கோவில் நகைகள்-மகா மோசடி
கோவில்கணக்கு மோசடிகள். |
விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் ஏராளமான அளவில் நன்கொடைகளை திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு அளித்துள்ளார் என்று பல செய்திகள் கூறுகின்றன. தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நன்கொடைகள் பற்றிய விபரங்களைத் திரட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். நன்கொடை வழங்கப்பட்ட பொருள்களின் பட்டியல் எதுவும் கோவில்களில் இல்லை. இது இல்லாத நிலையில், எவ்வளவு தங்க ஆபரணங்கள் இந்தக் கோவில்களுக்கு கிருஷ்ணதேவராயரால் வழங்கப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது மட்டுமல்ல, வேறு பல மன்னர்களால் தரப்பட்ட நன்கொடைகளுக்கும் இதுதான் நிலையாக இருக்கிறது.
இது போதாதென்று ஆந்திர மாநில தொல்பொருள்துறை புதிதாக ஒரு குற்றச்சாட்டுடன் வந்திருக்கிறது. திருப்பதி வெங்கடாசலபதி தேவஸ்தானத்தின் வசம் இருப்பதாகச் சொல்லப்படும் மதிப்புமிக்க பொருட்களின் அளவுக்கும், கல்வெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று ஆதாரங்களில் சொல்லப்பட்டவற்றின் மதிப்புக்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது என்பதுதான் அது. முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் கோவில் சொத்துக்களான தங்கம் மற்றும் ஆபரணங்களின் கதி பற்றி கோவில் சொத்துப் பாதுகாப்புக்குழுவினர் அபாயம் குறித்து எச்சரிக்கிறார்கள்.
கோவில்களின் சொத்துக்கள் காணாமல் போய்விடுவதற்கான அனைத்து வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் ஒரு உயர்மட்டக்குழுவை நியமித்து அதன் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்பது அவர்களின் கருத்தாகும்.
500 ஆண்டுகளுக்கு முன்பான பல கல்வெட்டுகளை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்தக் கல்வெட்டுகளில் தெலுங்கிலும், தமிழிலும் ஏராளமான விபரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவின் அஹோபிலத்தில் உள்ள நரசிம்மர் கோவில், ஸ்ரீகாளஹஸ்தி கோவில், ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜூனா கோவில், தரணிக்கோட்டையில் உள்ள அமரேஸ்வரர் கோவில் மற்றும் சிம் ஹாசலத்தில் உள்ள லட்சுமிவராஹநரசிம்மசுவாமி கோவில் ஆகியவற்றோடு திருப்பதி வெங்கடாசலபதி கோவிலும் கிருஷ்ணதேவராயர் நன்கொடையைப் பெற்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இது பற்றிக் கருத்து தெரிவிக்கும் அறநிலையத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர், நன்கொடைகள் பற்றிய விபரங்களை முழுமையாகத்தொகுக்காமல் அரசு அதிகாரிகள் விட்டுவிட்டது உண்மைதான். கோவில்களில் உள்ள ஆபரணச்சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா, இல்லையா என்பது பதில் கிடைக்காத கேள்விதான் என்கிறார். 1970 ஆம் ஆண்டிலிருந்துதான் சொத்துக்கள் அடங்கிய பட்டியலை மாநில அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. நிச்சயமாக கிருஷ்ணதேவராயர் வழங்கிய நன்கொடைகள் அந்தப் பட்டியலில் இருக்கப்போவதில்லை. இத்தனைக்கும் ஆபரணங்களைச் சோதிக்கும் பிரிவு ஒன்று தனியாக அறநிலையத்துறையில் இயங்கி வருகிறது. மன்னர் காலக் கல்வெட்டுகள், பல்வேறு நன்கொடைகள் பற்றிக் குறிப்பிட்டாலும், கிருஷ்ணதேவராயர் காலத்தில் வந்த நன்கொடை பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்கிறார்கள் அறநிலையத்துறையினர். தனது தாயார் நாகாளம்பாவின் பெயரில் நிலங்களையும், ஆபரணங்களையும் கிருஷ்ணதேவராயர் அளித்துள்ளார். 91 முத்துக்கள் அடங்கிய நெக்லஸ் ஒன்றும் அவரால் வழங்கப்பட்டிருக்கிறது. ஆபரணங்கள் இருப்பதை அறநிலையத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டாலும் முறையான சரிபார்க்கும் பணி எதுவும் இதுவரை நடக்கவில்லை. முறையான சொத்துப்பட்டியல் தயாரிக்காதவரை, மன்னரால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆபரணங்களை உறுதிப்படுத்த முடியாது என்கிறார் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறைப் பேராசிரியரான கிரண் கிராந்த். அவர் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருள் வல்லுநர்கள், விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் ஆயிரம் தங்கக்காசுகள், ஒரு முத்து நெக்லஸ், மரகதம் பதிக்கப்பட்ட வைரப் பதக்கம், அஹோபிலக் கோவிலுக்கு தங்கத்தட்டு என்று நீண்ட நன்கொடைப்பட்டியலை வாசிக்கிறார்கள். ஒருவேளை நன்கொடைகளின் உண்மையான மதிப்பைக் கண்டுபிடித்து, மாயமானதோடு ஒப்பிட்டால் உலகிலேயே பெரும் மோசடி வெளிப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் தொல்பொருள் வல்லுநர்களில் சிலர். திருப்பதி வெங்கடாசலபதி கோவில்தான் உலகிலேயே பணக்காரக் கோவில் என்று கருதப்பட்டது. திருவனந்தபுரம் அனந்தபத்மநாபர் கோவிலின் சொத்துக்கள் பற்றிய விபரங்கள் கிடைக்கும்வரை இந்த அந்தஸ்து தொடர்ந்தது. தற்போது இரண்டாவது இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் இந்தக் கோவிலின் ஆண்டு வருமானம் சுமார் 650 கோடி ரூபாயாகும். நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் இந்த கோவிலுக்குச் சொந்தமான தங்கத்தின் அளவு 3 ஆயிரம் கிலோ என்று கூறப்படுகிறது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வைப்புத்தொகையாகவும் வங்கிகளில் இந்த கோவிலுக்குச் சொந்தமான பணம் வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 300 கோடி ரூபாய், 350 கிலோ தங்கம் மற்றும் 500 கிலோ வெள்ளியை நன்கொடையாக இந்தக் கோவில் பெறுகிறது. இந்தக் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில்தான் மன்னர் காலத்தில் தரப்பட்ட நன்கொடைகள் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை.அல்லது மறைக்கப்பட்டு விட்டது.
_____________________________________________________________________________________________
|
இது செவ்வாய் கிரகத்தின் புகைப்படம்.
இது சுரண்டலின் மறு வடிவம்.?
ஈழத்து மகாகவி |
தெளிவத்தை ஜோசப் |
ஆழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புத்து யிர்ப்பினை ஏற்படுத்திய பெருமையினை, சிறப் பினை கொண்டவராகத் திகழ்கிறவர் மஹாகவி என்கிற ருத்திரமூர்த்தி அவர்கள். இலங்கைப் பாரம்பரியத்தில் தமிழ்க் கவிதை வரலாறு கூறு பவர்கள், ‘குறுந்தொகை, நற்றிணை, அக நானூறு என்னும் சங்க இலக்கியங்களில் ஈழத்துப் பூதந் தேவனார் பெயரில் அமைந்துள்ள ஏழு பாடல் களே ஈழத்துக் கவிதை இலக்கிய வரலாற்றின் தொன்மைக்குச் சான்றாக அமைகிறது’ என்று ஆரம்பிப்பதுண்டு.
‘ஈழத்துப் பூதன்தேவனாரிலிருந்து இன்று கவிதை எழுதும் இ.முருகையன் வரை கவிதை மரபொன்று சங்கிலிப் பின்னல் போல் வாழை யடி வாழையென வந்திருப்பதை இலகுவில் மறுக் கவியலாது’ என்கிற பேராசிரியர் கைலாசபதி யின் கூற்றும் இதை ஊர்ஜிக்கும். (பேராசிரியர் கைலாசபதி ஈழத்து முன்னோடிகள், பக்.13) ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம் வரையும் கூட சமயம், சமயப் பிரச்சாரம், சமயப்பாதுகாப்பு, சமயம் சார்ந்த தலங்கள், பிரபந்தங்கள் போன்ற செய்யுள் இலக்கியங்களாகவே கவிதைகள் இருந்துள்ளன! இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயர் ஆட்சியின் இறுதிநாட்களில் சமயமே இலக்கியத்தின் முக்கிய பாடுபொருளாக இருந்து வந்தபோதும் கூட, சமகாலச் சமூக தேவைகளையும் பிரச் சனைகளையும் நோக்கும் தன்மையும் ஈழத்துக் கவிதைகளில் இடம்பெறத் தொடங்கின. பாவலர் துரையப்பா, ப.கு. சரவணபவன், நல்ல தம்பி புலவர், சோமசுந்திரப் புலவர் ஆகியோர் இம்மாற்றத்தின் முன்னோடிகள் (திருமதி கலை யரசி சின்னையா எம்.ஏ, ஈழத்துக் கவிதை இலக் கியம் கட்டுரை, கொழும்பு கட்டுபெத்தை வளாக தமிழ் இலக்கிய மலர் 1977) இந்த மாற்றங்களின் வழி மேற்கிளம்பிய ஈழத்து தமிழ் கவிதை என்னும் ஒரு மரபுக்கு வித்திட்டவராக மஹாகவியைக் கொள்ளலாம். கொண்டாடலாம். மஹாகவியைப் பேசும்போது கூடவே முருகையனும் நீலாவணனும் கை கோர்த்து வந்து நிற்பதை தவிர்த்துக் கொள்ள முடிய வில்லை. மூவரும் ஒரு காலத்தவர்கள்.( மஹா கவி 1927-1971, நீலாவணன் 1931-1975, முருகை யன் 1935 -2009) ‘50க்கும் 80க்கும் இடைப் பட்ட காலப் பகுதியில் படைப்புகளின் அளவி லும் தரத்திலும் இலங்கையின் ஏனைய கவிஞர் களைவிட இவர்கள் மூவரும் மிக உயர்ந்து நின்றார்கள். இலங்கைத் தமிழ்க் கவிஞர்களிடையே மஹாகவி எவ்வளவுதான் ஒரு இமயம் போல் உயர்ந்து நின்றாலும், மஹாகவியை விட நீலா வணனே சிறந்தவர் என்றும், இவ்விருவரை விட வும் முருகையனே சிறந்தவர் என்றும் கற்பிக்கும் வட்டாரங்கள் இன்று முண்டு. ‘கவிஞரின் கவிஞர்’ என்று முருகையனை போற்றுவதற்குக்கூட பேராசிரியர் கைலாசபதி கூச்சப்படவில்லை என்று குறிக்கின்றார் சண் முகம் சிவலிங்கம். (இலங்கை சாகித்திய விழா மலர் 1993, சண்முகலிங்கம் சிவலிங்கம்) அளவெட்டியில் 1927ல் பிறந்த ருத்திர மூர்த்தி (9.1.1927) என்கிற மஹாகவி அவர்கள் பிந்திய1940களில் கிராம ஊழியனில் ஆரம் பித்து, வரதருடன் தேனி மறுமலர்ச்சியில் இணைந்து விஜயாபாஸ்கரனின் சரஸ்வதியுடன் ஊடாடி ஈழகேசரி, வீரகேசரி, சுதந்திரன், விவேகி, தேனருவி என ஈழத்துப் பேரேடு, சிற்றேடுகளில் தன் கவிதை மனம் திறந்தவர். ‘சோலை கடல் மின்னல் முகில் தென்றலினை மறவுங்கள். மனிதனை அதுவும் சாதாரண மனிதனைப் பாடுங்கள்; அவனது இன்னல் ஏழ்மை உழைப்பு உயர் வினைப் பாடுங்கள்’ என்று அறைகூவல் விடுத் தவர் மஹாகவி. ‘இன்னவைதான் கவி எழுத ஏற்றபொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல் லாதீர்’ என்று கவிதைக்குள் பிரவேசிப்பவர் களுக்கு அரைத்த மாவரைக்காதீர்கள் என்று அறிவுறுத்தியவர் மஹா கவி. மஹாகவியின் ஆரம்பகாலக் கவிதைகள் யாழ்ப்பாண கிராம மக்களை, மக்களின் வாழ்வி யல்புகளை, இன்ப துன்பங்களை பாடுவதா கவே அமைகின்றன. பிறந்த மண்ணை நேசித்த பிறவிக் கவிஞர் அவர் என்று கூறும் இரசிகமணி கனக செந்தில் நாதன், ‘கொண்டேன் கொடுக்கின்றேன்!/ கொள்ளா விட்டால் என்ன. / கோதைப் பழமென்பார்/ குறை கள் கண்டால் என்ன!’ என்று ஒரு கவிஞனுக்கே உரிய காம்பீர்யத் துடன் எக்காளமிட்டவர் என்று மஹாகவியின் எந்த ஒரு நூலும் வெளிவராத 50 களிலேயே இனம் கண்டு எழுதி வைத்துள்ளார். (ஈழத்து பேனா மன் னர்கள், கரவைக்கவி கந்தப்பனார்; ஈழகேசரி) ‘மஹாகவியின் பெரும்பாலான கவிதைகள் யாழ்ப்பாண கிராமிய வாழ்வைக் கருப்பொரு ளாகக் கொண்டவை. கிராமியத்தை மஹாகவி போல் தமிழ் கவிதைகளில் வெளிக்கொணர்ந்த பிரிதொரு கவிஞன் இல்லை எனலாம். இந்த வகையில் இவருக்கு அண்மையில் நிற்கக் கூடியவராக நீலாவணன் ஒருவரையே கூற முடியும்’ என்று அடித்துக் கூறுகின்றார் மஹா கவி நூல் வெளியீட்டுக்குழு அமைத்து, அதனூ டாகவும் தனியாகவும் அவருடைய படைப்புக் களை நூலுருவாக்குவதில் பெரிதும் முன்னின்று உழைத்தவரான கவிஞர் எம்.ஏ. நுஃமான் அவர்கள். தனிக் கவிதைகள், தன்னுணர்ச்சி கவிதை கள் என்றே ஆரம்பத்தில் பாடினாலும் பிறகு ஏறத் தாழ அறுபதுகளில் மானிட வாழ்வை ஒரு பெரும் பரப்பில் நோக்கும் தன்மை அவரிடம் மேலோங் கத் தொடங்கியது. மஹாகவியின் தனிப்பாடல் காலக்கட்டத் தில் அவர் அறிமுகப்படுத்திய குறும்பா என்னும் புதிய செய்யுள் முறை அவருக்கு ஒரு ஏகோ பித்த புகழையும் பிரபல்யத்தையும் மகோன்ன தத்தையும் கொடுத்தது. மஹாகவியின் குறும்பாக்களை தனது இளம்பிறை சஞ்சிகையில் உரிய கவனத்துட னும் ஓவியக் கனதியுடனும் பிரசுரித்ததுடன்,100 குறும்பாக்களைத் தொகுத்து தனது அரசு வெளியீட்டின் மூலம் மஹாகவியின் குறும்பா என் னும் தலைப்புடன் 1966ல் நூலாக்கிக் கொடுத்த சீர்மை எம்.ஏ. ரஹ்மான் அவர்களுடையது. ஆங்கிலத்தில் 5 வரிகளில் ஒரு குறிப்பிட்ட யாப்புமுறையில் அமையும் கவிதைகளை லிமரிக் என்றழைப்பர். இத்தகைய கவிதை முயற் சியை தமிழில் அறிமுகப்படுத்தல் வேண்டும் என்று மஹாகவிக்கு ஏற்பட்ட உந்துதலின் விளைவே குறும்பாவாகும். மஹாகவி நிறைந்த புலமையும் அகண்ட பார்வையும் ஆழ்ந்த திளைப்பும் புதிய வீறும் ஒருங்கே அமைந்த நாடறிந்த கவிஞர். இவர் குறும்பா என்னும் புதிய செய்யுள் முறையை அமைத்து, அச்செய்யுள் முறைக்கு இலக்கணம் வகுக்கத்தக்கதான குறும்பா தொகுப்பைத் தந்ததன் மூலம், எந்தப் பொருளும் கவிதைக்கு அந்நியமானதல்ல என் பதை நிரூபித்துள்ளதுடன் தமிழ்க் கவிதை வளத்தினை செழுமைப்படுத்தியுள்ளார். லிமரிக் என்னும் குறும்பாவை ஈழத்துக் கவிதை உலகிற்குள் கொண்டு வந்ததைப் போலவே, லிரிக் என்னும் இசைப் பாடல்களை யும் கொண்டு வருகின்றார் மஹாகவி, இந்த மாநிலத்துப் பெரு வாழ்வு என்னும் இசைத் தமிழ்க் காப்பியத்தின் மூலம். இப்பாடல்கள் யாவும் நிகழ்கால வாழ்வு பற்றி அமைந்தவை. அடுத் தடுத்துப் பாடப்படின் ஒரு தொடர்பும் அமையப் பெற்றவை. இப்படித் தொடர்பு அவசியம் இல்லை எனினும், அஃது இருப்பது கவிஞரின் சுவைப் பெருக்கத்திற்கே உதவுகின்றது. மஹா கவி கோலியிருக்கும் வழியை பிற கவிஞர்களும் பயில்தல் ஆரோக்கியமான இலக்கியப் பணி யாக அமைதல் கூடும் என கூறியுள்ளார். [‘காலம்’ இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கம்.]
--------------------------------------------------------------------------------------------------------------------------------
|