனவே சிக்கலில் உள்ள நிறுவனங் களுக்கு கைகொடுக்க அந்நிய விமான நிறுவனங்கள் முன்வருமா என்பது கேள்வி. ஏற்கனவே லுப்தான்சா, எமி ரேட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியன இப்போதைக்கு இந்தியாவில் முதலீடு செய்கிற யோசனை இல்லை என்று சொல்லிவிட்டன. ஏர் ஏசியா நிறுவ னமோ ஒரு படி மேலே போய் தனி யாகத் துணைநிறுவனத்தை வேண்டு மானால் துவக்குவோமே தவிர, ஏற் கனவே உள்ள நிறுவனங்களின் பங் குகளை வாங்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. கஷ்டப்பட்டு இந்திய நிறுவனங் கள் கரையேறிவிட்டால் அப்புறம் வருவார்கள்! எப்படியோ கதவுகள் திறந்துவிட்டன. இப் போதைக்கு சிக்க மாட்டார்கள். பிறகு சிக்கும்போது விடமாட்டார்கள். கொசுறு அரசு எண்ணெய் விற்பனை நிறு வனங்களான இந்தியன் ஆயில் கார்ப் பரேசன், இந்துஸ்தான் பெட்ரோ லியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இனி பெட் ரோல் பங்கு உரிமம் வழங்கும்போது 27 சத வீதத்தை இதர பிற்பட்டோ ருக்கு அளிப்பதென்று அரசு முடிவு எடுத் துள்ளதாகச் செய்திகள் தெரிவிக் கின்றன. உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த வுடன் அறிவிப்புகள் வரலாம். இப் படிச் செய்திகள் கசிவதே தேர்தலுக் காகத்தானோ! செப்டம்பர் 30, 2010 வரை வசூலிக் கப்படாத நேரடி வரிகள் மட்டும் ரூ.1,65,000 கோடிகளாம். கம்ப்ட்ரோலர் ஆடிட்டர் ஜெனரல் தந்துள்ள கணக்கு இது. இதில் முகவரியே கண்டுபிடிக்க முடியாதவர்கள், முகவரி இருந்தாலும் கட்டுவதற்கு எந்தச் சொத்தும் இல்லாதவர்கள் மூலம் வரவேண்டியது ரூ. 95,000 கோடிகளாம். நைஜீரியாவில் பிரமோத் மிட்டல் நடத்துகிற டெல்டா ஸ்டீல் கம்பெனி யில் வேலை பார்க்கிற 117 இந்திய என் ஜினியர்கள், தொழில்நுட்ப ஊழி யர்களுக்கு 11 மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை. குடிநீர், மின்சாரம், உணவுக்கே தவிக்கிறார்கள். பிரமோத் மிட்டல், மிகப் பிரபலமான லக்ஷ்மி மிட்டலின் தம்பி. இது இந்தியாவின் நற்பெயரையே பாதிக்கிறது என வணிக இதழ்கள் எழுதியுள்ளன. அது பற்றி அண்ணனுக்கோ, தொம்பிக் கோ என்ன கவலை! வாயும், வயிறும் வேறு ! எல்.ஐ.சி-யின் பிரச்சனை வித்தி யாசமானது. இந்நிறுவனம் சமூக நலத் திட்டங்களுக்காக செலவழிக்கிற தொகைகளுக்கு மத்திய, மாநில அரசு களின் உத்தர வாதங்கள் உண்டு. ஆனால் அண்மையில் கூடிய எல்.ஐ.சி-யின் முதலீட்டுக் குழு “ அரசு தருகிற உத்தரவாதங்கள், பிணைகள் போன் றவை மூலம் வராக்கடன் ஏற்படு வதைத் தடுக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளது. ஒன்றாக இருந்த உத் தரப் பிரதேச மாநிலம் வாங்கிய கட னுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என கையை விரிக் கிறதாம் உத்தர்காண்ட் மாநிலம். இது போல ஜார்கண்ட் பீகா ரையும், சத்தீஸ்கார் மத்தியப் பிர தேசத்தையும் கையைக் காட்டி ஒதுங் கிக் கொள்கின்றனவாம். அரசு உத்தர வாதம் என்றால் கூட வாயும், வயிறும் வேறுதான் போலிருக்கிறது. |
ஹாங்காங் நகர குடியிருப்பு
___________________________________
______________________________________________________________
மூளையில் அறிவு மட்டுமல்ல.ஆணியும் இருக்கலாம்.
இதுவும் பரிணாம வளர்ச்சிதான்
“போலென்டா வெடித்தே விட்டது”...!! _________________________________________ |
போலென்டா என்பது மக்காச்சோளத்தைக் கொண்டு தயாரிக்கும் ஒரு உணவு வகையாகும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இந்த உணவு மிகவும் பிரபலமான ஒன்றாகும். இத்தாலி, ருமேனியா போன்ற நாடுகளில் தாமிரப் பாத்திரத்தில்தான் இதை சமைப்பார்கள். தனிக்கவனம் செலுத்தி தயாரிக்கும் கிழக்கு ஐரோப்பிய உணவு வகைகளில் பிரதான இடம் போலென்டாவுக்கு இருக்கிறது. அதேவேளையில், ருமேனியா மக்கள், இங்கெல்லாம் எதுவும் நடக்காது என்பதை விரக்தியான தொனியில் சொல்வதற்கு, போலென்டா வெடிப்பதில்லை என்று கிண்டலாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், போலென்டா வெடித்தே விட்டது என்று ருமேனியாவில் நடைபெற்று வரும் போராட்டங்களை வர்ணிக்கிறார்கள். தலைநகர் புகாரெஸ்ட் உள்ளிட்ட 40 ருமேனிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அரசு எதிர்ப்பு முழக்கங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
கிரீஸ், போர்ச்சுக்கல், அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் என்ற பொருளாதார நெருக்கடி முற்றியுள்ள நாடுகளின் வரிசையில் ருமேனியாவும் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய நிலைமை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்கு சில தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, கடந்த ஆண்டில் பல்வேறு சுமைகளை மக்கள் மீது ருமேனிய அரசு ஏற்றியது. அந்த சுமையேற்றும் நடவடிக் கைகள் நெருக்கடியை அதிகப்படுத்தவே செய்தது. இந்நிலையில் நெருக்கடி முற்றியதற்கு ஜனாதிபதி டிரையன் பாசெஸ்கு தலைமையிலான அரசே காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அவரை மிகவும் மோசமான வார்த்தைகளால் ஆர்ப்பாட்டக்காரர்கள் விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. அமைப்பு ரீதியான போராட்டமாக இல்லை என்பதால் அரசும் காவல்துறையை வைத்து ஒடுக்கி விடலாம் என்று முனைந்திருக்கிறது. கடந்த காலங்களில் பார்க்காத அளவுக்கு பெரும் எண்ணிக்கையில் மக்கள் போரா டத்தை துவங்கியுள்ளனர். தண் ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தினார்கள். தலைநகர் புகாரெஸ்டில் நடந்த தாக்குதலில் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந் தனர். இத்தகைய தாக்குதல் நடந்ததை காவல்துறையின் உயர்மட்டத்தில் ஒப்புக் கொண்டுள்ளனர். போராட் டத்தைக் கையாண்ட பல காவல்துறையினர், மக்கள் போராட்டங்கள் மீது வெறுப் புணர்வு கொண்டவர்கள்தான் என்று அவர்களே கருத்து தெரிவித்திருக்கிறார்கள். தனியார் மயத்தால்தரம் வராது மக்களின் போராட்டம் துவங்கியதற்கு, ருமேனியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ரேய்டு அராபத் தனது பொறுப்பிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுதான் காரணமாக அமைந்தது. பாலஸ்தீனத்தில் பிறந்த இவர் 1980களில் ருமேனியாவில் குடியேறினார். அமைச்சரான பிறகு, அவசர மருத்துவ சிகிக்சைக்கு ஒரு தனியமைப்பை இவர் உருவாக்கினார். அரசுச் செலவைக் குறைக்கிறோம் என்றும், தரப்படுத்துகிறோம் என்றும் கூறிஇந்தத் தனியமைப்பை தனியார்மயமாக்க அரசு முயற்சித்தபோது அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தனியார் மயமாக்கினால் தரம் என்பது தானாக வந்துவிடாது. நோயா ளிகளைப் பொறுத்தவரை இந்த அமைப்பு பலவீனப்பட்டுவிடும் என்று அராபத் கூறினார். அரசின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாததால் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேறுகிறேன் என்றும் அவர் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு ஒரு நாள் முன்னதாக அராபத் பற்றிய பொய்ப்பிரச்சாரத்தை அரசு கட்டவிழ்த்துவிட்டது. அந்த வேலையை ஜனாதிபதி பாசெஸ்குவே முன்னின்று நடத்தினார். தொலைக்காட்சியில் தோன்றிய அவர் அராபத்தை பொய்யர் என்று அழைத்தார். மேற்கத்திய ஊடகங்களை தன் பக்கம் இழுப்பதற்காக அராபத் ஒரு இடதுசாரி என்று குறிப்பிட்டார். சுகாதாரத்துறை அரசின் வசம் இருப்பது என்பது இடதுசாரிக்கருத்துதான். இது நல்ல கருத்துதான். அப்படிக்கருத்து வைத்திருப்பதைக் குற்றமாகவா கருத முடியும் என்று அராபத்துக்கு ஆதரவாகக் கேள்வி எழுப்புகிறார்கள். அராபத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவின. மக்களுக்கு பாதகமான புதிய சுகாதாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அராபத் வலியுறுத்தியுள்ளார். நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் ருமேனியாவில் தேர்தல் நடைபெற்றாக வேண்டும். அந்தத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்று கூறும் சமூக தாராளவாதக்கட்சிகளின் கூட்டணி, அரசே இல்லாத நாடாகத்தான் ருமேனியா உள்ளது என்று குற்றம் சாட்டுகிறது. அராபத் மற்றும் அவருடைய கருத்துகள் ஆகிய இரண்டுமே எங்கள் ஆட்சியில் இருக்கும் என்று அக்கூட்டணி மக்களுக்கு உறுதியளிக்கிறது. இத்தகைய முடிவை ஒப்புக் கொள்வது பற்றி அராபத் யோசிக்காவிட்டாலும், சுகாதாரத்துறை அரசின் வசமே இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். மக்களை எழுச்சி பெறச் செய்வதில் அராபத்தின் பங்கு பற்றிக் கருத்து தெரிவிக்கும் போராட்டக்குழுவைச் சேர்ந்த ஒருவர், போலென்டாவை வெடிக்கச் செய்து விட்டார் என்று குறிப்பிடுகிறார். பொருளாதார நெருக்கடியால் ஐரோப்பிய நாடுகளில் விலைவாசி ஏறியது ஒருபுறம். மறுபுறத்தில் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பொதுத்துறை மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 25 விழுக்காடு வெட்டு விழுந்தது. சாமானிய மக்கள் செலுத்தும் பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டன. ஐ.எம்.எப், ஐரோப்பிய யூனியன் மற்றும் உலக வங்கி ஆகியவை தந்த கோடிக்கணக்கான ரூபாய் கடனுக்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் மக்கள் மீதான நெருக்கடியை அதிகப்படுத்தவே செய்தன. |