முகப் புத்தகத்துக்கு ஆபத்து.


 


ராம்நிட்”_வருகிறது.       “ உங்கள் கணினி பத்திரம்!”

பேஸ்புக் உபயோகிப்பாளர்களுக்கு் இந்தஎச்சரிக்கை அறிவிக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுக்க பல கணினிகளில் பரவிவேகமாக நாசத்தை விளைவித்த ராம்நிட் (Ramnit) என்னும் வைரஸ், இப்போது புதிய உருவத்தில், வரத் தொடங்கி உள்ளது. இது தற்போது பேஸ்புக் வாடிக்கையாளர்களின் கணினிகளில் பரவி, அதிலுள்ள தகவல்களைத் திருடுவதுடன், கணினியையும் செயலிலக்க செய்யும்அபாயம் ஏற்பட்டுள்ளது.Seculert என்ற வைரஸ் ஆய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை 45 ஆயிரம் பேஸ்புக் கணக்குகளைப் பாதித்து தகவல்களைத் திருடி அனுப்பி உள்ளது. அந்த கணக்குகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் 2010 -ல் ஏப்ரல் மாதம் ராம்நிட் வைரஸ் தனது தாக்குதலைதொடங்கியது. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் மெக் அபி நிறுவனம் இது குறித்து கூறுகையில், இந்த மால்வேர் EXE, DLL, மற்றும் HTML ஆகிய பைல்களைத் தாக்கி முடக்குவதாக  அறிவித்தது. மிகத் தெளிவாக இந்த வைரஸ் செயல்படும் விதத்தையும் தெரிவித்தது. 
இப்போது, இந்த வைரஸின் இன்னொரு பரிமாணம் வெளியாகி பரவுகிறது எனQuarri Technologies,  நிறுவனம் தெரிவித்துள்ளது. 
முதன் முறை ராம்நிட் வைரஸ் பிளாஷ் பரவியது ட்ரைவ்கள் மூலம் எனக் கண்டறியப்பட்டது. இப்போது பேஸ்புக் மூலம் பரவி வருகிறது. 

கணினியில் சமுதாய இணைய தளங்களைப் பயன்படுத்துபவர்கள், பெரும்பாலும்கணினியின் பிற இயக்கங்களிலும், சமுதாய இணைய தளங்களிலும் ஒரே கடவுச்சொல்லைப்பயன்படுத்துவதனைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். 
எனவே தான் இந்த வைரஸின் புதிய வகை பேஸ்புக் சமுதாய தள வாடிக்கையாளர்களின் கணக்கில் புகுந்துவிடுகிறது. 
இரண்டு வகைகளில் இந்த வைரஸின் தாக்குதலிலிருந்துநமது கணினியை பாது காக்கலாம். முதலாவதாக, பேஸ்புக் கண்க்கு வைத்திருப்பவர்கள், அந்த தளத்தில் சந்தேகப்படும் வகையில் லிங்க் இருந்தால், அவற்றின் மீது கிளிக் செய்ய வேண்டாம். எந்த தளம், நண்பர்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து லிங்க் வந்தாலும், அதில் கிளிக் செய்திடும் முன் சரியானதுதானா எனச் சோதித்தப்பின்னரே கிளிக் செய்யுங்கள். இரண்டாவதாக, பேஸ்புக் கண்க்கு கடவுச்சொல்லையே மற்ற கணக்குகள், வங்கி சேவைபோன்றவற்றில்பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். ஒவ்வொரு சேவைக்கும் ஒரு கடவுச்சொல்லைப்பயன்படுத்துங்கள்.

நிதி சார்ந்த வேலைகளுக்கு மட்டுமின்றி, ஜிமெயில் போன்ற மின்னஞ்சல் சேவைகளிலும் தனித்தனி கடவுகளைஅமைத்துக் கொள்ளுங்கள்.அதுதான் நம்கணினியை இந்தபுதிய வடிவ ராம்நிட் வைரஸிலிருந்து நம்மைக் காக்கும். 
தற்போதைக்கு இந்த ராம்நிட் வைரஸ், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டில்வேகமாக பரவிக் கொண்டு வருவதாக செய்திகள் வருகிறது. விரைவில் பேஸ்புக் தளம் மூலம் மற்ற நாடுகளில் உள்ள கணீனிகளையும் இது பாதிக்கும்.  இதுவரை பல நாடுகளைச்சேர்ந்த 80 ஆயிரம் கணினிகள் இந்த ராம்நிட் மூலம் பாதிப்படைந்துள்ளதாக தெரிகிறது.

 !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 



’மத்திய பிரதேசத்தில் இருந்து உத்திர பிரதேசம் வந்தவர் மாயாவதி.இங்குமுதல்வராகியதுசரியா?”
                                                                                                          -இது ராகுலின் கேள்வி.
‘இத்தாலியில் இருந்து வந்து இந்தியாவை ஆள்கிறார்.உன் அம்மா.அது மட்டும் சரியாகுமா?
                                                                                                       -இது மாயாவதியின் பதிலடி.


     வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டுவது இதுதான்.  இது போன்ற கேள்வி எல்லாம் ராகுலுக்கு தேவையா?தன் முதுகில் ஆயிரெத்தெட்டு அழுக்கு மூடையை வைத்துக் கொண்டு மற்றவர் கை அழுக்கை நக்கலடிக்கலாமா?
      நீங்கள் இப்போது ஒவ்வொரு குடிசையாக புகுவதும்.கஞ்சி குடிப்பதும் தேர்தலுக்காத்தான் என்று புரியாத அளவுக்கு இங்கு மக்கள் ம்ற்றிலும் முட்டாள்கள் அல்ல.
வீணாக நாறி வெளியே போட்டாலும் போடுவோம்.எலிகள் நாசம் செய்து சாப்பிட்டாலும் பரவாயில்லை.கஞ்சிக்கில்லா ஏழைகளுக்கு நீதிமன்ற ஆலோசனைப்படி உணவு தானியம் கொடுக்க மாட்டோம் என்று கூறும் ஆட்சியாளர்கள் நீங்கள்.அதை உணராதவர்களா மக்கள்.
இந்த உ.பி.தேர்தல் மட்டுமல்ல.வரும் மக்களவைத் தேர்தலும் காங்கிரசை பொறுத்த மட்டில் பலத்த அடியைத் தரும் என்றே பலராலும் கணிக்கப்பட்டுள்ளதை ராகுல் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
உ.பி.உட்பட ஐந்து மாநில தேர்தலுக்காவே பெட்ரோல் விலை உயர்வை தாங்கள் நிறுத்தி வைத்துள்ளதையும் நாங்கள் உணர்ந்தே உள்ளோம்.
________________________________________________________________________________
 புகைப்படம் பார்க்க நன்றாக இருக்கிறது .ஆனால் இது ஆபத்தான விளையாட்டு ஆயிற்றே.
__________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?