வன் முறைக்கு வரைமுறை..

தூத்துக்குடியில் எனது இரு நாட்கள்.

திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியன் எனக்கு முதலில் சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் அலங்காரத்தட்டு பகுதியைச்சேர்ந்த ஒரு தாதாவாகத்தான் தெரியும்.அதனால் ஏற்பட்ட தாக்குதல் உயிர் பயம் காரணமாக திண்டுக்கல் நகருக்கு இடம் பெயர்ந்தார்.அங்கு சென்று கிட்டதட்ட 10 ஆண்டுகள் இருக்கும்.
அங்கு அவர் தனது பாதுகாப்புக்காக சாதியை கையில் எடுத்து ‘தேவேந்திரக்கூட்டமைப்பின்” தலைவராக தன்னை முன்னிறுத்திக்கொண்டார்.
ஆனாலும் தனது கட்டப்பஞ்சாயத்து ,தாதா தனத்தை விடவில்லை.
அங்கும் சில எதிரிகள் அவருக்கு உருவாகியுள்ளனர்.
இடையில் அவரது வலது கரங்கள் போன்ற புல்லாவெளி முருகன்,பீர் முகமது.போன்றோரும் அவரின் துணைவியாரும் பசுபதியின் எதிரிகளின் வாளுக்கு பலியாகிப் போயினர்.
இதோ சில நாட்களுக்கு முன் அவரும் தனது எதிரிகளின் கத்திக்கு பலியாகிவிட்டார்.

திருமாவளவன் கூறியது போல் தலித்தலைவர்களுக்கு கொலை மிரட்டல் என்பது சரியான வாதமாக இல்லை.
அவருக்கும்,மருத்துவர் கிருஷ்ணசாமிக்கும் அரசியல் எதிரிகள் இருக்கிறார்கள் அவர்களைக் கொல்ல விடாமல் துரத்தும் எதிரிகள் கிடையாது.இதை திருமாவளவன் நிச்சயம் தெரிந்துதான் இருப்பார்.
பசுபதிபாண்டியனைப்பொறுத்துவரை அவரின் வாழ் நாளில் சிறுவர் பருவம் தவிர வாலிப பருவம் முதல் உயிர் பயத்துடன் ,பாதுகாவலர்களுடன்தான் வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.
காரணம் ரொம்பத்தெளிவானது. அவர் அடிப்படையில் கட்டப்பஞ்சாயத்து தாதா.இதைக்கூறுவதால் சிலர் கோபப்பட்டாலும் உண்மை அதுதான்.
பிற்காலத்தில் தனது பாதுகாப்புக்கு அவர் அரிவாள்-கத்தி-குண்டுடன் எடுத்துக்கொண்ட ஒரு ஆயுதம்தான் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு.
        இதுவரைநடந்தது இவ்வளவுதான்.

அவர் கொலையான பின் காவல்துறையினர் நடந்து கொண்டது மிக விமர்சனத்துக்குரியதாகி விட்டது.அதுவும் தூத்துக்குடி மக்களின் கோபத்துக்கு
வன்முறையாளர்களை விட காவல்துறையினர்தான் ஆளாகியுள்ளனர்.
கொலையாகி உடல் தூத்துக்குடியில்தான் அடக்கம் என்றவுடன் மூவாயிரத்துக்கும் மேல் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
ஆனால் கையில் அரிவாள்,கத்தி,குண்டாந்தடி.கற்களுடன் 20 இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஏற்கனவே பூட்டப்பட்டிருந்த கடைகள் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல்களைநடத்திக்கொண்டு வெறியாட்டம் போட்டுக்கொண்டு பசுபதி பாண்டியன் பிணத்துடன் ஊர்வலத்தின் முன் போகும் போது அந்த ஊர்வலத்துக்கு பாதுகாப்புக்கு[?]சென்ற காவலர்கள் 10 பேர்கள் கூட இல்லை.
3000 காவல்துறையினர்,ஆயுத போலீஸ் உட்பட உடலடக்கம் செய்யப்படும் அலங்காரத்தட்டு பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்தனர்.

அங்கு காவல்துறையினர் இத்தனை பேர் தேவை இல்லை என்பதே மக்கள் அனைவரின் கருத்து.காரண்ம.அது பசுபதி பாண்டியன் செல்வாக்கான பகுதி அங்கு இருப்பவர்கள் அவரது ,உறவினர்,ஆதரவாளர்கள்தான்.அங்குதான் அவரின் மனைவி ஜெசிந்தாவின் நினைவிடம் இருக்கிறது .அங்குதான் அவரின் உடலையும் அடக்கம் செய்கிறார்கள்.

இறுதி ஊர்வலம் வரும் பகுதி அவரின் கொலைக்கு காரணமாக இருக்கலாமோ என கருதப்படும் ஒருவரின் உறவுகள் கடைகள்,வியாபார நிறுவனங்கள் நிறைந்த பகுதி. அங்கு அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்பது தூத்துக்குடியில் வசிக்கும் பாமரன் கூட அறிந்த செய்தி.அதேபோல் நடந்தது.
அங்கு காவல்துறையினர் மருந்துக்கு கூட இல்லை.
அதைவிட வேடிக்கை.அடுத்தநாள் காவல்துறை உயர் அலுவலர்ராஜேஷ்தாஸ் காவல்துறையினர் திட்டமிட்டு அசம்பாவிதங்கள்,கலவரம் இல்லாமல் அடக்கத்தை நடத்தி முடித்ததாக பெருமையுடன் செய்தியாளர்களிடம் கூறினார்.அவரின் பெருமையுடன் பக்கத்திலே இறுதி ஊர்வலத்தின் போது எரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள்.கார்கள் படமும் வெளியாகியிருந்தது.
அடுத்த நாள் பள்ளிகள் கடைகள் வழமை போல் இயங்கும் போது ஒரு வதந்தி கிளப்பிவிடப்பட்டது.

பள்ளி மாணவிகள் 4 பேர்கள் அரிவாளால் வெட்டப்பட்டதாக.மாவட்ட ஆட்சியர் பள்ளிகளை மூடக்கோரியதாக வும்,
பள்ளியில் பெற்றோர்கள் குவிந்து மாணவர்களை அழைத்து செல்ல பள்ளிகள் அனைத்தும் காலி.பெற்றோர்கள் வரத்தாமதமான குழந்தைகள் அழுது கொண்டிருந்தது .மிகக்கொடுரமாக இருந்தது.ஆனால் இது வதந்தி என்று உடனே காவல்துறையோ,மாவட்ட நிர்வாகமோ அறிவித்து பதட்டத்தை தணிக்காமல்.மக்களே அறிந்து.சமாதானமான் பின் அடுத்த நாள் பத்திரிகைகளில் இது வதந்தி நம்பாதீர்கள் என்று செய்தியை வெளியிடுகிறது மாவட்ட நிர்வாகம்.

இடையில் வியாபாரிகள் தங்கள் உடைக்கப்பட்ட கடைகளுக்கு நிவாரணம் கேட்டு கடை அடைப்பு ஊர்வலம் என எதிர்ப்பை காட்டினார்கள்.
அப்படி இல்லை என்றால் மறு நாள் மவுன அஞ்சலி ஊர்வலம் வேறு நடத்தப்படுவதாக பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் அறிவித்திருந்தது.நடந்து மீண்டும் கலவர சூழல் உருவாகியிருக்கும்.அஞ்சலி ஊர்வலத்துக்கும் காவல்துறை அனுமதி கொடுத்திருந்தது.வியாபாரிகள் -பொதுமக்கள் எதிர்ப்பினால் வேண்டாவெறுப்புடன் அனுமதியை திரும்ப பெற்றது.
அதற்கு கடை அடைப்பு.ஊர்வலம்,மறியல் என்று மக்கள் -வியாபாரிகள் இறங்க வேண்டியிருந்தது.அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,உதவி கண்காணிப்பாளர்கள் இருவரின் பாதுகாப்பு குளறுபடி,செயல்திறமை இல்லாததால் அவர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
அதன்பின்னணி அடுத்தநாள் காவ்ல்துறையின் நடவடிக்கையில் வெளியானது.

முக்கிய சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள்,கடைகளின் போர்டுகள்,விளம்பர தட்டிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று கெடுபிடியுடன் காவலர்கள் நடந்து கொண்டனர்.
அனுமதிக்கப்பட்ட விளம்பரங்களையும் கழற்றி எரிந்தனர்.இதன் மூலம் தங்கள் பொதுமக்கள் எதிர்ப்பை காட்டிக்கொண்டனர்.
இப்போது செய்ததை முன்பு செய்திருந்தால் கலவரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

 பரமகுடியில் சாதாரண போராட்டத்தை பெரிதாக்கி தேவையே இல்லாமல் துப்பாக்கியால் பலரை கொன்று அடக்கிய காவல்துறை.பயங்கர கலவரத்தின் போது வெறும் பார்வையாளராகவும் மக்களுடன் சேர்ந்து ஓட்டம் பிடித்ததுதான் இவ்வளவு எழுத காரணம்.
காவல்துறையினர் அடித்தால் மொட்டை இல்லையென்றால் குடும்பிதான் என்று இருக்காமல் நிலவரங்களுக்கு ஏற்றார் போல் செயல் பட வேண்டும்.
தூத்துக்குடி நிகழ்வுகள் காவல்துறை இல்லாமல் மக்களே ஒளிந்து தங்களை பாதுகாத்துக்கொண்டுள்ளனர்.

அதனால் காவல்துறையினர் மீதே அவநம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டுவிட்டது.அவர்கள் இருந்தாலும் ஒன்றுதான்.இல்லாவிட்டாலும் அதுதான்.அவர்கள் நம்மை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை இழக்கப்பட்டு விட்டது.இந்த மனநிலை மிக தவறானது.
அது சட்டம் -ஒழுங்கை மிக பாதிக்கும்.

ஒரு பரபரப்பான நாளில் கலவர சூழலில் காவல்துறையினரின் விவேகமற்ற செயல்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளத்தான் இப்பதிவு.
பசுபதிபாண்டியன் பற்றியும் அவர் பின்னணியைப்பற்றியும் உள்ள படி அறிந்ததால் அதை குறிப்பிட வேண்டியதாகிற்று.
இரு நாட்கள் நான் தூத்துக்குடியில் மாட்டிக்கொண்டு அனுபவித்த அவலத்தைதான் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளேன்.காவல்துறையினரின் செயல்பாடுகள் என்னை வெகுவாக பாதித்துவிட்டது.அதனால் உண்டான எரிச்சல்தான் இப்பதிவு.
_______________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?